search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Perumal Temples"

    • சா்ப்ப விநாயகா் விற்றிருக்கும் தலமாகவும் தாளக்கரை லட்சுமி நரசிம்மப் பெருமாள் கோவில் விளங்குகிறது.
    • சனிக்கிழமை தொடங்கப்பட்டு வாரந்தோறும் சிறப்பு பூஜைகள், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேசப் பெருமாள் சுவாமி திருவீதி உலா உள்ளிட்டவை நடைபெற்றன

    அவிநாசி:

    பழமை வாய்ந்ததும், திருப்பூா் மாவட்டத்திலேயே தனி சன்னிதியாய் நரசிம்மருக்கு இடதுபுறம் மகாலட்சுமி நின்ற நிலையில் அருள்பாலிக்கும் சிறப்புக்குரியதும், சா்ப்ப விநாயகா் விற்றிருக்கும் தலமாகவும் தாளக்கரை லட்சுமி நரசிம்மப் பெருமாள் கோவில் விளங்குகிறது. இந்து சமய அறநிலையத் துறையின்கீழ் உள்ள இக்கோவிலில் புரட்டாசி திருவிழா செப்டம்பா் 23-ந் தேதி தொடங்கி 5 வார சனிக்கிழமைகளிலும் ஒவ்வோரு வாரம் அப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமத்தினா் உபயதாரா்களாக பங்கேற்று சிறப்பு பூஜைகளும், இரவு உற்சவமும் நடைபெற்றது.

    இதேபோல மேலத் திருப்பதி எனப் போற்றப்படும், சேவூா் அருகேயுள்ள மொண்டிபாளையம் பெருமாள் கோவிலில் புரட்டாசி திருவிழா செப்டம்பா் 16-ந் தேதி சனிக்கிழமை தொடங்கப்பட்டு வாரந்தோறும் சிறப்பு பூஜைகள், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேசப் பெருமாள் சுவாமி திருவீதி உலா உள்ளிட்டவை நடைபெற்றன.

    இந்நிலையில் பிரசித்தி பெற்ற இரு கோவில்களிலும் இந்த வாரம் சனிக்கிழமையுடன் புரட்டாசி திருவிழா நிறைவு பெற்றது. 

    • புரட்டாசி 3-வது சனிக்கிழமை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது.
    • விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    களக்காடு:

    திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப்பகுதியில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் திருமலை நம்பி கோவில் உள்ளது.

    ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமை களில் கருட சேவை விழா நடப்பது வழக்கம்.

    அதன்படி புரட்டாசி 3-வது சனிக்கிழமை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், திருமஞ்சனம், சிறப்பு தீபாராதனை நடந்தது. மதியம் 1 மணிக்கு உச்சி கால பூஜை, அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடத்தப்பட்டது.

    இதையடுத்து மாலையில் கருட சேவை நடந்தது. விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களி லிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் குடும்பத்தோடு மலைப் பாதையில் நடந்து கோவிலுக்கு வந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்க ளுக்கு அன்ன தானமும் வழங்கப்பட்டது. திருக்கு றுங்குடி வனச்சரகர் யோகேஷ்வரன் தலைமையில் வனப் பகுதியில் களக்காடு, திருக்குறுங்குடி, மேலகோதை யாறு வனச்சர கங்களை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழி யர்களும், ஏர்வாடி இன்ஸ்பெக்டர் தர்மராஜ் தலைமையில் திருக்குறுங்குடி, ஏர்வாடி, களக்காடு போலீசார் 30-க்கும் மேற்பட்ட போலீசாரும் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • புரட்டாசி 3-ம் சனிக்கிழமையையொட்டி மங்களகிரி பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
    • ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர்.

    ஈரோடு:

    புரட்டாசி 3-ம் சனிக்கிழமையையொட்டி பவானி அருகே உள்ள பெருமாள் மலையில் அமைந்துள்ள மங்களகிரி பெருமாள் கோவிலில் இன்று அதி காலை பெருமாளுக்கு அபி ஷேகம் செய்ய ப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்ய ப்பட்டது.

    இதையொட்டி இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். இதை தொட ர்ந்து அவர்கள் மலை படிகளில் நீண்ட வர வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    கோபி அருகே உள்ள மூல வாய்க்கால் ஸ்ரீதேவி பூதேவி கரி வரதராஜ பெருமாள் கோ விலில் காலை 7 மணி அளவில் சாமிக்கு பால், தயிர், பஞ்சா மிர்தம், மற்றும் வாசனை திரவியங்கள் அடங்கிய அபிஷேகங்கள் நடைபெற்றன.

    அதை தொடர்ந்து சுவாமி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. மேலும் கோபிசெட்டி பாளையம் வரதராஜ பெரு மாள் கோவில், பாரியூர் ஆதிநாராயண பெருமாள் கோவில், கோபி மொடச்சூர் பெருமாள் கோவி ல், கொள ப்பலூர் பெருமாள் கோவில், அழுக்குளி பெரு மாள் கோவில், மேட்டுவளவு பெருமாள் கோவில் மற்றும் சுற்று வட்டாரபகுதியில் உள்ள பெருமாள் கோவில்க ளில் சி றப்பு பூஜைகள் செய்ய ப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றன.

    இதையொட்டி பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    அந்தியூர் வரதராஜ பெரு மாள், சீனிவாச பெருமாள், அழகுராஜ பெருமாள், அந்தி யூர் திருப்பதி பேட்டை பெரு மாள் உள்ளிட்ட கோவில்க ளில் புர ட்டாசி சனிக்கிழ மையை யொட்டி சிறப்பு அல ங்காரத்தில் சாமி பக்தர்க ளுக்கு அருள் பாலித்தார்.

