என் மலர்
திருநெல்வேலி
- நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே மாலை நேரத்தில் பெரும்பா லான இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
- நேற்று மாலை மாநகர பகுதிகளான பழைய பேட்டை, டவுன், வண்ணார்பேட்டை, புதிய பஸ் நிலைய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
நெல்லை:
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே மாலை நேரத்தில் பெரும்பா லான இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
நெல்லை
இந்நிலையில் நேற்று மாலை மாநகர பகுதிகளான பழைய பேட்டை, டவுன், வண்ணார்பேட்டை, புதிய பஸ் நிலைய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக நெல்லையில் 4 மில்லிமீட்டர் மழை பெய்தது. மாவட்டத்தை பொறுத்தவரை சேரன்மகா தேவி, கன்னடியன் கால்வாய் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது. மூலக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் வரை பலத்த மழை பெய்தது. அங்கு 20 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.
மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள அம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்தது. அம்பையில் 9 மில்லிமீட்டர் மழை பதிவானது.
முக்கூடல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலையில் பலத்த மழை பெய்தது. சேரன்மகாதேவி யில் 4.4 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
அணை பகுதிகளை பொறுத்தவரை கடந்த சில நாட்களாக மழை பெய்ய வில்லை. பாபநாசம் அணைக்கு சுமார் 700 கனஅடி நீர் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த அணை நீர்மட்டம் 90 அடியை கடந்து விட்டது.
மழை இல்லாததால் அணைகளுக்கு நீர் வரத்து குறைந்தது. சேர்வலாறு அணை 84 அடியாக குறைந்தது. தென்காசி மாவட்டத்தில் கருப்பாநதி அணை பகுதியில் மட்டும் 10 மில்லிமீட்டர் மழை பெய்தது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத் தில் கழுகுமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் வரை பலத்த மழை பெய்தது. இதனால் அங்கு வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. வானம் பார்த்த பூமியான கழுகுமலையில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அங்கு தாழ்வான இடங்க ளில் தண்ணீர் தேங்கியது. இன்று காலை நிலவரப்படி 28 மில்லிமீட்டர் மழை பதிவானது. கயத்தாறு மற்றும் கடம்பூரிலும் நேற்று மாலையில் திடீரென வானில் கருமேக கூட்டங்கள் திரண்டு, பலத்த மழை பெய்தது. அங்கு அதிகபட்ச மாக கடம்பூரில் 16 மில்லிமீட்டரும், கயத்தாறில் 5.6 மில்லிமீட்டரும் மழை பெய்தது.
- தென் மண்டல கால்நடை ஆய்வாளர்கள் சங்கத்தின் சார்பில் இன்று பாளை ஜோதிபுரம் திடலில் உண்ணா விரத போராட்டம் நடைபெற்றது.
- போராட்டத்தில் விருதுநகர், கன்னியா குமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான கால்நடை ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை:
தென் மண்டல கால்நடை ஆய்வாளர்கள் சங்கத்தின் சார்பில் இன்று பாளை ஜோதிபுரம் திடலில் உண்ணா விரத போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் விருதுநகர், கன்னியா குமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான கால்நடை ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் மாரி வெங்கடேசன், ரே மண்ட் சிங்க், ஜெய் கணேஷ், மனோகரன், அண்ணா துரை ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட இணைச் செய லாளர் ஆண்ட்ரூஸ் முத்து உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாள ர்களாக மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கடேசன், மாநில துணை த்தலைவர் கிறிஸ்டோபர் ஆகியோர் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி 6-வது ஊதிய குழு பரிந்துரையின் அடிப்படை யில் நியாயமான ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதுநிலை கால்நடை மருத்துவ மேற்பார்வை யாளர்களுக்கு அடுத்தகட்ட பணி உயர்வுக்கு வழிவகை செய்ய வேண்டும்.
அனைத்து கால்நடை மருந்தகங்களிலும் ஆய்வாளர் பணியிடத்தை உருவாக்க வேண்டும். தமிழக முழுவதும் கால்நடை ஆஸ்பத்திரிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
- களக்காடு அருகே உள்ள நாகன்குளம் கீழத்தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் மதன்(வயது 24). இவர் நேற்று களக்காட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தார்.
