என் மலர்
திருநெல்வேலி
- வாலிபர் ஒருவர் வண்ணார்பேட்டையில் உள்ள தியேட்டருக்கு படம் பார்ப்பதற்காக வந்துள்ளார்.
- இருட்டான பகுதிக்கு அழைத்து சென்று அந்த வாலிபரை தாக்கி அவரிடமிருந்த செல்போன் மற்றும் பணம் உள்ளிட்டவற்றை பறித்து கொண்டு தப்பி சென்றுவிட்டனர்.
நெல்லை:
நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள தியேட்டருக்கு சம்பவத்தன்று வாலிபர் ஒருவர் படம் பார்ப்பதற்காக வந்துள்ளார். இதனிடையே அவரது செல்போனில் உள்ள ஒரு செயலியை பதிவிறக்கம் செய்ததில் சிலர் அவருக்கு அறிமுகம் ஆகியுள்ளனர். அவர்களில் 2 பேர் தியேட்டர் அருகே வந்துள்ளனர். அப்போது திடீரென அந்த வாலிபரை இருட்டான பகுதிக்கு அழைத்து சென்று அவரை தாக்கி அவரிடமிருந்த செல்போன் மற்றும் பணம் உள்ளிட்டவற்றை பறித்து கொண்டு தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து அந்த வாலிபர் பாளை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசாரின் விசாரணையில் பணத்தை பறித்து சென்றது சீவலப்பேரி பகுதியை சேர்ந்த பிரேம்சங்கர்(வயது 25) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
- கணேசனை 5 பேர் கொண்ட கும்பல் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றது.
- பழிக்குப்பழியாக கணேசன் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மகன் கணேசன் (வயது 38), விவசாயி. இவர் நேற்று முன்தினம் சேரன்மகாதேவியில் கோர்ட்டு விசாரணைக்கு வந்துவிட்டு, மாலையில் தனது மோட்டார் சைக்கிளில் தருவைக்கு திரும்பிக் கொண்டு இருந்தார்.
வெட்டிக்கொலை
அப்போது அவரை 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றது. இது தொடர்பாக முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்னோஸ் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
சேரன்மாதேவி சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாரியம்மாள்(56) என்பவர் கடந்த 24-8-2022 அன்று கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கணேசனை போலீசார் கைது செய்தனர். அந்த கொலைக்கு பழிக்குப்பழியாக அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
தேடுதல் வேட்டை
இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் இன்னோஸ் குமார் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இதுதொடர்பாக கணேசனின் பெற்றோர் அளித்துள்ள மனுவில், கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 5 நபர்களின் பெயரை குறிப்பிட்டுள்ளனர். அதன்பேரில் போலீசார் அவர்களை தேடிச்சென்ற போது அவர்கள் அனைவரும் தலைமறைவாகி விட்டனர்.
இதனால் அந்த நபர்கள் தான் கொலை செய்திருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகம் அடைந்து தேடி வருகின்றனர். அதேநேரத்தில் அவர்களது செல்போன்கள் அனைத்தும் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டுள்ளதால் இருப்பிடத்தை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனினும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- தட்டான்குளம் கிராமத்திற்கு கூடுதலாக மின்மாற்றி அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.
- ரூ. 5 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பீட்டில் உடனடியாக மின்மாற்றி அமைக்கப்பட்டது.
நெல்லை:
நாங்குநேரி மேற்கு வட்டாரம் தெற்கு நாங்குநேரி ஊராட்சி தட்டான்குளம் கிராமத்தில் மின் அழுத்த குறைபாட்டினால் பல வீடுகளில் மின் விசிறி, மின்மோட்டார் போன்றவை அடிக்கடி பழுது ஏற்பட்டு வந்ததால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
பொதுமக்கள் கோரிக்கை
இது குறித்து கிராம மக்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரனிடம், மின் அழுத்த குறைபாட்டை நிவர்த்தி செய்யும் விதமாக தட்டான்குளம் கிராமத்திற்கு கூடுதலாக ஒரு மின்மாற்றி அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அதனை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் உடனே மின் வாரியத்திடம் மின் அழுத்த குறைபாட்டை நீக்க மின்மாற்றி அமைக்க கேட்டுக் கொண்டார். அதனை ஏற்று மின்வாரியத்தின் மூலமாக கிராமப்புற கோட்ட வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தட்டான்குளம் கிராமத்தில் ரூ. 5 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பீட்டில் மின்மாற்றி உடனடியாக அமைக்கப்பட்டது.
