என் மலர்
திருநெல்வேலி
- மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளது.
- தாமரைச்செல்வி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினி யோகம் இருக்காது.
நெல்லை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நெல்லை நகர்புற வினியோக பிரிவு செயற்பொறியாளர் காளிதாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளது. இதனால் மேலப்பாளையம் கொட்டிகுளம் பஜார், அம்பை மெயின் ரோடு சந்தை பகுதிகள், குலவணிகர்புரம் மத்திய சிறைச்சாலை, மாசிலாமணி நகர், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹாமீம்புரம், மேலக் கருங்குளம், முன்னீர்பள்ளம், ஆரைக் குளம், அன்னை நகர், தருவை, ஓமநல்லூர், கண்டித்தான்குளம், ஈஸ்வரியாபுரம், ஆஸ்பத்திரி ரோடு, குலவணிகர்புரம், தெற்கு பைபாஸ் ரோடு, மேல குலவணிகர்புரம் பஜார் திடல், ஜின்னா திடல், டவுன் ரோடு, அண்ணா வீதி, பசீரப்பா தெரு, கணேசபுரம், உமறுபுலவர் தெரு, ஆசாத் ரோடு, பி.எஸ்.என். கல்லூரி, பெருமாள் புரம், பொதிகை நகர், அரசு ஊழியர் குடியிருப்பு (என்.ஜி.ஓ. காலனி), அன்புநகர், மகிழ்ச்சி நகர், திருநகர், திருமால்நகர், பொறியியல் கல்லூரி பகுதி, புதிய பேருந்து நிலையம், ரெட்டி யார்பட்டி, டக்கரம்மாள் புரம், கொங்கந்தான்பாறை, பொன்னாக்குடி, அடை மிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி மற்றும் தாமரைச் செல்வி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினி யோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பாளை பகுதி 39 மற்றும் 55-வது வார்டு வட்டங்கள் சார்பில் தி.மு.க. தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
- கூட்டத்தில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் கலந்து கொண்டு பேசினார்.
நெல்லை:
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை யொட்டி நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் தெருமுனை கூட்டம் பாளை பகுதி 39 மற்றும் 55-வது வார்டு வட்டங்கள் சார்பில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் கலந்து கொண்டு பேசினார். பாளை தியாகராஜநகர் ரெயில்வே கேட், பஸ் நிறுத்தம் பகுதிகளில் நடந்த இந்த நிகழ்ச்சிகளில் மூத்த முன்னோடிகள் சுப்பிர மணியன், சுப சீதாராமன், மாநில மகளிர் தொண்டரணி துணை செயலாளர் விஜிலா சத்யானந்த், முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா, முன்னாள் மாவட்ட பொரு ளாளர் அருண்குமார், விளையாட்டு மேம்பாட்டு பிரிவு அமைப்பாளர் பலராமன், முன்னாள் கவுன்சிலர் பாலன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஆறுமு கராஜா, பேட்டை மணி கண்டன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- நெல்லை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் நடைபெற உள்ளது.
- ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் அன்றைய தினமே தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும்.
நெல்லை:
நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மாவட்ட காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளது. அதன்படி நான்கு சக்கர வாகனங்கள்-5 மற்றும் இரு சக்கர வாகனங்கள்-2 என மொத்தம் 7 வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகிற 16-ந்தேதி காலை 10 மணிக்கு ஏலம் விடப்படுகிறது.
நெல்லை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து இந்த பொது ஏலம் நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏலம் எடுக்க விரும்புவோர் 15-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நெல்லை மாவட்ட ஆயுதப்படை மோட்டார் வாகனப்பிரிவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வை யிட்டு கொள்ளலாம்.
மேலும் வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் அன்றைய தினமே ரூ.2000 முன்பணம் செலுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும்.
பதிவு செய்தவர்கள் மட்டுமே ஏலம் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள். ஏலம் எடுத்தவுடன் முழுத்தொகை மற்றும் அதற்கு உண்டான சரக்கு மற்றும் சேவை வரி ( இரு சக்கர வாகனத்திற்கு 12 சதவீதம் மற்றும் நான்கு சக்கரவாகனத்திற்கு 18 சதவீதம்) முழுவதையும் அரசுக்கு அன்றே ரொக்கமாக செலுத்தி வாக னத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ராமகிருஷ்ணன், சுப்பிரமணியபுரத்தில் உள்ள டீக்கடை அருகே நின்று கொண்டிருந்தார்.
- காயம் அடைந்த ராமகிருஷ்ணன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள சுப்பிரமணியபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் என்ற கிட்டு (வயது 45). கூலி தொழிலாளி. இவருக்கும், இவரது அண்ணன் சுடலைக்கண்ணு (48) என்பவருக்கும் சொத்து பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. இதுதொடர்பாக கடந்த 17.11.2020-ந் தேதி ராம கிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் களக்காடு போலீசார் சுடலைக்கண்னு மீது வழக்கும் பதிவு செய்துள்ளனர்.
