search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாநகராட்சி அலுவலகம் முன்பு அண்ணா சிலை அருகே கருணாநிதிக்கு புதிய சிலை- கமிஷனரிடம், மத்திய மாவட்ட தி.மு.க.வினர் மனு
    X

    கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தியிடம் மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் மைதீன்கான் மனு அளித்தார். 

    நெல்லை மாநகராட்சி அலுவலகம் முன்பு அண்ணா சிலை அருகே கருணாநிதிக்கு புதிய சிலை- கமிஷனரிடம், மத்திய மாவட்ட தி.மு.க.வினர் மனு

    • கருணாநிதியின் சிலையை நெல்லை மாநகரின் மையப் பகுதியில் அமைக்க வேண்டும் என தி.மு.க.செயல்வீரர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
    • நெல்லை மாநகராட்சியிலும் கருணாநிதி சிலை அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

    நெல்லை:

    தமிழகத்தில் 5 முறை முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது சிலையை நெல்லை மாநகரின் மையப் பகுதியில் அமைக்க வேண்டும் என நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் மைதீன்கான் தலைமையில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    அதோடு மட்டுமல்லாமல் நெல்லை மாநகராட்சியிலும் அனைத்து மாமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலோடு கருணாநிதி சிலை அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்நிலையில் மாநகராட்சி முன்பு அமைந்துள்ள அண்ணா சிலை அமைக்கப் பட்டு நீண்ட ஆண்டுகள் ஆகிவிட்டதால் அதனை அகற்றிவிட்டு புதிதாக முழு உருவ அண்ணா வெண்கல சிலையும், அதன் அருகிலேயே கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையும் அமைப்பதற்கு அனுமதி கோரி நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான் தலைமையில் தி.மு.க.வினர் திரண்டு சென்று நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தியை நேரில் சந்தித்து மனு அளித்தனர். தொடர்ந்து மேயர் சரவணணிடமும் மனு அளிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மாநில வர்த்தகர் அணி இணைச்செயலாளர் மாலை ராஜா, மாநில மகளிர் தொண்டரணி துணைச் செயலாளர் விஜிலா சத்தியானந்த், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் லட்சுமணன், பேச்சிப் பாண்டியன், மாவட்ட துணைச்செயலாளர் எஸ்.வி.சுரேஷ், மாநகர இளைஞரணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன், மகளிரணி அனிதா, நெல்லை மாவட்ட முன்னாள் பொருளாளர் அருண்குமார், முன்னாள் நெல்லை மாவட்ட துணை செயலாளர் நவநீதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×