என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • திருவேங்கடநாதபுரம் கோவிலில் வெங்கடாஜலபதிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
    • பெருமாள் கோவில்களில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    நெல்லை:

    ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதங்களில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடை பெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு புரட்டாசி முதல் சனிக் கிழமையை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு இன்று அதி காலை முதல் நடைபெற்று வருகிறது.

    நெல்லை மாவட்டம் திருவேங்கடநாதபுரத்தில் அமைந்துள்ள தென் திருப்பதி என பக்தர்களால் அழைக்கப்படும் வெங்கடா ஜலபதி கோவிலில் மூலவர் வெங்கடாஜலபதிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். நீண்ட வரிசையில் காத்தி ருந்து பெருமாளை பக்தர் கள் தரிசனம் செய்தனர்.

    இதே போல் நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில்களில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    அங்கும் நீண்ட வரிசை யில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இரவு கருட வாகனத்தில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் கருட சேவை உற்சவம் வெகு விமர்சையாக நடை பெற உள்ளது.

    மாநகரில் மைய பகுதியில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் வீரராகவ பெருமாள் கோவி லில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், காலை சந்திகள் நடை பெற்றது.

    தொடர்ந்து நவகலச கும்பங்கள் வைத்து ஹோமங்கள் நடைபெற்றது. தொடா்ந்து உற்சவா் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவரதராஜருக்கு மாபொடி, மஞ்சள்பொடி, வாசனைபொடி, பால், தயிா், பஞ்சாமிர்தம், தேன், இளநீா், சந்தணம் என பலவகை பொருள்களால் திருமஞ்சனம் நடைபெற்றது.

    பின்னா் மகா பூர்ணாகுதி நடைபெற்று பெருமாளுக்கு மகா அபிஷேகம் நடை பெற்றது. தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவரத ராஜருக்கு அா்ச்சனை நடை பெற்று நட்சத்திர ஆரத்தி, கும்ப ஆரத்தி, தீப ஆரத்தி காண்பிக்கப்பட்டு சோடச உபசரனைகள் நடை பெற்றது.

    ஏராளமான பக்தா்கள் திருமஞ்சன நிகழ்வில் கலந்துகொண்டு பெருமாளை தாிசனம் செய்தனா். இரவில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெறுகின்றது.

    இதேபோல் பாளை ராஜ கோபால சுவாமி கோவில், டவுன் கரியமாணிக்க பெருமாள் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.டவுன் மேல மாடவீதியில் உள்ள லட்சுமி நரசிங்க பெருமாள் கோவிலில் காலை 8.30 மணிக்கு திருமஞ்சனம், 10.30 மணிக்கு திருவாரா தனம் நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு துளசி, துளசி தீர்த்தம், மஞ்சள் பொடி, குங்குமம் ஆகியவை பிரசாத மாக வழங்கப்பட்டது.அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில், காட்டு ராமர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந் தது. இரவில் கருடசேவை நடக்கிறது.

    இதே போல் நெல்லை பொருட்காட்சி திடல் பஸ் நிலையத்தில் இருந்து மேல திருவேங்கடநாதபுரம் உள்ளிட்ட பெருமாள் கோவில்களுக்கும், சேரன்மகாதேவி, அம்பை பகுதியில் இருந்தும் அந்தந்த பகுதி பெருமாள் கோவி லுக்கு பக்தர்கள் எளிதாக சென்று வருவதற்கு வசதி யாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    • 2 மருத்துவமனைக்கும் மின் வினியோகம் வழங்கும் அனைத்து மின் வழித்தடங்களிலும் இன்று ஆய்வு நடைபெற்றது.
    • வலைய தரசுற்று, பிரிவு படுத்துதல் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து விரிவாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனை மற்றும் பல்நோக்கு மருத்துவ மனைக்கு வட கிழக்கு பருவ மழையின் போது தங்கு தடையின்றி மின் வினி யோகம் வழங்கும் பொருட்டு சிறப்பு ஆய்வு கூட்டம் பாளை தியாகராஜ நகரில் உள்ள வட்ட மேற் பார்வை மின் பொறியாளர் அலுவலகத்தில் நடந்தது. மேற் பார்வை மின் பொறி யாளர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.