- கைதான முருகேஷ் நெல்லையில் சூப்பர் மார்க்கெட் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி யின் சொந்த ஊர் களக்காடு அருகே கீழபத்தை ஆகும்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள நாகன்குளம் கீழத்தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் மதன்(வயது 24). இவர் நேற்று களக்காட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மேலபா ளையம் அருகே உள்ள வீரமாணிக்க புரத்தை சேர்ந்த முருகேஷ்(36) பொது இடத்தில் பொது மக்கள் முகம் சுழிக்கும் வகையில் ஆபாசமாகவும், அருவருக்கதக்க வகையிலும் செயல்பட்டு கொண்டி ருந்ததாக கூறப்படுகிறது.
இதைப்பார்த்த மதன் அவரை தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த முருகேஷ், அவரை கல்லை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மதன் களக்காடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முருகேசை கைது செய்தனர்.
கைதான முருகேஷ் நெல்லையில் சூப்பர் மார்க்கெட் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி யின் சொந்த ஊர் களக்காடு அருகே கீழபத்தை ஆகும்.
அவர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஊழியராக இருந்து வருகிறார். முருகேஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கீழபத்தை யில் வசித்து வருகிறார். அங்கிருந்து தான் தினமும் நெல்லை சென்று வந்துள்ளார் என்பது விசா ரணையில் தெரியவந் துள்ளது.
- வள்ளியூர் யூனியன் சேர்மனும், தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் சேவியர் செல்வராஜா தலைமையில் வள்ளியூர் யூனியன் கூட்டம் வள்ளியூர் யூனியன்அலுவ லகத்தில் நடைபெற்றது.
- கூட்டத்தில் வள்ளியூர் ஊராட்சி யூனியனுக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மக்கள் நல பணிகளின் நிலை குறித்தும், நிறைவேற்றப்பட வேண்டிய மக்கள் நல பணிகள் குறித்தும் பேசப்பட்டது.
வள்ளியூர்:
வள்ளியூர் யூனியன் சேர்மனும், தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் சேவியர் செல்வராஜா தலைமையில் வள்ளியூர் யூனியன் கூட்டம் வள்ளியூர் யூனியன்அலுவ லகத்தில் நடைபெற்றது. துணை சேர்மன் வெங்கடேஷ் தன்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் மங்கையர்கரசி, பொறியாளர்கள் கணபதி ராமன், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர் ரைகானா ஜாவித், பிலிப்ஸ், பொன்குமார், டெல்சி ஒபிலியா, தாய்செல்வி, ஜெயா, மகாலெட்சுமி, மல்லிகாஅருள், பாண்டித்துரை, ஜெயலெட்சுமி, அனிதா, அஜந்தா மற்றும் யூனியன் பணி மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வள்ளியூர் ஊராட்சி யூனியனுக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மக்கள் நல பணிகளின் நிலை குறித்தும், நிறைவேற்றப்பட வேண்டிய மக்கள் நல பணிகள் குறித்தும் பேசப்பட்டது.
- ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமையன்று நெல்லை மாவட்டத்தின் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்படுகிறது.
- இந்த மாதம் நாளை மறுநாள் 2-வது சனிக்கிழமை நடை பெறும். இக்குறைதீர் முகாமில் சேவைகளை மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
பொது விநியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமையன்று நெல்லை மாவட்டத்தின் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி இந்த மாதம் நாளை மறுநாள் 2-வது சனிக்கிழமை நடை பெறும். இக்குறைதீர் முகாமில் சேவைகளை மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
இதில் புதிதாக குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம்,புதிய குடும்ப அட்டை அல்லது நகல்அட்டை கோரி விண்ணப்பித்தல் மேற்கொள்ளலாம்.
குடும்ப அட்டையில் கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல், பொதுவிநியோக திட்ட கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்து புகார் அளித்தல், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார் அளித்தல் உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்படும்.
குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம் மற்றும் புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்கச் செல்லும் பயனாளர்கள் உரிய ஆவணங்களுக்குரிய ஆதார் அட்டை, பிறப்பு அல்லது இறப்பு சான்று, குடியிருப்பு முகவரிக்கு ஆதாரமான ஆவணங்கள் ஆகியவற்றினை எடுத்து செல்ல வேண்டும்.கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்வதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட கைபேசியினை கொண்டு செல்ல வேண்டும். இந்த முகாம் மற்றும் பொது விநியோகத்திட்ட செயல்பாடுகள் குறித்த புகார்களுக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக பொது விநியோகத்திட்ட கட்டுப்பாட்டு அறை எண்: 93424 71314-க்கு தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- நெல்லை மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க மாவட்ட மற்றும் மாநகர போலீஸ் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
- தொடர் வாகன தணிக்கை செய்யப்பட்டதோடு ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கை, குற்றப்பதிவேடு பின்னணி உடையவர்களை கண்காணிக்கும் பணியை தீவிரப் படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தொடர் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வந்த நிலையில், அதனை தடுக்க நெல்லை மாவட்ட மற்றும் மாநகர போலீஸ் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கைது நடவடிக்கை
தொடர் வாகன தணிக்கை செய்யப்பட்டதோடு ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கை, குற்றப்பதிவேடு பின்னணி உடையவர்களை கண்காணிக்கும் பணியை தீவிரப் படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக ரவுடிகள், தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், போக்சோ குற்றவாளிகள், தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளில் ஈடுபட்டு வருபவர்கள், கொலை வழக்குகளில் தொடர்புடை யவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.
சைபர் கிரைம்
அதன்படி நெல்லை மாநகர் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவித்தல், கொள்ளை, சைபர் கிரைம், போக்சோ உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என 52 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 9 மாதங்களில் நெல்லை மாவட்டத்தில் உள்ள தாழையத்து ரூரல், நாங்குநேரி, வள்ளியூர், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி ஆகிய 5 போலீஸ் உட்கோட்டங்களில் காவல்துறை அதிகாரிகளின் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கை யின் கீழ் மொத்தமாக 132 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக நெல்லை மாவட்டம் மற்றும் மாநகர் பகுதி முழுவதும் போலீஸ் அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையின்படி 184 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
- மழை காலத்தில் பரவக்கூடிய டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கும் விதமாக தமிழக அரசு சார்பில் சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர்கள் அடங்கிய குழுவினர் மாவட்டம் தோறும் தனித்தனியாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
- 5 பேர் கொண்ட மருத்துவர் குழு தென் மாவட்டங்களில் ஆய்வு செய்வதற்காக இன்று நெல்லைக்கு வந்துள்ளனர்.
நெல்லை:
மழை காலத்தில் பரவக்கூடிய டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கும் விதமாக தமிழக அரசு சார்பில் சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர்கள் அடங்கிய குழுவினர் மாவட்டம் தோறும் தனித்தனியாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த குழுவினர் அந்தந்த மாவட்டங்களில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி 5 பேர் கொண்ட மருத்துவர் குழு தென் மாவட்டங்களில் ஆய்வு செய்வதற்காக இன்று நெல்லைக்கு வந்துள்ளனர். இந்தக் குழுவினர் நெல்லை, தூத்துக்குடி கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு செய்ய உள்ளனர்.
இந்த குழுவில் மருத்துவர்கள் வடிவேலன், சேகர், நிர்மல்சன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழு தனித்தனியாக பிரிந்து மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்கிறது.
தென்மாவட்டங்களில் மழை காலங்களில் அதிக காய்ச்சல் ஏற்படும் என்ற எச்சரிக்கையை தொடர்ந்து இந்த குழு காய்ச்சலை கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு பகுதியில் ஆய்வு மேற் கொண்டு அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர். அதனை மையமாகக் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்படும் என நெல்லை மாவட்ட சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
- களக்காடு அருகே உள்ள ஜெ.ஜெ.நகர் தெற்கு தெருவை சேர்ந்தவர் அப்துல் வஹாப் மகன் அக்பர் அலி (வயது 19). சம்பவத்தன்று இவர் தனது வீட்டு முன் நின்று கொண்டிருந்தார்.
- அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த செல்லத்துரை மகன் சுரேஷ் (22) அக்பர் அலியை அவதூறாக பேசினார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள ஜெ.ஜெ.நகர் தெற்கு தெருவை சேர்ந்தவர் அப்துல் வஹாப் மகன் அக்பர் அலி (வயது 19). சம்பவத்தன்று இவர் தனது வீட்டு முன் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த செல்லத்துரை மகன் சுரேஷ் (22) அக்பர் அலியை அவதூறாக பேசினார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சுரேஷ், அக்பர் அலியை கல்லால் தாக்கினார்.
இதனால் காயமடைந்த அவர் களக்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சுரேசை தேடி வருகின்றனர்.
- குறைந்த அளவு முன்தொகை செலுத்தினால், மாதந்தோறும் ஊதியம் போல் பணம் வந்து கொண்டிருக்கும் என்று கூறி மோசடி செய்யும் கும்பல் அதிகரித்துள்ளது.
- தொடக்கத்தில் குறைந்த அளவு லாபத்தை கொடுக்கும் கும்பல், நாளடைவில் அதிக அளவு பணத்தை பறித்து கொண்டு ஏமாற்றி விடுகின்றனர்.
நெல்லை:
நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே உள்ள சங்கர்நகர் பாலாஜி நகரை சேர்ந்தவர் இமானுவேல். இவரது மகன் சார்லஸ் (வயது 31). இவர் மார்க்கெட்டிங் தொழில் செய்து வருகிறார். இவரது செல்போன் வாட்ஸ்அப்பில் கடந்த செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில் குறுந்தகவல் மற்றும் லிங்க் வந்துள்ளது.
தொடர்ந்து அவரது செல்போனுக்கு வந்த அழைப்பில் எதிர்புறம் பேசிய நபர், வாட்ஸ்அப்பில் அனுப்பிய அந்த லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் அதிக அளவு பொருட்கள் ஆர்டர் செய்யுங்கள். விளம்பரங்களை பாருங்கள். அப்போது உங்களுக்கு ரேட்டிங் அதிகரித்து லாபமாக பணம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
இதனை உண்மை என்று நம்பிய சார்லஸ், அதற்கு ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பேசிய அந்த நபர், வாட்ஸ்அப்பில் 2 வங்கி கணக்குகளை அனுப்பி விடுவதாகவும், அதில் பணம் செலுத்துமாறும் கூறியுள்ளார். அவ்வாறு அனுப்பும் பணத்திற்கு வட்டியுடன் கூடுதல் லாபம் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
இதனை நம்பிய சார்லஸ் கடந்த செப்டம்பர் 9-ந்தேதி முதல் கொஞ்சம் கொஞ்சமாக 2 வங்கி கணக்குகளுக்கும் பணம் செலுத்தி வந்துள்ளார். இவ்வாறாக அவர் நேற்று முன்தினம் வரை ரூ.13 லட்சத்து 44 ஆயிரத்து 803 செலுத்திய நிலையில் அவருக்கு எந்த லாபமும் வரவில்லை. இதனால் ஏமாற்றப்பட்டதை அறிந்த சார்லஸ் நேற்று நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
அவரது புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ரமா வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட மர்மநபர் குறித்து விசாரித்து வருகிறார். நெல்லை மாவட்டத்தில் இதுபோன்ற மோசடிகள் அதிக அளவில் நடக்கிறது. குறிப்பாக யூ-டியூப்பில் விளம்பரங்களை பார்த்து அதற்கு ரேட்டிங்கை அதிகரிக்க செய்ய வேண்டும். இதற்கு குறைந்த அளவு முன்தொகை செலுத்தினால், மாதந்தோறும் ஊதியம் போல் பணம் வந்து கொண்டிருக்கும் என்று கூறி மோசடி செய்யும் கும்பல் அதிகரித்துள்ளது.
தொடக்கத்தில் குறைந்த அளவு லாபத்தை கொடுக்கும் அந்த கும்பல், நாளடைவில் அதிக அளவு பணத்தை பறித்து கொண்டு ஏமாற்றி விடுகின்றனர். வீட்டில் இருக்கும் பெண்கள் அதிக அளவில் இதுபோன்ற மோசடியில் சிக்கும் நிலையும் இருந்து வருகிறது. மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சார்பில் ஒவ்வொரு கிராமம், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் எவ்வளவோ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இனியும் இதுபோன்ற மோசடிகளில் யாரும் சிக்கிவிட வேண்டாம் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- சப்-இன்ஸ்பெக்டர் சித்திரை செல்வனுக்கும், பணகுடி பகுதியில் வசிக்கும் ஒரு 44 வயது பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளாக பழக்கம் இருந்து வருகிறது.
