என் மலர்
திருநெல்வேலி
- கட்டாரங்குளத்தில் தி.மு.க. சார்பில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
- கூட்டத்தில் தி.மு.க. ஆட்சியின் சாதனை விளக்க துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை யொட்டி தெருமுனை கூட்டம் மானூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அருள்மணி ஏற்பாட்டில் மானூர் அருகே கட்டாரங்குளத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் அருள்மணி தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட துணைச்செயலாளர் ஆ.க. மணி முன்னிலை வகித்தார். தொடர்ந்து, கடந்த 2 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் தீட்டப்பட்ட திட்டங்கள் தொடர்பான சாதனை விளக்க துண்டு பிரசுரம் அமைப்பு சாரா ஓட்டுனர் அணி நிர்வாகிகள் சார்பில் வழங்கப்பட்டது. மத்திய மாவட்ட முன்னாள் பொருளாளர் அருண்குமார் சிறப்புரை யாற்றினார்.
கூட்டத்தில் வட்ட செய லாளர்கள் பத்மராஜ், ஆவின் கல்யாணி, இலக்கிய அணி மாவட்ட தலைவர் நெல்லை ரவி, இளைஞரணி துணை அமைப்பாளர் மிக்கேல், விவசாய அணி தலைவர் போத்தி கண்ணு, வேதநாயகம், மகளிர் தொண்டர் அணி மாவட்ட அமைப்பாளர் அனிதா, துணை அமைப்பாளர் தேவிகா, மகளிர் அணி நிர்வாகிகள் ஜெனி, அருணாச்சலம், தகவல் தொ ழில்நுட்ப அணி மாவட்ட துணை அமைப்பாளர் பிரபா அருள்மணி, எம ராஜன், மாணவரணி மாவட்ட துணை அமைப்பா ளர் ஆறுமுகராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சேர்மதுரைக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
- வெறுப்படைந்த சேர்மதுரை மதுவில் விஷத்தை கலந்து குடித்து மயங்கி விழுந்தார்.
நெல்லை:
மேலப்பாளையம் சிவராஜபுரம் அன்னை நகர் தெருவை சேர்ந்தவர் சேர்ம துரை (வயது 32). கூலி தொழிலாளி. இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு ள்ளது. இதனால் கணவரிடம் கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் அவரது மனைவி தருவை யில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதையடுத்து சேர்மதுரை நேற்று மாலை மனைவி, குழந்தைகளை அழைத்து வருவதற்காக தருவைக்கு சென்றுள்ளார். அங்கு மனைவியை சமாதானம் செய்ய முயன்ற போது அவர் கணவருடன் வர மறுத்து ள்ளார். இதில் வெறுப்படைந்த சேர்மதுரை மதுவில் விஷத்தை கலந்து குடித்து மயங்கி விழுந்தார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்து வம னையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சேர்ம துரை இறந்தார். இது குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நெல்லை ரெயில் நிலையத்தில் தற்போது 5 நடை மேடைகள் பயன்பாட்டில் உள்ளது.
- ரெயில்களை கையாள முடியாமல் நெல்லை ரெயில் நிலையம் திணறி வருகிறது.
நெல்லை:
தென்மாவட்ட ரெயில் நிலையங்களில் முக்கியமானது நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம். நெல்லை ரெயில் நிலையத்தில் தற்போது 5 நடை மேடைகள் பயன்பாட்டில் உள்ளது. இதில் காலை மற்றும் மாலை நேரங்களில் ரெயில்களை கையாளுவதில் கடும் நெருக்கடி ஏற்படுகிறது.
நெல்லை ரெயில் நிலையத்தின் தெற்கு பகுதியில் திருச்செந்தூர், செங்கோட்டை, நாகர்கோவிலில் இருந்து வரும் ரெயில்கள் மற்றும் வடபகுதியில் வாஞ்சி மணியாச்சியில் இருந்து தெற்கு நோக்கி வரும் ரெயில்கள் காலை மற்றும் மாலை நேரத்தில் அணிவகுத்து வருவதால் 5 நடைமேடைகள் போதுமானதாக இல்லை.
தற்போது சென்னை நோக்கி செல்லும் ரெயில்களான நெல்லை எக்ஸ்பிரஸ் முதலாவது நடை மேடையிலும், அனந்தபுரி- கன்னியாகுமரி ரெயில்கள் 2-வது நடைமேடையிலும், நாகர்கோவில் - நெல்லை ரெயில் 3-வது நடைமேடையிலும், நெல்லையில் இருந்து பாலக்காடு செல்லும் பாலருவி எக்ஸ்பிரஸ் 4-வது நடைமேடையிலும், திருச்செந்தூர் - நெல்லை ரயில் 5-வது நடைமேடையையும் வந்து செல்கின்றன.