சம்பவத்தன்று ராமகிருஷ்ணன், சுப்பிரமணிய புரத்தில் உள்ள டீக்கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுடலைக்கண்ணு, அதே ஊரை சேர்ந்த வெள்ளப் பாண்டி ஆகியோர் ராமகிருஷ்ணனை கீழே தள்ளி, அவரது கைகளை கயிற்றால் கட்டி, தாக்கியதாகவும், அவரது காலில் கல்லை தூக்கி போட்டதாகவும் கூறப்படு கிறது. இதனால் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவ மனையில் அனுமதி க்கப்பட்டார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சுடலைக் கண்ணுவை கைது செய்தார். வெள்ளப்பாண்டியை தேடி வருகிறார்.
- நெல்லை தட்சண மாற நாடார் சங்கம் கல்லூரியில் ஒரு மாணவர் ஒரு மரம் என்ற நோக்கில் மரக் கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
- மாணவ, மாணவிகள் , ஆசிரியர்கள், அலுவலர்கள் 1,000 மரக்கன்றுகளை நட்டனர்.
வள்ளியூர்:
தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சண மாற நாடார் சங்கம் கல்லூரியில் ஒரு மாணவர் ஒரு மரம் என்ற நோக்கில் மரக் கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. முதல்வர் ராஜன், வரவேற்று பேசினார். நெல்லை தட்சண மாற நாடார் சங்கம் மற்றும் கல்லூரி தலைவர் ஆர்.கே. காளிதாசன் நாடார் தலைமை தாங்கினார். கல்லூரிச் செயலர் வி.பி.ராமநாதன் முன்னிலை வகித்தார். கல்லூரிக்குழு உறுப்பினர் எஸ்.கே.டி.பி. காமராஜ் தொகுத்து வழங்கினார். சிறப்பு விருந்தினராக நெல்லை வன பாதுகாவலர் மற்றும் களஇயக்குநர் எ.எஸ். மாரிமுத்து கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் மாணவர்களை பாராட்டி உற்சாகப்படுத்தினார். நெல்லை கோட்ட வன அலுவலர் அன்பு சுற்றுச்சூழல் வனம் மற்றும் இயற்கை பாதுகாப்பு பற்றி சிறப்புரை வழங்கினார். நாங்குநேரி வனச்சரக அதிகாரி பலவேச கண்ணன், வனவர்கள், மற்றும் வன அலுவலர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர் மரக்கன்றுகள் நடும் விழாவை தொடங்கி வைத்தார். அதைத்ெதாடர்ந்து மாணவ, மாணவிகள் , ஆசிரியர்கள், அலுவலர்கள் 1,000 மரக்கன்றுகளை நட்டனர். விழாவில் நெல்லை தட்சண மாற நாடார் சங்கம் இயக்குநர்கள், கல்லூரிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஹரிகிருஷணன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி அகத் தரமதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ், இயற்பியல் துறை தலைவர் பாலமுருகன், நாட்டு நலப்பணி திட்ட அணி எண். 35 மற்றும் 37 அலுவலர்கள் செய்திருந்தனர்.
- அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வானுமாமலை சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.
- வழக்குப்பதிவு செய்து தீ வைத்த மர்ம நபர்களை தேடி வந்தனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சி அய்யன்கோவில் தெருவை சேர்ந்தவர் ராமையா மகன் வானுமாமலை ( வயது 30). கூலித்தொழிலாளி. இவர் மாடுகள் வளர்த்து வந்தார்.
சம்பவத்தன்று இவர் வீட்டின் முன்புள்ள திண்ணையில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவர் மீது தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் கத்தி கூச்சலிட்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து, வானுமாமலையை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ வைத்த மர்ம நபர்களை தேடி வந்தனர். இதற்கிடையே நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வானுமாமலை சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏழை, எளிய மக்கள் வயிறார உணவு உண்பதற்காக அம்மா உணவகங்களை ஏற்படுத்தித் தந்தார்.
- அம்மா உணவகம் அருகே கழிவுகள், மது பாட்டில்கள் கிடக்கிறது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி யில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
இதில் மேயர் சரவணன் தலைமை தாங்கி பொது மக்களிடமிருந்து குறைகள் தொடர்பான மனுக்களை பெற்றுக் கொண்டார். துணை கமிஷனர் தாணு மூர்த்தி முன்னிலை வகித்தார்.
நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் மாவட்டச் செயலாளர் தச்சை கணேசராஜா அறிவுறுத்தலின் பேரில் பகுதி செயலாளர் காந்தி வெங்கடாஜலம், சிந்து முருகன் ஆகியோர் தலைமையில் முன்னாள் அரசு வக்கீல் அன்பு அங்கப்பன் மற்றும் நிர்வாகிகள் திரண்டு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க ஆட்சிக்காலத்தின் போது முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏழை, எளிய மக்கள் வயிறார உணவு உண்பதற்காக குறைந்த செலவில் இட்லி, சாம்பார் சாதம், தயிர் சாதம் உள்ளிட்டவை ஏழைகளுக்கு கிடைக்க வழிவகை செய்யும் விதமாக அம்மா உணவகங்களை ஏற்படுத்தித் தந்தார்.
தற்போது தி.மு.க. ஆட்சி காலத்தில் அந்த உணவகங்களை அவர்கள் கண்டு கொள்வதில்லை. தரமற்ற உணவுகள் வழங்குகின்றனர். பாளை மண்டலத்துக்குட்பட்ட மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள அம்மா உணவகத்தின் அருகே மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் வந்து செல்பவர்களின் வசதிக்காக கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. அந்த கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது.
இதனால் அந்த பகுதியில் உள்ள அம்மா உணவகம் அருகே மனித கழிவுகள், மது பாட்டில்கள் கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் முகம் சுழிக்கின்றனர். உடனடியாக இந்த கழிப்பிடங்களை முறையாக பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
அப்போது பாளை பகுதி மாணவர் அணி செயலாளர் புஷ்பராஜ் ஜெய்சன், நெல்லை பகுதி துணைச் செயலாளர் மாரிசன், மாவட்ட பிரதிநிதி ஈஸ்வரி கிருஷ்ணன், நிர்வாகிகள் பாளை ரமேஷ், பாறையடி மணி, சம்சுல்தான், பக்கீர் மைதீன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- முகாமில் யோகா மருத்துவ சிசிச்சைகள் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது.
- மருத்துவ முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
வள்ளியூர்:
நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரி தாவரவியல் துறை, அகத்தர மதிப்பீட்டு குழு மற்றும் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக்கல்லூரி இணைந்து நடத்திய இலவச சித்த மருத்துவ முகாம் தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள காமராஜ் நடு நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
நெல்லை தட்சண மாற நாடார் சங்க கல்லூரி செயலர் வி.பி. ராமநாதன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் து.ராஜன், கல்லூரிக்குழு உறுப்பினர் எஸ்.கே.டி.பி. காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை பாளை யங்கோட்டை அரசு சித்த மருத்துவக்கல்லூரி பேராசி ரியர் மனோகரன் மற்றும் காமராஜ் நடுநிலைப்பள்ளி தாளாளர் டாக்டர் எம். ஜெபஸ்டின் ஆனந்த் ஆகியோர் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினர்.
முகாமில் வர்ம மருத்து வத்துறை தலைவர் முனிஸ்வரன், புற மருத்துவ துறை மருத்துவர் சுஜாதா, விரிவுரை யாளர் பிச்சையாகுமார், மருத்துவ தாவரவியல் துறை ராஷேஸ், தாவரவியல் துறை தலைவர் விஜயா, காமராஜ் நடு நிலைப்பள்ளி தலைமையாசிரி யர் லியோன்ஸ் லெட்டிசியா தங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முகாமில் கல்லூரி பேராசி ரியர் பாலமுருகன், அகத்தர மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ், அலுவலக கண்கா ணிப்பாளர் பாலச்சந்திரன், பயிற்சி பயிற்றுநர் இளங்கோ ஜெகதீஸ், பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். சித்த மருத்துவ முகாமில் தெற்கு கள்ளி குளத்தை சார்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முகாமில் சளி காய்ச்சல், தலைவலி, கை, கால், மூட்டுவலி, கழுத்து வலி மற்றும் வர்மம், புறமருத்துவம், யோகா மருத்துவ சிசிச்சைகள் நோயா ளிகளுக்கு வழங்கப்பட்டது.
மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. தாவரவியல் துறை உதவி பேராசிரியர் ஹரிகிருஷ்ணன் நன்றி கூறினார். முகாமிற்கான ஏற்பாடுகளை நெல்லை தட்சண மாற நாடார் சங்க கல்லூரி நிர்வாகம், தாவரவியல் துறை மற்றும் அகத் தர மதிப்பீட்டு குழு இணைந்து செய்திருந்தனர்.
- புரட்டாசி மாதம் என்பதால் நம்பி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
- நம்பி கோவிலுக்கு செல்லும் பாதையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
களக்காடு:
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப்பகுதியில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருமலை நம்பி கோவில் அமைந்துள்ளது. தற்போது புரட்டாசி மாதம் என்பதால் இந்த கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் திருமலை நம்பி கோவிலுக்கு செல்லும் வழிப்பாதையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதாக வனத்துறையினர் தெரி வித்துள்ளனர். இதையடுத்து இன்று (செவ்வாய் கிழமை) ஒரு நாள் மட்டும் பக்தர்கள் நம்பி கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
- போட்டியானது, வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட உள்ளது.
- நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து அணிகளும் இதில் கலந்துகொள்ளலாம்.
நெல்லை:
ஆக்கி யூனிட் ஆப் நெல்லை சார்பில் மாவட்ட ஆக்கி லீக் போட்டிகள் வருகிற 26-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெறு கிறது. போட்டியானது, வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட உள்ளது. இதில் முதல் 2 நிலை களை பெறுபவர்களுக்கு வெற்றிக்கோப்பைகளும், பங்கேற்பாளர்களுக்கு பங்கேற்பு கேடயங்களும், அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படும். நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து அணிகளும் இதில் கலந்துகொள்ளலாம். கலந்துகொள்ள வயது வரம்பு ஏதும் இல்லை. நுழைவு கட்டணம் இலவசம். கலந்துகொள்ள விரும்பும் அணிகள் 99403 41508, 90430 36967 என்ற வாட்ஸ் அப்பில் 20-ந்தேதிக்கு முன்னர் அணியின் பெயர்களை முன்பதிவு செய்யவேண்டும். இதற்கான விரிவான ஏற்பாடுகளை ஆக்கி யூனிட் ஆப் நெல்லை நிர்வாகிகள் சேவியர், முருகேசன், பீர் அலி, டாக்டர் மாரிக்கண்ணன், ஜான்சன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
- புதுக்குளம், கொங்கந்தான்பாறை பஞ்சாயத்துகளில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
- கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் கலந்து கொண்டு பேசினார்.
நெல்லை:
நெல்லை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பாளை தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுக்குளம், கொங்கந்தான்பாறை பஞ்சாயத்துகளில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஏ.கே. சீனிவாசன் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் கலந்து கொண்டு பேசினார். பாளை தெற்கு ஒன்றிய செயலாளரும், புதுக்குளம் பஞ்சாயத்து தலைவருமான முத்துக்குட்டி பாண்டியன் முன்னிலை வகித்தார்.
இதில் ஒன்றிய அவை தலைவர் செல்ல பாண்டி யன், ஒன்றிய துணை செயலாளர் பூலான், இணை செயலாளர் ரேவதி, பொருளாளர் ரமேஷ், ஒன்றிய மாவட்ட பிரதிநிதி முத்துக்குமார், நாராயணன், கிளை செயலாளர் வேல்முருகன், பிரம்மா, பேச்சிமுத்து, ரவிக்குமார், தேரவல்லி, காமராஜர் நகர் தசரதன், பசும்பொன் நகர் கிளை செயலாளர் வீரபுத்திரன், வீரளப்பெருஞ்செல்வி கிளை செயலாளர் நாராயணன், மணல்விளை கிளை செயலாளர் சொர்ணப்ப நாடார், மல்லக்குளம் சுப்பையா, கொங்கந்தான் பாறை கிளை செயலாளர் மரியராஜ், அம்பேத்கார் நகர் கிளை செயலாளர் பரமசிவன், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் கிருஷ்ணன் மற்றும் அ.தி.மு.க. சார்பு அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- பேரணியில் மனோன்மணியம் சுந்தரனார் பல் கலைக்கழக உளவியல் துறை மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- சாலையில் நின்றவர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.
நெல்லை:
உலக மனநல நாள் ஆண்டுதோறும் அக்டோபர் 10-ந்தேதி அன்று கடை பிடிக்கப்படுகிறது. உலகளாவிய மனநலக் கல்வி, விழிப்புணர்வு மற்றும் சமூக மனப்பான்மைக்கு எதிராக வாதிடும் நாளாக இந்த நாள் கடைபிடிக்கப்படுகின்றது.
இதனையொட்டி இன்று நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் உலக மனநல விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது.
பேரணியில் மனோன்ம ணியம் சுந்தரனார் பல் கலைக்கழக உளவியல் துறை மாணவர்கள் கலந்து கொண்டு நெல்லை பேட்டை போலீஸ் நிலையத்தில் இருந்து சைக்கிளில் புறப்பட்டு சென்றனர்.
தொடர்ந்து பழைய பேட்டை, காந்திநகர் வழியாக மனோன்மணியம் சுந்த ரனார் பல்கலைக்கழகத்தை அடைந்தனர். இந்த பேரணியை நெல்லை டவுன் உதவி கமிஷனர் சுப்பையா தொடங்கி வைத்தார்.
சைக்கிள் பேரணி நடைபெறுவதையொட்டி பேரணி செல்லும் சாலையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும் சாலையில் நின்ற வர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது. இதில் பல்கலைக்கழக மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சைக்கிள் ஓட்டி சென்றனர்.






