என் மலர்
நீங்கள் தேடியது "Dengue prevalence"
- மழை காலத்தில் பரவக்கூடிய டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கும் விதமாக தமிழக அரசு சார்பில் சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர்கள் அடங்கிய குழுவினர் மாவட்டம் தோறும் தனித்தனியாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
- 5 பேர் கொண்ட மருத்துவர் குழு தென் மாவட்டங்களில் ஆய்வு செய்வதற்காக இன்று நெல்லைக்கு வந்துள்ளனர்.
நெல்லை:
மழை காலத்தில் பரவக்கூடிய டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கும் விதமாக தமிழக அரசு சார்பில் சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர்கள் அடங்கிய குழுவினர் மாவட்டம் தோறும் தனித்தனியாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த குழுவினர் அந்தந்த மாவட்டங்களில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி 5 பேர் கொண்ட மருத்துவர் குழு தென் மாவட்டங்களில் ஆய்வு செய்வதற்காக இன்று நெல்லைக்கு வந்துள்ளனர். இந்தக் குழுவினர் நெல்லை, தூத்துக்குடி கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு செய்ய உள்ளனர்.
இந்த குழுவில் மருத்துவர்கள் வடிவேலன், சேகர், நிர்மல்சன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழு தனித்தனியாக பிரிந்து மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்கிறது.
தென்மாவட்டங்களில் மழை காலங்களில் அதிக காய்ச்சல் ஏற்படும் என்ற எச்சரிக்கையை தொடர்ந்து இந்த குழு காய்ச்சலை கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு பகுதியில் ஆய்வு மேற் கொண்டு அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர். அதனை மையமாகக் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்படும் என நெல்லை மாவட்ட சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.






