என் மலர்
தென்காசி
- தண்ணீரோடு சேர்ந்து கற்களும் அடித்து வரப்படுவதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி குளிப்பதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
- வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது போன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில் தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்ததால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட பிரதான அருவிகள் முழுவதும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் 2 நாட்களாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் குற்றாலம் ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து சுற்றுலா பயணிகள் இன்று காலை முதல் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
இருப்பினும் மெயின் அருவியில் தொடர்ந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவதாலும் அருவியில் தண்ணீரோடு சேர்ந்து கற்களும் அடித்து வரப்படுவதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி குளிப்பதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை முதல் தென்காசியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது போன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
- பாவூர்சத்திரத்தில் நேற்று மாலையில் திடீரென கருமேகக் கூட்டங்கள் திரண்டு கனமழை கொட்டி தீர்த்தது.
- இதனால் காமராஜர் பஸ் நிலையத்தை சுற்றிலும் அமைந்துள்ள சாலைகளில் மழை நீருடன் சேர்ந்து கழிவு நீரும் பெருக்கெடுத்து ஓடியது.
தென்காசி:
பாவூர்சத்திரத்தில் நேற்று மாலையில் திடீரென கருமேகக் கூட்டங்கள் திரண்டு கனமழை கொட்டி தீர்த்தது. கனமழையினால் பாவூர்சத்திரம் காமராஜர் பஸ் நிலையத்தை சுற்றிலும் அமைந்துள்ள சாலைகளில் மழை நீருடன் சேர்ந்து கழிவு நீரும் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அவ்வழியே சென்ற கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் கழிவுநீர் கலந்து ஓடிய சாலையினை கடக்க பெரிதும் சிரமம் அடைந்தனர். மேலும் கழிவு நீரால் துர்நாற்றம் வீசியதால் வாகன ஓட்டிகளும் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகினர். நான்கு வழி சாலை பணிகளுக்காக குடிநீர் பைப்புகள் செல்லும் பகுதிகள் தோண்டப்பட்டு சீரமைக்கப்பட்டு வரும் நிலையில் மழை நீர், சாக்கடை செல்ல இடமில்லாததால் இரண்டும் கலந்து சாலைகள் முழுவதும் பெருக்கெடுத்து ஓடியது.சாலைகளில் தேங்கிய மழை நீரில் வாகனங்களும் தத்தளித்து சென்றன.
- வெங்காடம்பட்டி ஊராட்சியில் உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
- இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பொருள் செல்வி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கடையம்:
கடையம் யூனியன் வெங்காடம்பட்டி ஊராட்சியில் உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சாருகலா ரவி தலைமை தாங்கினார். மாவட்ட உதவி இயக்குனர் தணிக்கை ருக்மணி, வட்டார வளர்ச்சி அலுவலர் வட்டார ஊராட்சி திருமலை முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி கண்ணன் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சித்ரா பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பொருள் செல்வி, அம்பிகா , சரஸ்வதி, விஜயா, ரேகா, பற்றாளர் அசோக், ஊராட்சி செயலர் பாரத், வேளாண் துறை அதிகாரி, பொறியியல் துறை உதவி பொறியாளர், கால்நடை மருத்துவர் , வெங்காடம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- பேரணியை தென்காசி ஆர்.டி.ஓ. லாவண்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- இதில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் வாக்களிப்பதின் முக்கியத்துவம் பற்றிய கோஷங்களை எழுப்பினர்.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்ட தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நல்லூர் சி.எஸ்.ஐ. ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியின் மாணவ, மாணவிகள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் ஜேசு ஜெகன் தலைமையில் தென்காசி ஆர்.டி.ஓ. லாவண்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார். வருவாய் தாசில்தார் கிருஷ்ணவேல், தேர்தல் தனி துணை தாசில்தார் மாசானமூர்த்தி, தேர்தல் வருவாய் உதவியாளர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். பேரணி ஆலங்குளம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி தாசில்தார் அலுவலகத்தில் முடிவுற்றது. இதில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் வாக்களிப்பதின் முக்கியத்துவம் பற்றிய கோஷங்களை எழுப்பினர். இப்பேரணியை கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவர்கள் ஜோகன்னா, ஜெய டேவிசன் இம்மானு வேல், ஜெஸிக்காள் ஆகியோர் செய்திருந்தனர்.
