search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் உதயநிதி பங்கேற்கும் கூட்டத்தில் அதிக அளவு இளைஞர்களை பங்கேற்க செய்ய வேண்டும்- கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் பேச்சு
    X

    செயற்குழு கூட்டத்தில் தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் பேசிய போது எடுத்த படம்.

    அமைச்சர் உதயநிதி பங்கேற்கும் கூட்டத்தில் அதிக அளவு இளைஞர்களை பங்கேற்க செய்ய வேண்டும்- கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் பேச்சு

    • வருகிற 18-ந்தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெல்லை வருகிறார்.
    • நிகழ்ச்சியில் மூத்த முன்னோடிகளை அழைத்து பங்கேற்க வைக்க வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் பாளை மகராஜா நகரில் உள்ள கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத்தலைவர் கிரகாம்பெல் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பன் கலந்து கொண்டு செயற்குழு கூட்டத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கி பேசினார்.அவர் பேசியதாவது:-

    அமைச்சர் உதயநிதி வருகை

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி வருகிற 18-ந்தேதி மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. இளைஞரணி மாநில செய லாளரும், விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நெல்லை வருகிறார்.

    இந்த நிகழ்ச்சியில் மூத்த முன்னோடிகளை சிறப்பு செய்யும் நிகழ்ச்சி எழுச்சியு டன் நடைபெற உள்ளது. இதில் மாவட்டத்தில் உள்ள மூத்த முன்னோடிகளை அழைத்து வந்து பங்கேற்க வைக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து நடைபெறும் இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்திலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார். அதில் அதிக அளவு இளைஞர்களை பங்கேற்க செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் ஞானதிரவி யம் எம்.பி., மாவட்ட பொரு ளாளர் ஜார்ஜ் கோசல், தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், மாநில விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் கணேஷ் குமார் ஆதித்தன், மாநில தொண்டர் அணி துணை செயலாளர் ஆவின் ஆறுமுகம், மாவட்ட துணை செயலாளர் தமயந்தி, ராதா புரம் கிழக்கு ஒன்றிய செய லாளர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, நாங்குநேரி மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.எஸ் சுடலைக்கண்ணு, அம்பை ஒன்றிய செயலாளர் பரணி சேகர், பகுதி செயலா ளர்கள் வேலன்குளம் முருகன், போர்வெல் கணேசன், இளைஞர் அணி செயலாளர் ஜான் ரவீந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×