பாளை ஆயுதப்படை மைதானத்தில் போலீஸ் வாகனங்கள் ஏலம்-16-ந் தேதி நடக்கிறது

நெல்லை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் நடைபெற உள்ளது.ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் அன்றைய தினமே தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும்.
பாளை ஆயுதப்படை மைதானத்தில் போலீஸ் வாகனங்கள் ஏலம்-16-ந் தேதி நடக்கிறது
Published on

நெல்லை:

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நெல்லை மாவட்ட காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளது. அதன்படி நான்கு சக்கர வாகனங்கள்-5 மற்றும் இரு சக்கர வாகனங்கள்-2 என மொத்தம் 7 வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகிற 16-ந்தேதி காலை 10 மணிக்கு ஏலம் விடப்படுகிறது.

நெல்லை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து இந்த பொது ஏலம் நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏலம் எடுக்க விரும்புவோர் 15-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நெல்லை மாவட்ட ஆயுதப்படை மோட்டார் வாகனப்பிரிவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வை யிட்டு கொள்ளலாம்.

மேலும் வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் அன்றைய தினமே ரூ.2000 முன்பணம் செலுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும்.

பதிவு செய்தவர்கள் மட்டுமே ஏலம் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள். ஏலம் எடுத்தவுடன் முழுத்தொகை மற்றும் அதற்கு உண்டான சரக்கு மற்றும் சேவை வரி ( இரு சக்கர வாகனத்திற்கு 12 சதவீதம் மற்றும் நான்கு சக்கரவாகனத்திற்கு 18 சதவீதம்) முழுவதையும் அரசுக்கு அன்றே ரொக்கமாக செலுத்தி வாக னத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com