என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களக்காடு அருகே அங்கன்வாடி ஊழியர், விவசாயி வீடுகளில் நகை-பணம் திருட்டு
    X

    களக்காடு அருகே அங்கன்வாடி ஊழியர், விவசாயி வீடுகளில் நகை-பணம் திருட்டு

    • மல்லிகா சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டி விட்டு, வேலைக்கு சென்று விட்டார்.
    • சூரியபெருமாள் வீட்டிலும் ரூ.50 ஆயிரம் திருடப்பட்டிருந்தது.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள மேல மாவடி நடுத்தெருவை சேர்ந்தவர் நடேசன் மனைவி மல்லிகா (வயது68). அங்கன்வாடி ஊழியரான இவர் சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டி விட்டு, வேலைக்கு சென்று விட்டார்.

    பின்னர் மாலையில் வந்து பார்த்த போது வீட்டில் உள்ளே இருந்த பீரோ திறந்து கிடந்துள்ளது. அதில் இருந்த 2 பவுன் எடையுள்ள தங்க செயின், அரை பவுன் எடையுள்ள தங்க கம்மல், வெள்ளி கொலுசு மற்றும் ரூ. 5ஆயிரம் திருடப்பட்டி ருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபோல அதே தெருவில் விவசாயி சூரியபெருமாள் வீட்டிலும் ரூ.50 ஆயிரம் திருடப் பட்டிருந்தது. இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 வீடுகளிலும் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் யார் என்று விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    இதற் கிடையே சூரிய பெரு மாள் வீட்டில் தங்கியிருந்த வாலிபர் ஒரு வரும் மாய மாகி யுள்ளார்.

    எனவே அவர் தான் திரு ட்டில் ஈடு பட்டாரா? என்ற கோ ணத்தி லும் விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×