search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாரம்பரிய ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டும்-பா.ஜனதா நிர்வாகி ரெயில்வே மேலாளரிடம் மனு
    X

    பாரம்பரிய ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டும்-பா.ஜனதா நிர்வாகி ரெயில்வே மேலாளரிடம் மனு

    • அகலப்பாதையாக மாற்றிய பிறகு அனைத்து ரெயில்களும் பழைய நிலைக்கு திரும்பும் என்று உறுதியளிக்கப்பட்டது.
    • நெல்லையில் இருந்து கொல்லத்திற்கு இயக்கப்பட்ட ரெயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

    தென்காசி:

    தமிழக பா.ஜனதாவின் மத்திய அரசு நலத்திட்ட பிரிவின் மாநில செயலா ளராக இருந்து வரும் எம்.சி. மருதுபாண்டியன் மதுரை கோட்டை ரெயில்வே மேலாளரை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    ரெயில்வேயில் தண்ட வாளங்களை அகலப்படுத்து வதற்கு முன் மீட்டர் கேஜ் பாதையில் ஓடிய பழைய பாரம்பரிய ரெயில்களை மீட்டெடுக்கும் வண்ணம் பல்வேறு புதிய வசதிகளுடன் ரெயில்களை இயக்க வேண்டும்.

    5 ஜோடி பகல் ரெயில் களும், 2 ஜோடி இரவு ரெயில்களும் மீட்டர் கேஜ் பாதையில் கடந்த 2001-ம் ஆண்டு செங்கோட்டை, தென்காசி வழியாக இயக்க ப்பட்டன. ரெயில்வேயில் அகலப்பாதையாக மாற்றிய பிறகு அனைத்து ரெயில்களும் பழைய நிலைக்கு திரும்பும் என்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால் கடந்த 2018-ல் அகலப்பாதை முடிந்த பிறகும் ஒரு பகல் ரெயில் மட்டுமே இயக்கப்படுகிறது. அதாவது மதுரை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் மட்டுமே இயக்கப்படுகிறது.

    செங்கோட்டை-கொ ல்லம் பகுதியின் வழக்க மான பயணிகளுக்கு வசதி யாக இப்போது முழு முன்பதிவு இல்லாத ரெயி ல்கள் இல்லை. நெல்லையில் இருந்து கொல்லத்திற்கு நேரடியாக இயக்கப்பட்ட ரெயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. குறிப்பிட்டுள்ள அனைத்து ரெயி ல்களையும் விரைவில் இயக்கு வதற்கான நடவடி க்கைகளை மேற்கொள்ள வேண்டும். செங்கோட்டை-கொல்லத்தின் பழமையான முதல் திருவாங்கூர் ரெயில் பாதை 1904-ல் திறக்கப்பட்ட பாரம்பரியத்தை பறைசாற்ற உதவும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    அப்போது பா.ஜனதா மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில செயலாளர் சதீஷ்ஆசாத் மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர் சோலை மணிகண்டன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×