    அதனைத் தொடர்ந்து 2 மருத்துவமனைக்கும் மின் வினியோகம் வழங்கும் முதன்மை மின் பாதையான பாளை உபமின் நிலை யத்தில் இருந்து மின் வினியோகம் வழங்கும் 11 கிலோ வோல்ட் மற்றும் இயற்கை இடர்பாடுகள் காரணமாக மின் தடங்கள் ஏற்பட்டால் மாற்று வழியில் உடனடியாக மின்சாரம் வழங்கும் மார்கெட் மின் பாதை, சமாதானபுரம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் வழங்கும் வ.உ.சி.மின்பாதை, தியாகராஜநகர் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் வழங்கும் மகராஜநகர் மின்பாதை என அனைத்து மின் வழித்தடங்களிலும் இன்று ஆய்வு நடைபெற்றது.

    மின் சாதனங்களான வலைய தரசுற்று, பிரிவு படுத்துதல் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து விரிவாக கள ஆய்வு மேற்கொண்டார். இயற்கை இடர்பாடுகளின் போது அனைத்து பொறுப்பு மின் பொறியாளர்களிடம் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள உத்தர விட்டார்.

    மேலும் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திடம் இயற்கை இடர்பாடுகளின் போது தவிர்க்க இயலாத நேரத்தில் மின்ஆக்கியை நல்ல இயக்க நிலையில் வைப்பதற்கும், தேவையான அளவு எரிபொருள் கையிருப்பு வைப்பதற்கும் கேட்டுக்கொண்டார்.

    இந்த ஆய்வு பணியின் போது நெல்லை மின் பகிர்மான வட்ட செயற் பொறியாளர் ( பொது ) வெங்கடேஷ்மணி, உதவி செயற் பொறியாளர்கள் சார்லஸ் நல்லத் துரை, சங்கர், சிதம்பரவடிவு, உதவி மின் பொறியாளர் வெங்கடேஷ், மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் மின் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    • பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • நிகழ்ச்சியின் போது பல்வேறு உயிர்காப்பு நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

    முக்கூடல்:

    முக்கூடல் பாலகன் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி யில் தேசிய பேரிடர் மீட்புப்படை சார்பில் பேரிடர் மீட்புப் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி நிறுவனர் பாலகன் ஆறுமுகச்சாமி, கல்லூரி முதல்வர் கிருஷ்ணவேணி ஆகியோர் தலைமை தாங்கினர். சேரன்மகாதேவி தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் அரக்கோ ணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப்படை சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சய் தேஸ்வால் தலைமையிலான 16 வீரர்கள் கலந்து கொண்டு மழை, வெள்ளம், இயற்கை சீற்றங்கள், பேரிடர், பூகம்பம், சுனாமி காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மீட்புப் பணிகள் குறித்து மாணவிகளுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர்.

    அப்போது பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும், நெல்லை மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டால் முன்னெ ச்சரிக்கை நடவடிக்கைகளை எப்படி மேற்கொள்வது, வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை மீட்பது, தக்க வைப்பது, மாரடைப்பு ஏற்படும் போது உடனடியாக உயிர் காப்பது எப்படி?, விபத்தில் சிக்கியவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்புவது, ஆம்புலன்சை வரவழைப்பது உள்ளிட்ட பல்வேறு உயிர்காப்பு நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளித்தனர்.

    இதில் கல்லூரி மாணவிகள், பேராசிரி யர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • துரைகுடியிருப்பில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.
    • 5 லட்சம் மதிப்பீட்டில் தலா 2 பேவர் பிளாக் சாலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு திட்டங்களின் கீழ் அமைக்கப்பட உள்ள வளர்ச்சி திட்ட பணிகளை நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், மாவட்ட திட்டக்குழு தலைவருமான வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

    பேவர் பிளாக் சாலை

    அதன்படி பரமேஸ்வரபுரம் பஞ்சாயத்து முத்தாரம்மன் கோவில் தெருவில் ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலைக்கு அடிக்கல், சமூகரெங்கபுரம் பஞ்சாயத்தில் ரூ. 4.60 லட்சம் மதிப்பீட்டில் பேவர் சாலை பணி, துரைகுடியிருப்பில் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க

    தொட்டிக்கும், 5 லட்சம் மதிப்பீட்டில் தலா 2 பேவர் பிளாக் சாலைக்கும் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் உள்ள மின்மாற்றியினை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்ததோடு, விஜயாபதி பஞ்சாயத்து தோமையார்புரம் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றியினையும் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிகளில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, மாவட்ட கவுன்சிலர் ஜான்ஸ் ரூபா, ஒன்றிய

