search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் 25.21 கிலோ மீட்டர்  நீளத்திற்கு 91 தார் சாலைகள்  அமைக்க முடிவு- மாநகராட்சி கூட்டத்தில் மேயர்  அறிவிப்பு
    X

    தூத்துக்குடியில் 25.21 கிலோ மீட்டர் நீளத்திற்கு 91 தார் சாலைகள் அமைக்க முடிவு- மாநகராட்சி கூட்டத்தில் மேயர் அறிவிப்பு

    • தூத்துக்குடி மாநகராட்சி அவசர கூட்டம் மாநகர கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில இன்று காலை நடைபெற்றது.
    • தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உயர்மின் கோபுரங்களை மாற்றி அமைக்க வேண்டியது இருப்பதால், அந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வடிகால் பணிகள் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி அவசர கூட்டம் மாநகர கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில இன்று காலை நடைபெற்றது. கமிஷனர் தினேஷ்குமார், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார். அவர் கூறுகையில், தூத்துக்குடி மாநகராட்சியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் வகையில் நகர்புற சாலைகள் மேம்பாட்டு நிதியில் (2022 -2023) ரூ.9 கோடியே 26 லட்சம் மதிப்பில் 25.21 கிலோ மீட்டர் நீளத்திற்கு 91 சாலைகள் அமைக்க அரசாணை எண் 192-ன் படி முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மழைநீர் வடிகால் கட்டும் (தொகுப்பு 1) பனியினை உலக வங்கி நிதி ஆதாரத்துடன் கடன் மான்யம் மற்றும் உள்ளாட்சி பங்கு தொகையுடன் 6 சிப்பந்திகளாக 96.2 கோடியில் மேற்கொள்ளப் பட்டுள்ளது.

    மேற்கொள்ளப்பட்ட 6 பணிகள் முடிவு பெற்றுள்ளது.

    முடிவுற்ற பணிகளுக்கு ரூ.10.51 கோடி மான்யம் வரவேண்டி உள்ளது.

    தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உயர்மின் கோபுரங்களை மாற்றி அமைக்க வேண்டியது இருப்பதால், அந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வடிகால் பணிகள் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

    மேலும் மேற்கொள்ளப்படும் மழைநீர் வடிகால் பணிகளுக்கு கடன் தொகை முழுமையாக பெறாமல் இருப்பதால்

    நிலுவைத் தொகையை வசூலிக்க தமிழ்நாடு நகர்புற உள்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனம் முலம் கால நீட்டிப்பு செய்து தரக்கோரி முன்மொழிவு செய்ய மாமன்றத்தின் அனுமதி கோரப்பட்டுள்ளது என்றார்.

    தொடர்ந்து அனுமதி அற்ற கட்டிடங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், பொது நிதியில் செயல்படுத்தப்படும் பணிகளுக்கு ஒப்புதல் வழங்குதல் உள்ளிட்ட தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ், அன்னலட்சுமி கோட்டுராஜா, நிர்மல்ராஜ், பாலகுருசாமி, நகரமைப்பு குழு தலைவர் ராமகிருஷ்ணன், பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், கல்விக் குழுத் தலைவர் அதிர்ஷ்ட மணி,கவுன்சிலர்கள் டாக்டர் சோமசுந்தரி,ரெங்கச்சாமி, விஜயகுமார், சுயம்பு, பச்சிராஜ், ராஜதுரை, வெற்றிச்செல்வன், ஜெயலட்சுமி சுடலைமணி உட்பட அனைத்து கவுன்சிலர்களும், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி அதிகாரிகள் சரவணன், காந்திமதி, பிரின்ஸ், சேகர், ராமச்சந்திரன், ஹரிகணேஷ், ராஜபாண்டி உட்பட அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×