    அந்தியூர் தவிட்டுப்பாளை யம், வெள்ளையம்பாளை யம், சின்னத்தம்பி பாளை யம், அ ண்ணா மடுவு, கந்த ம்பாளை யம், பச்சாம் பாளையம் உள்ளிட்ட பகுதி களில் இருந்து பக்தர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    இதையொட்டி கவுந்த ப்பாடி சந்தைபேட்டை பழ மையான கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேம் செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து சிறப்பு அலங்கா ரத்தில் அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பவானி சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள பூதேவி, ஸ்ரீதேவி ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு பக்தர்கள் பலர் வந்து தரிசனம் செய்தனர். முன்ன தாக பக்த ர்கள் கூடுதுறை யில் நீராடி பெருமாளை வழிபட்டனர்.

    ஆப்பக்கூடல் அருகே உள்ள கள்ளிப்பட்டி அடுத்த பெருமுகை சஞ்சீவிரா யன் பெருமாள் கோவிலில் இன்று காலை சிறப்பு தரிசனம் நடந்தது. இதில் சுற்று வடடார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இதே போல் புஞ்சை புளியம்பட்டி அடுத்த கோவில் புதூரில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ கருத்திருமராயப் பெரு மாள் எனும் ஸ்ரீ கரிவராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

    புஞ்சை புளியம்பட்டி கரிவராஜ பெருமாள் கோவில் இன்று புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்பு கோவில் வளாகத்தில் கூடியிருந்த பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் இன்று அதிகாலை ஏராளமான பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

    மேலும் ஈரோடு கோட்டை அழகிரிநாதர் (பெருமாள்) கோவி லில் இன்று அதி காலை சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டு அழகிரி நாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களு க்கு அருள் பாலித்தார்.

    இதையொட்டி ஈரோடு மற்றும் சுற்று வட்டார பகுதி களில் இருந்து ஏரா ளமான பக்தர்கள் கோவி லுக்கு வந்தி ருந்தனர். இதை தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் வழங்கப்பட்டது.

    இதேபோல் ஈரோடு சத்தி ரோட்டில் உள்ள பெரு மாள் கோவிலில் இன்று பெருமா ளுக்கு அபிஷேகம் செய்யப்ப ட்டது. இதையொட்டி பக்தர்கள் பலர் வந்து பெருமாளுக்கு துளசி அணிவித்து சாமி தரிசனம் செய்தனர்.

    • பெருமாள் கோவில்களில் இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
    • வாசனை திரவியங்கள் அடங்கிய அபிஷேகங்கள் நடைபெற்றன.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில் களில் புரட்டாசி 2-ம் சனி க்கிழமையையொட்டி இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    புரட்டாசி 2-ம் சனிக்கிழ மையை யொட்டி பவானி அருகே உள்ள பெருமாள் மலையில் அமைந்துள்ள மங்களகிரி பெருமாள் கோவிலில் இன்று அதி காலை பெருமாளுக்கு பால், தயிர், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து மங்களகிரி பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதையொட்டி இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். இதை தொடர்ந்து அவர்கள் மலை படிகளில் நீண்ட வர வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    கோபிசெட்டிபாளையம் பகுதி பெருமாள் கோவில் களில் புரட்டாசி 2-ம் சனிக்கிழமை யொட்டி இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    கோபி அருகே உள்ள மூல வாய்க்கா ல் ஸ்ரீதேவி பூதேவி கரி வரத ராஜ பெருமாள் கோவிலில் காலை 7 மணி அளவில் சாமி க்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், மற்றும் வாசனை திரவியங்கள் அடங்கிய அபிஷேகங்கள் நடைபெற்றன.

    அதை தொடர்ந்து சுவாமி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. மேலும் பக்தர்கள் மலையை சுற்றி சுவாமியை தேரில் இழுத்து வலம் வந்தனர்.

    மேலும் கோபிசெட்டி பாளையம் வரதராஜ பெரு மாள் கோவில், பாரியூர் ஆதிநாராயண பெருமாள் கோவில், கோபி மொடச்சூர் பெருமாள் கோவில், கொளப்பலூர் பெருமாள் கோவில்,

    அழுக்குளி பெருமாள் கோவில், மேட்டுவளவு பெருமாள் கோவில் மற்றும் சுற்று வட்டாரபகுதியில் உள்ள பெருமாள் கோவில்க ளில் சிறப்பு பூஜைகள் செய்ய ப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றன.

    இதையொட்டி பக்தர்க ளுக்கு துளசி தீர்த்தம் பிர சாதமாக வழங்கப்பட்டது.

    அந்தியூர் வரதராஜ பெருமாள், சீனிவாச பெருமாள், அழகுராஜ பெருமாள், அந்தியூர் திருப்பதி பேட்டை பெருமாள் உள்ளிட்ட கோவில்களில் புரட்டாசி 2-வது சனிக்கிழமையை யொட்டி சிறப்பு அலங்கார த்தில் சாமி பக்தர்களுக்கு அருள் பாளித்தார்.

    அந்தியூர் தவிட்டுப்பாளை யம் வெள்ளையம்பாளையம் சின்னத்தம்பி பாளையம் அண்ணா மடுவு கந்த ம்பாளையம், பச்சாம் பாளை யம்உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பக்த ர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து சென்றனர்.

    இதையொட்டி கவுந்தப்பாடி சந்தைபேட்டை பழமையான கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று அதி காலை சிறப்பு அபிஷேம் செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து சிறப்பு அலங்கா ரத்தில் அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பவானி சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள பூதேவி, ஸ்ரீதேவி ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் பலர் வந்து தரிசனம் செய்தனர். முன்ன தாக பக்தர்கள் கூடுதுறை யில் நீராடி பெருமாளை வழிபட்டனர்.

    ஆப்பக்கூடல் அருகே உள்ள கள்ளிப்பட்டி அடுத்த பெருமுகை சஞ்சீவிராயன் பெருமாள் கோவிலில் இன்று காலை சிறப்பு தரிசனம் நடந்தது. இதில் சுற்று வடடார பகுதுகளை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இதே போல் பு.புளி யம்பட்டி கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனை த்து பெருமாள் கோவில்களி லும் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் பலர் வழிபாடு நடத்தினர்.

    மேலும் ஈரோடு கோட்டை அழகிரிநாதர் (பெருமாள்) கோவிலில் இன்று அதி காலை சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து சிறப்பு அலங்கார செய்யப் பட்டு அழகிரி நாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களு க்கு அருள் பாலித்தார்.