- சாம்பவர்வடகரை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
- பேரணியில் மாணவர்கள் துண்டு பிரசுரங்கள் மூலம் பொதுமக்களிடம் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
சாம்பவர்வடகரை:
தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் பிரபாவதி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் இளையோர் செஞ்சிலுவை சங்க பொறுப்பாசிரியர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். பேரணியில் மாணவர்கள் துண்டு பிரசுரங்கள் மூலம் பொதுமக்களிடம் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் திரளான அளவில் கலந்து கொண்டனர். விழாவின் முடிவில் செஞ்சிலுவை சங்க மாணவர்களுக்கு சீருடை தொகுப்புகள் வழங்கப்பட்டது.
- மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி கடையநல்லூரில் உள்ள லயன்ஸ் மகாத்மா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது.
- மூத்தோர் பிரிவில் நவீனா ஒற்றை கம்பு வீச்சில் 2-ம் இடமும், ஜெயலட்சுமி கம்பு சண்டையில் 3-ம் இடமும் பெற்றனர்.
சங்கரன்கோவில்:
தமிழக அரசு சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி கடையநல்லூரில் உள்ள லயன்ஸ் மகாத்மா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. இதில் திருவேங்கடம் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
ஆண்கள் மிக மூத்தோர் பிரிவில் பிரவீன் ஒற்றைக்கம்பு வீச்சில் முதலிடமும், அசோக் பாண்டியன் கம்பு சண்டையில் 2-ம் இடமும், சந்தோஷ், கிஷோர்சூர்யா, கம்பு சண்டையில் 3-ம் இடமும், இளையோர் பிரிவில் அஜய் கம்பு சண்டையில் 3-ம் இடம் பெற்றனர். பெண்கள் இளையோர் பிரிவில் ரக்சனா, கம்பு சண்டையில் 2-ம் இடமும், சுபயாழினி, தாருண்யா கம்பு சண்டையில் 3-ம் இடமும், மூத்தோர் பிரிவில் நவீனா ஒற்றை கம்பு வீச்சில் 2-ம் இடமும், ஜெயலட்சுமி கம்பு சண்டையில் 3-ம் இடமும் பெற்றனர். அபிநயா இரட்டை கம்பு வீச்சில் 3-ம் இடமும், மிக மூத்தோர் பிரிவில் அனுஸ்ரீ கம்பு சண்டையில் 2-ம் இடமும் மலர்தர்ஷினி, பிரியதர்ஷினி, கம்பு சண்டையில் 3-ம் இடமும் தனுஸ்ரீ இரட்டைக் கம்பு வீச்சில் 3-ம் இடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர், வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகியாகிய பொன்னழகன் மற்றும் பயிற்சி அளித்த சிலம்ப மாஸ்டர், ஆசிரியர் - ஆசிரியைகள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் பாராட்டினர்.
- ஆடுகளின் தரத்தை பொருத்து ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.
- கனமழையின் காரணமாக இந்தாண்டு சற்று கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.
தென்காசி:
தீபாவளி பண்டிகை வருகிற 12-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அசைவ பிரியர்கள் ஆடு, கோழி, மீன் என அசைவ உணவுகளை விரும்பி உண்பர்.
இதனால் இறைச்சி விற்பனை செய்யும் வியாபாரிகள் மற்றும் கடைக்காரர்கள் தங்களுக்கு தேவையான ஆடுகளை இப்போதே வாங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள சந்தை வழக்கம் போல் இன்று கூடியது. இதில் பாவூர்சத்திரம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள் ஏராளமான ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.
அவற்றை இறைச்சி கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர். இதனால் சந்தையில் கூட்டம் அலைமோதியது.
ஆடுகளின் தரத்தை பொருத்து ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. கனமழையின் காரணமாக இந்தாண்டு சற்று கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.
இருப்பினும் ரூபாய் ஒரு கோடி வரையில் ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றது. ஆட்டுச்சந்தையின் அருகே மாட்டு சந்தையும் இயங்கி வரும் நிலையில் கனமழையின் காரணமாக மழைநீர் மாட்டு சந்தை முழுவதும் தேங்கியதால் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்த உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.
