என் மலர்
தென்காசி
- ராஜா எம்.எல்.ஏ. ரேசன் கடையை திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார்.
- நிகழ்ச்சியில் தங்கப்பாண்டியன், ஆசிரியர் சாமியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சங்கரன்கோவில்:
மேலநீலிதநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வடக்கு பனவடலி கிராமத்தில் பகுதி நேர ரேசன் கடை திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பெரியதுரை தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் முத்துலட்சுமி ஏசுதாஸ், கூட்டுறவு சங்க தனி அலுவலர் செல்வகணேஷ் மற்றும் சுரேஷ் பனவடலிசத்திரம் கூட்டுறவு சங்க செயலாளர் செந்தூர்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பகுதிநேர ரேசன் கடையை திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தங்கப்பாண்டியன், ஆசிரியர் சாமியா, ராசா, வெளியப்பன், கருப்பசாமி, ஜலால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- பூவனூர் கிராமத்தின் பிரதான சாலையானது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது.
- பள்ளி செல்லும் மாணவ- மாணவிகள் தண்ணீருக்குள் தவறி விழுந்து விடுகின்றனர்.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி ஊராட்சி பூவனூர் கிராமத்தின் பிரதான சாலையானது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது.
தற்போது குண்டும் குழியுமாக மிகவும் பழுதானதால் கனமழையின் காரணமாக பள்ளங்கள் முழுவதும் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. எனவே பூவனூர் கிராமத்திற்கு யார் வந்தாலும், கிராமத்தில் இருந்து வெளியே யார் சென்றாலும் குளம் போல் தேங்கிய மழை நீரின் வழியே செல்ல வேண்டி உள்ளது என அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ- மாணவிகள் சைக்கிளில் இருந்து தண்ணீருக்குள் தவறி விழுந்து விடுகின்றனர்.
இந்நிலையில் தேங்கிய தண்ணீரில் பொதுமக்கள் நாற்றுநடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்களின் உடை மற்றும் பாட புத்தகங்கள் அனைத்தும் தண்ணீரில் நனைந்து விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட திப்பணம்பட்டி ஊராட்சி நிர்வாகத்திடம் புதிய சாலை அமைக்கப்படுமா என கேட்டதற்கு ஏற்கனவே 2 முறை தீர்மானம் வைத்து அனுப்பி உள்ளோம்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.
- ராம கிருஷ்ணன் தனது காரில் கே.டி.சி. நகர் பகுதியில் வந்து கொண்டிருந்தார்.
- எதிர்பாராத விதமாக 2 கார்களும் திடீரென நேருக்கு நேர் மோதியது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஐந்தாங்கட்டளை கிராமத்தை சேர்ந்த ராம கிருஷ்ணன் என்பவர் தனது காரில் பாவூர்சத்திரம் அருகே உள்ள கே.டி.சி. நகர் பகுதியில் வந்து கொண்டி ருந்தார்.
அப்போது நெல்லையை சேர்ந்த ஒருவர் தென்காசி யில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டர் ஒருவரை இறக்கி விட்டு விட்டு மீண்டும் நெல்லை நோக்கி திரும்பி வந்து கொண்டி ருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக 2 கார்களும் திடீரென நேருக்கு நேர் மோதியது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் காருக்குள் இருந்தவர்களை மீட்க சென்றனர் .
அப்போது 2 கார்களிலும் டிரைவர்கள் மட்டும் இருந்தனர். மேலும், கார்க ளில் உள்ள ஏர்பேக் விரிவடைந்து செயல்பட்டதால் எவ்வித காயங்களும் இன்றி 2 டிரைவர்களும் அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பினர்.
இருப்பினும் 2 கார்களி லும் முன் பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த பாவூர்சத்திரம் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கார்கள் நேருக்கு நேர் மோதிய சி.சி.டி.வி. காட்சியும் வெளியாகி உள்ளது.