    இதையொட்டி இன்று காலை முதலே ஈரோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏரா ளமான பக்தர்கள் கோவி லுக்கு வந்திருந்தனர்.

    இதை தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் வழங்கப்பட்டது.

    இதேபோல் ஈரோடு சத்தி ரோட்டில் உள்ள பெரு மாள் கோவிலில் இன்று பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையொட்டி பக்தர்கள் பலர் வந்து பெருமாளுக்கு துளசி அணிவித்து தரிசனம் செய்தனர்.

    மேலும் பக்தர்கள் பலர் பெருமாளை குல தெய்வ மாக நினைத்து வணங்கி வருகிறார்கள். இதனால் பக்தர்கள் பலர் மஞ்சள், வேட்டி துண்டு அணிந்தும் மற்றும் மாலை அணிந்து விரதம் இருந்து வரு கிறார்கள்.

    தொடர்ந்து அவர்கள் 4-ம் சனிக்கிழமை அன்று குடும்பத்துடன் சென்று விரதத்தை முடிப்பார்கள். இதே போல் பக்தர்கள் பலர் வீடுகளில் அறுசுவை உணவு சமைத்து பெருமாளுக்கு படைத்து வணங்குகிறார்கள்.

    • திருவேங்கடநாதபுரம் கோவிலில் வெங்கடாஜலபதிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
    • பெருமாள் கோவில்களில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    நெல்லை:

    ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதங்களில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடை பெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு புரட்டாசி முதல் சனிக் கிழமையை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு இன்று அதி காலை முதல் நடைபெற்று வருகிறது.

    நெல்லை மாவட்டம் திருவேங்கடநாதபுரத்தில் அமைந்துள்ள தென் திருப்பதி என பக்தர்களால் அழைக்கப்படும் வெங்கடா ஜலபதி கோவிலில் மூலவர் வெங்கடாஜலபதிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். நீண்ட வரிசையில் காத்தி ருந்து பெருமாளை பக்தர் கள் தரிசனம் செய்தனர்.

    இதே போல் நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில்களில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    அங்கும் நீண்ட வரிசை யில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இரவு கருட வாகனத்தில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் கருட சேவை உற்சவம் வெகு விமர்சையாக நடை பெற உள்ளது.

    மாநகரில் மைய பகுதியில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் வீரராகவ பெருமாள் கோவி லில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், காலை சந்திகள் நடை பெற்றது.

    தொடர்ந்து நவகலச கும்பங்கள் வைத்து ஹோமங்கள் நடைபெற்றது. தொடா்ந்து உற்சவா் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவரதராஜருக்கு மாபொடி, மஞ்சள்பொடி, வாசனைபொடி, பால், தயிா், பஞ்சாமிர்தம், தேன், இளநீா், சந்தணம் என பலவகை பொருள்களால் திருமஞ்சனம் நடைபெற்றது.

    பின்னா் மகா பூர்ணாகுதி நடைபெற்று பெருமாளுக்கு மகா அபிஷேகம் நடை பெற்றது. தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவரத ராஜருக்கு அா்ச்சனை நடை பெற்று நட்சத்திர ஆரத்தி, கும்ப ஆரத்தி, தீப ஆரத்தி காண்பிக்கப்பட்டு சோடச உபசரனைகள் நடை பெற்றது.

    ஏராளமான பக்தா்கள் திருமஞ்சன நிகழ்வில் கலந்துகொண்டு பெருமாளை தாிசனம் செய்தனா். இரவில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெறுகின்றது.

    இதேபோல் பாளை ராஜ கோபால சுவாமி கோவில், டவுன் கரியமாணிக்க பெருமாள் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.டவுன் மேல மாடவீதியில் உள்ள லட்சுமி நரசிங்க பெருமாள் கோவிலில் காலை 8.30 மணிக்கு திருமஞ்சனம், 10.30 மணிக்கு திருவாரா தனம் நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு துளசி, துளசி தீர்த்தம், மஞ்சள் பொடி, குங்குமம் ஆகியவை பிரசாத மாக வழங்கப்பட்டது.அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில், காட்டு ராமர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந் தது. இரவில் கருடசேவை நடக்கிறது.

    இதே போல் நெல்லை பொருட்காட்சி திடல் பஸ் நிலையத்தில் இருந்து மேல திருவேங்கடநாதபுரம் உள்ளிட்ட பெருமாள் கோவில்களுக்கும், சேரன்மகாதேவி, அம்பை பகுதியில் இருந்தும் அந்தந்த பகுதி பெருமாள் கோவி லுக்கு பக்தர்கள் எளிதாக சென்று வருவதற்கு வசதி யாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    • இந்த ஆலயத்தில் தாயாருக்கே முதல் மரியாதை.
    • இங்குள்ள பலிபீடம் சிறப்புக்குரியதாக உள்ளது.

    திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெள்ளறை என்ற இடத்தில் அமைந்த புண்டரீகாட்ச பெருமாள் ஆலயத்தைப் பற்றி இங்கே பார்ப்போம்.

    மூலவர்: புண்டரீகாட்சன் (செந்தாமரைக் கண்ணன்)

    தாயார்: செண்பகவல்லி

    உற்சவர்: பங்கஜவல்லி

    தல விருட்சம்: வில்வம்

    தீர்த்தம்: மணிகர்ணிகா, சக்ர தீர்த்தம், புஷ்கல தீர்த்தம், வராக தீர்த்தம், கந்த தீர்த்தம், பத்ம தீர்த்தம்.

    * இந்த ஆலயத்தில் தாயாருக்கே முதல் மரியாதை. விழாக்காலங்களில் கூட தாயார் முன் செல்ல, பெருமாள் அவரைப் பின்தொடர்வார். மூலவருக்கு செய்யப்படும் அனைத்து பூஜைகளும், பங்கஜவல்லி தாயாருக்கும் உண்டு.