மழைநீர் தேங்கிய பகுதிகளில் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
- குற்றாலம் மெயின் அருவியில் அதிக அளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவி நீரில் மண் மற்றும் கற்கள் அடித்து வரப்பட்டது.
- உரிய நேரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அருவியில் குளிக்க தடை விதித்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் ஆகிய 3 அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர்வரத்து அதிக அளவில் காணப்படுவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி போலீசாரால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றாலம் மெயின் அருவியில் அதிக அளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவி நீரில் மண் மற்றும் கற்கள் அடித்து வரப்பட்டது. அருவி பகுதியில் அமைந்துள்ள இரும்பினால் ஆன காவல் கண்காணிப்பு மையம் தூக்கி வீசப்பட்டு பாதுகாப்பு கம்பிகள் சேதம் அடைந்து காணப்படுகிறது.
உரிய நேரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அருவியில் குளிக்க தடை விதித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் அமைந்துள்ள நீர் நிலைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் அவை ஒவ்வொன்றாக நிரம்பும் தருவாயை எட்டியுள்ளன.
- முகாமில் தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
- முகாமில் கலந்து கொண்ட குழந்தைகளை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் வட்டார வளமையத்தின் சார்பில் 6 முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.
மேலும், முகாமில் தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளுக்கு நடைபயிற்சி உபகரணங்கள் (வாக்கர்), தேசிய அடையாள அட்டை போன்ற நலத் திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகள் குறித்து பேசினார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் முத்துசெல்வி வரவேற்றார். ஆசிரியர் பயிற்றுநர் ஆனந்தராஜ் பாக்கியம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவலர் ஜெயப்பிரகாஷ் நோக்க உரை ஆற்றினார். கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தெய்வபிரியா வாழ்த்தி பேசினார். முகாமில் மனநல மருத்துவர் தேவிபிரபா கல்யாணி, காது மூக்கு தொண்டை மருத்துவர் ஜெயலட்சுமி, கண் மருத்துவர் முகமது அப்துல்லா, எலும்பு முறிவு மருத்துவர் விஸ்வநாத் பிரதாப்சிங் ஆகிய மருத்துவர்கள் கலந்து கொண்டு குழந்தைகளை பரிசோதனை செய்தனர்.
தகுதியான குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டை மற்றும் வாக்கர் போன்ற உபகரணங்கள் உடனடியாக வழங்கப்பட்டது. மேலும், காது கேட்கும் கருவி, ஸ்மார்ட் கார்ட், ரெயில் பாஸ், பஸ் பாஸ், மாதாந்திர உதவி தொகை, பெற்றோர்களுக்கு தையல் எந்திரம், வீல் சேர், கேலிபர், ட்ரை சைக்கிள் போன்ற உபகரணங்கள் வழங்குவதற்கு தகுதியான குழந்தைகள் மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் தி.மு.க. நகர செயலாளர் பிரகாஷ், இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் கார்த்திக், மாணவரணி மாவட்ட துணை அமைப்பாளர் வீரமணி, தகவல் தொழில்நுட்ப அணி ஜெயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சிறப்பாசிரியர் சிவகுமார் நன்றி கூறினார்.
- இந்த வருடம் 175 பேருக்கு கடனுதவி வழங்கிட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- இத்திட்டத்தில் 25 சதவீத மானிய தொகையுடன் 3 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படும்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ள தாவது:-
தென்காசி மாவட்ட தொழில் மையத்தின் மூலம் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கடந்த வருடம் 75 பேருக்கு மட்டுமே மானியத்துடன் கூடிய கடனுதவி என்ப தனை இந்த வருடம் 175 பேருக்கு கடனுதவி வழங்கிட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் திட்ட மதிப்பீடு ரூ.15 லட்சம் வரையிலான வியாபாரம் சார்ந்த தொழில்கள் புதியதாக தொடங்க 25 சதவீதம் தமிழக அரசு மானியத்துடன் வங்கிக் கடன் பெறலாம். அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம் மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தில் விண்ணப்பிக்க 8-ம் வகுப்பு தேர்ச்சியடைந்திருக்க வேண்டும். பொதுப்பிரி வினர் 45 வயது வரையிலும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 55 வயது வரையிலும் விண்ணப்பி க்கலாம்.