மின்மாற்றி திறப்பு
அதனை நேற்று ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பொதுமக்களின் பயன் பாட்டிற்காக திறந்து வைத்தார். நீண்ட காலமாக இருந்து வந்த மின் அழுத்த குறைபாட்டை சரி செய்யுமாறு கோரிக்கை வைத்த உடனே மின்மாற்றி அமைக்க நடவடிக்கை மேற்கொண்ட ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.வை கிராம மக்கள் பாராட்டினர்.
திறப்பு விழா நிகழ்ச்சியில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகிய நம்பி, நெல்லை கிராம புறக்கோட்ட செயற் பொறியாளர் குத்தாலிங்கம், மாவட்ட பொதுச் செயலாளர் நம்பிதுரை, நாங்குநேரி மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.எஸ். சுடலைக்கண், நாங்குநேரி மேற்கு வட்டார தலைவர் வாகைதுரை, நாங்குநேரி மத்திய வட்டார தலைவர் ராமஜெயம், பாளை தெற்கு வட்டார தலைவர் நளன், மறுகால்குறிச்சி ஊராட்சிமன்ற துணைத் தலைவர் புஷ்பா பாண்டி, தி.மு.க. ஒன்றிய பொருளாளர் சுரேஷ், நாங்குநேரி உப கோட்ட உதவி செயற்பொறியாளர் ஜெயசீலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தர், மாவட்ட இணைச் செயலாளர் ராமநாதன், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஜெயசீலன், வின்சென்ட்,
உதவி செயற்பொறியாளர் (கட்டுமானம்) ஆஷா, உதவி பொறியாளர் (கட்டுமானம்) அன்புசரவணன், நாங்குநேரி கிராமப்புற உதவி பொறியாளர் சிவசிவலிங்கம் மற்றும் காங்கிரஸ் கட்சியினர், மின்வாரிய பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- முத்து கிருஷ்ணனுக்கும் அவரது தம்பி நாராயண பெருமாளுக்கும் இடப்பிரச்சினை இருந்து வருகிறது.
- காயமடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள சத்திரன்குடியிருப்பை சேர்ந்தவர் முத்து கிருஷ்ணன். விவசாயி. இவருக்கும் இவரது தம்பி நாராயண பெருமாளுக்கும் (வயது 45) இடப்பிரச்சினை இருந்து வருகிறது.
உறவினர்கள் மோதல்
இந்நிலையில் சம்பவத் தன்று இது தொடர்பாக அவர்களுக்குள் மீண்டும் தகராறு எழுந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த நாராயண பெருமாள், அவரது மனைவி செல்வி, மகள் ரம்யா ஆகியோர் சேர்ந்து முத்துகிருஷ்ணனின் மகன் அய்யாத்துரையை (25) கம்பால் தாக்கினர்.
இதுபோல அய்யத்துரை, அவரது தாயார் தங்கத்தாய் ஆகியோர் சேர்ந்து நாராயண பெருமாள், அவரது மனைவி செல்வி, மகள் ரதிஸ்ரீ ஆகியோரை செங்கலால் தாக்கினர்.
