என் மலர்
திருநெல்வேலி
- மல்லிகா சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டி விட்டு, வேலைக்கு சென்று விட்டார்.
- சூரியபெருமாள் வீட்டிலும் ரூ.50 ஆயிரம் திருடப்பட்டிருந்தது.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள மேல மாவடி நடுத்தெருவை சேர்ந்தவர் நடேசன் மனைவி மல்லிகா (வயது68). அங்கன்வாடி ஊழியரான இவர் சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டி விட்டு, வேலைக்கு சென்று விட்டார்.
பின்னர் மாலையில் வந்து பார்த்த போது வீட்டில் உள்ளே இருந்த பீரோ திறந்து கிடந்துள்ளது. அதில் இருந்த 2 பவுன் எடையுள்ள தங்க செயின், அரை பவுன் எடையுள்ள தங்க கம்மல், வெள்ளி கொலுசு மற்றும் ரூ. 5ஆயிரம் திருடப்பட்டி ருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபோல அதே தெருவில் விவசாயி சூரியபெருமாள் வீட்டிலும் ரூ.50 ஆயிரம் திருடப் பட்டிருந்தது. இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 வீடுகளிலும் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் யார் என்று விசா ரணை நடத்தி வருகின்றனர்.
இதற் கிடையே சூரிய பெரு மாள் வீட்டில் தங்கியிருந்த வாலிபர் ஒரு வரும் மாய மாகி யுள்ளார்.
எனவே அவர் தான் திரு ட்டில் ஈடு பட்டாரா? என்ற கோ ணத்தி லும் விசாரணை நடந்து வருகிறது.
- மேலப்பாளையம் பகுதியில் சொந்த பயன்பாட்டு வாகனங்களை பயன்படுத்தி வாடகை சவாரி எடுக்கப்பட்டு வருகிறது.
- விமான நிலையங்கள், சுற்றுலா உள்ளிட்டவற்றுக்கும் சொந்த காரில் வாடகைக்கு செல்கின்றனர்.
நெல்லை:
மேலப்பாளையம் சி.ஐ.டி.யு. வாடகை கார் ஸ்டாண்ட் தலைவர் செய்யது பரக்கத் அனாம் தலைமையில் நிர்வாகிகள் திரளாக வந்து நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திர சேகரனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மேலப்பாளையம் பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக சொந்த பயன் பாட்டு வாகனங்களை பயன்படுத்தி வாடகை சவாரி எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி குழந்தை களை பள்ளிக் கூடத்திற்கு அழைத்துச் செல்லும் பணிகளை செய்து கொண்டிருக்கின்றனர்.
அதோடு வெளியூர் பயணம், குறிப்பாக விமான நிலையங்கள், சுற்றுலா உள்ளிட்டவற்றுக்கும் சொந்த காரில் வாடகைக்கு செல்கின்றனர். மேலும் இவர்களிடம் எந்த விதமான ஆவணங்களோ, இன்சூரன்ஸ் போன்ற வைகளோ முறையாக இல்லை. இதனால் வாடகை கார் ஓட்டுனர்கள் மற்றும் உரிமை யாளர்களின் வாழ் வாதாரம் பாதிப்படைகிறது.
எனவே வாடகை கார் அனுமதி பெறாமல் சொந்த பயன்பாட்டு வாகனத்தை பயன்படுத்துபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
அதனைப் பெற்றுக் கொண்ட ஆர்.டி.ஓ சந்திர சேகரன், இது தொடர்பாக ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
- இன்று காலை வரை அதிகபட்சமாக நாலுமுக்கில் 41 மில்லி மீட்டர் மழை பெய்தது.
- மழை காரணமாக மாநகர பகுதியில் சில இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது.
நீர் மட்டம் உயர்வு
இன்று காலை வரை அதிகபட்சமாக நாலுமுக்கில் 41 மில்லி மீட்டர், காக்காச்சியில் 28 மில்லி மீட்டரும், மாஞ்சோலையில் 27 மில்லி மீட்டரும் மழை பதிவானது. இதேபோல் பாளையங்கோட்டை, நெல்லை, களக்காடு, ஊத்து, முன்னீர்பள்ளம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.