- தென்மலை காலனி வரை புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கு பூமி நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட துணைச்செயலாளர் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகிரி:
சிவகிரி அருகே தென்மலையில் முதல்-அமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.43.98 லட்சம் மதிப்பீட்டில் ஏ.சுப்ரமணியாபுரம் முதல் தென்மலை காலனி வரை புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை மற்றும் திட்ட தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வாசு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையாபாண்டியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட துணைச்செயலாளர் மனோகரன், தென்மலை ஊராட்சி மன்ற தலைவர் மீனலதா முத்தரசு பாண்டியன், ஒன்றிய துணைச்செயலாளர் குமார், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தேவராணி, ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ், கிளை செயலாளர்கள் குருசாமி, ராஜகோபால், கிரகதுரை, குருசாமி, கருப்பையா, உதவி பொறியாளர் மார்கோனி, அரசு ஒப்பந்ததாரர் கதிர், மல்லீஸ்வரன், உள்ளார் மணிகண்டன், விக்கி மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- ரஹ்மானியாபுரம் மேற்கு பகுதி தெருக்களில் கண்காணிப்பு காமிராக்களைப் பொருத்தினர்.
- புளியங்குடி டி.எஸ்.பி. வெங்கடேசன் ரிப்பன் வெட்டி கண்காணிப்பு கேமராக்களை திறந்து வைத்தார்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் ரஹ்மானியபுரம் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக இரவு நேரத்தில் பூட்டிக் கிடக்கும் வீடுகளை குறிவைத்து முகமூடிக் கொள்ளையர்களால் தொடர் திருட்டு நடைபெற்றது. இந்த குற்றசம்பங்களை கட்டுப்படுத்தவும், நகரின் முக்கிய பகுதிகளில் காமிராக்களை பொருத்தவும், கடையநல்லூர் காவல்துறை தீவிர முயற்சி மேற்கொண்டது.
இந்நிலையில் ரஹ்மானியாபுரம் மேற்குப் பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் ஒன்றிணைந்து தக்வா ஐக்கிய கூட்டமைப்பு என்ற அமைப்பை ஏற்படுத்தி அந்த அமைப்பின் சார்பில் பொதுமக்களின் உதவியுடன் ரஹ்மானியாபுரம் மேற்கு பகுதியில் பல்வேறு தெருக்களில் 12 இடங்களில் கண்காணிப்பு காமிராக்களைப் பொருத்தினர்.
கண்காணிப்பு காமிராக்கள் பயன்பாட்டிற்கான திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கூட்டமைப்பின் தலைவர் முகமது அலி தலைமை தாங்கினார், துணைத் தலைவர் யூசுப், செயலாளர் சதக்கத்துல்லா, துணைச் செயலாளர் செய்யது அலி, பொருளாளளர் செய்யது முஹம்மது, ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு விருந்தினராக புளியங்குடி டி.எஸ்.பி. வெங்கடேசன் ரிப்பன் வெட்டி கண்காணிப்பு கேமராக்களை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்- இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன், நகர மன்ற உறுப்பினர்கள் முகைதீன் கனி, ஹைதர் அலி, யாஸர் கான் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் அப்துல் மஜீத், மைதீன்அப்துல் மஜீத், திவான் மைதீன், நத்தகர் பாதுஷா மற்றும் போலீசார், பொதுமக்கள் ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர்.
- வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியதால் சுற்றுலா பயணிகள் குளிக்க பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்பட்டிருந்தது.
- வெள்ள பெருக்கு குறைந்ததால் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அங்கும் அனுமதிக்கப்பட்டனர்.
தென்காசி:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
தென்காசி மாவட்டத்திலும் கடந்த 4 நாட்களாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக பழைய குற்றாலம், ஐந்தருவி, மெயின் அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியதால் சுற்றுலா பயணிகள் குளிக்க பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று காலையில் ஐந்தருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் மெயின் அருவிலும் வெள்ள பெருக்கு குறைந்ததால் நேற்று மாலை முதல் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அங்கும் அனுமதிக்கப்பட்டனர்.