இதில் காயமடைந்த அய்யாத்துரை, நாராயண பெருமாள், அவரது மனைவி செல்வி, மகள் ஆகிய 4 பேரும் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டனர். இதுபற்றி இரு தரப்பினரும் களக்காடு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாள் மற்றும் போலீசார் அய்யாத்துரை அளித்த புகாரின் பேரில் நாராயண பெருமாள், அவரது மனைவி செல்வி, மகள் ரம்யா ஆகியோர் மீதும், நாராயணபெருமாள் கொடுத்த புகாரின் பேரில் அய்யத்துரை, அவரது தாயார் தங்கத்தாய் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விழாவில் திருவாதிரைக்களி நடனம் உள்ளிட்ட கலாசார நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
- ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நெல்லை:
பாளை சாரதா மகளிர் கல்லூரியில் ஓணம் திருவிழா கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் கமலா வரவேற்று பேசினார். யதீஸ்வரி முகுந்த பிரியா அம்பா சிறப்புரை வழங்கினார். குழுப்பாடல் (மலையாளம்), திருவாதிரைக்களி நடனம், கவிதை வாசித்தல் (மலையாளம்) ஆகிய கலாசார நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவிகள் பேரவை தலைவி தமயந்தி நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கு பார்வதி தேவி ஏற்பாடு செய்திருந்தார்.
சாரதா மகளிர் கல்லூரியில் தேசிய விளையாட்டு தினம் உடற்கல்வி, விளையாட்டு அறிவியல் மற்றும் யோகா துறையால் கொண்டாடப்பட்டது. கோ-கோ, டேபிள் டென்னிஸ், கயிறு தாண்டுதல், செஸ், வாக் ரோஸ், பந்தய போட்டிகள் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் நடத்தப்பட்டது. ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கல்லூரி அம்பா மற்றும் முதல்வர் பரிசுகளை வழங்கினர். இப்போட்டியில் மொத்தம் 147 மாணவர்களும், 29 ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
- நேற்றும் பகலில் கடுமையான வெயில் வாட்டிய நிலையில், மதியத்திற்கு பிறகு திடீரென வானில் மேகமூட்டங்கள் ஏற்பட்டது.
- நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசத்தின் நீர்மட்டம் கடந்த ஆண்டு இதே நாளில் 103 அடியாக இருந்தது.
நெல்லை:
தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்துப்போன நிலையில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வறட்சி நிலவி வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடையை மிஞ்சும் அளவிற்கு வெயில் சுட்டெரித்து வருகிறது. கடுமையான வெயிலில் இருந்து தப்பிக்க முடியாமல் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். மேலும் கடந்த சில வாரங்களாகவே 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரிப்பதால், பெண்கள் குடை பிடித்தபடி சாலைகளில் செல்வதை காண முடிகிறது.
நேற்றும் பகலில் கடுமையான வெயில் வாட்டிய நிலையில், மதியத்திற்கு பிறகு திடீரென வானில் மேகமூட்டங்கள் ஏற்பட்டது. குளிர்ந்த காற்றும் வீசியது. மாலையில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக சந்திப்பு, டவுன், கொக்கிரகுளம், வண்ணார்பேட்டை, பேட்டை, சுத்தமல்லி உள்ளிட்ட இடங்களில் சுமார் அரைமணி நேரம் கனமழை கொட்டியது.
இதனால் சாலையோர பள்ளங்களில் மழைநீர் தேங்கியது. சந்திப்பு பஸ் நிலையத்தில் குளம்போல் தண்ணீர் தேங்கி கிடந்தது. அதில் பஸ்கள் ஊர்ந்தபடி சென்றன. பேட்டை பகுதியிலும் பலத்த மழை பெய்தது. இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இன்று காலை நிலவரப்படி நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக நெல்லையில் 20.6 மில்லிமீட்டரும், பாளையில் 2 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. அரைமணி நேரம் பெய்த மழைக்கு கூட தாக்குப்பிடிக்க முடியாமல் சந்திப்பு பஸ் நிலையத்தில் குளம்போல் தண்ணீர் தேங்கியதால் அப்பகுதி வியாபாரிகள், பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.