இந்த மழை காரணமாக நேற்று 64.50 அடியாக இருந்த பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று 3 அடி உயர்ந்து 67.60 அடியாக உள்ளது. அணைக்கு 1946.215 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 354.75 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 80 அடியாக இருந்த சேர்வலாறு அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து இன்று 82.41 அடியாக உள்ளது.
இதேபோல் மணி முத்தாறு அணை நீர்மட்டம் 44.90 அடியாக உள்ளது. நேற்று இரவு பெய்த மழை காரணமாக மாநகர பகுதியில் சில இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.
குறிப்பாக சந்திப்பு பஸ் நிலையத்தில் தண்ணீர் குளம் போல் தேங்கி காணப்படுகிறது. இதேபோல் தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த மழை காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மெயினருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
- அனைத்து பணியாளர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
- நெல்லையப்பர் கோவில் 4 ரதவீதிகளிலும் கொசு புகை மருந்து அடிக்கப்பட்டது.
நெல்லை:
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பஸ் நிலைய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அங்கே சுமார் 120 வடமாநில பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். தற்போது மழைக்காலம் தொடங்கி விட்ட காரணத்தினால் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு பணி மாநகராட்சி சார்பில் நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின்படி, சுகாதார அலுவலர் சாகுல் அமீது, சுகாதார ஆய்வாளர் முருகன் ஆகியோர் தலைமையில் தூய்மை இந்தியா திட்டப் பணியாளர்கள் டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் சுகாதார தூய்மை பணியாளர்கள் அடங்கிய குழுவினர் கொண்டு கூட்டு துப்புரவு பணி மற்றும் தீவிர கொசு ஒழிப்பு பணி நடைபெற்றது.
இதற்காக கொசுப்புகை மருந்து வாகனம் மற்றும் 4 புகை மருந்து மூலம் கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெற்றது. மேலும் அனைத்து பணியாளர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
டவுன் மார்க்கெட்டில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
டவுன் மண்டலத்தில் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா தலைமையில் சுகாதார அலுவலர் இளங்கோ முன்னிலையில் டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து டெங்கு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
டவுன் மார்க்கெட்டில் உள்ள கடைகளில் உரிமையாளர்கள் மற்றும் கடைக்கு பொருட்கள் வாங்க வந்தவர்களுக்கு மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். அங்கு நடந்த முகாமில் டெங்கு பாதிப்பு குறித்து விளக்கி பேசினார்.
பின்னர் அவரது மேற்பார்வையில் 4 கொசு மருந்து எந்திரம் மூலம் புகை மருந்து அடிக்கப்பட்டது. டவுன் மார்க்கெட் பகுதிகள் முழுவதும், நெல்லையப்பர் கோவில் 4 ரதவீதிகளிலும் கொசு புகை மருந்து அடிக்கப்பட்டது. அந்த பகுதியில் கட்டிட பணி மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில்
மேஸ்திரி அருணாச்சலம், தூய்மை இந்தியா திட்டம் மேற்பார்வையாளர் சங்கர் மற்றும் பரப்புரையாளர்கள் மாயாண்டி, சோமசுந்தரம், வேலு பிரபாகரன் மற்றும் பணியாளர்கள், பயிற்சி கல்லூரி மாண வர்கள், தூய்மை பணியாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
- குசலகுமாரி சம்பவத்தன்று அங்குள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டிருந்தார்.
- ஆத்திரம் அடைந்த அமிர்தலெட்சுமி உள்பட 4 பேரும் சேர்ந்து குசலகுமாரியை தாக்கினர்.
