வாசுதேவநல்லூர் அருகே புதிதாக தார்ச்சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை

சரவணாபுரம் முதல் சண்முகநாதபுரம் வரை தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் தலைமையில், துணை சேர்மன் சந்திரமோகன் முன்னிலையில் பூமி பூஜை நடைபெற்ற போது எடுத்த படம்.
யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் தலைமையில், துணை சேர்மன் சந்திரமோகன் முன்னிலையில் பூமி பூஜை நடைபெற்ற போது எடுத்த படம்.
Published on

சிவகிரி:

வாசுதேவநல்லூர் அருகே ராமநாதபுரம் ஊராட்சி சரவணாபுரத்தில் முதல்-அமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத் தின் கீழ் ரூ. 44 லட்சம் மதிப்பீட்டில் சரவணாபுரம் முதல் சண்முகநாதபுரம் வரை தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.

யூனியன் சேர்மனும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையாபாண்டியன் தலைமை தாங்கி பணியை தொடங்கி வைத்தார். துணை சேர்மன் சந்திரமோகன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் சரஸ்வதி, முனியராஜ், ஒன்றிய துணைச் செயலாளர் விஜயகுமார், தளவாய்புரம் கிளை செயலாளர் வேல்பாண்டியன், சரவணாபுரம் கிளை நிர்வாகிகள் ஜெயராஜ், பெரியசாமி, வாசுதேவநல்லூர் ஒன்றிய உதவி பொறியாளர் மார்கோனி, அரசு ஒப்பந்ததாரர்கள் கதிர், உள்ளார் மணிகண்டன், விக்கி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com