மேலும் முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.5 கோடி வரையிலான புதிய உற்பத்தி மற்றும் சேவை தொழில்களை திட்டங்களை 25 சதவீத மானியத்துடன் வங்கி கடன் பெற்று தொழில் தொடங்க ஏதுவாக புதிய தொழில் முனைவோர் மற்றும் நிறுவன மேம்பாட்டு திட்டமும் தமிழக அரசால் மாவட்ட தொழில் மையம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்தில் உற்பத்தி மற்றும் சேவை தொடர்பான தொழில்கள் தொடங்க விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் பயன் பெற குறைந்த பட்சம் பிளஸ்-2 தேர்ச்சி, பட்டயபடிப்பு அல்லது தொழிற் கல்வி (ஐ.டி.ஐ) ஆகிய ஒன்றில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இத்திட்டத்தில் 25 சதவீத மானிய தொகையுடன் 3 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படும்.இந்த 2 திட்டங்களில் விண்ணப்பிக்க தகுதியுடைய தொழில் முனைவோர்கள் www.msmeonline.tn.gov.in/uyegp மற்றும் www.msmeonline.tn.gov.in/ needs என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
வியாபாரம் செய்பவர்க ளுக்கு அரிய வாய்ப்பாக நாளை (வியாழக்கிழமை) மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் இலவசமாக கடன் விண்ணப்பங்கள் பதிவு செய்து அன்றைய தினமே நேர்காணலும் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. ஒருநாள் சிறப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள தகுதியான நபர்கள் தங்களது ஆதார் அட்டை, ரேசன் அட்டை, மாற்றுச்சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், விலைப்புள்ளி ஆகியவற்றை 2 நகல்களும் மற்றும் அசலினை சரிபார்ப்பதற்காக எடுத்து வர வேண்டும். மாவட்ட தொழில் மையத்தில் செயல் படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பான விபரங்களுக்கு 8778074528 மற்றும் 9790444577 என்ற செல்போன் எண்களிலோ அல்லது பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், 5/5(2), 5/5(3) திருமலைக்கோவில் ரோடு, குத்துக்கல்வலசை, தென்காசி -627803 என்ற முகவரியிலோ நேரில் தொடர்பு கொள்ளலாம்.
புதிதாக தொழில் தொடங்க விரும்பும் தொழில் முனைவோர் இந்த திட்டங்களில் விண்ணப்பித்து மானியத்துடன் வங்கிக் கடன் பெற்று புதிய தாக தொழில் தொடங்கி தங்க ளின் வாழ்வாதாரத்தை பெருக்கிக்கொள்ள இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- போட்டியில் 300-க்கும் மேற்பட்ட வீரர்- வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
- பொதிகை சாம்பியன் கோப்பை வென்ற வீரருக்கு ரூ. 5 ஆயிரம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்ட பொதிகை சதுரங்க வளர்ச்சி கழகம் சார்பாக பொதிகை சதுரங்க கோப்பை மாநில சதுரங்க போட்டி தென்காசி எம்.கே.வி.கே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
நெல்லை வீரர் முதலிடம்
போட்டியில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட வீரர்- வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டிகள் பொது பிரிவு மற்றும் 9, 11, 13, 17 ஆகிய வயது பிரிவுகளில் தனித்தனியாக 6 சுற்றுகள் நடைபெற்றது.
போட்டியை எம்.கே.வி.கே. பள்ளி தாளாளர் பாலமுருகன் தொடங்கி வைத்தார். நாகர்கோவில் ஜீவக்குமார் தலைமையில் தேனி சையது மைதீன், மேனகா, சதீஷ்குமார், ராஜாகாந்தன், வைதேகி, தமிழ்ச்செல்வி ஆகியோர் நடுவர் குழுவாக செயல்பட்டனர். நெல்லை மாவட்ட வீரர் ஸ்கேனி முதலிடம் பெற்று பொதிகை கோப்பை சாம்பியன் பரிசை வென்றார். தென்காசி மாவட்ட வீரர்கள் சபின், விஷால், ரித்திக் ரக்சன், ஷாம் ஜெப்ரி, மதுரை மாவட்ட வீரர் பாலன் வைரவன் ஆகியோர் முதல் 5 இடங்களை பெற்றனர்.