களக்காடு:
மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள பருத்தி பாட்டை சேர்ந்தவர் விஜய குமார் மனைவி குசலகுமாரி (வயது44). இவர் சம்பவத்தன்று அங்குள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த பால கிருஷ்ணன் மனைவி அமிர்தலெட்சுமி (48), முத்து வேல் (27), முத்துவேல் மனைவி சரண்யா (27), பால கிருஷ்ணன் மகள் சவுமியா (23) ஆகியோர் களுக்கும் தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த அமிர்தலெட்சுமி உள்பட 4 பேரும் சேர்ந்து குசலகுமாரியை தாக்கினர். இதுபற்றி அவர் மூலைக்கரைப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அமிர்த லெட்சுமி, முத்துவேல் ஆகியோரை கைது செய் தனர். மேலும் சரண்யா, சவுமியாவை தேடி வருகின்றனர்.
- எழுத்து முறையில் தேர்வை வைக்காமல் செல்போன் வழியாக ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
- தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர்களிடம், பள்ளி சார்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட மேலப்பாளையம் மண்டலம் ஆமீம்புரத்தில் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
தற்போது அனைத்து பள்ளிகளிலும் காலாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆரம்ப பள்ளியிலும் காலாண்டு தேர்வானது தொடங்கி நடைபெற்று வருகிறது. இங்கு எழுத்து முறையில் தேர்வை வைக்காமல் செல்போன் வழியாக ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மாணவர்களுக்கு எழுத்து திறன் குறைவதோடு, செல்போன் பயன்படுத்துவதால் கண் பார்வை திறனும் பாதிக்கப்படுவதாக கூறி இன்று மாணவர்களின் பெற்றோர்கள் அந்த பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அவர்கள் பள்ளியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் ஆன்லைனில் குழந்தைகள் படிப்பது என்பது வேறு. ஆனால் தற்போது சாதாரண காலகட்டத்திலும் அதாவது இந்த காலாண்டு தேர்வின் போது, எழுதும் வகையில் தேர்வை நடத்தாமல் ஆன்லைன் மூலமாக தேர்வு நடத்துகிறார்கள். இதனால் இணையதளம் முடக்கம் ஏற்படும்போது ஒரே தேர்வை 2 முதல் 3 நாட்கள் வரை மீண்டும் மீண்டும் எழுத வேண்டிய நிலை உள்ளது. மேலும் குழந்தைகளின் பார்வை திறன் குறைபடும்.
எனவே எழுத்து முறையில் காலாண்டு தேர்வு நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். மேலும் இதுதொடர்பாக அவர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர்களிடம், பள்ளி சார்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
- நெல்லை மாவட்டத்தில் முடிவுற்ற மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செய லாளருமான செல்வராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
- நாங்குநேரி, வள்ளியூர் ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளிட்ட பகுதிகளில் முடிவுற்ற மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் கார்த்தி கேயன் முன்னிலையில் அவர் ஆய்வு செய்தார்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் முடிவுற்ற மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செய லாளருமான செல்வராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி, வள்ளியூர் ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளிட்ட பகுதிகளில் முடிவுற்ற மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் கார்த்தி கேயன் முன்னிலையில் அவர் ஆய்வு செய்தார்.
நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயன்பெறாத பயனாளி கள் தேர்வு செய்யப்படா தற்கான காரணங்களை அவர்கள் தெரிந்து கொள்வ தற்காக 7 கவுண்டர்களில் தனி தனியாக கணினிகள் அமைக்கப்பட்டிருந்த உதவி மையத்தினை ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் தகுதியான நபர்கள் விடுபட்டிருக்கும் பட்சத்தில், அவர்கள் பயன்பெறும் வகையில் கள ஆய்வு செய்து, தகுதியான நபர்க ளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்குத வற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.12.13 கோடி மதிப்பில் கடைகள், காத்திருப்போருக்கான அறை, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதி கள் கொண்டு கட்டப்பட்டு வரும் வள்ளியூர் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை நேரில் பார்வை யிட்டு, பணியினை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறைசார்ந்த அலுவ லர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, கண்டி யப்பேரி, பழைய பேட்டைக்கு செல்லும் சாலையில் ரூ.60 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலப்பணி யினையும், பாறையடி மற்றும் அன்னை வேளாங் கண்ணி நகர் பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப்பணி களையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி, சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகம்மது ஷபீர் ஆலம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சுரேஷ், நடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் முத்துகுமரன் , உதவி கோட்டப்பொறியாளர் சேகர், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) வில்லியம் ஏசுதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
+2
- நெல்லை மாவட்டத்தில் சில இடங்களில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- இதில் ஒரு சிலருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி காணப்படுவதால் அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் சில இடங்களில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெங்கு அறிகுறி
இதில் ஒரு சிலருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி காணப்படுவதால் அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.