- சப்-இன்ஸ்பெக்டர் சித்திரை செல்வன் மீது ஏற்கனவே ஒரு வழக்கு உள்ளது.
பணகுடி:
நெல்லை மாவட்டம் பணகுடி கோரி காலனியை சேர்ந்தவர் சித்திரை செல்வன்(வயது 36). இவர் குமரி மாவட்டம் நாகர்கோவிலில் கைரேகை பிரிவு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இவர் மீது பணகுடி போலீஸ் நிலையத்தில் நேற்று ஒரு பெண் புகார் அளித்தார். அதில் சித்திரை செல்வன் தனக்கு பணம் தராமல் ஏமாற்றியதோடு தன்னை தாக்கியதாக தெரிவித்திருந்தார். தொடர்ந்து அவர் புகார் மனு அளித்துவிட்டு வள்ளியூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தார்.
இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் வெளியான தகவல்கள் வருமாறு:-
சப்-இன்ஸ்பெக்டர் சித்திரை செல்வனுக்கும், பணகுடி பகுதியில் வசிக்கும் ஒரு 44 வயது பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளாக பழக்கம் இருந்து வருகிறது. இதனால் அந்த பெண் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். அந்த பெண்ணுடன் சித்திரை செல்வன் அடிக்கடி தனிமையில் இருந்து வந்ததாகவும், அவருக்கு ஆடம்பர செலவுக்காக பணம் கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே அவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டதால், அந்த பெண் மீண்டும் தனது கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் சித்திரை செல்வன் தன்னை ஏமாற்றி பணம் பறித்து விட்டதாகவும், அதனை திருப்பி தருமாறும் அந்த பெண் அவரிடம் அடிக்கடி கேட்டு தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த சித்திரை செல்வன், நேற்று அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி காரில் அழைத்து சென்றுள்ளார். பின்னர் அந்த பெண்ணை காட்டுப்பகுதியில் வைத்து தாக்கி, பணம் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது என அவதூறாக பேசி மீண்டும் பணகுடியில் இறக்கி விட்டுள்ளார்.
இதில் காயம் அடைந்த அந்த பெண் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து பணகுடி போலீசார், சப்-இன்ஸ்பெக்டர் சித்திரை செல்வன் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டம் 294(பி), 323 ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சப்-இன்ஸ்பெக்டர் சித்திரை செல்வன் மீது ஏற்கனவே ஒரு வழக்கு உள்ளது. திருச்சியில் விபத்தில் இறந்த அவர்களது பேட்ஜ் போலீஸ்காரர் ஒருவரின் குடும்பத்திற்கு வழங்குவதற்காக நண்பர்களிடம் பிரித்த ரூ.28 லட்சம் பணத்தை அவர் வழங்காமல் மோசடி செய்ததாக புகார் வந்தது. அதன்பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
- வருகிற 18-ந்தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெல்லை வருகிறார்.
- நிகழ்ச்சியில் மூத்த முன்னோடிகளை அழைத்து பங்கேற்க வைக்க வேண்டும்.
நெல்லை:
நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் பாளை மகராஜா நகரில் உள்ள கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத்தலைவர் கிரகாம்பெல் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பன் கலந்து கொண்டு செயற்குழு கூட்டத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கி பேசினார்.அவர் பேசியதாவது:-
அமைச்சர் உதயநிதி வருகை
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி வருகிற 18-ந்தேதி மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. இளைஞரணி மாநில செய லாளரும், விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நெல்லை வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் மூத்த முன்னோடிகளை சிறப்பு செய்யும் நிகழ்ச்சி எழுச்சியு டன் நடைபெற உள்ளது. இதில் மாவட்டத்தில் உள்ள மூத்த முன்னோடிகளை அழைத்து வந்து பங்கேற்க வைக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து நடைபெறும் இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்திலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார். அதில் அதிக அளவு இளைஞர்களை பங்கேற்க செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் ஞானதிரவி யம் எம்.பி., மாவட்ட பொரு ளாளர் ஜார்ஜ் கோசல், தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், மாநில விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் கணேஷ் குமார் ஆதித்தன், மாநில தொண்டர் அணி துணை செயலாளர் ஆவின் ஆறுமுகம், மாவட்ட துணை செயலாளர் தமயந்தி, ராதா புரம் கிழக்கு ஒன்றிய செய லாளர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, நாங்குநேரி மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.எஸ் சுடலைக்கண்ணு, அம்பை ஒன்றிய செயலாளர் பரணி சேகர், பகுதி செயலா ளர்கள் வேலன்குளம் முருகன், போர்வெல் கணேசன், இளைஞர் அணி செயலாளர் ஜான் ரவீந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- அகழாய்வு பகுதியில் 18 குழிகள் அமைக்கப்பட்டு அகழாய்வுப்பணி நடைபெற்றது.