பொதிகை சாம்பியன் கோப்பை வென்ற வீரருக்கு ரூ. 5 ஆயிரம் ரொக்க பரிசுடன் சாம்பியன் கோப்பையும் வழங்கப்பட்டது. மாண வர்கள் பிரிவில் பிரித்வி, ஹரிஷ் லிங்கம், அஸ்வத், முகமது அசில், மாணவிகள் பிரிவில் பிரதிக்ஷா, ராஜ லட்சுமி, யாமினா, தார ணிகாஸ்ரீ ஆகியோர் அவ ர்கள் வயது பிரிவில் முத லிடம் பெற்றனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு தட்சண மாற நாடார் சங்க தலை வரும், மாவட்ட சதுரங்க கழக தலைவருமான ஆர்.கே. காளி தாசன் பரிசுகள் வழங்கினார்.
கலந்து கொண்டவர்கள்
விழாவில் பாவூர்சத்திரம் காமராஜர் காய்கறி மார்க்கெட் சங்க செயலாளர் அழகேசன், பாவூர்சத்திரம் வணிகர்கள் சங்க தலைவர் பால சுப்பிரமணியன், குல சேகரபட்டி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மணி வண்ணன், தென்காசி மாவட்ட மூத்த சதுரங்க வீரர் பாலகிருஷ்ணன், நெல்லை நகர சதுரங்க கழக செய லாளர் கருணாகரன், சதுரங்க கழக ஆர்வலர்கள் கமலக்கண்ணன், அருணா ச்சலம் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை சதுரங்க கழக இயக்குனர் எஸ்.கண்ணன் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.
- கூட்டத்தில் கண்ணன், முருகன் உள்பட 28 நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- நகரில் பல்வேறு பகுதிகளில் இரவு நேரத்தில் கொள்ளை சம்பவம் நடைபெற்று வருகிறது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலை மையில் நடந்தது.
நகர் மன்ற துணைத் தலைவர் ராசையா, ஆணை யாளர் சுகந்தி, பொறியாளர் முகைதீன் அப்துல் காதர், மே லாளர் சண்முகவேலு, சுகாதார அலுவலர் பிச்சை யா பாஸ்கர், உதவி பொறி யாளர் கண்ணன், சுகாதார ஆய்வாளர் சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் கண்ணன், முருகன், முகைதீன் கனி, அ.தி.மு.க. உறுப்பினர் பூங்கோதை கருப்பையா தாஸ், எஸ்.டி.பி.ஐ. உறுப்பினர் யாசர்கான் உட்பட 28 உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது எஸ்.டி.பி.ஐ. உறுப்பினர் யாசர் கான் கூறுகையில், நகரில் பல்வேறு பகுதிகளில் இரவு நேரத்தில் பூட்டிக் கிடக்கும் வீடுகளில் தொடர்ந்து பூட்டை உடைத்து கொள்ளை சம்பவம் நடைபெற்று வருகிறது.
இதனை தடுக்கும் விதத்தில் நகரில் உள்ள முக்கிய வீதியான மணிக் கூண்டு, பஸ் நிலையம், மேலக்கடைய நல்லூர் பூங்கா, மாவடிக்கால், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் நகராட்சி சார்பில் சி.சி.டி.வி. காமிராக் களை பொருத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
இதற்கு பதில் அளித்த நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் காவல் துறை, நகராட்சி அதிகாரி களின் ஆலோசனைகளை பெற்று நகரின் முக்கிய பகுதிகளில் சி.சி.டி.வி. காமி ராக்கள் பொருத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார்.
அதன் பின்னர் நகராட்சி பகுதிகளில் அதிக அளவு தெருநாய்கள் சுற்றி திரிவ தால் அதனை கட்டுப் படுத்துகின்ற விதத்தில் நகரில் ரூ.19 லட்சம் மதிப் பீட்டில் தெரு நாய்களுக்கு கருத்தடை மையம் கட்டுவதற்கான கட்டுமான பணிகள் உட்பட 50 தீர்மானங்களும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.