பின்னர் செங்கோட்டையில் இருந்து நெல்லை வரும் ரெயில் திருச்செந்தூர் ரெயிலுக்கு பின்பாக 5-வது நடைமேடையில் மெதுவாக கொண்டு வந்து நிறுத்தப்படுகிறது. இதே நேரத்தில் தான் தூத்துக்குடி - நெல்லை ரெயில், சென்னை - குருவாயூர் எக்ஸ்பிரஸ், ஈரோடு - நெல்லை ரெயில் ஆகியவை வரிசை கட்டி நிற்கின்றன.
தற்போது நெல்லை - சென்னை வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுவதால் காலை நேரத்தில் ரெயில்களை கையாள முடியாமல் நெல்லை ரெயில் நிலையம் திணறி வருகிறது.
எனவே நெல்லை ரெயில் நிலையத்தில் உள்ள இட நெருக்கடியை குறைப்பதற்கு கூடுதல் நடைமேடைகளை அமைத்து நெல்லையோடு நிற்கும் பாலருவி ரெயிலை தூத்துக்குடிக்கும், ஈரோடு நெல்லை ரெயிலை செங்கோட்டைக்கு நீட்டிக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து செங்கோட்டை பண்பொழியை சேர்ந்த ரெயில் பயணி சுரேஷ் கூறுகையில், பாலக்காடு - நெல்லை பாலருவி விரைவு ரெயிலை தூத்துக்குடிக்கு நீட்டிக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் உடனடியாக இந்த நீட்டிப்பை செய்ய வேண்டும்.
மதுரைக்கு ரெயில்களே இல்லாத ஒரே வழித்தடமான அம்பை வழியாக ஈரோடு - நெல்லை ரெயிலை செங்கோட்டைக்கு நீடிக்க வேண்டும். அப்போதுதான் செங்கோட்டை நாகர்கோவில், திருச்செந்தூரில் இருந்து நெல்லை வரும் ரெயில்களையும் வடக்கில் இருந்து நெல்லை நோக்கி வரும் ரெயில்களையும் தாமதம் இல்லாமல் ரெயில் நிலையத்தின் உள்ளே வர முடியும். இவ்வாறு செய்வதால் திருச்செந்தூர், நெல்லை மற்றும் செங்கோட்டை நெல்லை ரெயில் வழித்தடத்தில் உள்ள பயணிகள் நெல்லை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல்வேறு ரெயில்களை பிடிப்பதற்கு வசதியாக அமையும். மேலும் கூடுதல் நடைமேடைகள் அமைத்தால் தான் வருங்காலங்களில் நெல்லையில் இருந்து கூடுதல் ரெயில்கள் இயக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பனையங்குளத்தில் உள்ள பெருமாள் கோவில் கொடை விழா நடந்தது.
- இரவில் மர்மநபர்கள் தங்க நகைகளை திருடி சென்று விட்டதாக கூறப்படுகிறது.
களக்காடு:
தூத்துக்குடி அந்தோணியார்புரத்தை சேர்ந்தவர் மாடகண்ணு. இவரது மனைவி செல்வ மணி (வயது22). இவரது தாய்மாமா சுப்பையா நாங்குநேரி அருகே பனையங்குளத்தில் வசித்து வருகிறார்.
10 பவுன் நகை
பனையங்குளத்தில் உள்ள பெருமாள் கோவில் கொடை விழா நடந்தது. இதில் கலந்து கொள்ள செல்வமணி தனது தாய்மாமா சுப்பையா வீட்டிற்கு வந்தார். கோவில் கொடை விழாவிற்கு சென்று விட்டு, சுப்பையா வீட்டிற்கு வந்த செல்வமணி தனது 10 பவுன் எடையுள்ள செயின், 4 பவுன் நெக்லஸ், 5¼ பவுன் செயின் ஆகியவற்றை கழற்றி ஒரு பையில் வைத்திருந்தார். மறுநாள் காலை பையை பார்த்த போது தங்கநகைகள் மாயமாகியிருந்தது.