அதே நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள நாலுமுக்கு, ஊத்து பகுதிகளிலும் நேற்று மாலையில் திடீரென மழை பெய்தது. நாலுமுக்கில் அதிகபட்சமாக 11 மில்லிமீட்டர் மழை கொட்டியது. ஊத்து எஸ்டேட்டில் 5 மில்லி மீட்டர் மழை பெய்தது.
நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசத்தின் நீர்மட்டம் கடந்த ஆண்டு இதே நாளில் 103 அடியாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு மழை இல்லாததால் 50 அடிக்கும் கீழாக தண்ணீர் இருப்பு குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி அணையில் 48.45 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. மொத்தம் 143 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் 15 அடி வரை சேறும், சகதியும் மட்டுமே இருக்கும் என்பதால் நீர்மட்டம் 30 அடி வரையில் மட்டுமே நீர் உள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
அதேபோல் 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 41.45 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. சேர்வலாறு அணையில் 62.43 அடியும், நம்பியாறு அணையில் 12.49 அடியும் நீர் இருப்பு உள்ளது. தொடர்ந்து வெயில் அடித்து வருவதாலும், வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் 2 மாதங்கள் இருப்பதாலும் குடிநீர் தேவையை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. அவ்வப்போது லேசான காற்று வீசி வரும் நிலையில், நேற்று ஒரு சில இடங்களில் மாலையில் குளிர்ந்த காற்று வீசியது. கோவில்பட்டி, கயத்தாறு, கடம்பூர் பகுதிகளில் மாலையில் வானில் கருமேக கூட்டங்கள் திரண்டன.
அதனை தொடர்ந்து திடீரென கனமழை பெய்ய தொடங்கியது. கடம்பூரில் சுமார் 1 மணி நேரம் பெய்த மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கோவில்பட்டியிலும் பெய்த பலத்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கடம்பூரில் 44 மில்லிமீட்டரும், கோவில்பட்டியில் 16.8 மில்லி மீட்டர் மழையும் பதிவானது.
- பள்ளி மாணவன் பாளை போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து விட்டான்.
- 6 பேரும் ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் என்பதும், 2 பேர் சிறுவர்கள் என்பதும் தெரியவந்தது.
நெல்லை:
பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக பகுதியில் அரசு உதவிபெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவன் நேற்று முன்தினம் மாலையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்றுள்ளான்.
அப்போது அந்த சாலையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே சென்றபோது அவனை 6 பேர் தடுத்து நிறுத்தி சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். உடனே அவன் வலி தாங்க முடியாமல் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளான். ஆனாலும் 6 பேர் அவனை விடாமல் துரத்தி சென்றுள்ளனர்.
அப்போது பள்ளி மாணவன் பாளை போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து விட்டான். இதனால் 6 பேரும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். அங்கிருந்த போலீசார் பள்ளி மாணவனிடம் விசாரித்தனர். பின்னர் மாணவனை தாக்கிய கும்பலை தேடினர். இதுதொடர்பாக அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்தனர்.
அதில் 6 பேரும் ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் என்பதும், 2 பேர் சிறுவர்கள் என்பதும் தெரியவந்தது. கடந்த 2021-ம் ஆண்டு பள்ளியில் நடந்த பிரச்சினையில் இந்த 6 மாணவர்களும் பள்ளியில் இருந்து வெளியே அனுப்பப்பட்டுள்ளனர்.
அதற்கு காரணம் பிளஸ்-2 மாணவர் தான் என்று ஆத்திரம் அடைந்து 6 பேரும் சேர்ந்து அடித்து உதைத்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 6 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். 2 சிறுவர்களை கூர்நோக்கு இல்லத்திலும், 4 பேரை பாளை மத்திய சிறையிலும் அடைத்தனர்.
- காலை சத்துணவு திட்டத்தை நடைமுறைபபடுத்திய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
- பொய்த்துப்போன தென்மேற்கு பருவமழை காரணமாக நெல்லையில் விவசாயம் நடை பெறவில்லை.
