search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Civilization"

    • அகழாய்வு பகுதியில் 18 குழிகள் அமைக்கப்பட்டு அகழாய்வுப்பணி நடைபெற்றது.
    • இரும்பு உருக்கு தொழிற்கூடம் இருந்தமைக்கான ஆதாரங்கள் அகழாய்வில் கிடைத்துள்ளன.

    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் வட்டம் துலுக்கர்பட்டியில் நம்பியாற்றங்கரையில் 2-ம் கட்ட அகழாய்வுப் பணியை கடந்த ஏப்ரல் 6-ந் தேதி மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.

    அகழாய்வு பணிகள்

    சபாநாயகர் அப்பாவு, நிதி மற்றும் மனிதவளம் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் மணிவாசகம், தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை ஆணையர் உதயசந்திரன், இணை ஆணையர் சிவானந்தம் ஆகியோர் வழிகாட்டுதலின் படி அகழாய்வு இயக்குனர் வசந்தகுமார், துணை இயக்குனர் காளீஸ்வரன் ஆகியோர் தலைமையில் அகழாய்வுப் பணிகள் நடந்து வந்தது.

    இந்த அகழாய்வு குறித்து அகழாய்வு இயக்குனர் மற்றும் துணை இயக்குனர் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது:-

    18 குழிகளில் அகழாய்வு பணிகள்

    அகழாய்வு பகுதியில் 18 குழிகள் அமைக்கப்பட்டு அகழாய்வுப்பணி நடைபெற்றது. இந்த அகழாய்வில் செம்பினால் ஆன புலி உருவம், மோதிரம், யானை, தந்தத்திலான பொருட்கள், இரும்பிலான ஈட்டி முனை, அம்பு முனை, குறுவாள், வளையம் மற்றும் உளி மற்றும் சுடு மண்ணிலான சில்லுகள், சிறுசக்கரம் மற்றும் சதுரங்க காய்கள் உள்ளிட்ட விளை யாட்டுப் பொ ருட்கள், தக்களி, கார்னி லியன் (சூது பவளம்), மணிகள், நீலக்கல் மணி, கண்ணாடி மணிகள், பளிங்கு கல்மணிகள் என 1,900-த்திற்கும் மேற்பட்ட தொல் பொருட்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளது.

    மேலும் 4 தமிழ் எழுத்து பொறிப்பு கொண்ட பானை ஓடுகள், 1,800-க்கும் மேற்பட்ட குறியீடுகள் கொண்ட பானை ஓடுகள், வெள்ளை நிறத்தினால் அலங்கரிக்கப்பட்ட பானை ஓடுகள், கருப்பு நிற பானை ஓடுகள், ஈமத்தாழிகள் என அதிக எண்ணிக்கையில் மண்பாண்ட ஓடுகள் கிடைத்து வருகின்றன.

    இந்த ஆண்டு அகழாய்வில் இரும்பு உருக்கு தொழிற்கூடம் இருந்தமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதை உறுதிபடுத்தும் விதமாக உருக்கு உலைக்கான தளம், இரும்பு தாதுப்பொருட்கள், இரும்பு கசடு, ஊதுலை குழாய் மற்றும் இரும்பு உளி, வளையம் போன்ற பொருட்கள் கிடைத்துள்ளன. நம்பியாற்றின் கரையில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் மூலம் வளமான, செழிப்பான நாகரீகம் இருந்தது அடையாளம் காணப்பட்டுள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நம்பியாற்று பகுதியில் வாழ்வியல் மேடு காணப்படுகிறது.
    • அகழாய்வுக்காக தமிழக அரசு ரூ.15 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

    வள்ளியூர்:

    தமிழர்களின் தொன்மை யான வாழ்வியல் நாகரீகம் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புள்ளது என்பதை உலகறிய செய்யும் வகையில் தமிழகத்தில் 7 இடங்களில் தொல்லியல் அகழாய்வு மற்றும் சங்ககால கொற்கை துறைமுகத்தின் அடையாளம் காண முன்கள புல ஆய்வு செய்யப்படும் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவை கூட்டத்தில் அறிவித்திருந்தார்.

    அதன்படி நெல்லை மாவட்டம் துலுக்கர்பட்டி அருகே கண்ணநல்லூர் கிராமம் செல்லும் சாலையில் நம்பியாற்று பகுதியில் வாழ்வியல் மேடு காணப்படுகிறது. இப்பகுதி விளாங்காடு என்று அழைக்கப்படுகிறது.

    இப்பகுதியில் அகழாய்வு செய்யும் பணியை கடந்த 2021-ம் ஆண்டு சபாநாயகர் அப்பாவு, தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    தமிழ்நாட்டில் 7இடங்களில் அகழாய்வுக்காக தமிழக அரசு ரூ.15 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. துலுக்கர்பட்டியில் நடைபெற்ற முதற்கட்ட அகழாய்வில் செவ் வண்ணம், கருப்பு சிகப்பு வண்ண மட்கல பானை ஓடுகள், பழந்தமிழர் குறியீடுகள், இரும்பு ஆபரணங்கள், கண்ணாடி அணிகலன்கள் உள்ளிட்ட ஆயிரத்து ஒன்பது அரிய தொல்லியல் பொருட்கள் கிடைத்தது.

    மேலும் இப்பகுதியில் வாழ்ந்த தமிழர்கள் வெளி நாட்டினரோடு வணிகம் செய்திருக்கலாம் என்பதற்கான சான்றுகளும் கிடைத்து உள்ளது. பின்னர் 2-ம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த ஏப்ரல் 6-ந்தேதி தொடங்கப்பட்டது. இந்த அகழாய்வில் ஈமத்தாழிகள், ஈட்டி, மோதிரம், அணிகலன்கள் உள்ளிட்ட 450 அரிய வகை தொல்லியல் பொருட்கள் கண்டெடுக்க ப்பட்டுள்ளது. இந்த பொருட்கள் தனித்தனியாக சேகரிக்கப்பட்டு பாதுகாப்பாக பத்திரப்படுத்தப்பட்டுள்ளது.

    இவைகள் அனைத்தும் டெல்லியில் உள்ள தொல்லியல் துறையின் ஆய்விற்கு அனுப்பப்பட உள்ளதாகவும், இப்பகுதி இரும்புகால வாழ்விடப்பகுதியாக கருதப்படுவதால் இன்னும் பல அரிய வகை தொல்லியல் பொருட்கள் கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் தொல்லியல் துறை இயக்குனர் வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.

    ×