    கவுன்சிலர்கள் படையப்பா முருகன், இசக்கி பாபு, ஆவுடை பாலன், ஊராட்சிமன்ற தலைவர்கள் அந்தோனி அருள், இந்திரா மின்னல், மணிகண்டன், ராதாபுரம் கூட்டுறவு சங்க தலைவர் அரவிந்தன், கஸ்தூரிரெங்க புரம் பாலன், நவ்வலடி சரவண குமார், உறுமன்குளம் பொன் இசக்கி பாண்டியன், சிதம்பரபுரம் முருகன், ஒன்றிய அவைத்தலைவர் ராமையா, மாவட்ட பிரதிநிதி கோவிந்தன், வேலப்பன், ஒன்றிய துணை செயலாளர் செழியன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ஐ.ஆர். ரமேஷ், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், திசையன்விளை பேரூர் இளைஞரணி அமைப்பாளர் நெல்சன், கல்கண்டு, கல்யாணி, சமுகை கருணை ராஜ், முருகேஷ், ரீகன், எழில் ஜோசப், முத்தையா, முத்து மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பெருமாள் கோவில்களுக்கு செல்ல 3 பஸ்கள் இன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது
    • 3 பஸ்களும் காலை 7 மணிக்கு புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டது.

    நெல்லை:

    புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும்.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இந்த நாட்களில் பெருமாள் கோவில்களுக்கு ஏராளமான பக்தர்கள் சென்று சுவாமி தரிசனம் செய்வார்கள். இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவ திருப்பதி கோவில்களுக்கு பக்தர்கள் அதிகளவு செல்வது வழக்கம்.

    இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சனிக்கிழமைகளில் நவ திருப்பதி கோவில்களுக்கு பக்தர்கள் சென்று தரிசனம் செய்து விட்டு திரும்பி வரும் வகையில் சிறப்பு பஸ்கள் ஆண்டுதோறும் இயக்கப்படும். அதன்படி இந்த ஆண்டும் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி இன்று காலை புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையையொட்டி நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ் இயக்கத்தின் தொடக்க விழா நடைபெற்றது. நெல்லை அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் சரவணன் இந்த பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பெருமாள் கோவில்களுக்கு செல்ல 3 பஸ்கள் இன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    இந்த பஸ்களில் அனைத்து இருக்கைகளும் நிரம்பின. ஒரு பஸ்சுக்கு 55 பக்தர்கள் வீதம் மொத்தம் 165 பக்தர்கள் இன்று கோவிலுக்கு புறப்பட்டனர். இந்த பயணத்திற்கு கட்டண தொகையாக ரூ.500 வசூலிக்கப்பட்டது. இந்த 3 பஸ்களும் காலை 7 மணிக்கு புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. பஸ்சில் சென்ற பக்தர்களுக்கு பிரசாத பை மற்றும் கோவில்கள் வரலாறு குறித்த விளக்க கையேடு உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

    இதில் கோட்ட மேலாளர்கள் சசிகுமார், பூல்ராஜ், கோபால கிருஷ்ணன், சுப்பிரமணியன், சுடலைமணி, மாரியப்பன், தாமிரபரணி கிளை மேலாளர் கோபால கிருஷ்ணன், பைபாஸ் பணிமனை கிளை மேலாளர் விஜயகுமார், புதிய பஸ் நிலைய பொறுப்பாளர் முனியசாமி மற்றும் அலுவலர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த பஸ் நவ திருப்பதி கோவில்களான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவில், நத்தம் விஜயாசன பெருமாள் கோவில், திருப்புளியங்குடி காய்சினவேந்த பெருமாள் கோவில், இரட்டை திருப்பதி அரவிந்த லோசனார் பெருமாள் கோவில், தேவர் பிரான் கோவில், பெருங்குளம் மாயக்கூத்தர் கோவில், தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவில், திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவில், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவில் ஆகிய 9 கோவில்களுக்கும் சென்று இரவு மீண்டும் புதிய பஸ் நிலையம் வருகிறது.

    இதேபோல் வருகிற 30-ந்தேதி மற்றும் அக்டோபர் மாதம் 7-ந்தேதி, 14-ந்தேதிகளிலும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இனிவரும் வாரங்களில் செல்வதற்கு விருப்ப முள்ளவர்கள் புதிய பஸ் நிலையத்தில் கடந்த 14-ந்தேதி முதல் அனைத்து நாட்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் பஸ்களும் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறினர்.