இரவில் மர்மநபர்கள் தங்க நகைகளை திருடி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வமணி இது குறித்து மூன்றடைப்பு போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் பிரேமா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி இளம்பெண்ணின் தங்கநகைகளை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- ரவி-ஜெப ஜெசிந்தாவுக்கு 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
- வீட்டில் இருந்த ஜெப ஜெசிந்தா திடீரென அறைக்குள் சென்று சேலையால் தூக்குப்போட்டு கொண்டார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் வி.கே.புரம் வடக்கு அகஸ்தி யர்பட்டி வாட்டர் டேங்க் தெருவை சேர்ந்தவர் ரவி. இவர் அங்குள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி ஜெப ஜெசிந்தா (வயது 33). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த ஜெப ஜெசிந்தா திடீரென அறைக்குள் சென்று சேலையால் தூக்குப்போட்டு கொண்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே ஜெப ஜெசிந்தா இறந்து விட்டதாக தெரி வித்தனர்.
இதுகுறித்து வி.கே.புரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் ஜெப ஜெசிந்தா உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உலக வெறி நாய் (ரேபிஸ்) தினத்தை முன்னிட்டு மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து இலவச வெறி நோய் (ரேபிஸ்) தடுப்பூசி முகாம் ஸ்ரீபுரம் கால்நடை பன்முக மருத்துவமனையில் இன்று நடைபெற்றது.
- மாநகராட்சி சார்பில் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின்படி சுகாதார ஆய்வாளர் முருகன் மற்றும் பணியாளர்கள் முகாமில் கலந்து கொண்டனர்.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி ஆகியோர் உத்தரவின்பேரின் உலக வெறி நாய் (ரேபிஸ்) தினத்தை முன்னிட்டு மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து இலவச வெறி நோய் (ரேபிஸ்) தடுப்பூசி முகாம் ஸ்ரீபுரம் கால்நடை பன்முக மருத்துவமனையில் இன்று நடைபெற்றது.
இதில் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குனர் மருத்துவர் தியோபலஸ் ரோஜர், துணை இயக்குனர் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு பணிகள் டாக்டர்.ராஜேந்திரன், கால்நடை மருத்துவர்கள் மற்றும் அலுவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் மாநகராட்சி சார்பில் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின்படி சுகாதார ஆய்வாளர் முருகன் மற்றும் பணியாளர்கள் முகாமில் கலந்து கொண்டனர்.
- நெல்லை மாநகராட்சி சார்பாக 4 மண்டல பகுதிகளில் வரிவசூல் பணியினை மேம்படுத்தும் விதமாக பொதுமக்களின் நலன் கருதி நாளை மறுநாள் (சனிக்கிழமை) சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெற உள்ளது.
- 4 மண்டல உதவி கமிஷனர்கள் வெங்கட்ராமன், காளிமுத்து, கிறிஸ்டி ஆகியோர் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-
நெல்லை மாநகராட்சி சார்பாக 4 மண்டல பகுதிகளில் வரிவசூல் பணியினை மேம்படுத்தும் விதமாக பொதுமக்களின் நலன் கருதி நாளை மறுநாள் (சனிக்கிழமை) சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெற உள்ளது. 4 மண்டல உதவி கமிஷனர்கள் வெங்கட்ராமன், காளிமுத்து, கிறிஸ்டி ஆகியோர் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
நெல்லை மண்டலத்தில் வார்டு 21-ல் உள்ள பேட்டை உச்சினிமாகாளியம்மன் கோவில் தெருவில் உள்ள சேனைத்தலைவர் சமுதாய நலக்கூடத்திலும், தச்சநலல்லூர் மண்ட லத்தில் வார்டு 29-ல் உள்ள மீனாட்சிபுரம் நகர்மன்ற மகளிர் மேல்நிலைப்பள்ளி யிலும், மேலப்பாளையம் மண்டலத்தில் வார்டு 31-ல் உள்ள புனித தோமையார் பள்ளி வளாக கூட்டரங்கிலும் பாளையங்கோட்டை மண்டலத்தில் வார்டு 55-ல் உள்ள 8-வது வடக்கு தெரு விக்னவிநாயகர் கோவில் எதிரில் உள்ள கலையரங்கிலும் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெற உள்ளது.