இதற்கிடையே மருத்துவ நல்வாழ்வு துறை சார்பில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கவும், அவ்வாறு ஒரு சில இடங்களில் பாதிப்பு ஏற்படும் போது அதனை விரைந்து தடுப்பதற்கும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளில் செய்ய வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தர விட்டார்.
தனி வார்டு
அதன் அடிப்படையில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு மருத்துவக் கல்லூரி டீன் ரேவதி இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறிய தாவது:-
நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்பாகவும் காய்ச்சல் சிகிச்சை வார்டுகளில் பணி செய்யும் மருத்துவர்களுக்கு தேவையான வசதிகள் தொடர்பாகவும் மருத்து வக்கல்லூரி டாக்டர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளோம்.
இதில் காய்ச்சல் வார்டில் அனுமதிக்கப்படும் நபர்க ளுக்கு செய்யப்பட வேண்டிய சிகிச்சைகள் தொடர்பாகவும், அவர்க ளுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பரிசோதனைகள் தொடர்பாகவும் மருத்து வர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.
120 படுக்கைகள்
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு வார்டு அமைக்கப் பட்டுள்ளது. அந்த வார்டில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறும் வகையில் 120 படுக்கைகள் ஏற்படுத்தப் பட்டுள்ளது.
இதில் ஆண் மற்றும் பெண்கள் சிகிச்சைக்காக 60 படுக்கைகள் அமைக்கப் பட்டுள்ளது. இந்த படுக்கை வசதியில் தீவிர சிகிச்சைக்காக தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் சிகிச்சை பெறும் வகையில் தனியாக 55 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண்கள் சிகிச்சை பெற 5 படுக்கைகள் தனியாக ஏற்படுத்தப் பட்டுள்ளது.
காய்ச்சல் வார்டை தனியாக கண்காணிப்பு செய்ய சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவர்கள், குழு கண்காணிப்பு அதிகாரியாக நியமித்து தொடர் கண்கா ணிப்பு பணியும் நடத்தப் பட்டு வருகிறது. தினமும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம் முழுவதிலும் சுகாதார பணிகள் பிரத்யேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொசு ஒழிப்பு பணிகளும் காலை, மாலை என 2 வேளைகளிலும் மருத்துவக் கல்லூரி வளாகம் முழுவதும் மேற்கொள்ளப்படுகிறது. டெங்கு காய்ச்சல் மற்றும் இதர காய்ச்சலுக்கான தர மான மருந்துகள் கையிருப்பு அதிக அளவில் வைக்கப் பட்டுள்ளது. காய்ச்சல் பாதிக்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு டெங்கு பரிசோதனை உட்பட 7 வகையான ரத்த பரிசோதனை மேற்கொள் ளப்படும் வகையில் ஏற்பாடுகள் செய்யப் பட்டிருக்கிறது.
டெங்கு பாதிப்பு ஏற்பட்ட வர்களுக்கு தேவைப்படும் ரத்தம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கையிருப்புகள் வைக்கப் பட்டுள்ளது. எந்த நேரத்தி லும் யார் சிகிச்சை வந்தா லும் உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில் ஏற்பாடுகள் தயார் செய்யப் பட்டு மருத்துவர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள னர்.
காய்ச்சல் பாதிப்பு இருப்பவர்கள் மருத்துவ மனையை நேரில் அணுகி சிகிச்சை பெற வேண்டும். மருந்தகங்களில் தனியாக மருந்து மாத்திரைகள் வாங்கி உட்கொள்ள வேண்டாம்.
நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் பாதிக்கப்பட்டு குழந்தைகள் உட்பட 20 பேர் சிகிச்சை பெற்று வருகின்ற னர். அவர்களுக்கு 7 வகை யான ரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் டெங்கு காய்ச்சல் இருப்பது யாருக்கும் கண்டறியப்பட வில்லை. கடந்த 2 தினங்க ளுக்கு முன்பு டெங்கு பாதிக் கப்பட்ட 2 குழந்தைகள் சிகிச்சை பெற்றார்கள். அவர்களும் நல்ல முறையில் சிகிச்சை முடித்து நல்ல உடல் நிலையுடன் வீடு திரும்பி உள்ளனர்.
மருத்துவமனையை சுற்றிலும் 320 சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப் பட்டுள்ளது. இதனால் எந்த விதமான பாதுகாப்பு குறைபாடும் இங்கு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மருத்துவமனை கண்கா ணிப்பாளர் பாலசுப்பிர மணியன், துணை கண்காணிப்பாளர் முகமது ரபி மற்றும் டாக்டர்கள் உடன் இருந்தனர்.
- நகரங்களின் தூய்மையான மக்கள் இயக்கம் சார்பில் நெல்லை மாநகராட்சியில் கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் தூய்மை பணிகள் நடத்தப்பட்டு வருகிறது.
- தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பால் அரசின் வழிகாட்டுதல்கள் அனைத்து மாநகராட்சிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
நெல்லை:
நகரங்களின் தூய்மையான மக்கள் இயக்கம் சார்பில் நெல்லை மாநகராட்சியில் கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் தூய்மை பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பால் அரசின் வழிகாட்டுதல்கள் அனைத்து மாநகராட்சிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கு ஏற்ப நெல்லை மாநகராட்சியில் சாக்கடை வாறுகால்கள் தூர்வாரி கொசு உற்பத்தியாகாமல் தடுப்பது, சாலைகளை பெருக்கி சுத்தப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மாநகராட்சி சுகா தாரத்துறை மேற்கொண்டு வருகிறது.
நெல்லை மண்டலத்தில் உதவி கமிஷனர் வெங்கட் ராமன் அறிவுறுத்தலின் பேரில் இன்று டவுன் ஆர்ச் பகுதியில் இருந்து சொக்கப்பனை முக்கு செல்லும் சாலையில் உள்ள சாக்கடை வாறுகால் தூர்வாரும் பணி கவுன்சிலர் கிட்டு முன்னிலையில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் இன்று நடைபெற்றது. தொ டர்ந்து நயினார் குளம் மார்க்கெட்டில் இருந்து டவுன் ஆர்ச் வரை சாலை பெருக்கி சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. பின்னர் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக தெரு க்களில் இருபுறமும் ப்ளீச்சிங் பவுடர் தூவப்பட்டது.
முன்னதாக டவுன் கல்லணை மகளிர் பள்ளியில் மாணவிகளிடையே தூய்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னர் பேட்டையில் உள்ள சரக்கு முனையத்தில் அமைக்கப்பட்டுள்ள நுண் உரம் செயலாக்க மையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து கவுன்சிலர் கிட்டு முன்னிலையில் தூய்மைக்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது.
- களக்காடு அருகே உள்ள மூங்கிலடி வெப்பல் மேலத்தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் (வயது44). தொழிலாளியான இவருக்கும், இவரது தந்தை அல்போன்ஸ், தம்பி செல்வகுமாருக்கும் இடப்பிரச்சினை இருந்து வருகிறது.
- கடந்த 16-ந் தேதி அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஸ்டீபன்ராஜ், தம்பி செல்வகுமாரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள மூங்கிலடி வெப்பல் மேலத்தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் (வயது44). தொழிலாளியான இவருக்கும், இவரது தந்தை அல்போன்ஸ், தம்பி செல்வகுமாருக்கும் இடப்பிரச்சினை இருந்து வருகிறது.
