ஆலங்குளம் ராமகிருஷ்ணா பள்ளியில் விளையாட்டு விழா

ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 41-வது விளையாட்டு விழா நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு டி.எஸ்.பி. பர்ணபாஸ், டாக்டர் சிவக்குமார் ஆகியோர் பரிசு வழங்கினர்.
ஆலங்குளம் ராமகிருஷ்ணா பள்ளியில் விளையாட்டு விழா
Published on

ஆலங்குளம்:

ஆலங்குளம் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 41-வது விளையாட்டு விழா நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு, பள்ளித் தாளாளர் செந்தில்குமரன் தலைமை தாங்கினார். கலை நிகழ்ச்சிகள், கராத்தே, டேக்வாண்டோ, சிலம்பாட்டம், மனித பிரமீடு ஆகியவற்றை மாணவர்கள் நிகழ்த்தினர். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆலங்குளம் டி.எஸ்.பி. பர்ணபாஸ், ராஜபாளையம் டாக்டர் சிவக்குமார் ஆகியோர் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர். விழாவில் ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com