என் மலர்
திருநெல்வேலி
- ஒரு குடியிருப்புக்கு மொத்த மதிப்பு தொகை ரூ.13.04 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு குடியிருப்பும் 400 சதுர அடி பரப்பளவில் கழிவறை, படுக்கையறை, சமையலறை ஆகிய வசதி யுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட உள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் பாளை சட்டமன்ற தொகுதி க்குட்பட்ட அம்பேத்கர் காலனி பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் தூய்மை பணியாளர்களுக்காக கடந்த 1996-ம் ஆண்டு கட்டப்பட்டு இருந்த 366 குடியிருப்புகள் பழுதடைந்து விட்டது.
அடிக்கல் நாட்டு விழா
இந்த காரணத்தினால் அவை சமீபத்தில் முழுவதுமாக இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த இடத்தில் புதிதாக மீண்டும் 408 வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று நடைபெற்றது.
இந்த அடிக்கல் நாட்டு விழாவில் சிறப்பு அழைப்பா ளராக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
ரூ.53.19 கோடி நிதி
இந்த குடியிருப்புக்கு ரூ.53.19 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. ஒரு குடியிருப்புக்கு மொத்த மதிப்பு தொகை ரூ.13.04 லட்சம் நிர்ண யிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு மானியமாக ரூ.1.50 லட்சம், மாநில அரசின் மானியமாக ரூ.7 லட்சமும் வழங்கப்படுகிறது. ஏற்கனவே வசித்த 365 பயனாளிகளுக்கும் தலா ரூ.1 லட்சம் பயனாளி பங்களிப்பு தொகையாக செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடியிருக்கும் 400 சதுர அடி பரப்பளவில் கழிவறை, படுக்கையறை, சமையலறை ஆகிய வசதி யுடன் கூடிய அடுக்கு மாடி குடியிருப்பு கட்டப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகளில் இருந்து வெளி யேறும் கழிவுநீர் மாநக ராட்சி மூலம் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை வசதியுடன் இணைக்கப்பட உள்ளது. இந்த பணிகளை 18 மாதங்களுக்குள் முடிக்கும் வகையில் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கார்த்திகேயன், ஞானதிரவியம் எம்.பி., பாளை தொகுதி எம்.எல்.ஏ அப்துல் வகாப், மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர். ராஜு, கவுன்சிலர்கள் பவுல்ராஜ், இந்திராணி, நிர்வாக பொறியாளர் சாந்தி, உதவி நிர்வாக பொறியாளர் மாடசாமி, நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. பொரு ளாளர் சித்திக், ஒன்றிய செய லாளர்கள் ஜோசப் பெல்சி, ராஜன், மாவட்ட கவுன்சி லர் கனகராஜ் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது சபாநாயகர் அப்பாவுவிடம், சென்னையில் நடந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சபாநாயகர் தகுதியை மீறி பேசி உள்ளதாக கூறியுள்ளாரே என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு சபாநாயகர் அப்பாவு, சட்டமன்றத்தில் விதிப்படி யும், சட்டப்படியும் மட்டுமே அவை நடவடிக்கைகள் நடந்து வருகிறது. சட்டத்திற்கு புறம்பாகவோ, பேரவை விதிகளுக்கு புறம்பாகவோ எந்த நடவடிக்கையும் சட்டமன்றத்தில் நடை பெறவில்லை. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சட்டமன்றத்திற்கு வராத காரணத்தினால் அவருக்கு இது குறித்து தெரியவில்லை என்று கூறினார்.
- 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 5 கிலோமீட்டர் தூரமும், 14 முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 10 கிலோமீட்டர் தூரமும் என போட்டிகள் நடைபெற்றது.
- இந்த போட்டியில் மாணவ-மாணவிகள், பெண்கள் ,ஆண்கள் என சுமார் 486 பேர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
நெல்லை:
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நெல்லை பிரிவு சார்பில் சைக்கிள் போட்டி இன்று நெல்லையில் நடை பெற்றது.
பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் இருந்து தொடங்கிய இந்த சைக்கிள் போட்டியை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் கிருஷ்ண சக்கரவர்த்தி மற்றும் பலர் பங்கேற்றனர்.