நெல்லை:
நெல்லை மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் மாவட்ட பஞ்சாயத்து தலை வர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் தலைமையில் இன்று நடைபெற்றது.
முதல்-அமைச்சருக்கு நன்றி
இதில் மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் செல்வ லட்சுமி, பஞ்சாயத்து செயலாளர் இசக்கியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தமிழகம் முழுவதும் அரசு பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ- மாணவிகளுக்கு காலை சத்துணவு திட்டத்தை நடைமுறைப் படுத்திய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை
பொய்த்துப்போன தென்மேற்கு பருவமழை காரணமாக நெல்லையில் விவசாயம் நடை பெறவில்லை. இதனால் நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என அரசை வலியுறுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
மேலும் மாநில நிதி குழு மானியத்தில் மாவட்ட பஞ்சாயத்துக்கு ரூ.2 ½ கோடி வழங்கப்பட்டுள்ளது.அதனை ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
மேலும் கூடுதலாக அதே திட்டத்தில் ரூ.10 கோடி கேட்டு தமிழக அரசை வலியுறுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் கவுன்சிலர்கள் சாலமன் டேவிட், அருந்த வசு, தனித்தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை மாநகர பகுதியில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
- ஆங்கிலத்தில் வரவேற்பு பலகை வைக்கப்பட்டுள்ளது தமிழ் ஆட்சி மொழி சட்ட அரசாணையை மீறும் செயலாகும்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மேயர் சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, உதவி கமிஷனர் தாணுமூர்த்தி, உதவி பொறியாளர் வாசு தேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்தேச தன்னுரிமை கட்சி தலைவர் வியனரசு தலைமையில் நிர்வாகிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை மாநகர பகுதியில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பாளை கே.டி.சி. நகர் மேம்பாலத்தின் இருபுறமும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக இரும்பு சட்டங்களால் 'திருநெல்வேலி ஸ்மார்ட் சிட்டி' என ஆங்கிலத்தில் வரவேற்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
இது நெல்லை மாநகராட்சி ஆணையாளரின் தமிழ் ஆட்சி மொழி சட்ட அரசாணையை மீறும் செயலாகும். எனவே அங்குள்ள ஆங்கில எழுத்துக்களை அகற்றி விட்டு தமிழிலில் வரவேற்பு பலகைகள் வைக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
34-வது வார்டு கவுன்சிலர் சர்மிளா கொடுத்த மனுவில், எனது வார்டுக்குட்பட்ட சமாதான புரம் முதல் மிலிட்டரி லைன் வரையிலான 60 அடி சாலையில் 20 அடிகள் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ளது. இதனால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.
மேலும் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள சாக்கடை கழிவுகளை அகற்ற செல்லும் போது அங்கு இருப்பவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே உடனடி யாக ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
- கருணாநிதியின் சிலையை நெல்லை மாநகரின் மையப் பகுதியில் அமைக்க வேண்டும் என தி.மு.க.செயல்வீரர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
- நெல்லை மாநகராட்சியிலும் கருணாநிதி சிலை அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
நெல்லை:
தமிழகத்தில் 5 முறை முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது சிலையை நெல்லை மாநகரின் மையப் பகுதியில் அமைக்க வேண்டும் என நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் மைதீன்கான் தலைமையில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதோடு மட்டுமல்லாமல் நெல்லை மாநகராட்சியிலும் அனைத்து மாமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலோடு கருணாநிதி சிலை அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் மாநகராட்சி முன்பு அமைந்துள்ள அண்ணா சிலை அமைக்கப் பட்டு நீண்ட ஆண்டுகள் ஆகிவிட்டதால் அதனை அகற்றிவிட்டு புதிதாக முழு உருவ அண்ணா வெண்கல சிலையும், அதன் அருகிலேயே கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையும் அமைப்பதற்கு அனுமதி கோரி நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான் தலைமையில் தி.மு.க.வினர் திரண்டு சென்று நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தியை நேரில் சந்தித்து மனு அளித்தனர். தொடர்ந்து மேயர் சரவணணிடமும் மனு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாநில வர்த்தகர் அணி இணைச்செயலாளர் மாலை ராஜா, மாநில மகளிர் தொண்டரணி துணைச் செயலாளர் விஜிலா சத்தியானந்த், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் லட்சுமணன், பேச்சிப் பாண்டியன், மாவட்ட துணைச்செயலாளர் எஸ்.வி.சுரேஷ், மாநகர இளைஞரணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன், மகளிரணி அனிதா, நெல்லை மாவட்ட முன்னாள் பொருளாளர் அருண்குமார், முன்னாள் நெல்லை மாவட்ட துணை செயலாளர் நவநீதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகளுக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பரிசுகளை வழங்கினார்.
- நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்ட மன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. இன்று மருதகுளம் ரோசலிண்ட் செல்லையா அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பில் கடந்த 2022-2023-ம் ஆண்டு வெளிவந்த பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
அதன்பின் தமிழ்நாடு அரசின் விலையில்லா சைக்கிள்களை 120 மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட துணைத் தலைவர் செல்லப் பாண்டி, நாங்குநேரி வடக்கு வட்டார தலைவர் அம்பு ரோஸ், பாளை மேற்கு வட்டார தலைவர் கணேசன், பாளை தெற்கு வட்டார தலைவர் நளன், தோட் டாக்குடி ஊராட்சி மன்றம் மேரி ஜெபன்சி, தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் ராஜா, முன்னாள் மாநில பொதுக் குழு உறுப்பினர் ஜேம்ஸ் போர்டு, ஜெயக்குமார், ஜாண்சன், காங்கிரஸ் ஊடகத்துறை ஆறுமுகராஜ், ராஜ், முருகன், ராபர்ட் மற்றும் காங்கிரஸ் நிர்வாகி கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கும்பல் கணேசனை வழிமறித்து வெட்டிக்கொலை செய்தது.
- விசாரணையில் பழிக்குப்பழியாக கணேசன் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 38), விவசாயி. இவர் தற்போது நெல்லை அருகே உள்ள தருவை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
வெட்டிக்கொலை
கணேசன் நேற்று நெல்லைக்கு வந்து விட்டு, மாலை சுமார் 6 மணி அளவில் தனது மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பிக்கொண்டு இருந்தார். தருவை பகுதியில் சென்று கொண்டு இருந்தபோது, அப்போது அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கும்பல் கணேசனை வழிமறித்து வெட்டிக்கொலை செய்தது. பின்னர் அவரது உடலை வயல் பகுதியில் வீசிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்னோஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கணேசனின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பழிக்குப்பழி
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் பழிக்குப்பழியாக கணேசன் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. சேரன்மாதேவி சந்தனமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மாரியம்மாள் (56) என்பவர் கடந்த 24-8-2022 அன்று கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கணேசனை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
பின்னர் சொந்த ஊரில் இருக்க வேண்டாம் என்று நினைத்து சென்னைக்கு சென்றுள்ளார். அவரது குடும்பத்தினர் தருவையில் தங்கி உள்ளனர். இந்நிலையில் கொலை வழக்கில் ஆஜராக நேற்று கணேசன் சேரன்மகாதேவி நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார். பின்னர் நெல்லைக்கு சென்று விட்டு தருவையில் மனைவி, குழந்தைகளை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது தான் மர்மநபர்கள் நோட்டமிட்டு பழிக்குப்பழியாக இந்த கொலை சம்பவத்தை நிகழ்த்தியது தெரியவந்தது.
4 தனிப்படைகள்
இதையடுத்து சேரன்மகாதேவி இன்ஸ்பெக்டர், தூத்துக்குடி இன்ஸ்பெக்டர் ராஜாராம், முன்னீர்பள்ளம் இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மேற்பார்வையில் இயங்கும் இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் தலைமையி லான தனிப்படை என மொத்தம் 4 தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.