    * தனிச் சன்னிதியில் செங்கமலவல்லி தாயார் அருள்பாலிக்கிறார். வருடத்தில் ஒரு நாள், அதாவது பங்குனி மாதம் அவிட்ட நட்சத்திரம் அன்று செங்கமலவல்லி தாயார், பெருமாள், பங்கஜவல்லி தாயார் மூவரும் ஒரே சிம்மாசனத்தில் எழுந்தருள்வார்கள்.

    * திருவெள்ளறையில் வாழ்ந்த புண்டரீகன் என்ற யோகி, தான் வைத்த நந்தவனத்தில் வளர்ந்த துளசியைக் கொண்டு பெருமாளையும் தாயாரையும் பூஜித்து வந்தார். அவருக்கு காட்சி கொடுத்த இறைவன் என்பதால் இத்தல இறைவனுக்கு 'புண்டரீகாட்ச பெருமாள்' என்று பெயர்.

    * இங்குள்ள பலிபீடம் சிறப்புக்குரியதாக உள்ளது. இந்த பலிபீடத்தின் முன் பக்தர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேற வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறியதும் பலிபீட திருமஞ்சனம் செய்து, பொங்கல் படைத்து வழிபடுகிறார்கள்.

    * இந்த ஆலயத்தில் 'உத்தராயன வாசல்', 'தட்சிணாயன வாசல்' என்று இரண்டு வாசல்கள் உள்ளன. தை முதல் ஆனி மாதம் வரை உத்தராயன வாசல் வழியாகவும், ஆடி முதல் மார்கழி மாதம் வரை தட்சிணாயன வாசல் வழியாகவும் பெருமாளை பக்தர்கள் தரிசிக்கலாம்.

    கருவறை தெய்வங்கள்

    * கருவறையில் பெருமாளின் மேற்புறம் வலது பக்கம் சூரியனும், இடது பக்கம் சந்திரனும் இருந்து சாமரம் வீசுகின்றனர்.

    * பெருமாளின் இரு பக்கமும் கருடனும், ஆதிசேஷனும் மனித வடிவில் நின்றபடி இருக்கிறார்கள்.

    * நடுநாயகமாக மூலவர் பெரிய உருவத்துடன் காட்சியளிக்கிறார். மூலவருக்கு முன்பாக ஒரே சிம்மாசனத்தில் உற்சவரான செந்தாமரைக் கண்ணனும், பங்கஜவல்லி தாயாரும் உள்ளனர்.

    * பெருமாளின் காலடியில் இடது பக்கம் பூமாதேவியும், வலது பக்கம் மார்க்கண்டேயரும் அமர்ந்து தவம் புரிகின்றனர்.

    படி தத்துவம்

    * இத்தல பெருமாளை தரிசிக்க முதலில் 18 படிகளை கடக்க வேண்டும். அது பகவத் கீதையின் 18 அத்தியாயங்களை குறிக்கிறது.

    * அதன்பிறகு 4 படிகள் வரும். அது நான்கு வேதங்களை குறிக்கிறதாம்.

    * அதைத் தொடர்ந்து 5 படிகள் வரும். அது பஞ்சபூதங்களை குறிப்பதாகும்.

    * பின்வரும் 8 படிகள், 'ஓம் நமோ நாராயணா' என்ற அஷ்டாட்சர மந்திரத்தை குறிக்கும்.

    * அதன்பிறகான 24 படிகள், காயத்ரி மந்திரத்தில் உள்ள 24 எழுத்துக்களை குறிப்பதாகும்.

    * மேற்கண்ட படிகளைக் கடந்த பிறகே பெருமாளை தரிசிக்க முடியும்.

    * திருமங்கையாழ்வார், பெரியாழ்வார் ஆகியோர் இத்தல இறைவனை மங்களாசாசனம் செய்துள்ளனர். மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில், இது 4-வது தலம்.

    * 50 அடி உயரத்தில் வெண்மையான பாறைகளால் ஆன குன்றின் மீது இத்தலம் அமைந்துள்ளது. எனவே இதற்கு 'வெள்ளறை' என்று பெயர்.

    * திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவிலும், திருவரங்கத்தில் இருந்து சுமார் 17 கிலோமீட்டர் தொலைவிலும் திருவெள்ளறை திருத்தலம் உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மூவரும் அமர்ந்த திருக்கோலத்தில் எழுந்தருளியிருப்பது சிறப்பு.
    • வேதநாராயணரின் திருமேனியானது முழுவதும் சாளக்கிராமத்தினால் ஆனது என்று கூறப்படுகிறது.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் திருக்கழுக்குன்றம் வட்டத்தில் அமைந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சிற்றூர் ஆனூர். இங்கு மிகப்பழமையான சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட வேதநாராயணப் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. பல்லவ மன்னன் கம்பவர்மன், பார்த்திவேந்திர வர்மன் , முதலாம் ராஜராஜசோழன், முதலாம் குலோத்துங்கச் சோழன், இரண்டாம் ராஜராஜன் முதலான மன்னர்கள் இக்கோவிலுக்கு திருப்பணிகள் செய்துள்ளனர். இத்தலமானது கல்வெட்டுக் களஞ்சியமாக காட்சி தருகிறது. கருவறையைச் சுற்றிலும் ஏராளமான கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.

    சோழர் காலக் கல்வெட்டுக்களின் மூலம் இவ்வூரானது ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தில், களத்தூர் கோட்டத்தில், களத்தூர் நாட்டில் அமைந்திருந்தது என்பதையும், முதலாம் குலோத்துங்கச் சோழனது கல்வெட்டின் மூலம் இவ்வூர் 'ஆதியூரான சத்யாசிரிய குலகால சதுர்வேதிமங்கலம்' என்று அழைக்கப்பட்டுள்ளதை அறியமுடிகிறது. ஆனியூர், ஆதியூர் எனும் பல பெயர்களில் இவ்வூரின் பெயர்கள் கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டுள்ளன. பதிமூன்றாம் நூற்றாண்டில் இத்தலம் 'சித்திரமேழி விண்ணகரம்' என்று அழைக்கப்பட்டிருக்கிறது.

