என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாநகரில் சொந்த கார்களில் வாடகை சவாரி ஏற்றி செல்பவர்கள் மீது நடவடிக்கை- வாடகை கார் உரிமையாளர்கள் ஆர்.டி.ஓ.விடம் புகார்
    X

    நெல்லை மாநகரில் சொந்த கார்களில் வாடகை சவாரி ஏற்றி செல்பவர்கள் மீது நடவடிக்கை- வாடகை கார் உரிமையாளர்கள் ஆர்.டி.ஓ.விடம் புகார்

    • மேலப்பாளையம் பகுதியில் சொந்த பயன்பாட்டு வாகனங்களை பயன்படுத்தி வாடகை சவாரி எடுக்கப்பட்டு வருகிறது.
    • விமான நிலையங்கள், சுற்றுலா உள்ளிட்டவற்றுக்கும் சொந்த காரில் வாடகைக்கு செல்கின்றனர்.

    நெல்லை:

    மேலப்பாளையம் சி.ஐ.டி.யு. வாடகை கார் ஸ்டாண்ட் தலைவர் செய்யது பரக்கத் அனாம் தலைமையில் நிர்வாகிகள் திரளாக வந்து நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திர சேகரனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மேலப்பாளையம் பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக சொந்த பயன் பாட்டு வாகனங்களை பயன்படுத்தி வாடகை சவாரி எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி குழந்தை களை பள்ளிக் கூடத்திற்கு அழைத்துச் செல்லும் பணிகளை செய்து கொண்டிருக்கின்றனர்.

    அதோடு வெளியூர் பயணம், குறிப்பாக விமான நிலையங்கள், சுற்றுலா உள்ளிட்டவற்றுக்கும் சொந்த காரில் வாடகைக்கு செல்கின்றனர். மேலும் இவர்களிடம் எந்த விதமான ஆவணங்களோ, இன்சூரன்ஸ் போன்ற வைகளோ முறையாக இல்லை. இதனால் வாடகை கார் ஓட்டுனர்கள் மற்றும் உரிமை யாளர்களின் வாழ் வாதாரம் பாதிப்படைகிறது.

    எனவே வாடகை கார் அனுமதி பெறாமல் சொந்த பயன்பாட்டு வாகனத்தை பயன்படுத்துபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    அதனைப் பெற்றுக் கொண்ட ஆர்.டி.ஓ சந்திர சேகரன், இது தொடர்பாக ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

    Next Story
    ×