    இதேபோல் நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் இருந்து திருவேங்கட நாதபுரம், கருங்குளம், அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில், வள்ளியூரில் இருந்து களக்காடு வழியாக திருக்குறு ங்குடிக்கும், வீரவநல்லூரில் இருந்து அத்தாள நல்லூரு க்கும் பக்தர்கள் வசதிக்காக பஸ்கள் இயக்கப்பட்டன.

    • திருக்குறுங்குடி கைகாட்டி சந்திப்பில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகள் தொடங்க உள்ளது.
    • பெரிய குளத்தில் மராமத்து பணிகளை மேற்கொண்டு 20 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.

    நெல்லை:

    திருக்குறுங்குடி தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் தலைமையில் திருக்குறுங்குடியில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    பயணிகள் நிழற்குடை

    சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ஏற்கனவே திருக்குறுங்குடி கைகாட்டி சந்திப்பில் பயணிகள் நிழற்குடை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்க உள்ளது. இதேபோல் அரசு மருத்துவமனை அருகிலும் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படும்.

    மேலும் திருக்குறுங்குடி பெரிய குளத்தில் மராமத்து பணிகளை மேற்கொண்டு 20 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதால் விரைந்து மராமத்து பணி, சாலைத்தெரு பழைய அன்னதான சத்திரத்தில் திருமண மண்டபம், திருப்பாற்கடல் நம்பிகோவில் எதிர்புறம் அரசு ஆற்று புறம்போக்கு நிலத்தில் ரேஷன் கடை மற்றும் திருமேலசாலைத்தெரு கைகாட்டி முன்னாள் பயணியர் விடுதி அருகே மின்வாரிய அலுவலகம் மற்றும் கால்நடை மருத்துவமனை அமைத்தல் போன்ற பணிகளை செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கலந்து கொண்டவர்கள்

    கூட்டத்தில் செயல் அலுவலர் உமா, இளநிலை பொறியாளர் பரமசிவன், பண்டக சாலை தலைவர் கணேசன், திருக்குறுங்குடி தேர்வு நிலை பேரூராட்சி தலைவர் இசக்கியம்மாள், திருக்குறுங்குடி காங்கிரஸ் நகர தலைவர் ராசாத்தி, திருக்குறுங்குடி நகர செயலாளர் கசமுத்து, காங்கிரஸ் நிர்வாகிகள் சாமிநாதன், தி.மு.க. நிர்வாகி மாடசாமி, சமூக ஆர்வலர் ராமசுப்பிரமணியம், வார்டு கவுன்சிலர்கள் உள்பட காங்கிரஸ், தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    அதனைதொடர்ந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சென்ற ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., அங்குள்ள தலைமை மருத்துவரை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பொதுமக்களின் தேவைக்காக 24 மணி நேரமும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் பணியில் இருக்கும் விதமாக கூடுதல் மருத்துவர்களை பணியமர்த்த அரசுக்கு கோரிக்கை வைப்பதாக அப்போது எம்.எல்.ஏ. உறுதி அளித்தார்.

    • மாஞ்சோலை வனப்பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம், விளாத்திகுளம், வேடநத்தம், ஓட்டப்பிடாரம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வறட்சியின் பிடியில் இருந்த பகுதிகளில் சற்று வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து சற்று அதிகரித்து காணப்படுகிறது. பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 67.60 அடியாக இருந்த நிலையில், இன்று மேலும் 1 அடி உயர்ந்து 68.40 அடியானது. இதேபோல் நேற்று 82.41 அடியாக இருந்த சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று 83.07 அடியானது. அணைகளுக்கு வினாடிக்கு 826 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 45.05 அடியாக உள்ளது. இந்த அணை பகுதியில் நேற்று 6.40 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    மாஞ்சோலை வனப்பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. நாலுமுக்கு எஸ்டேட்டில் 8 மில்லிமீட்டரும், ஊத்து மற்றும் காக்காச்சியில் தலா 3 மில்லிமீட்டரும் மழை பெய்தது. புறநகர் பகுதியில் நாங்குநேரி, மூலக்கரைப்பட்டி பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மூலக்கரைப்பட்டியில் 13 மில்லிமீட்டர் மழை பெய்தது. மாநகர பகுதியில் லேசான சாரல் பெய்தது.