    மது, கைடபர் எனும் இரண்டு அசுரர்கள் பிரம்மாவிடம் இருந்து வேதங்களை பறித்துக் கொண்டு சென்றார்கள். பிரம்மா மகாவிஷ்ணுவிடம் முறையிட, அவர் இரண்டு அசுரர்களையும் வதம் செய்து வேதங்களை மீட்டெடுத்து மீண்டும் பிரம்மாவிடம் ஒப்படைத்தார். அதுவரையில் பிரம்மா ஒற்றை முகத்துடன் ஆனூரில் யாகம் வளர்த்துக் கொண்டிருந்ததாகவும், மகாவிஷ்ணு இத்தலத்தில் பிரம்மனுக்கு காட்சி கொடுத்து வேதங்களை அவரிடத்தில் ஒப்படைத்து இத்திருத்தலத்தில் வேதநாராயணராக எழுந்தருளியதாகவும் தலவரலாறு கூறுகிறது.

    கிழக்கு திசை நோக்கி அமைந்த திருத்தலம். கோவிலுக்கு வெளிப்புறத்தில் ஒரு பழமையான விளக்குத்தூண் காட்சி தருகிறது. சிதிலமடைந்த மதில்சுவர். ராஜகோபுரம் இன்றி காட்சி தரும் நுழைவு வாசல். கோவிலுக்குள் நுழைந்தால் பலிபீடம். அடுத்தபடியாக ஒரு சன்னிதியில் பெரியதிருவடியான கருடன் காட்சி தருகிறார்.

    முன் மண்டபத்தின் இடது புறத்தில் சீதா தேவி சமேத கோதண்டராம சுவாமி வீற்றிருக்கிறார். வலதுபுறத்தில் லட்சுமிநாராயணப் பெருமாள், விஷ்வக்சேனர், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பெரியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், பிரபையோடு ஒரு பக்த ஆஞ்சநேயர் மற்றும் பிரபையின்றி மற்றொரு பக்த ஆஞ்சநேயர் முதலானோர் அருளுகிறார்கள்.

    கருவறையில் வேதநாராயணப் பெருமாள் ஸ்ரீதேவி - பூதேவி சமேதராக அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார். மூவரும் அமர்ந்த திருக்கோலத்தில் எழுந்தருளியிருப்பது சிறப்பு. வேதநாராயணர் தனது இடது திருப்பாதத்தை மடித்து பீடத்தில் வைத்து வலது திருப்பாதத்தை தாமரைப் பீடத்தின் மீது தொங்கவிட்டபடி எழுந்தருளி சேவை சாதிக்கிறார். மேல் இரு திருக்கரங்களில் சங்கு, சக்கரம் தாங்கியும், கீழ் வலது திருக்கரத்தை அபய ஹஸ்தத்தில் வைத்தும், இடது திருக்கரத்தை ஆஹீவான ஹஸ்தத்தில் வைத்தபடியும் பெருமாள் தரிசனம் தருகிறார். வேதநாராயணரின் திருமேனியானது முழுவதும் சாளக்கிராமத்தினால் ஆனது என்று கூறப்படுகிறது. அவரது மார்பின் வலதுபுறத்தில் ஸ்ரீவத்சம் அமைந்துள்ளது. உற்சவரான ஸ்ரீதேவி-பூதேவி சமேத ஸ்ரீவேதநாராயணப் பெருமாள் முன் மண்டபத்தில் காட்சி தருகிறார்.

    ஒருசமயம் பாலாற்றுக்குள் மூலவரைப் போலவே ஒரு வேதநாராயணர் சிலை கிடைத்துள்ளது. சற்றே பின்னமடைந்த இச்சிலை கோவிலில் முன் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதுபோலவே கருடாழ்வார் சன்னிதிக்கு அருகில் மிகப்பழமையான ஒரு விநாயகர் சிலை காட்சி தருகிறது.

    'ஷீரநதி' என அழைக்கப்பட்ட பாலாறு, வேகவதியாறு, செய்யாறு ஆகிய மூன்று ஆறுகளும் சங்கமிக்கும் இடம் திருமுக்கூடல். இந்த நதிகள் தெற்கிலிருந்து வடக்காகப் பாயும் இடம் படாளம். இந்த இடத்திற்கு அருகில் ஆனூர் அமைந்திருப்பதால் இது தட்சிணப் பிரயாகைக்கு நிகராகப் போற்றப்படுகிறது. இத்தலத்தில் அமைந்துள்ள வேத மங்கள தீர்த்தம் எனும் கிணற்றின் புனித நீரை அருந்துவதன் மூலம் பித்ருக்களின் தோஷங்களில் இருந்து விடுபடலாம் என்கிறார்கள்.

    வேத முழக்கங்கள் எந்நேரமும் இத்தலத்துப் பெருமாளைச் சுற்றிலும் ஒலித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம். வேதநாராயணப் பெருமாளை தரிசித்தால் வேதங்களின் சக்தியால் நமது வாழ்வில் துன்பங்கள் யாவும் விலகி, கர்ம வினைகள் அழிந்து வாழ்வு சிறக்கும் என்பது நம்பிக்கை. ஆனூருக்கு மிக அருகில் இருக்கும் திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள நான்கு மலைகளும் நான்கு வேதங்களைக் குறிப்பதாக ஐதீகம். இம்மலைகள் வேதகிரி என்று அழைக்கப்படுகின்றன.

    ஆனூர் தலத்தில் வருடப்பிறப்பு, புரட்டாசி ஐந்து சனிக்கிழமைகளில் விசேஷ வழிபாடு மற்றும் வைகுண்ட ஏகாதசி முதலான விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

    காலை 9 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக இந்த ஆலயம் திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    செங்கல்பட்டிற்கு அருகில் பொன்விளைந்த களத்தூர் செல்லும் வழியில் ஆனூர் அமைந்துள்ளது. செங்கல்பட்டில் இருந்து அரசு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

    -ஆர்.வி.பதி, செங்கல்பட்டு.