கடந்த 16-ந் தேதி அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஸ்டீபன்ராஜ், தம்பி செல்வகுமாரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து களக்காடு போலீசில் செல்வகுமார் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் ஸ்டீபன்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வந்தனர். இதனைதொடர்ந்து ஸ்டீபன்ராஜ் தலைமறை வானார்.
இந்நிலையில் நேற்று அவர் மூங்கிலடி குளக்கரை யில் உள்ள அத்திமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்ப ட்டது. இன்ஸ்பெக்டர் பச்சமால் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட ஸ்டீபன்ரா ஜூக்கு மனைவியும் ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர்.
- பாளை சாரதா மகளிர் கல்லூரியில் சந்திரயான் மஹோத்சவ் என்ற தலைப்பில் சந்திரயான் கொண்டாட்டம் நடைபெற்றது.
- சந்திரயான் 3 வெற்றியைக் கொண்டாடும் விதமாக கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை, கவிதை, ஓவியம், பாடல் மற்றும் நடனப் போட்டிகள் நடைபெற்றது.
நெல்லை:
பாளை சாரதா மகளிர் கல்லூரியில் சந்திரயான் மஹோத்சவ் என்ற தலைப்பில் சந்திரயான் கொண்டாட்டம் நடைபெற்றது. கல்லூரி செயலர் அம்பா ஆலோ சனையின்படி கல்லூரி இயக்குனர் பேராசிரியர் சந்திரசேகரன் வழிகாட்டுதலுடன் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் கமலா வரவேற்றார். இயக்குனர் பேராசிரியர் சந்திரசேகரன் அறிமுக உரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராக மகேந்திரகிரி இஸ்ரோ புரொபுல்ஷன் காம்ப்லெஸ் துணை பிரிவு தலைவர் லிபோநா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் சந்திரயான் 3 வெற்றியைக் கொண்டாடும் விதமாக கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை, கவிதை, ஓவியம், பாடல் மற்றும் நடனப் போட்டிகள் நடைபெற்றது. அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் பரிசு களை வழங்கினார். முடிவில் பார்வதி தேவி நன்றி கூறினார்.
- ராதாபுரம் ஒன்றிய பகுதிகளில் கடந்த காலங்களில் பருவமழை சரிவர இல்லாததால் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை பூர்த்தி செய்யும் வகையில் நீரோ 65 திட்டத்தின் மூலம் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
- இதன்மூலம் ராதாபுரம் ஒன்றிய பகுதிகளில் தற்போது குடிநீர் தட்டுப்பாடு ஓரளவு குறைந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 2 கட்டங்களில் 39 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளன.
திசையன்விளை:
ராதாபுரம் ஒன்றிய பகுதிகளில் கடந்த காலங்களில் பருவமழை சரிவர இல்லாததால் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை பூர்த்தி செய்யும் வகையில் நீரோ 65 திட்டத்தின் மூலம் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன்மூலம் ராதாபுரம் ஒன்றிய பகுதிகளில் தற்போது குடிநீர் தட்டுப்பாடு ஓரளவு குறைந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 2 கட்டங்களில் 39 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளன. 3ம் கட்டமாக 40வது ஆழ்துளை கிணறு, உவரி பஞ்சாயத்தில் அமைக்கப்படுகிறது.
இந்த பணியை நெல்லை மாவட்ட பஞ்சாயத்து மற்றும் திட்டக்குழு தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தொடங்கி வைத்தார். 3ம் கட்டமாக உவரி, க.உவரி, க.புதூர், முதுமொத்தான்மொழி, அப்புவிளை, சமூகரெங்கபுரம் மற்றும் பல இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த ஆழ்துளை கிணறுகள்
நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் ராஜன், திசை யன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், மா வட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் சங்கர், வார்டு உறுப்பினர் ராணி, ஜெயமேரி, வினி ஸ்டன், பொற்கிளி நட ராஜன், புளியடி குமார், முத்து ஆகி யோர் கலந்து கொண்டனர்.