இம்முகாம்களில் அந்தந்த வார்டு பகுதிகளுக்குட்பட்ட பொதுமக்கள், வணிகவளாக உரிமையாளர்கள், தங்கள் கட்டிடங்களுக்கான சொத்து வரி, குடிநீர் கட்டணம், பாதாளச்சாக்கடை சேவை கட்டணம் போன்ற நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வரியினங்களை உடனடியாக செலுத்திடவும், மேலும் சொத்துவரி, குடிநீர் கட்டணவரி விதிப்பு பெயர் மாற்ற விண்ணப்பங்கள் போன்ற இதர சேவை களுக்கும் கோரிக்கை மனு அளித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
பின்தங்கியுள்ள வரிவசூல் மேம்படுத்துவதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதை கருத்தில் கொண்டு பொதுமக்கள் தங்கள் கட்டிடங்களுக்கான வரியினங்களை அன்றைய தினமே நிலுவையின்றி செலுத்திட மாநகராட்சி சார்பில் கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திசையன்விளை அருகே உள்ள உவரியை அடுத்த வெம்மனங்குடி கிழக்கு தெருவை சேர்ந்தவர் சுயம்பு. இவருக்கு 5 பெண் குழந்தைகளும், இசக்கிமுத்து(வயது 14) என்ற மகனும் உள்ளனர்.
- இசக்கிமுத்து நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தான்.
திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள உவரியை அடுத்த வெம்மனங்குடி கிழக்கு தெருவை சேர்ந்தவர் சுயம்பு. இவருக்கு 5 பெண் குழந்தைகளும், இசக்கிமுத்து(வயது 14) என்ற மகனும் உள்ளனர். இசக்கிமுத்து 7-ம் வகுப்பு வரை படித்துள்ளான். இவன் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தான். இதனை அந்த வழியாக சென்றவர்கள் அவனை மீட்டு திசையன்விளையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சிறுவன் இசக்கிமுத்து பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாய சாந்தி வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றார். இசக்கிமுத்து தனது தந்தையிடம், புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவரது பெற்றோர் மறுத்துவிட்டனர். இதனால் மனம் உடைந்து அவர் தற்கொலை செய்திருக்கலாமா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- தமிழ்நாடு முழுவதும் 50 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பைகள், டீ கப்புகள், பிளாஸ்டிக் தொட்டி கள், பிளாஸ்டிக் இலைகள், பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் உட்பட 14 பொருட்களை பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.
- அதன்படி கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி எல்கைக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ கூடாது என ஆட்டோ மூலம் கடந்த 5 நாட்களாக அறிவிப்பு செய்யப்பட்டது.
நெல்லை:
தமிழ்நாடு முழுவதும் 50 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பைகள், டீ கப்புகள், பிளாஸ்டிக் தொட்டி கள், பிளாஸ்டிக் இலைகள், பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் உட்பட 14 பொருட்களை பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.
கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி
அதன்படி கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி எல்கைக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ கூடாது என ஆட்டோ மூலம் கடந்த 5 நாட்களாக அறிவிப்பு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செயல் அலுவலர் சத்தியமூர்த்தி உத்தரவின்படி பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் அபுபக்கர் தலைமையில், துப்புரவு மேற்பார்வையாளர்கள், துப்புரவு பணியாளர்கள் கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி மெயின் ரோடுகள் மற்றும் முக்கிய வீதிகளில் சூப்பர் மார்க்கெட்டுகள், உணவ கங்கள், பேக்கிரிகள், டீக்கடை கள், பழக்கடைகள் மற்றும் பூக்கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்ப டுத்தபடு கிறதா? என ஆய்வு செய்தனர்.
பிளாஸ்டிக் பறிமுதல்
ஆய்வில் ஒரு சில கடைகளில் பயன்படுத்த வைத்திருந்த சுமார் 3 கிலோ அளவிலான பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் தொடர்பாக செயல் அலுவலர் கூறும்போது, தற்போது கடைகளிலும், பொதுமக்களிடமும் பிளாஸ்டிக் தடை தொடர்பான விழிப்புணர்வு எடுத்து கூறி இனிவரும் காலங்களில் பயன்படுத்தினாலோ, அல்லது விற்பனை செய்தாலோ பிளாஸ்டிக் பொருட்கள் முழுவதும் பறிமுதல் செய்யப்ப டுவதுடன் அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டது என்று கூறினார்.
- தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் இளஞ்செஞ்சிலுவை சங்கம், நாட்டு நலப் பணி த்திட்டம் மற்றும் அகத்தர மதிப்பீட்டுக்குழு சார்பில் வளர் இளம் பருவத்தின ருக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
- நெல்லை தட்சணமாற நாடார் சங்கம் கல்லூரி வரலாற்று துறை சார்பில் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது.
