search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி குறைதீர்க்கும் கூட்டத்தை விவசாயிகள் புறக்கணிப்பு
    X

    தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் கலெக்டர் கார்த்திகேயன் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.

    நெல்லையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி குறைதீர்க்கும் கூட்டத்தை விவசாயிகள் புறக்கணிப்பு

    • அதிகாரிகள் யாரும் கூட்டத்திற்கு வராததினால் விவசாயிகளிடையே அதிருப்தி ஏற்பட்டது.
    • கலெக்டர் அலுவலகத்தில் நுழைவுப் பகுதியில் விவசாயிகள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.

    அப்பொழுது விவசாயி களின் கேள்விக்கு சரியான முறையில் பதில் சொல்வதற்கான அதிகாரிகள் யாரும் கூட்டத்திற்கு வராததினால் விவசாயிகளிடையே அதிருப்தி ஏற்பட்டது .

    இதுகுறித்து கேட்டபோது, மாவட்ட கலெக்டர் உட்பட மாவட்ட உயர் அதிகாரிகள் வேறொரு அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு சென்று ள்ளதாக அதிகாரி கள் பதில் கூறினர். இதனால் ஆத்திரமடைந்த விவ சாயிகள் மாவட்ட கலெக்டர் வந்த பின்பு கூட்டத்தை நடத்தலாம் என்றும், நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் கூட்ட அரங்கை விட்டு வெளியேறினர். இதனையடுத்து வேளாண்துறை அதிகாரிகள் அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    சமரச முயற்சி தோல்வி அடையவே நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நுழைவுப் பகுதியில் தரையில் அமர்ந்து விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் அவர்களுடன் பேசி சமாதானம் செய்து கூட்ட அரங்கிற்கு வருமாறு அழைப்பு விடுத்ததின் பேரில் மீண்டும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×