தென்காசி மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததையடுத்து தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிப்பதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் அருவிகளில் குளிப்பதற்கு மிகவும் குறைந்த அளவு சுற்றுலா பயணிகளே ஆர்வம் காட்டினர்.
- பாட்டாக்குறிச்சி கிராமத்தில் கலெக்டர் ரவிச்சந்திரன் விளையாட்டு வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
- நிகழ்ச்சியில் தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தென்காசி:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் தென்காசி மாவட்டம் பாட்டாக்குறிச்சி கிராமத்தில் ரூ15 கோடி மதிப்பீட்டில் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், தென்காசி எம்.எல்.ஏ. எஸ். பழனிநாடார் முன்னிலையில் மாவட்ட விளையாட்டு வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தமிழ்செல்வி,மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் உதய கிருஷ்ணன், தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயரத்தின ராஜன், முன்னாள் மாவட்ட விளையாட்டு அலுவலர் வினு, உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராம சுப்பிரமணியன் மற்றும் பாட்டாக்குறிச்சி கிராம ஊரா ட்சி தலைவர் ஆகி யோர் கலந்து கொண்டனர்.
- ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் சிறு, குறு விவசாயிகளுக்கு சுழற்கலப்பையை வழங்கினார்.
- நிகழ்ச்சியில் ஆலங்குளம்,ஊத்துமலை பகுதி விவசாயிகள் கலந்து கொண்டனர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் வேளாண்மை எந்திர மயமாக்கும் துணை இயக்க திட்டத்தின் கீழ் ஆலங்குளம் மற்றும் ஊத்துமலை பகுதியில் உள்ள 13 விவசாயிகளுக்கு சுழற்கலப்பை வழங்கும் விழா நடந்தது.
வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) ஊமைத்துரை தலைமை தாங்கினார். தேசிய உணவு பாதுகாப்பு இயக்க திட்ட ஆலோசகர் வெங்கட சுப்பிரமணியன், வேளாண்மை அலுவலர் சண்முகப்பிரியா, வேளாண்மை விரிவாக்க அலுவலர்கள் கணேசன், செந்தில்குமார், புஷ்பமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை உதவி இயக்குநர் அறிவழகன் வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் கலந்து கொண்டு ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்து 507 மதிப்புள்ள 13 சுழற்கலப்பையை 9 சிறு, குறு விவசாயிகளுக்கு 42 ஆயிரம் மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 4 சுழற்கலப்பை 34 ஆயிரம் மானியத்திலும் வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் ஆலங்குளம் மற்றும் ஊத்துமலை பகுதியில் இருந்து விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
- குழந்தைகளுக்கு குடிநீரை காய்ச்சி வழங்குவதால் காய்ச்சல் வராமல் தடுக்க முடியும்.
- காய்ச்சல் இருந்தால் ஆரம்பத்திலேயே சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.
சுரண்டை:
சுரண்டை நகராட்சியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நகராட்சி அலுவலர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. பொறியாளர் முகைதீன் தலைமை தாங்கினார்.
கவுன்சிலர் வைகை கணேசன்,வேல் முத்து, நகராட்சி மேலாளர் வெங்கட சுப்பிர மணியன், தலைமை கணக்காளர் முருகன், வருவாய் ஆய்வாளர் வினோத்குமார்,சுகாதார ஆய்வாளர் பாலசுப்ர மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மருத்துவ முகாமை தொடங்கி வைத்து சுரண்டை நகராட்சி சேர்மன் பேசியதாவது:-
தற்போது மழைக்காலம் தொடங்கியதால் தனது வீடு மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காதவாறு பொது மக்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கு குடிநீரை காய்ச்சி வழங்க வேண்டும்.அவ்வாறு வழங்குவதால் காய்ச்சல் வராமல் தடுக்க முடியும்.தங்கள் வீட்டில் உள்ள சின்டெக்ஸ், தண்ணீர் தொட்டி,பிரிட்ஜ் போன்றவற்றை ஆய்வு செய்ய வரும் நகராட்சி பணியாளர்களுக்கு வீட்டில் உள்ளவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.நிலவேம்பு கசாயத்தை காய்ச்சி குடிக்க வேண்டும். காய்ச்சல் இருந்தால் ஆரம்பத்திலேயே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினர்.