    தென்காசி மாவட்டத்தில் குண்டாறு அணை பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதேபோல் அடவிநயினார் அணை பகுதியிலும் மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது. அதிகபட்சமாக குண்டாறில் 2.8 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த மழை காரணமாக தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    குற்றாலம் ஐந்தருவியில் இரவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மற்ற அருவிகளிலும் அதிக அளவில் தண்ணீர் விழுந்தது. இந்நிலையில் இன்று காலை ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு சற்று குறைந்ததால் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். மெயினருவி, பழைய குற்றாலம் அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம், விளாத்திகுளம், வேடநத்தம், ஓட்டப்பிடாரம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக விளாத்திகுளம் மற்றும் ஓட்டப்பிடாரத்தில் சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. அங்கு 23 மில்லிமீட்டர் மழை பெய்தது. வேடநத்தம், வைப்பார், எட்டயபுரத்தில் 10 மில்லிமீட்டர் மழை பெய்தது. கடந்த சில நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • வந்தே பாரத் ரெயிலுக்கு சாதாரண ஏ.சி. பெட்டியில் ரூ.1,620 கட்டணமாகவும், எக்சிகியூட்டிவ் ஏ.சி. பெட்டியில் ரூ.3,025 கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது.
    • நெல்லையில் இருந்து சென்னை செல்லும்போது பயணிகளுக்கு காலை மற்றும் மதிய உணவு என 2 வேளை உணவு வழங்கப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை-சென்னை இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவையை நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.

    தென் மாவட்ட மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான இந்த வந்தே பாரத் ரெயில் சேவைக்கான சோதனை ஓட்டம் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இந்நிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12.30 மணி அளவில் தனது இயக்கத்தை தொடங்குகிறது.

    தொடக்க விழாவையொட்டி இந்த ரெயிலில் நாளை பயணிகள் யாருக்கும் அனுமதி கிடையாது. தொடர்ந்து மதியம் 1.28 மணிக்கு கோவில்பட்டி, மதியம் 2.18 மணிக்கு விருதுநகர், 2.55 மணிக்கு மதுரை, மாலை 4.13 மணிக்கு திண்டுக்கல் தொடர்ந்து திருச்சிக்கு சென்றடைகிறது. பின்னர் விழுப்புரம், தாம்பரம் வழியாக எழும்பூரை சென்றடைகிறது. தொடக்க விழாவையொட்டி ரெயிலை வரவேற்பதற்காக கூடுதல் நிறுத்தங்களில் ரெயில் நிறுத்தப்படுகிறது.

    இந்நிலையில் நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயிலுக்கான முன்பதிவு இன்று காலை முதல் தொடங்கியது. சென்னையில் இருந்து நெல்லை வருவதற்கு 25-ந்தேதி முதலும், நெல்லையில் இருந்து சென்னை செல்வதற்கு 27-ந் தேதி முதலும் பயணம் செய்வதற்கு முன்பதிவு தொடங்கியது.

    இந்நிலையில் இந்த ரெயிலுக்கு சாதாரண ஏ.சி. பெட்டியில் ரூ.1,620 கட்டணமாகவும், எக்சிகியூட்டிவ் ஏ.சி. பெட்டியில் ரூ.3,025 கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது. இவற்றில் சாதாரண ஏ.சி. பெட்டியில் சாப்பாடு இல்லாமல் ரூ.1,320 மற்றும் எக்சிகியூட்டிவ் ஏ.சி. பேட்டியில் சாப்பாடு இல்லாமல் ரூ.2,375 வசூலிக்கப்படுகிறது.

    இதில் உணவு என்பது பயணிகளின் விருப்பம். அவர்கள் டிக்கெட் புக் செய்யும்போதே உணவு வேண்டுமா? வேண்டாமா? என்று பதிவு செய்து அதற்கேற்ப டிக்கெட்டை செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    நெல்லையில் இருந்து சென்னை செல்லும்போது பயணிகளுக்கு காலை மற்றும் மதிய உணவு என 2 வேளை உணவு வழங்கப்படுகிறது. ஒரு நேரம் டீ வழங்கப்படுகிறது. சென்னையில் இருந்து நெல்லை வரும்போது டீ அல்லது சூப் மற்றும் இரவு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கிடையே இன்று காலை முதல் முன்பதிவு தொடங்கியதையொட்டி, தீபாவளி முன்பதிவும் மும்முரமாக நடைபெற்றது. அதன்படி வருகிற நவம்பர் மாதம் 10-ந்தேதிக்கு முன்பதிவு திறக்கப்பட்ட சில நிமிடங்களில் காத்திருப்போர் பட்டியல் எண்ணிக்கை 45 என்றானது.