இந்த போட்டிகள் ஆண், பெண் என இருபாலருக்கும் தனித்தனியாக நடைபெற்றது. 14 வயதுக்கு உட்பட்ட வர்களுக்கு 5 கிலோமீட்டர் தூரமும், 14 முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 10 கிலோமீட்டர் தூரமும், 20 வயதுக்கு மேற்பட்டவ ர்களுக்கு 15 கிலோமீட்டர் தூரமும் போட்டிகள் நடைபெற்றது.
பாளை அண்ணா விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி பல்நோக்கு மருத்துவமனை, கே.டி.சி. நகர் மேம்பாலம் வழியாக திருச்செந்தூர் சாலையில் உள்ள கிருஷ்ணாபுரம் அருகே ஆட்சி மடம் வரையிலும் இந்த சைக்கிள் போட்டி நடைபெற்றது. பின்னர் வீரர்கள் அதே வழியில் திரும்பி வந்து அண்ணா விளையாட்டு அரங்கத்தை அடைந்தனர்.
இதில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்க ப்பட்டது. இந்த போட்டியில் மாணவ-மாணவிகள், பெண்கள் ஆண்கள் என சுமார் 486 பேர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இதனை யொட்டி அந்த சாலையில் மற்ற போக்குவரத்துக்கு சிறிது நேரம் தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் சைக்கிள் போட்டி நடைபெற்றது.
+3
- வெங்கடாஜலபதி கோவிலில் மூலவர் வெங்கடாஜலபதிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
- இதே போல் நெல்லை வீரராகவ பெருமாள் கோவிலில் அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், காலை சாந்திகள் நடைபெற்றது.
நெல்லை:
புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு இன்று நெல்லை மாவட்டத்தில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் அதிகாலை முதல் நடைபெற்றது.
பக்தர்கள் தரிசனம்
திருவேங்கடநாதபுரத்தில் அமைந்துள்ள தென் திருப்பதி என பக்தர்களால் அழைக்க ப்படும் வெங்கடாஜலபதி கோவிலில் மூலவர் வெங்கடாஜலபதிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இதே போல் நெல்லை வீரராகவ பெருமாள் கோவிலில் அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், காலை சாந்திகள் நடைபெற்றது. தொடர்ந்து நவகலச கும்பங்கள் வைத்து ஹோமங்கள் நடைபெற்றது. பின்னர் உற்சவா் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவரதராஜருக்கு மாபொடி, மஞ்சள்பொடி, வாசனைபொடி, பால், தயிா், பஞ்சாமிர்தம், தேன், இளநீா், சந்தணம் என பலவகை பொருள்களால் திருமஞ்சனம் நடைபெற்றது.
கருடசேவை
தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவரத ராஜருக்கு அா்ச்சனை நடைபெற்று நட்சத்திர ஆரத்தி, கும்பஆரத்தி, தீப ஆரத்தி காண்பிக்கப்பட்டு சோடச உபசரனைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் திருமஞ்சன நிகழ்வில் கலந்து கொண்டு பெருமாளை தாிசனம் செய்த னா். இரவில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெறுகின்றது.
இதேபோல் பாளை ராஜ கோபால சுவாமி கோவில், டவுன் கரியமாணிக்க பெருமாள் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு செய்தனர். டவுன் மேல மாடவீதியில் உள்ள லட்சுமி நரசிங்க பெருமாள் கோவிலில் காலை 8.30 மணிக்கு திருமஞ்சனம், 10.30 மணிக்கு திருவாராதனம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு துளசி, துளசி தீர்த்தம், மஞ்சள் பொடி, குங்குமம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது. அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில், காட்டுராமர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. தொடர்ந்து பெருமாள் கோவில்களில் இன்று இரவில் கருடசேவை நடக்கிறது.
- கூடங்குளம் அணுமின் உற்பத்தி நிலையத்திலிருந்து அறிவியல் மாதிரி வடிவம் கொண்டு வரப்பட்டு அங்கு பின்பற்றப்படும் மேம்பட்ட தொழில்நுட்பத்தை பற்றி விரிவாக விளக்கப்பட்டது.