தொடர்ந்து சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அருள்ஜோதி நகராட்சி பணியாளர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டார்.முடிவில் நகராட்சி பணியாளர் சங்கீதா நன்றி கூறினார்.
- காலை 10 மணி முதல் மாலை 5 வரை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
- புதிய வாக்காளர்கள் படிவம் 6-யை பெற்று தங்களை வாக்காளராக பதிவு செய்து கொள்ளலாம்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி சிறப்பு சுருக்க திருத்தம் 2024- ன் படி தென்காசி மாவட்டத்தில் 1.1.2024-ந் தேதிக்குள் 18 வயது பூர்த்தியடைந்த அதாவது 31.12.2005 அல்லது அதற்கு முன் பிறந்தவர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி திருத்தம், முகவரி மாற்றம் போன்ற சேவைகளை பெறும் வகையில் வரும் நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிறுக்கிழமை) மற்றும் வருகிற 18, 19-ந் தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காலை 10 மணி முதல் மாலை 5 வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதில் 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்கள் தற்போது படிவம் 6-யை பெற்று தங்களை வாக்காளராக பதிவு செய்து கொள்ளலாம். இறப்பு வாக்காளர்கள் சார்பில் உறவினர் எவரேனும் இறப்பு சான்று நகலுடன் படிவம் 7-யை பூர்த்தி செய்து பெயரை நீக்கம் செய்யலாம். ஒரு சட்டமன்ற தொகுதிக்கு உள்ளேயோ அல்லது தொகுதிக்கு வெளியிலோ புலம் பெயர்ந்த வாக்காளர்கள் படிவம் 8-யை பூர்த்தி செய்து வழங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறது. அனைத்து வாக்குச்சாவடி அமைவிடத்திற்கு சென்று இந்த வாக்காளர்களும் தங்களது சேவைகளைப் பெற்று பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 2 வாலிபர்கள் தங்களது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 2 வாலிபர்களையும் கைது செய்தனர்.
செங்கோட்டை:
செங்கோட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணா தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது வடக்கு கதிரவன் காலனி பகுதியில் 2 வாலிபர்கள் தங்களது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு போலீசார் சென்று விசாரித்தனர்.
அப்போது அந்த காலனியில் வசித்து வரும் அரவிந்த்(வயது 26), அருண்குமார்(20) ஆகியோர் வீடுகளில் சோதனை செய்தபோது கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 2 வாலிபர்களையும் கைது செய்தனர்.
- சிறப்பு முகாம்கள் இம்மாதம் 4,5, 18,19 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நடைபெற உள்ளது.
- முகாம்களில் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை கண்டறிந்து பட்டியலில் இணைப்பதில் ஆர்வம் காட்டிட வேண்டும்.
தென்காசி:
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெய பாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் கடந்த மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப் பட்டது. இதைத்தொடர்ந்து வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், பெயர் பிழை திருத்தம்,முகவரி மாற்றம் போன்ற பணிகளை மேற்கொள்வதற் காக இம்மாதம் 4,5,18,19 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நடைபெற உள்ளது. எனவே தென்காசி தெற்கு மாவட்ட பகுதிக்குட் பட்ட தென்காசி, ஆலங்குளம், கடையநல் லூர் சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறும் இம் முகாம்களில் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், கிளை செயலாளர்கள், பாக முகவர்கள், பாக பொறுப் பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு, பெயர் நீக்கம், பிழை திருத்தம், முகவரி மாற்றம் போன்றவற்றில் ஈடுபடுவதுடன். 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை கண்டறிந்து பட்டியலில் இணைப்பதில் ஆர்வம் காட்டிட வேண்டும். குறிப்பாக இளைஞர்களை அதிகளவில் வாக்காளர் பட்டியலில் சேர்த்திட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