    • நாளை மறுநாள் மேலும் 9 வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில்களை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கிறார்.
    • வந்தே பாரத் ரெயிலுக்காக 248 லோகோ மற்றும் உதவி லோகோ பைலட்டுகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    நெல்லை:

    தென்னக ரெயில்வேக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்கனவே 3 வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்குள் 75 வந்தே பாரத் ரெயில்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    இந்நிலையில் நாளை மறுநாள் மேலும் 9 வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில்களை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கிறார். அதில் நெல்லை-சென்னை வழித்தடமும் அடங்கும். உயர் தொழில்நுட்ப திறன் கொண்ட இந்த வந்தே பாரத் ரெயில்களை இயக்க பயிற்சி பெற்ற லோகோ பைலட்டுகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த வந்தே பாரத் ரெயில்களை பாதுகாப்பாகவும், விரைவாகவும் இயக்கும் வகையில் சுழற்சி முறையில் பணியாற்ற லோகோ பைலட்டுகள், உதவி லோகோ பைலட்டுகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. மொத்தமாக வந்தே பாரத் ரெயிலுக்காக 248 லோகோ மற்றும் உதவி லோகோ பைலட்டுகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களுக்கு சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தொழிற்சாலை, காசியாபாத்தில் உள்ள மின்சார கருவிகள் பயிற்சி மையம், ஆவடியில் உள்ள மண்டல மின்சார இழுவை பயிற்சி மையங்களில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. வந்தே பாரத் ரெயிலில் உள்ள ஓட்டுநர் அறையானது, ரெயிலை எளிதாக இயக்க வசதியாக பெரிய திரை, பணி சூழலுக்கு ஏற்ற இருக்கை வசதி, அதிக இட வசதி, ரெயில்வே பாதுகாவலரிடம் பேசும் வசதி, ரெயில் முன் மற்றும் பின் பக்கங்களில் காமிரா மூலம் கண்காணிப்பது உள்ளிட்ட நவீன வசதிகள் இதில் உள்ளது.

    • நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயிலை நாளை மறுநாள் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
    • மொத்தம் 8 பெட்டிகள் கொண்ட இந்த ரெயிலில் நடுப்பகுதியில் வி.ஐ.பி.களுக்கான பெட்டி 1 உள்ளது.

    நெல்லை:

    தென்னக ரெயில்வேயில் அதிக வருவாயை கொட்டி கொடுக்கும் ரெயில் நிலையமாக நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் உள்ளது.

    இதனால் வடமாநிலங்களில் இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலை தமிழகத்தில் சென்னை-கோவை, சென்னை-மைசூரு உள்ளிட்ட வழித்தடங்களுக்கு அடுத்தபடியாக நெல்லை-சென்னை இடையே இயக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பும் வெளியானது.

    அதற்கான ஏற்பாடுகள் முடிவடைந்த நிலையில், நேற்று சென்னையில் தயார் நிலையில் இருந்த அந்த ரெயில் நெல்லைக்கு எடுத்து வரப்பட்டது. இதனை நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இந்நிலையில் இந்த ரெயிலுக்கான சோதனை ஓட்டம் இன்று காலை தொடங்கியது. காலை 6 மணிக்கு வந்தே பாரத் ரெயில் 8 பெட்டிகளுடன் சென்னைக்கு புறப்பட்டது. இந்த ரெயில் 7.05 மணிக்கு விருதுநகர் சென்றடைந்தது.

    பின்னர் அங்கிருந்து மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், தாம்பரம் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று சென்று மதியம் சென்னை எழும்பூரை அடைந்தது. தொடர்ந்து மதியம் 2.50 மணிக்கு இந்த ரெயில் சென்னையில் இருந்து மறுமார்க்கமாக நெல்லைக்கு புறப்பட்டு வர உள்ளது.