- கண்காட்சியில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது அறிவியல் மாதிரிகளை காட்சிப்படுத்தினர்.
வள்ளியூர்:
தெற்குகள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியல் முதுகலை வேதியியல் துறை சார்பாக அறிவியல் கண்காட்சி போட்டி 'இளம் விஞ்ஞானி' என்ற தலைப்பில் நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு முதல்வர் ராஜன் தலைமை தாங்கி அறிவியல் ஆராய்ச்சிகள் மற்றும் அன்றாட வாழ்வில் அவற்றின் பயன்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். அறிவியல் கண்காட்சிக்கு கூடங்குளம் அணுமின் உற்பத்தி நிலையத்திலிருந்து அறிவியல் மாதிரி வடிவம் கொண்டு வரப்பட்டு அங்கு பின்பற்றப்படும் மேம்பட்ட தொழில்நுட்பத்தை பற்றி விரிவாக விளக்கப்பட்டது.
இக்கண்காட்சியில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது அறிவியல் மாதிரிகளை காட்சிப்படுத்தினர். சிறந்த அறிவியல் மாதிரிகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது. கல்லூரி முதல்வர் அறிவுறுத்தலின்படி முதுகலை வேதியியல் துறை பேராசிரியர்கள் லூர்து புஷ்பராஜ், கார்த்திகேயன், குளோரி புனிதா, மற்றும் முதுகலை வேதியியல் துறை மாணவ- மாணவிகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
- நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பாக வள்ளியூர் தெற்கு ஒன்றிய வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் வாக்குச்சாவடி உறுப்பினர்கள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
- இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் உறுப்பினர்களை ஆய்வு செய்து, அவர்கள் மேற்கொ ள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.
வள்ளியூர்:
நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பாக வள்ளியூர் தெற்கு ஒன்றிய வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் வாக்குச்சாவடி உறுப்பினர்கள் ஆய்வு கூட்டம் வள்ளியூர் யூனியன் சேர்மனும் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளருமான சேவியர் செல்வராஜா தலைமையில் நடைபெற்றது.
இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் உறுப்பினர்களை ஆய்வு செய்து, அவர்கள் மேற்கொ ள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.
நிகழ்ச்சியில் ராதாபுரம் தொகுதி பொறுப்பாளரும், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் சுரேஷ் மனோ கரன், கிழக்கு மாவட்ட அவைத் தலை வரும், வள்ளி யூர் வடக்கு ஒன்றிய செயலா ளருமான கிரகாம்பெல், மாநில தொண்டரணி துணை அமைப்பாளர் ஆவின் ஆறு முகம், மாநில விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் கணேஷ்குமார் ஆதித்தன், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் இளை ஞரணி ஜாண் ரபீந்தர், மகளிரணி மல்லிகா அருள், வழக்கறிஞரணி செல்வசூடாமணி, தகவல் தொழில்நுட்ப அணி பிரேம் ஆனந்த், ஒன்றிய கவுன்சிலர் கொசிஜின், மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் லெட்சுமணன், சுதாகர், சிவா, கோபி, சுரேஷ், மந்திரம், முத்துகிருஷ்ணன்,
ராதாபுரம் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் சுபாஷ், ஒன்றிய அவைத்தலைவர் வேலு, துணை செயலாளர்கள் இளங்கோவன், ரேவதி, மாவட்ட பிரதிநிதிகள் கருணாநிதி, மணிவர்ண பெருமாள், இசக்கியப்பன், ஒன்றிய பொருளாளர் தாமஸ்,
கிளை செயலாளர்கள் இளங்கோ கலைசிகாமணி, தங்கையா, தவசி செல்வன், தயானந்த மார்த்தாண்டன், உச்சிப்புளி, தர்மலிங்கம், சோமு, அந்தோணி, தன பால், வில்சன், வின்சென்ட், மனோகரன், முருகன், கனகராஜ், பால்குட்டி, சிவகுமார், ரவி, முருகன், சிவச்சந்திரன், அரிக்குமார் மற்றும் வாக்குசாவடி முகவர்கள், உறுப்பினர்கள் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 26-ந்தேதி நெல்லை வருகை தருகிறார்.
