என் மலர்
உள்ளூர் செய்திகள்

களக்காடு அருகே தொழிலாளியை கட்டி வைத்து தாக்கிய அண்ணன் கைது
- ராமகிருஷ்ணன், சுப்பிரமணியபுரத்தில் உள்ள டீக்கடை அருகே நின்று கொண்டிருந்தார்.
- காயம் அடைந்த ராமகிருஷ்ணன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள சுப்பிரமணியபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் என்ற கிட்டு (வயது 45). கூலி தொழிலாளி. இவருக்கும், இவரது அண்ணன் சுடலைக்கண்ணு (48) என்பவருக்கும் சொத்து பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. இதுதொடர்பாக கடந்த 17.11.2020-ந் தேதி ராம கிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் களக்காடு போலீசார் சுடலைக்கண்னு மீது வழக்கும் பதிவு செய்துள்ளனர்.
சம்பவத்தன்று ராமகிருஷ்ணன், சுப்பிரமணிய புரத்தில் உள்ள டீக்கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுடலைக்கண்ணு, அதே ஊரை சேர்ந்த வெள்ளப் பாண்டி ஆகியோர் ராமகிருஷ்ணனை கீழே தள்ளி, அவரது கைகளை கயிற்றால் கட்டி, தாக்கியதாகவும், அவரது காலில் கல்லை தூக்கி போட்டதாகவும் கூறப்படு கிறது. இதனால் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவ மனையில் அனுமதி க்கப்பட்டார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சுடலைக் கண்ணுவை கைது செய்தார். வெள்ளப்பாண்டியை தேடி வருகிறார்.