    • அற்புதமான சிறு குன்றின் மீது கோவில் கொண்டுள்ளார் அரங்கநாதர்.
    • அனந்த சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு அருகே இருக்கிறது, திருமால்பாடி என்ற கிராமம். இங்கு அரங்கநாதப் பெருமாளாக, திருமால் காட்சி தரும் திருக்கோவில் அமைந்திருக்கிறது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் சிலை வடிவமாக அருள்புரிந்து வரும் திருமால், இந்த திருமால்பாடியில் குளிர்ந்த ஏரிக்கரையின் மீது அமைந்த குன்று ஒன்றில், அனந்த சயன கோலத்தில், அடியாளர்களுக்கும், தன்னை நாடி வரும் பக்தர்களுக்கும் அருள்பாலித்து வருகிறார்.

    பல்வேறு புராணங்களை எழுதியவரும், வேதங்களை தொகுத்து வழங்கியவருமான வேதவியாசரின் மகன் சுகபிரம்ம ரிஷி. இவர் கிளி முகம் கொண்டவர். அந்த புராண காலத்தில் இப்பகுதி விரஜாபுரி என்று அழைக்கப்பட்டது. வைகுண்டத்தில் பிரவாகம் கொண்டு பாயும் புண்ணிய நதியின் பெயர் விரஜை. இதன் பெயரில் அமைந்த இடம்தான் விரஜாபுரி. இங்குள்ள குன்றின் மீது சுகபிரம்ம மகரிஷி, திருமாலை நோக்கி தவம் இயற்றினாா். பல ஆண்டுகளாக அவர் இருந்த தவத்தின் பயனாக, இந்த திருத்தலத்தில் தேவர்களுடன் கூடிய அரங்கநாதனாக, சுகப்பிரம்ம ரிஷிக்கு திருமால் தரிசனம் தந்தார்.

    மேலும் வேண்டிய வரம் கேட்கும்படியும் கூறினார். அப்போது தனக்கு 'முக்திப்பேறு வேண்டும்' என்று கேட்டார் சுகப்பிரம்ம ரிஷி. அதற்கு அரங்கநாதர், "இத்தலத்திற்கு அருகில் உள்ள தீர்க்காசலம் என்னும் நெடுமலையில் தவம் புரிந்து வா. என்னுடைய ராம அவதாரத்தின் போது, லட்சுமணன், அன்னை சீதாபிராட்டி, அனுமன் புடைசூழ காட்சி தந்து, முக்திப்பேறு அருள்வேன்" என்று கூறி மறைந்தார். இக்குன்றில் தவத்தை முடித்து, அரங்கநாதரின் கட்டளைப்படி நெடுமலையை அடைந்து, அங்கு மீண்டும் திருமாலைக் குறித்து தவமிருந்தார். பின்னர் ராமச்சந்திர பிரபுவைக் கண்டு, வணங்கி, முக்தி நிலையை எய்தினார் சுகப்பிரம்ம ரிஷி.

    இந்த புராண பின்னணியை மனதில் கொண்டு, கி.பி.1136-ம் ஆண்டு பராந்தக சோழனின் மகன் விக்கிரம சோழனால், இக்குன்றில் அரங்கநாதருக்கு ஆலயம் எழுப்பப்பட்டது. அது முதல் அடியார்களின் குறைகளை நீக்கி அற்புதமாக அருள்பாலித்து வருகின்றார் அரங்கநாயகி உடனாய அரங்கநாத பெருமாள்.

    குளிர்ந்த ஏரி நீரில் பட்டு வீசும் தென்றலும், பூஞ்சோலைகளும் பசுமையான வயல்வெளிகளும் சூழ, அற்புதமான சிறு குன்றின் மீது கோவில் கொண்டுள்ளார் அரங்கநாதர். 108 திவ்ய தேசங்களை நினைவூட்டும் 108 படிகளைக் கடந்து இந்த குன்றின் மேல் உள்ள இறைவனைக் காணச் செல்ல வேண்டும். படிகளைக் கடந்து மேலே சென்றதும், மேற்குப்புறமாக வசந்த மண்டபம் காணப்படுகின்றது. அடுத்ததாக, மூன்று நிலைகளும் ஏழு கலசங்களும் கொண்ட ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. முன் மண்டபத்தின் இருபுறமும் கருங்கல் திண்ணைகள். உள்ளே மகா மண்டபத்தில் நேராக தென்திசையை பார்த்தபடி வீர ஆஞ்சநேயர் தரிசனம் அளிக்கின்றார்.

    சற்று இடதுபுறம் திரும்பினால், தாயார் அரங்கநாயகியின் சன்னிதியை தரிசிக்கலாம். இந்த தாயார் அலங்கார ரூபத்தில், சர்வ மங்களங்களையும் அருளும் சக்தியாக திருவருள் பொழிகின்றாள். அவருக்கு அருகில் நரசிம்மரது தரிசனத்தைக் காணலாம். மகாமண்டபம் கடந்து, பெரிய அந்தராளத்தை அடைந்தால், கருவறையில் ஒய்யாரமாக சயனித்திருக்கும் அரங்கநாதப் பெருமாளை கண்குளிரக் கண்டு தரிசிக்கலாம். 15 அடி நீளமுள்ள ஐந்து தலைகள் கொண்ட ஆதிசேஷன் மீது, மரக்காலை தலைக்கு வைத்தபடி, அனந்த சயனத்தில் பெருமாள் படுத்திருக்கிறார். அவரது தலையின் பக்கத்தில் ஸ்ரீதேவியும், கால் அருகில் பூதேவியும் அமர்ந்துள்ளனர்.

    அரங்கநாதரின் திருப்பாதங்களின் அருகே பிரகலாதனும், சுகபிரம்ம ரிஷியும் தவக்கோலத்தில் உள்ளனர். பரந்தாமனின் திருமுகமோ பக்தர்களை பார்த்தபடி இருப்பது சிறப்பு. தலைக்கு கீழே இரண்டு விரல்களையும் உள்ளே மடக்கி, மூன்று விரல்களை வெளியில் காட்டியபடி, 'நான் மூவுலகங்களையும் அளந்தவன்' என்று உரைக்கும் தொனியில் காட்சி தருகிறார், அரங்கநாதர். பக்தர்களை பார்த்தபடி இருக்கும் இவரது திருமுகம், பக்தர்களின் மனக் குறைகளை அகற்றி அருள்பாலிக்கும் திறனை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. சிலை வடிவில் உள்ள இந்த அரங்கநாதரின் முன்பாக, உற்சவ மூர்த்தங்களாக ஸ்ரீதேவி, பூதேவி உடனான சங்கு - சக்கரம் ஏந்திய திருமால் சேவை சாதிக்கின்றார்.