- கே.டி.சி. நகர் மாதா மாளிகையில் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
நெல்லை:
தி.மு.க. இளைஞரணி மாநாடு வருகிற டிசம்பர் மாதம் சேலத்தில் நடைபெற உள்ளது. இதையொட்டி தி.மு.க மாநில இளைஞ ரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
26-ந் தேதி நெல்லை வருகை
இந்த நிகழ்ச்சிகளில் கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல், இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளுதல், அரசின் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றல் உள்ளிட்டவற்றில் அவர் கலந்து கொள்கிறார்.
அதன்படி தென் மாவட்டங்களில் தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் அவர் சுற்றுப்பயணத்தை முடித்த நிலையில் வருகிற 26-ந்தேதி நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தருகிறார்.
அமைச்சர் ஆய்வு
இதனை ஒட்டி தேவையான முன்னேற்பாடு களை நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பா ளர் மைதீன் கான் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
அன்றைய தினம் தொடக்க நிகழ்ச்சியாக கே.டி.சி. நகர் மேம்பாலம் பகுதியில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் மேடை அரங்கு அமைக்கப்பட்டு செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது. அதனை தொடர்ந்து கே.டி.சி. நகர் மாதா மாளிகையில் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
இதை முன்னிட்டு இந்த 2 இடங்களையும் ஆய்வு செய்ய இன்று நெல்லை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும், தமிழக நிதி அமைச்சருமான தங்கம் தென்னரசு நெல்லை வருகை தந்தார். அவரை மத்திய மாவட்டம் மற்றும் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் வரவேற்றனர்.
தொடர்ந்து அவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க உள்ள மாதா மாளிகை மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் மேடைகள் அமைய உள்ள இடங்களை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், துணைமேயர் கே.ஆர். ராஜூ, தலைமைச் செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா, பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், மா வட்ட துணைச் செயலாளர் எஸ்.வி. சுரேஷ், மாநில விவசாய தொழிலாளர் அணி துணைச் செயலாளர் கணேஷ் குமார் ஆதித்தன், மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் செல்வ சூடாமணி, மா வட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மீரான் மைதீன், மாநகர இளை ஞரணி அமைப்பாளர் கவுன்சிலர் கருப்பசாமி கோட்டை யப்பன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மாயா, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு பிரிவு துணை அமைப்பா ளர்கள் செல்ல துரை, வீரபாண்டியன், ராதாபுரம் ஒன்றிய இளை ஞரணி விஜயாபதி ரகுமான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- வடிவேல்-மதிஷாவுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
- மதிஷாவை வடிவேல் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் குறித்து தகவல் எதுவும் கிடைக்க வில்லை.
களக்காடு:
ஏர்வாடி அருகே உள்ள சேசையாபுரம், வடக்குத்தெருவை சேர்ந்தவர் வடிவேல். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மதிஷா (23). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை.
இந்நிலையில் மதிஷா கடந்த 11-ந் தேதி வள்ளியூர் செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளார். அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த வடிவேல் பல்வேறு இடங்களில் தேடியும் மதிஷா குறித்து தகவல் எதுவும் கிடைக்க வில்லை. இதையடுத்து அவர் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தர்ம ராஜ் வழக்குபதிவு செய்து விசா ரணை நடத்தி மாயமான மதிஷாவை தேடி வரு கின்றனர்.
- ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியான கால்நடுதல் விழா இன்று நடைபெற்றது.
- திருக்கால் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு அலுப்பு மண்டபத்தில் நாட்டப்பட்டது.
நெல்லை:
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவில் ஒன்றாகும்.
இந்த திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியான கால்நடுதல் விழா இன்று நடைபெற்றது. விழாவிற்காக கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது தொடர்ந்து அம்பாள் சன்னதியில் அமைந்துள்ள விநாயகரிடம் சிறப்பு பிரார்த்தனை வைக்க ப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
தொடர்ந்து அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் கால் நடுதலுக்கு பயன்படுத்தப்படும் பந்தல் காலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
தொடர்ந்து மகா தீபாரதனை நடைபெற்று திருக்கால் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு அம்பாள் சன்னதி முன்பு அமைந்துள்ள அலுப்பு மண்டபத்தில் திருக்கால் நாட்டப்பட்டது.
