search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Police vehicles"

    • போலீசாரால் பயன்ப டுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 2 சக்கரம், 4 சக்கர வாகனங்கள் என 11 போலீஸ் வாகனங்கள் வருகிற 18-ந் தேதி காலை 10 மணிக்கு நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலத்தில் விடப்படுகிறது.
    • ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் 18-ந் தேதி காலை 8 மணி முதல் 9.45 மணிக்குள் முன்பணமாக 5000 ரூபாய் நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் செலுத்த வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் போலீசாரால் பயன்ப டுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 2 சக்கரம், 4 சக்கர வாகனங்கள் என 11 போலீஸ் வாகனங்கள் வருகிற 18-ந் தேதி காலை 10 மணிக்கு நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலத்தில் விடப்படுகிறது. ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் 18-ந் தேதி காலை 8 மணி முதல் 9.45 மணிக்குள் முன்பணமாக 5000 ரூபாய் நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் செலுத்த வேண்டும். முன் பணத்தொகை செலுத்தும் நபர் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். வாகனத்தை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை, ஜி.எஸ்.டி. முழுவதையும் செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். ஆதார் கார்டு அல்லது ஓட்டுனர் உரிமம் 2 நகல்கள் எடுத்து வர வேண்டும். ஏல வாகனங்களை அக்டோபர் 17-ந் தேதி காலை 10:30 மணி முதல் பார்வையிடலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • நெல்லை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் நடைபெற உள்ளது.
    • ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் அன்றைய தினமே தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்ட காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளது. அதன்படி நான்கு சக்கர வாகனங்கள்-5 மற்றும் இரு சக்கர வாகனங்கள்-2 என மொத்தம் 7 வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகிற 16-ந்தேதி காலை 10 மணிக்கு ஏலம் விடப்படுகிறது.

    நெல்லை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து இந்த பொது ஏலம் நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏலம் எடுக்க விரும்புவோர் 15-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நெல்லை மாவட்ட ஆயுதப்படை மோட்டார் வாகனப்பிரிவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வை யிட்டு கொள்ளலாம்.

    மேலும் வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் அன்றைய தினமே ரூ.2000 முன்பணம் செலுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும்.

    பதிவு செய்தவர்கள் மட்டுமே ஏலம் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள். ஏலம் எடுத்தவுடன் முழுத்தொகை மற்றும் அதற்கு உண்டான சரக்கு மற்றும் சேவை வரி ( இரு சக்கர வாகனத்திற்கு 12 சதவீதம் மற்றும் நான்கு சக்கரவாகனத்திற்கு 18 சதவீதம்) முழுவதையும் அரசுக்கு அன்றே ரொக்கமாக செலுத்தி வாக னத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 8 டிரைவர்களுக்கு மெமோ
    • போலீஸ் ரோந்து பணிக்காக 127 வாகனங்கள் வழங்கப்பட்டு உள்ளது

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் டி.எஸ்.பி.க்கள் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸ் ரோந்து பணிக்காக 42 நான்கு சக்கர வாகனங்களும், 44 பைக்குகள் என மொத்தம் 127 வாகனங்கள் வழங்கப்பட்டு உள்ளது.

    போலீசார் பயன்படுத்தும் வாகனங்கள் சரியான முறையில் பராமரிக்கப்படுகிறதா என மாதம் தோறும் போலீஸ் சூப்பிரண்டு வாகனங்களை ஆய்வு செய்வது வழக்கம்.

    அதன்படி வேலூர் நேதாஜி மைதானத்திற்கு இன்று 86 வாகனங்கள் ஆய்வுக்காக கொண்டு வரப்படன வேலூர் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் போலீசாரின் வாகனங்களை ஆய்வு செய்தார்.

    அப்போது வாகனங்களில் சரியான அளவு என்ஜின் ஆயில் மற்றும் வாகனங்கள் சரியாக பராமரிக்கப்ப டுகிறதா என ஆய்வு செய்தார். ஆய்வின்போது வாகனங்களை சரிவர பராமரிக்காத 8டிரைவர்க ளுக்கு மெமோ வழங்கினார். அதேபோல் வாகனங்களை முறையாக பராமரித்து இருந்த 4 டிரைவர்களுக்கு ரிவார்டு வழங்கினார்.

    இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு கூறுகையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள 127 வாகனங்களில் இன்று 86 வாகனங்கள் ஆய்வுக்காக கொண்டுவரப்பட்டுள்ளது. மீதமுள்ள 46 வாகனங்கள் மற்றொரு நாள் ஆய்வு செய்யப்படும்.

    ஒழுங்காக வாகனங்களை பராமரிக்காத டிரைவர்க ளுக்கு பழைய வாகனங்கள் வழங்கப்படும். முறையாக பராமரிப்பு செய்த டிரைவர்களுக்கு புதிய வாகனங்கள் வழங்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், டி.எஸ்.பி.க்கள் மனோகரன், திருநாவுக்கரசு, ராமமூர்த்தி மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

    தூத்துக்குடியில் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தி பல உயிர்களை பலி வாங்கிய நிலையில், இன்று போலீஸ் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் பதற்றத்தை உருவாக்கியது. #SterliteProtest #PoliceVehiclesTourched
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது உடல்நிலை மோசமாக உள்ளது. துப்பாக்கி சூட்டைக் கண்டித்து பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. தூத்துக்குடி நகரம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. 144 தடை உத்தரவும் நீட்டிக்கப்பட்டுள்ளது.



    துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது மருத்துவமனை வளாகத்தில் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். மருத்துவமனை வளாகத்தில் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதில் காவல்துறையினரின் பேருந்து மற்றும் கார் கண்ணாடிகள் உடைந்தன. இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

    இதற்கிடையே தூத்துக்குடி பிரைன் நகரில் சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த போலீஸ் வாகனங்களுக்கு  தீவைக்கப்பட்டது. இதனால் பதற்றம் மேலும் அதிகரித்தது. ஒரு பேருந்தில் பற்றிய தீ சிறிது நேரத்தில் அணைக்கப்பட்டுவிட்டது. மற்றொரு பேருந்தில் பிடித்த தீ கொழுந்து விட்டு எரிந்ததால் அருகில் செல்ல முடியவில்லை. இதையடுத்து அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறும்படி போலீசார் அறிவுறுத்தினர். #SterliteProtest #PoliceVehiclesTourched

    ×