- இரும்பு உருக்கு தொழிற்கூடம் இருந்தமைக்கான ஆதாரங்கள் அகழாய்வில் கிடைத்துள்ளன.
வள்ளியூர்:
நெல்லை மாவட்டம் ராதாபுரம் வட்டம் துலுக்கர்பட்டியில் நம்பியாற்றங்கரையில் 2-ம் கட்ட அகழாய்வுப் பணியை கடந்த ஏப்ரல் 6-ந் தேதி மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.
அகழாய்வு பணிகள்
சபாநாயகர் அப்பாவு, நிதி மற்றும் மனிதவளம் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் மணிவாசகம், தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை ஆணையர் உதயசந்திரன், இணை ஆணையர் சிவானந்தம் ஆகியோர் வழிகாட்டுதலின் படி அகழாய்வு இயக்குனர் வசந்தகுமார், துணை இயக்குனர் காளீஸ்வரன் ஆகியோர் தலைமையில் அகழாய்வுப் பணிகள் நடந்து வந்தது.
இந்த அகழாய்வு குறித்து அகழாய்வு இயக்குனர் மற்றும் துணை இயக்குனர் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது:-
18 குழிகளில் அகழாய்வு பணிகள்
அகழாய்வு பகுதியில் 18 குழிகள் அமைக்கப்பட்டு அகழாய்வுப்பணி நடைபெற்றது. இந்த அகழாய்வில் செம்பினால் ஆன புலி உருவம், மோதிரம், யானை, தந்தத்திலான பொருட்கள், இரும்பிலான ஈட்டி முனை, அம்பு முனை, குறுவாள், வளையம் மற்றும் உளி மற்றும் சுடு மண்ணிலான சில்லுகள், சிறுசக்கரம் மற்றும் சதுரங்க காய்கள் உள்ளிட்ட விளை யாட்டுப் பொ ருட்கள், தக்களி, கார்னி லியன் (சூது பவளம்), மணிகள், நீலக்கல் மணி, கண்ணாடி மணிகள், பளிங்கு கல்மணிகள் என 1,900-த்திற்கும் மேற்பட்ட தொல் பொருட்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளது.
மேலும் 4 தமிழ் எழுத்து பொறிப்பு கொண்ட பானை ஓடுகள், 1,800-க்கும் மேற்பட்ட குறியீடுகள் கொண்ட பானை ஓடுகள், வெள்ளை நிறத்தினால் அலங்கரிக்கப்பட்ட பானை ஓடுகள், கருப்பு நிற பானை ஓடுகள், ஈமத்தாழிகள் என அதிக எண்ணிக்கையில் மண்பாண்ட ஓடுகள் கிடைத்து வருகின்றன.
இந்த ஆண்டு அகழாய்வில் இரும்பு உருக்கு தொழிற்கூடம் இருந்தமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதை உறுதிபடுத்தும் விதமாக உருக்கு உலைக்கான தளம், இரும்பு தாதுப்பொருட்கள், இரும்பு கசடு, ஊதுலை குழாய் மற்றும் இரும்பு உளி, வளையம் போன்ற பொருட்கள் கிடைத்துள்ளன. நம்பியாற்றின் கரையில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் மூலம் வளமான, செழிப்பான நாகரீகம் இருந்தது அடையாளம் காணப்பட்டுள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






