search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில் தொடர் மழை- பாபநாசம் அணை நீர்மட்டம் 3 அடி உயர்வு
    X

    சந்திப்பு பஸ் நிலைய பகுதியில் மழை நீர் தேங்கி இருப்பதை படத்தில் காணலாம்.

    நெல்லை மாவட்டத்தில் தொடர் மழை- பாபநாசம் அணை நீர்மட்டம் 3 அடி உயர்வு

    • இன்று காலை வரை அதிகபட்சமாக நாலுமுக்கில் 41 மில்லி மீட்டர் மழை பெய்தது.
    • மழை காரணமாக மாநகர பகுதியில் சில இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது.

    நீர் மட்டம் உயர்வு

    இன்று காலை வரை அதிகபட்சமாக நாலுமுக்கில் 41 மில்லி மீட்டர், காக்காச்சியில் 28 மில்லி மீட்டரும், மாஞ்சோலையில் 27 மில்லி மீட்டரும் மழை பதிவானது. இதேபோல் பாளையங்கோட்டை, நெல்லை, களக்காடு, ஊத்து, முன்னீர்பள்ளம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.

    இந்த மழை காரணமாக நேற்று 64.50 அடியாக இருந்த பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று 3 அடி உயர்ந்து 67.60 அடியாக உள்ளது. அணைக்கு 1946.215 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 354.75 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 80 அடியாக இருந்த சேர்வலாறு அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து இன்று 82.41 அடியாக உள்ளது.

    இதேபோல் மணி முத்தாறு அணை நீர்மட்டம் 44.90 அடியாக உள்ளது. நேற்று இரவு பெய்த மழை காரணமாக மாநகர பகுதியில் சில இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.

    குறிப்பாக சந்திப்பு பஸ் நிலையத்தில் தண்ணீர் குளம் போல் தேங்கி காணப்படுகிறது. இதேபோல் தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த மழை காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மெயினருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    Next Story
    ×