என் மலர்
உள்ளூர் செய்திகள்

களக்காடு அருகே வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
- களக்காடு அருகே உள்ள நாகன்குளம் கீழத்தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் மதன்(வயது 24). இவர் நேற்று களக்காட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தார்.
- கைதான முருகேஷ் நெல்லையில் சூப்பர் மார்க்கெட் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி யின் சொந்த ஊர் களக்காடு அருகே கீழபத்தை ஆகும்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள நாகன்குளம் கீழத்தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் மதன்(வயது 24). இவர் நேற்று களக்காட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மேலபா ளையம் அருகே உள்ள வீரமாணிக்க புரத்தை சேர்ந்த முருகேஷ்(36) பொது இடத்தில் பொது மக்கள் முகம் சுழிக்கும் வகையில் ஆபாசமாகவும், அருவருக்கதக்க வகையிலும் செயல்பட்டு கொண்டி ருந்ததாக கூறப்படுகிறது.
இதைப்பார்த்த மதன் அவரை தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த முருகேஷ், அவரை கல்லை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மதன் களக்காடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முருகேசை கைது செய்தனர்.
கைதான முருகேஷ் நெல்லையில் சூப்பர் மார்க்கெட் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி யின் சொந்த ஊர் களக்காடு அருகே கீழபத்தை ஆகும்.
அவர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஊழியராக இருந்து வருகிறார். முருகேஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கீழபத்தை யில் வசித்து வருகிறார். அங்கிருந்து தான் தினமும் நெல்லை சென்று வந்துள்ளார் என்பது விசா ரணையில் தெரியவந் துள்ளது.