    அரங்கனின் தரிசனத்தை முடித்ததும், ஆலய பிரகாரத்தை வலம் வருகையில் ஆண்டாளை தரிசனம் செய்யலாம். சன்னிதிக்கு வெளியே தனிச் சன்னிதியில் அரங்கநாதரைப் பார்த்து இருகரங்களையும் கூப்பி தரிசித்த நிலையில் நின்ற திருக்கோலத்தில் பெரிய திருவடி என்று அழைக்கப்படும் கருடாழ்வார் இருக்கிறார்.

    ஆலயத்தின் வடக்குப்புறம் சிறு வாசல் ஒன்று உள்ளது. அதில் சில படிகள் வழியாக கீழே இறங்கினால் சுனை வடிவில் உள்ள தல தீர்த்தத்தை காணலாம். இந்த தீர்த்தமானது, 'நாரத தீர்த்தம்' என்று அழைக்கப்படுகிறது. பாறை மீது நின்றபடி கீழே உள்ள ஏரியையும், சுற்றியுள்ள இயற்கை அழகையும் கண்டு ரசிப்பது பெருமகிழ்ச்சியையும், புத்துணர்ச்சியையும் தரும். வானர கூட்டங்கள் இங்கு பெருமளவில் உள்ளன. இந்த அரங்கநாதர் ஆலயத்தில் சொர்க்கவாசலும் அமைந்துள்ளது.

    இங்கு சோழர் காலக் கல்வெட்டுகள் பெருமளவில் காணப்படுகின்றன. கி.பி.1140-ல் முதலாம் குலோத்துங்கன், கி.பி. 1135-ல் சகலலோகச் சக்கரவர்த்தி ராஜநாராயண சம்புவராயர், கி.பி. 1529-ல் வீரசிங்கதேவரின் மகனான அச்சுத தேவமகாராயர் ஆகியோரால், இவ்வாலயத்தில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்தக் கோவிலில் வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட அநேக வைணவ நிகழ்வுகளும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகின்றன. இத்தல மூலவரான அரங்கநாதரையும், தாயார் அரங்கநாயகியையும் வழிபாடு செய்து வருபவர்களுக்கு திருமண பாக்கியம் , குழந்தைப்பேறு விரைவில் உண்டாகும் என்பது நம்பிக்கை. அப்படி தங்களின் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், மூலவருக்கு திருமஞ்சனம் செய்வித்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். இது தவிர அரசு வேலை, வேலையில் இடமாற்றம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு போன்றவற்றிற்காகவும் இந்த அரங்கநாதரை வழிபடுபவர்களின் எண்ணிக்கை ஏராளம்.

    செஞ்சியில் இருந்து சேத்துப்பட்டு செல்லும் சாலையில் உள்ளது வளத்தி என்ற ஊர். இங்கிருந்து தேசூர் செல்லும் சாலையில் சென்றால் அருந்தோடு என்ற கிராமம் வரும். இந்த கிராமத்தின் அருகில்தான் திருமால்பாடி திருத்தலம் உள்ளது.

    -பழங்காமூர் மோ.கணேஷ்.

    • சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை–யொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • விராலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா விராலூர் கிராமத்தில் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சீனிவாச பெருமாள் வீதி உலா நடைபெற்றது.

    இதில் விராலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருமயத்தில் பழமை வாய்ந்த குடவரை கோவிலான சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைெபற்றது. முன்னதாக சத்தியமூர்த்தி பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவிக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்பட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

    • அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
    • பயணிகளுக்கு போக்குவரத்து கழகம் சார்பில் பிரசாத பைகள் வழங்கப்பட்டன.

    நெல்லை :

    புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு நெல்லை பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு அதிகாலை முதல் நடைபெற்று வருகிறது.

    அதன்படி நெல்லை மாவட்டம் திருவேங்கடநாத புரத்தில் அமைந்துள்ள தென்திருப்பதி என பக்தர்களால் அழைக்கப்படும் வெங்கடாஜலபதி கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு மூலவர் வெங்கடாஜலபதிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

    இதே போல் நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில்களில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இரவு கருட வாகனத்தில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் கருட சேவை உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. ஏற்கனவே கடந்த மூன்று சனிக்கிழமைகளிலும் பெருமாள் கோவில்கள் மற்றும் நவதிருப்பதி கோவில்களுக்கு செல்வதற்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து நான்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் 4-வது சனிக்கிழமையான இன்றும் பஸ்கள் இயக்கப்பட்டன. அதில் பயணம் செய்த பயணிகளுக்கு போக்குவரத்து கழகம் சார்பில் பிரசாத பைகள் வழங்கப்பட்டன. தண்ணீர் பாட்டில், மற்றும் பிஸ்கட் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டது.

    • புரட்டாசி 3-வது சனிக்கிழமையான இன்று பெருமாள் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    • புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது.

    மதுரை

    புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இதையொட்டி புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது.

    இன்று புரட்டாசி 3-வது சனிக்கிழமை என்பதால் மதுரை கூடல் அழகர் பெருமாள் கோவில், கள்ளழகர் கோவில், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பொதுமக்கள் அதிகாலை முதலே பெருமாள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி மற்றும் மீன் வியாபாரம் சூடு பிடிக்கும். ஆனால் தற்போது புரட்டாசி மாதம் என்பதால் பெரும்பாலானோர் விரதம் கடைபிடித்து வருகின்றனர். இதனால் மதுரையில் உள்ள இறைச்சி கடைகளில் விற்பனை மந்தமாக இருந்தது. ஒரு சிலர் மட்டும் வந்து இறைச்சி வாங்கிச் சென்றனர்.

