search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pregnant womens"

    • 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா புதியம்புத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
    • நிகழ்ச்சியில் யூனியன் சேர்மன் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    புதியம்புத்தூர்:

    சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா புதியம்புத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

    ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு சீதன பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சரஸ்வதி, யூனியன் சேர்மன் ரமேஷ், ஓட்டப்பிடாரம் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திலகா, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவபாலன், தாசில்தார் சுரேஷ், ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய செயலாளரும் ஓட்டப்பிடாரம் ஊராட்சிமன்ற தலைவருமான இளையராஜா, புதியம்புத்தூர் பஞ்சாயத்து தலைவி பழனிச்செல்வி, மருத்துவ அலுவலர் அன்பு மாலதி, சித்த மருத்துவ அலுவலர் மல்லிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள், சேரன்மகாதேவி வட்டாரம் சார்பாக “100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு” சமுதாய வளைகாப்பு விழா கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி மண்டபத்தில் நடத்தப்பட்டது.
    • விழாவில் மருத்துவ அலுவலர் டாக்டர் ரமேஷ் மற்றும் சுகாதார ஆய்வாளர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.

     கல்லிடைக்குறிச்சி:

    ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள், சேரன்மகாதேவி வட்டாரம் சார்பாக "100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு" சமுதாய வளைகாப்பு விழா கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி மண்டபத்தில் நடத்தப்பட்டது

    விழாவில் கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி தலைவர் பார்வதி, இசக்கிபாண்டியன், வீரவநல்லூர் பேரூராட்சி தலைவர் சித்ரா மற்றும் வசந்த சந்திரா, மேலச்செவல் தலைவர் அன்னபூரணியம்மாள், கோபாலசமுத்திரம் தலைவர் தமயந்தி மற்றும் சுந்தர்ராஜன், கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி உறுப்பினர்கள் பாத்திமா, ஜானகி, பிரமாச்சி, ஜானகி, பெரியசெல்வி, மாலதி, ஜார்ஜ் ராபர்ட், பாண்டி, முத்து லெட்சுமி, செய்யது அலி பாத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் மருத்துவ அலுவலர் டாக்டர் ரமேஷ் மற்றும் சுகாதார ஆய்வாளர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜாஸ்மின்தேனா, காந்திமதி , சீதாலெட்சுமி மற்றும் சரஸ்வதி, வட்டார ஒருங்கிணைப்பாளர் மங்கை ஆகியோர் கலந்து கொண்டு குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து எடுத்துரைத்தனர். இதில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    • கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்தில் மன அழுத்தம், பதற்றம், படபடப்பு ஏற்படும்.
    • அதிக தூரம் நடக்கும் போது இளைப்பு ஏற்படும்.

    அவினாசி :

    சோமனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்துறை சார்பில் கர்ப்பிணிகளுக்கு யோகா மற்றும் மூச்சுப்பயிற்சி அளிக்கப்படுகிறது.கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி அளித்து ஆயுஷ் மருத்துவ அலுவலர் அருள் ஜோதி பேசியதாவது:- கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்தில் மன அழுத்தம், பதற்றம், படபடப்பு ஏற்படும். சிறிய பிரச்னைக்கு பெரிய அளவில் பதற்றம் உண்டாகும். அதை எளிதில் தவிர்க்க முடியும். மேலும் எடை அதிகரிப்பு, உணவு சாப்பிடும் போது மூச்சடைப்பு, அதிக தூரம் நடக்கும் போது இளைப்பு ஆகியவை ஏற்படும். பிரசவ நேரத்திலும் அவதி ஏற்படும்.இவற்றை தவிர்க்க தினமும் மூச்சு பயிற்சி செய்வது அவசியமாகும்.

    காற்றோட்டமான இடத்தில் அமர்ந்து மூச்சு பயிற்சி செய்ய வேண்டும். இதன்மூலம் மனதுக்கு அமைதியும் உடலுக்கு வலிமையும் கிடைக்கும்.அதேபோல் சிறு சிறு யோக பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.கர்ப்ப காலத்தில் உடல் முழுவதும் தசை நார்கள், ரத்த குழாய்கள் நீட்சி அடைய பயிற்சி செய்யவேண்டும். அப்போதுதான் பிரசவ காலத்தில் எந்த பிரச்னையும் ஏற்படாது.இவ்வாறு அவர் பேசினார். 

    • கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை வழங்கி சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினர்.
    • கணபதிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் சொந்த செலவில் வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே,100கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. பல்லடம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், கணபதி பாளையம் ஊராட்சி ஆகியவை இணைந்து 100 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா பல்லடம் அருகே உள்ள கணபதி பாளையம் சவுடேஸ்வரி அம்மன் திருமணமண்டபத்தில் நடைபெற்றது. திருப்பூர் மாநகராட்சி 4ம் மண்டல தலைவர் இலபத்மநாபன், முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் சோமசுந்தரம், கணபதிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம் தம்பதியினர் ரூ.1 லட்சம் சொந்த செலவில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை வழங்கி சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி வைத்தனர்.

    கர்ப்பிணி பெண்களுக்கு சீர் வரிசையாக வளையல்கள், புடவை, தட்டு, பூ, மஞ்சள், குங்குமம், மற்றும் 5 வகையான உணவுகளுடன் மதிய விருந்து வழங்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனைகளில் பரிசோதனைக்குச் செல்லும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் மூலம் ஊக்கத் தொகை ரூ.18 ஆயிரம், ரூ 2 ஆயிரம் மதிப்பிலான ஊட்டச்சத்து பெட்டகம், ஆகியவை வழங்கப்படுகிறது. மேலும் சுகாதாரத் துறையால் கர்ப்ப கால முன்பின் பராமரிப்பு முறைகள், குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் முறைகள் ,குழந்தை வளர்ப்பு தடுப்பூசிகள் போன்ற பல தகவல்கள் கர்ப்பிணி பெண்களுக்கு எடுத்துக் கூறப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பல்லடம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுடர்விழி, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மகாலட்சுமி சங்கீதா, ஒருங்கிணைப்பாளர்கள் துளசிமணி,கவிதா, பல்லடம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் பாலசுப்ரமணியம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கோவிந்தசாமி, ஈஸ்வர மகாலிங்கம், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் முத்துக்குமார், வார்டு கவுன்சிலர்கள் ரவி தண்டபாணி, ருக்மணி வீரப்பன், தி.மு.க. மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் ரத்தினசாமி, கீர்த்தி சுப்பிரமணியம்,ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் சின்னப்பன், மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கர்ப்பிணி பெண்கள் சிகரெட் பிடித்தாலும், மது அருந்தினாலும், போதை மருந்து உட்கொண்டாலும் அது பிறக்கும் குழந்தையை கடுமையாக பாதிக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    புதுடெல்லி:

    ஆசிய மக்கள் தொகையில் பிறக்கும் 1000 குழந்தைகளில் 1.7 சதவீதம் குழந்தைகள் பிளவுபட்ட உதட்டுடன் பிறக்கின்றன. இந்தியாவை பொறுத்தவரை இதுகுறித்து குறிப்பிட்ட புள்ளிவிவரம் கிடைக்கவில்லை. ஆனால் ஆண்டுதோறும் 35 ஆயிரம் குழந்தைகள் பிளவுபட்ட உதடு மற்றும் உள்வாயின் மேற்புறம் அண்ணம் பாதிக்கப்பட்ட நிலையில் பிறப்பதாக உத்தேசமாக கணக்கிடப்பட்டுள்ளது.

    இதற்கான ஆய்வு குறித்து ‘எய்ம்ஸ்’ மருத்துவ நிறுவனத்தின் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். கடந்த 2010-ம் ஆண்டு முதல் 3 கட்டமாக இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது.

    அதில் பெண்களுக்கு கர்ப்ப கால தொடக்கத்தில் சிகரெட் பிடித்தல், மது அருந்துதல், போதை மருந்து உட்கொள்ளுதல், மற்றவர் பிடிக்கும் சிகரெட் புகையை சுவாசித்தல் உள்ளிட்ட காரணங்களால் வயிற்றில் வளரும் சிசுவின் வளர்ச்சி பாதிக்கிறது. அதன்மூலம் உதடு பிளவுபட்ட மற்றும் வாயின் உள்புறத்தில் அண்ணம் சரிவர வளர்ச்சி இல்லாமை போன்ற குறைகள் ஏற்படுகின்றன.

    இதனால் குழந்தைகள் சரிவர உணவு சாப்பிட முடியாது, சுவாசிக்கவும் மிகவும் சிரமப்படுவர். அதன் காரணமாக பல நோய்கள் ஏற்படும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    எனவே கர்ப்பிணி பெண்கள் சிகரெட் பிடித்தாலும், மது அருந்தினாலும், போதை மருந்து உட்கொண்டாலும் அது பிறக்கும் குழந்தையை கடுமையாக பாதிக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    ×