தொடர்ந்து திருக்காலுக்கு பால், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட அபிஷேக திரவி யங்கள் கொண்டு சிறப்பு அபிசேகமும், அதனைத் தொடர்ந்து பக்தர்களால் நவதானியம் போடப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது. தொடர்ந்து திருக்காலுக்கு மகா தீபாராதனை நடத்தப்பட்டது.
அப்போது கோவில் யானை காந்திமதி பிளிறி மரியாதை செய்தது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- விவசாய நிலங்களில் மின் வேலி அமைக்கப்பட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மின் தடங்கல் ஏற்பட்டால் உடனடியாக மின் வினியோகம் வழங்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
நெல்லை:
நெல்லை மின் பகிர்மான வட்டத்தின் மின் நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் தியாகராஜநகரில் உள்ள செயற் பொறியாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் சந்திரசேகரன் கலந்துகொண்டு பொது மக்கள் அளித்த மனுக்கள் மற்றும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க நெல்லை கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம் மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.
கூட்டத்தில் மேற்பார்வை மின் பொறியாளர் சந்திர சேகரன் பேசியதாவது:-
நெல்லை கோட்டத்தில் விவசாய நிலங்களில் தொடர் கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு மின் வேலி அமைக்கப்பட்டு இருந்தால் உடனடியாக மின் இணைப்பை துண்டித்து போலீஸ் மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் அனைத்து மின் பொறியாளர்களும் விழிப்புடன் தொடர் கண்காணிப்பில் பணிபுரிந்து மின் தடங்கல் ஏற்பட்டால் உடனடியாக மின் வினியோகம் வழங்குவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இயற்கை இடர்பாடுகள் காரணமாக மின் தடங்கல் ஏற்பட்டால் பாதுகாப்பு நெறிமுறைகளை முழுமை யாக கடைபிடித்து மின் வினியோகம் வழங்க ேவண்டும்.
நெல்லை கிராமப்புற கோட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க ேவண்டும்.
பொதுமக்கள் குறைந்த மின்னழுத்தம் சம்பந்தமாக ஏதேனும் புகார் அளித்தால் உடனடியாக அந்தப் பகுதியை ஆய்வு செய்து தேவைப்படும் பட்சத்தில் புதிய மின்மாற்றி அமைப்பதற்கு மதிப்பீடு தயார் செய்து உடனடியாக பணிகளை மேற்கொண்டு சீரான மின் வினியோகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுயநிதி அடிப்படையில் விவசாய மின் இணைப்பு பெற விண்ணப்பித்திருக்கும் விண்ணப்பங்களை முறையாக ஆய்வு செய்து உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும்.
மின் நுகர்வோர்கள் கேட்கின்ற வினாக்களுக்கு உரிய பதிலை கனி வுடன் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- சாலை விஸ்தரிப்பு பணியின்போது ஏராளமான பனை மரங்கள் இடையூறாக இருந்தது.
- பனை மரத்தை மாற்று இடத்தில் நட்ட செயல் அந்த வழியாக சென்றவர்களை வியக்க செய்தது.
பணகுடி:
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே ரோஸ்மியா புரத்தில் இருந்து கேசவனேரி வரை சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இந்த சாலை ஓரங்களில் விஸ்தரிப்பு பணியின்போது இடையூறாக ஏராளமான பனை மரங்கள் இருந்தது.
இதனை பிடுங்கி அப்புறப்ப டுத்தாமல் ஒப்பந்தக்காரர்கள் ஜே.சி.பி. எந்திரம் கொண்டு பனைமரத்தை வேருடன் எடுத்து மாற்று இடத்தில் நட்டனர். ஆங்காங்கே பனை மரங்கள் அழிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் ரோடு போடுவதற்கு இடையூறுகளாக உள்ள பனை மரத்தை அழிக்காமல் மாற்று இடத்தில் பிடுங்கி நட்ட செயல் அந்த வழியாக சென்றவர்களை வியக்க செய்தது.