    இது தொடர்பாக நெல்பேட்டை கோழி இறைச்சி வியாபாரி சாகுல் என்பவர் கூறுகையில், புரட்டாசி மாதத்துக்கு முன்பாகவே பிராய்லர் உரிமையாளர்கள் உற்பத்தியை குறைத்து விடுவர். எனவே நடப்பு மாதத்தில் கோழிக்கறி விலை குறைய வாய்ப்பு இல்லை. ஆனாலும் விற்பனை சரிவால் ஊழியர்களுக்கு வேலை இல்லாமல் போகிறது. 15 பேர் வேலை செய்த இடத்தில் தற்போது 7 பேருக்கு மட்டுமே வேலை உள்ளது.

    கடந்த ஆவணி மாதத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அமாவாசை, கார்த்திகை போன்ற விசேஷ நாட்கள் வந்ததால் வியாபாரம் பாதித்தது. இந்த நிலையில் புரட்டாசி மாதமும் விற்பனையில் சரிவு இருக்கும். எனவே அந்த பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டி உள்ளது என்றார்.

    மதுரை மாவட்டத்தில் இன்று விற்பனை செய்யப்பட்ட இறைச்சி விலை விவரம் வருமாறு:-

    எலும்பு இல்லாத ஆட்டு இறைச்சி (1 கிலோ) -ரூ. 700 , கால்- ரூ. 40, தலை-ரூ.240, மூளை-ரூ.480, இதயம்-ரூ.470, குடல்-ரூ.420.

    எலும்பு இல்லாத சிக்கன்- ரூ.210, உயிருள்ள கோழி-ரூ.130, கோழி ஈரல்-ரூ.110, தோல் உரித்த சிக்கன்-ரூ.190, முழு கோழி- ரூ.170, உயிருடன் உள்ள நாட்டுக்கோழி-ரூ.250, உரித்த நாட்டு கோழி- ரூ.350.

    சாளை மீன்- ரூ.200, பாறை மீன்-ரூ.250, ஊழி மீன்- ரூ.250, நகரை- ரூ.250, திருக்கை-ரூ.270, பண்ணா-ரூ.280, அயிரை- ரூ.300, நண்டு-ரூ.320, கெளுத்தி-ரூ.350, சங்கரா- ரூ.390, கிழங்கா-ரூ.430, இறால்-ரூ.600, வஞ்சரம்- ரூ.700.

    • புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி இன்று பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர், மகாவிஷ்ணு கோவில்களில் அதிகாலை சிறப்பு அபிேஷகம் மற்றும் வழிபாடு, பஜனைகள் நடந்தது.
    • பெருமாள் மலை பகுதியில் மலை மேல் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி மங்களகிரி பெருமாளுக்கு இன்று அதிகாலை பால், தயிர், இளநீர் உள்பட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    ஈரோடு:

    புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி இன்று பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர், மகாவிஷ்ணு கோவில்களில் அதிகாலை சிறப்பு அபிேஷகம் மற்றும் வழிபாடு, பஜனைகள் நடந்தது.

    இதையொட்டி சென்னி மலை பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் இன்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    சென்னிமலை அடு த்துள்ள மேலப்பாளையம் ஆதிநாராயணப்பெருமாள் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அல ங்காரம், தீபாராதனை பூஜைகள் நடந்தன. இதில் ஆயிரக்கணக்கான பக்த ர்கள் வரிசையில் நின்று பெருமாளை தரிசித்தனர்.

    ஈரோடு கோட்டை பெருமாளுக்கு புரட்டாசி சனிக்கிழமையை யொட்டி இன்று அதிகாலை சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டு இருந்தது. இதை யொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்தி ருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    பவானி அருகே உள்ள பெருமாள் மலை பகுதியில் மலை மேல் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி மங்களகிரி பெருமாளுக்கு இன்று அதிகாலை பால், தயிர், இளநீர் உள்பட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மங்களகிரி பெருமாளுக்கு ராஜ அலங்காரம் செய்ய ப்பட்டு மகா தீபாரதனை நடை பெற்றது.

    இதையொட்டி இன்று காலை பவானி, ஈரோடு, சித்தோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டனர். மலை மீது பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரி சனம் செய்தனர்.

    அதேபோல் சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள ஆதி கேசவப் பெருமாள் சன்னதியில் உள்ள உற்சவர் மற்றும் மூலவருக்கு இன்று சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடை பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கோபி செட்டிபாளையம் அருகே உள்ள மூல வாய்க்கால் மலை ஸ்ரீதேவி பூதேவி கரி வரதராஜ பெருமாள் கோவிலில் பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் மற்றும் வாசனை திரவி யங்கள் அடங்கிய அபி ஷேகங்கள் நடைபெற்றன.

    அதை தொடர்ந்து சுவாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடை பெற்றன. அதை தொடர்ந்து மலையை சுற்றி சிறிய தேர் மூலம் சுவாமி திருவீதி உலா வந்தது.

    மேலும் கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள பாரியூர் ஆதிநாராயண பெருமாள் கோவில், கோபி வரதராஜ பெருமாள் கோவில், மேட்டு வளவு பெருமாள் கோயில், மொடச்சூர் பெருமாள் கோவில்,கூகலூர் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடை பெற்றன.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டு சென்றனர்.

    மேலும் அந்தியூர் பேட்டை பெருமாள் கோவிலில் இன்று பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்ய ப்பட்டு திருப்பதி அலங்கா ரம் செய்யப்பட்டு இருந்தது.

    இதே போல் அந்தியூர் அழகுராஜ பெருமாள், தவிட்டு பாளையம் வரத ராஜ பெருமாள், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள வீரநாராயண பெருமாள், பெருந்துறை பிரசன்ன வெங்கட ரமண பெருமாள், சத்தியமங்கலம் கோட்டு வீராம்பாளையம் ெபருமாள், ஈரோடு சத்தி ரோடு கொங்கு பெருமாள் கோவில் உள்பட மாவட்ட த்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் இன்று காலை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    ×