என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாங்குநேரி அருகே வீடு புகுந்து 10 பவுன் நகை திருட்டு
- பனையங்குளத்தில் உள்ள பெருமாள் கோவில் கொடை விழா நடந்தது.
- இரவில் மர்மநபர்கள் தங்க நகைகளை திருடி சென்று விட்டதாக கூறப்படுகிறது.
களக்காடு:
தூத்துக்குடி அந்தோணியார்புரத்தை சேர்ந்தவர் மாடகண்ணு. இவரது மனைவி செல்வ மணி (வயது22). இவரது தாய்மாமா சுப்பையா நாங்குநேரி அருகே பனையங்குளத்தில் வசித்து வருகிறார்.
10 பவுன் நகை
பனையங்குளத்தில் உள்ள பெருமாள் கோவில் கொடை விழா நடந்தது. இதில் கலந்து கொள்ள செல்வமணி தனது தாய்மாமா சுப்பையா வீட்டிற்கு வந்தார். கோவில் கொடை விழாவிற்கு சென்று விட்டு, சுப்பையா வீட்டிற்கு வந்த செல்வமணி தனது 10 பவுன் எடையுள்ள செயின், 4 பவுன் நெக்லஸ், 5¼ பவுன் செயின் ஆகியவற்றை கழற்றி ஒரு பையில் வைத்திருந்தார். மறுநாள் காலை பையை பார்த்த போது தங்கநகைகள் மாயமாகியிருந்தது.
இரவில் மர்மநபர்கள் தங்க நகைகளை திருடி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வமணி இது குறித்து மூன்றடைப்பு போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் பிரேமா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி இளம்பெண்ணின் தங்கநகைகளை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