வள்ளியூர்:
தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் இளஞ்செஞ்சிலுவை சங்கம், நாட்டு நலப் பணி த்திட்டம் மற்றும் அகத்தர மதிப்பீட்டுக்குழு சார்பில் வளர் இளம் பருவத்தின ருக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் ராஜன் முன்னிலை வகி த்தார். ஆர்.பி.எஸ்.கே. மருத்துவ அலுவலர் கடற்கரை குமார் தலைமை யிலான மருத்துவ குழுவி னர் கண், தோல் மற்றும் ரத்த சோகை உள்ளிட்ட பரிசோ தனை களை செய்தனர். ஏராள மான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முகாமி ற்கான ஏற்பாடுகளை இளஞ்செஞ்சிலுவை சங்க அலுவலர்கள் பிருந்தா, கிரிஜா, நாட்டு நலப் பணித்திட்டம் அலுவலர்கள் ராஜராஜேஸ்வரி, ஹரி கிருஷ்ணன், அகத் தர மதிப்பீட்டுக்குழு ஒருங்கி ணைப்பாளர் புஷ்ப ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
சுற்றுலா தினம்
மேலும் நெல்லை தட்சணமாற நாடார் சங்கம் கல்லூரி வரலாற்று துறை சார்பில் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராஜன் தலைமை தாங்கினார். வரலாற்று துறை தலைவர் பால சரஸ் வதி வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் ராஜேஷ் கலந்து கொண்டு "மனித வாழ்வில் சுற்றுலாவின் தாக்கம்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை வரலாற்றுத்துறை தலைவர், பேராசிரியர்கள் மாணவ, மாணவிகள் செய்திருந்தனர். மாணவி சுபரிஷா நன்றி கூறினார்.
- ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள், சேரன்மகாதேவி வட்டாரம் சார்பாக “100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு” சமுதாய வளைகாப்பு விழா கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி மண்டபத்தில் நடத்தப்பட்டது.
- விழாவில் மருத்துவ அலுவலர் டாக்டர் ரமேஷ் மற்றும் சுகாதார ஆய்வாளர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.
கல்லிடைக்குறிச்சி:
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள், சேரன்மகாதேவி வட்டாரம் சார்பாக "100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு" சமுதாய வளைகாப்பு விழா கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி மண்டபத்தில் நடத்தப்பட்டது
விழாவில் கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி தலைவர் பார்வதி, இசக்கிபாண்டியன், வீரவநல்லூர் பேரூராட்சி தலைவர் சித்ரா மற்றும் வசந்த சந்திரா, மேலச்செவல் தலைவர் அன்னபூரணியம்மாள், கோபாலசமுத்திரம் தலைவர் தமயந்தி மற்றும் சுந்தர்ராஜன், கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி உறுப்பினர்கள் பாத்திமா, ஜானகி, பிரமாச்சி, ஜானகி, பெரியசெல்வி, மாலதி, ஜார்ஜ் ராபர்ட், பாண்டி, முத்து லெட்சுமி, செய்யது அலி பாத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் மருத்துவ அலுவலர் டாக்டர் ரமேஷ் மற்றும் சுகாதார ஆய்வாளர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜாஸ்மின்தேனா, காந்திமதி , சீதாலெட்சுமி மற்றும் சரஸ்வதி, வட்டார ஒருங்கிணைப்பாளர் மங்கை ஆகியோர் கலந்து கொண்டு குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து எடுத்துரைத்தனர். இதில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
- அம்பை சட்டமன்ற உறுப்பினரும், அமைப்புச் செயலாளருமான இசக்கி சுப்பையா எம்.எல்.ஏவை, நெல்லை புறநகர் மாவட்ட செயலாளராக, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
- சேரன்மகாதேவி பஸ் நிலையம் அருகே, சேரன்மகாதேவி ஒன்றிய செயலாளர் மாரிச்செல்வம் தலைமையில் அ.தி.மு.கவினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
சேரன்மகாதேவி:
அம்பை சட்டமன்ற உறுப்பினரும், அமைப்புச் செயலாளருமான இசக்கி சுப்பையா எம்.எல்.ஏவை, நெல்லை புறநகர் மாவட்ட செயலாளராக, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனையொட்டி சேரன்மகாதேவி பஸ் நிலையம் அருகே, சேரன்மகாதேவி ஒன்றிய செயலாளர் மாரிச்செல்வம் தலைமையில் அ.தி.மு.கவினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இதில் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கூனியூர் மாடசாமி, சேரன்மகாதேவி நகர செயலாளர் வக்கீல் பழனி குமார், மாவட்ட பிரதிநிதி பன்னீர்செல்வம், முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் முருகன் நயினார், உச்சிமாகாளி, நகரதகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மகாராஜன், இளைஞர் அணி செல்வகுமார் மற்றும் நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






