ஏர்வாடி அருகே இளம்பெண் மாயம்

வடிவேல்-மதிஷாவுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.மதிஷாவை வடிவேல் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் குறித்து தகவல் எதுவும் கிடைக்க வில்லை.
ஏர்வாடி அருகே இளம்பெண் மாயம்
Published on

களக்காடு:

ஏர்வாடி அருகே உள்ள சேசையாபுரம், வடக்குத்தெருவை சேர்ந்தவர் வடிவேல். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மதிஷா (23). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை.

இந்நிலையில் மதிஷா கடந்த 11-ந் தேதி வள்ளியூர் செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளார். அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த வடிவேல் பல்வேறு இடங்களில் தேடியும் மதிஷா குறித்து தகவல் எதுவும் கிடைக்க வில்லை. இதையடுத்து அவர் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தர்ம ராஜ் வழக்குபதிவு செய்து விசா ரணை நடத்தி மாயமான மதிஷாவை தேடி வரு கின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com