இந்த நிகழ்வில் கிரீன் கேர் மாவட்ட பசுமை குழு உறுப்பினர் சையது, வள்ளியூர் உதவி பொறியாளர் முத்து முருகன், ராதாபுரம் உதவி கோட்ட பொறியாளர் சேகர் மற்றும் ஏர்வாடி அறம் செய் பசுமை இயக்கம் சேக் முகமது, வள்ளியூர் பசுமை கரங்கள் சித்திரவேல், பணகுடி மூக்க மாணிக்கம், ரோஸ் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- அம்பை, வி.கே.புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
- கண்ணடியன் கால்வாய் பகுதிகளில் 8 மில்லிமீட்டர் மழை பெய்தது.
நெல்லை:
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தொடர்ந்து இன்னும் சில நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நேற்று அம்பை, வி.கே.புரம், மூலக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக வி.கே.புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த திடீர் கனமழையின் காரணமாக அங்குள்ள ஏராளமான குடியிருப்பு களுக்குள் மழைநீர் புகுந்தது. சுமார் 20-க்கும் மேற்பட்ட வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர். அதில் ஆட்கள் யாரும் இல்லாமல் இருந்த ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.
மூலக்கரைப்பட்டி, முனைஞ்சிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அங்கு அதிகபட்ச மாக 10 மில்லிமீட்டர் மழை பதிவானது. மாநகர பகுதியில் பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில், மதியத்திற்கு பிறகு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
அணை பகுதிகளை பொறுத்தவரை மணி முத்தாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 9.60 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. சேர்வலாறு, பாபநாசத்தில் 3 மில்லிமீட்டர் மழை பெய்தது. கண்ணடியன் கால்வாய் பகுதிகளில் 8 மில்லிமீட்டர் மழை பெய்தது.
மாவட்டம் முழுவதும் மதியத்திற்கு பிறகு குளிர்ந்த காற்று வீசிய நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டிய மாஞ்சோலை வனப்பகுதி யில் பலத்த மழை பெய்தது. அங்கு ஊத்து, நாலுமுக்கு, காக்காச்சி எஸ்டேட்டுகளில் பலத்த மழை கொட்டியது. ஊத்து எஸ்டேட்டில் 18 மில்லிமீட்ரும், காக்காச்சி, நாலுமுக்கில் தலா 16 மில்லிமீட்டரும் மழை பெய்தது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பகலில் வெயில் அடித்த நிலையில், மதியம் 2 மணிக்கு பிறகு குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது. மாலையில் பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது. குறிப்பாக ஆலங்குளம், நெட்டூர், குறிப்பன்குளம், புதுப்பட்டி, கரும்புளியூத்து, மாறாந்தை, மருதம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
சுமார் 1 மணி நேரத்தை கடந்தும் பெய்த கனமழையால் ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் ஒரு சில குளங்களுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு கனமழை பெய்ததால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியையொட்டி அமைந்துள்ள குற்றாலத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அங்கு சுற்றுலா பயணிகள் குளித்து வருகின்றனர்.
புறநகர் பகுதியான சிவகிரி அருகே தலையனை, கோம்பையாற்று பகுதி மற்றும் ராயகிரி, உள்ளார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று மாலை இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. அங்கு 2 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை கொட்டியது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.
- பால கிருஷ்ணனுக்கும், மாலதிக்கும் குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
- மனம் உடைந்த பாலகிருஷ்ணன் கடந்த 3-ந் தேதி விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
களக்காடு:
மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள தெய்வநாயகபேரி, மேலத் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 31). இவரது மனைவி மாலதி. இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. 1 மகளும், 1 மகனும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பால கிருஷ்ணனுக்கும், மாலதிக்கும் குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதனால் மாலதி கோபித்து கொண்டு தனது குழந்தைகளுடன் அடைமிதிப்பான்குளத்தில் உள்ள தாயார் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதனால் மனம் உடைந்த பாலகிருஷ்ணன் கடந்த 3-ந் தேதி மூலைக்கரைப்பட்டி வடக்கு பஜாரில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக கன்னியாகுமரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அதன் பின் பாலகிருஷ்ணன் மூலைக்கரை ப்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதுபற்றி மூலைக்கரைப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.






