உயிரோடு எரிக்கப்பட்ட தொழிலாளி சிகிச்சை பலனின்றி பலி- கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வானுமாமலை சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.வழக்குப்பதிவு செய்து தீ வைத்த மர்ம நபர்களை தேடி வந்தனர்.
உயிரோடு எரிக்கப்பட்ட தொழிலாளி சிகிச்சை பலனின்றி பலி- கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை
Published on

களக்காடு:

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சி அய்யன்கோவில் தெருவை சேர்ந்தவர் ராமையா மகன் வானுமாமலை ( வயது 30). கூலித்தொழிலாளி. இவர் மாடுகள் வளர்த்து வந்தார்.

சம்பவத்தன்று இவர் வீட்டின் முன்புள்ள திண்ணையில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவர் மீது தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் கத்தி கூச்சலிட்டார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து, வானுமாமலையை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ வைத்த மர்ம நபர்களை தேடி வந்தனர். இதற்கிடையே நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வானுமாமலை சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com