    மொத்தம் 8 பெட்டிகள் கொண்ட இந்த ரெயிலில் நடுப்பகுதியில் வி.ஐ.பி.களுக்கான பெட்டி 1 உள்ளது. இதில் 52 பயணிகள் அமர்ந்து செல்லலாம். இருபுறமும் தலா 2 இருக்கைகள் கொண்டதாக இந்த பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு இருக்கைக்கும் கீழ் பகுதியில் சார்ஜர் பாயிண்ட் உள்ளது. இந்த இருக்கைகள் சுழலும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் இருக்கையில் அமர்ந்தபடி உணவு உண்ண வசதி உள்ளது. இந்த பெட்டியில் உட்புறத்தில் 2 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. கதவு பகுதியில் 2 கேமராக்கள் உள்ளன. மொத்தம் உள்ள 8 பெட்டிகளும் முழுமையாக குளிர்சாதன வசதி கொண்டவையாக அமைக்கப்பட்டுள்ளது. மற்ற 7 சாதாரண பெட்டிகளிலும் ஒரு புறத்தில் 3 இருக்கைகள், மற்றொரு புறத்தில் 2 இருக்கைகள் உள்ளன. இவை சுழலாது. இந்த பெட்டிகளிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சாப்பிட வசதி, சார்ஜ் செய்யும் வசதி உள்ளது.

    மேலும் நவீன வசதிகள் கொண்ட கழிப்பிட வசதி உள்ளது. குழந்தைகளுடன் செல்பவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கும் கழிவறையில் சிறப்பு வசதி உள்ளது. இந்த ரெயிலில் சுமார் 540 பயணிகள் வரை பயணம் செய்யலாம். 5 நிமிடத்திற்கு முன்னதாகவே பயணிகள் ரெயிலில் ஏறிவிட வேண்டும்.

    கடைசி நேரத்தில் வரும் பயணிகள் முதல் அல்லது கடைசி பெட்டி வாசல் வழியாக மட்டுமே ஏற முடியும். மற்ற வாசல்களில் முழுமையாக சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. எனவே வாசல் படிக்கட்டில் நின்றால் ரெயில் புறப்பட முடியாது என்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த ரெயிலில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவு, டிக்கெட் கட்டணம் குறித்து இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை. இன்று இரவுக்குள் முன்பதிவு, உணவு, டிக்கெட் குறித்த முழு விபரம் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

    வந்தே பாரத் ரெயில் தொடக்க விழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) சந்திப்பு ரெயில் நிலையத்தில் நடக்கிறது. டெல்லியில் இருந்து காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி இந்த ரெயிலை தொடங்கி வைக்கிறார். மதியம் 12 மணிக்கு நடக்கும் இந்த தொடக்க விழாவில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் கலந்து கொள்கிறார்.

    இந்த விழாவில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், ஞானதிரவியம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், நயினார் நாகேந்திரன், மேயர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை ரெயில் நிலைய மேலாளர் முருகேசன் மற்றும் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    • ஏ.டி.எம். எந்திர அறையிலும் எப்போதும் வாடிக்கையாளர்கள் வந்து பணம் எடுத்து செல்வார்கள்.
    • கடந்த 2 நாட்களாக வங்கியில் பணம் எடுப்பது, அதில் நிரப்புவது உள்ளிட்டவற்றில் கணக்கு வித்தியாசம் இருந்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தில் இருந்து டவுன் நெல்லையப்பர் கோவிலுக்கு செல்லும் சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது.

    இந்த வங்கி வளாகத்திலேயே அந்த வங்கியின் ஏ.டி.எம். செயல்பட்டு வருகிறது. மேலும் அதனுடன் வேறு சில வங்கிகளின் ஏ.டி.எம். எந்திரங்களும் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையில் அமைந்துள்ள இந்த ஏ.டி.எம். எந்திர அறையிலும் எப்போதும் வாடிக்கையாளர்கள் வந்து பணம் எடுத்து செல்வார்கள்.

    கடந்த 2 நாட்களாக வங்கியில் பணம் எடுப்பது, அதில் நிரப்புவது உள்ளிட்டவற்றில் கணக்கு வித்தியாசம் இருந்துள்ளது. இதனால் வங்கி மேலாளர் உத்தரவின்பேரில் ஏ.டி.எம். அறைக்குள் சந்தேக நபர்கள் நடமாட்டம் உள்ளதா என்பதை ஊழியர்கள் சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் கண்காணித்து வந்தனர். நேற்று மதியம் இந்த அறைக்குள் வடமாநிலத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் நீண்ட நேரமாக நின்றுள்ளனர். அவர்கள் மீது சந்தேகம் அடைந்த ஊழியர்கள் வங்கி மேலாளர் மாரியப்பனிடம் புகார் தெரிவித்தனர். அவர் தெரிவித்த தகவலின் பேரில் சந்திப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    பின்னர் அங்கு நின்ற வடமாநில வாலிபர்கள் 2 பேரையும் பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் அரியானா மாநிலத்தை சேர்ந்த பஷீர் மகன் சலீம் உசேன் (வயது 25), பாலுவால் பகுதியை சேர்ந்த அசன் மகன் முபட்(23) என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் நூதன முறையில் ஏ.டி.எம். எந்திரங்களில் பணத்தை திருடி சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது.

    கடந்த சில நாட்களாக 2 பேரும் அந்த ஏ.டி.எம். அறைக்குள் சென்று போலி கார்டுகள் மூலமாக பணத்தை எடுத்து வந்துள்ளனர். பணத்தை எடுக்கும் நேரத்தில் அவர்களில் ஒருவர் அறை உள்ளே இருக்கும் மீட்டரின் மெயின் சுவிட்சை அணைத்து விடுவார். அதன் மூலம் பணம் வெளியே வந்துவிட்டாலும், அது குறைந்ததற்கான கணக்கு தெரியாமல் போய்விடும் என்றும், அதனை பயன்படுத்தியே பணத்தை திருடியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று மாலை 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை மருத்துவ பரிசோதனை செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த சென்றனர். அதற்குள் இரவு நேரமாகி விட்டதால் இன்று காலை ஆஜர்படுத்துமாறு நீதிபதி தெரிவித்துள்ளார்.

    இதனால் அவர்கள் 2 பேரையும் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் காசிராஜன் தலைமையிலான போலீசார் இன்று காலை போலீஸ் ஜீப்பில் கொண்டு சென்றனர். பாளை ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே ஜீப் சென்றபோது சலீம் உசேன், முபட் ஆகிய 2 பேரும் ஜீப்பில் இருந்து குதித்து தப்பி ஓடினர். உடனே அவர்களை பிடிப்பதற்காக போலீசார் இறங்கி விரட்டி சென்றனர். ஆனால் அவர்கள் இருவரும் மின்னல் வேகத்தில் தப்பி ஓடி விட்டனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில், பாளையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றின் பின்புறம் மறைந்திருந்த சலீமை போலீசார் கைது செய்தனர். சிறிது நேரத்தில் பாளை சாந்திநகர் 30-வது தெரு பகுதியில் பதுங்கி இருந்த முபட்டை மடக்கி பிடித்தனர். பின்னர் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து சென்றனர்.

    விசாரணை கைதிகளை கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து சென்ற போது அவர்கள் போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடியதும், போலீசார் அவர்களை துரத்தி பிடித்ததும் பாளை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • அதிகாரிகள் யாரும் கூட்டத்திற்கு வராததினால் விவசாயிகளிடையே அதிருப்தி ஏற்பட்டது.
    • கலெக்டர் அலுவலகத்தில் நுழைவுப் பகுதியில் விவசாயிகள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.

    அப்பொழுது விவசாயி களின் கேள்விக்கு சரியான முறையில் பதில் சொல்வதற்கான அதிகாரிகள் யாரும் கூட்டத்திற்கு வராததினால் விவசாயிகளிடையே அதிருப்தி ஏற்பட்டது .

    இதுகுறித்து கேட்டபோது, மாவட்ட கலெக்டர் உட்பட மாவட்ட உயர் அதிகாரிகள் வேறொரு அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு சென்று ள்ளதாக அதிகாரி கள் பதில் கூறினர். இதனால் ஆத்திரமடைந்த விவ சாயிகள் மாவட்ட கலெக்டர் வந்த பின்பு கூட்டத்தை நடத்தலாம் என்றும், நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் கூட்ட அரங்கை விட்டு வெளியேறினர். இதனையடுத்து வேளாண்துறை அதிகாரிகள் அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    சமரச முயற்சி தோல்வி அடையவே நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நுழைவுப் பகுதியில் தரையில் அமர்ந்து விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் அவர்களுடன் பேசி சமாதானம் செய்து கூட்ட அரங்கிற்கு வருமாறு அழைப்பு விடுத்ததின் பேரில் மீண்டும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×