என் மலர்tooltip icon

    தென்காசி

    • 14 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் ஸ்ரீ சாய் கிருஷ்ணன் 3-ம் இடம் பிடித்தார்.
    • மாணவி செரினா சோபி பட்டர்பிளை 50 மீட்டர், 100மீட்டர், 200 மீட்டரில் முதலிடம் பிடித்தார்.

    தென்காசி:

    தென்காசி அச்சம்பட்டியில் எவரெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான ஜீடோ போட்டி நடைபெற்றது.

    இதில் பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். 14 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் ஸ்ரீ சாய் கிருஷ்ணன் 3-ம் இடமும், 17 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் ஜேக்கப் ஜாய் குமார் 2-ம் இடமும், ஜெபின் 3-ம் இடமும் பெற்றனர். அதேபோன்று தென்காசி வருவாய் மாவட்ட அளவிலான மாணவிகளுக்கான நீச்சல் போட்டி குற்றாலம் செய்யது மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் 17 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் மாணவி செரினா சோபி பட்டர்பிளை 50 மீட்டர், 100மீட்டர், 200 மீட்டரில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்று மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

    வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் ரெ.ஜே.வே.பெல், செயலாளர் கஸ்தூரி பெல்,முதல்வர் டாக்டர் அலெக்சாண்டர், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.

    • ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 41-வது விளையாட்டு விழா நடைபெற்றது.
    • போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு டி.எஸ்.பி. பர்ணபாஸ், டாக்டர் சிவக்குமார் ஆகியோர் பரிசு வழங்கினர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 41-வது விளையாட்டு விழா நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு, பள்ளித் தாளாளர் செந்தில்குமரன் தலைமை தாங்கினார். கலை நிகழ்ச்சிகள், கராத்தே, டேக்வாண்டோ, சிலம்பாட்டம், மனித பிரமீடு ஆகியவற்றை மாணவர்கள் நிகழ்த்தினர். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆலங்குளம் டி.எஸ்.பி. பர்ணபாஸ், ராஜபாளையம் டாக்டர் சிவக்குமார் ஆகியோர் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர். விழாவில் ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • லீனா குடும்ப பிரச்சினை காரணமாக மன அழுத்தத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது.
    • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் லீனா தற்கொலை செய்து கொண்டார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள குரும்பலாப்பேரி குமாரசாமி நாடார் தெருவை சேர்ந்த சுப்பையா மனைவி லீனா (வயது 50). இவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். லீனா குடும்ப பிரச்சினை காரணமாக மன அழுத்தத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் லீனா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தென்காசி மாவட்டத்தில் நேற்று காலை முதல் இன்று அதிகாலை வரையிலும் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்தது.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு பலத்த மழை பெய்தது.

    தென்காசி:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் மாநகர், புறநகர், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் என மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், விவசாயிகள் முழு வீச்சில் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    நேற்று பகலில் வெயில் அடித்த நிலையில் மதியத்திற்கு பிறகு மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்தது. மாநகரில் மதியம் சுமார் 2 மணி நேரம் வரை பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன.

    அதேநேரம் விடுமுறை நாள் என்பதாலும், தீபாவளிக்கு ஒரு வாரமே இருப்பதாலும் பஜார்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. மழையால் ஆங்காங்கே அவர்கள் வாகனங்களை நிறுத்திவிட்டதால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இன்று காலை முதல் வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது.

    அணைகளை பொறுத்தவரை மணிமுத்தாறு அணை பகுதியில் மட்டும் 9 மில்லிமீட்டர் மழை பெய்தது. கன்னடியன் கால்வாய் பகுதியில் 21 மில்லிமீட்டர் மழை கொட்டியது. தொடர்மழையால் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இன்று அந்த அணை 60 அடியை எட்டியது.

    143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை 89 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 102 அடியாகவும் உள்ளது. மாவட்டத்தில் அம்பை, ராதாபுரம், நாங்குநேரி, களக்காடு, மூலக்கரைப்பட்டி ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்தது.

    தென்காசி காசிவிஸ்வநாதர் கோவில் தெப்பக்குளம் நிரம்பியுள்ள காட்சி.

    தென்காசி காசிவிஸ்வநாதர் கோவில் தெப்பக்குளம் நிரம்பியுள்ள காட்சி.

     தென்காசி மாவட்டத்தில் நேற்று காலை முதல் இன்று அதிகாலை வரையிலும் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள தென்காசி, ஆய்க்குடி, செங்கோட்டை ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    தென்காசியில் நேற்று மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை பெய்த மழையால் காசிவிஸ்வநாதர் ஆலயத்தின் தெப்பக்குளம் நிரம்பியது. இரவு பெய்த கனமழையால் பிரதான சாலைகளில் உள்ள சாக்கடை வடிகால் நிரம்பி மழை நீருடன் கலந்து வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

    தென்காசி சுவாமி சன்னதி பஜார், அனைக்கரை தெரு, நடுபல்க், தெப்பக்குளம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சாலைகள் நீரில் மூழ்கியது. கடந்த வருடங்களில் தென்காசியில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அளவிற்கு மழை பெய்தது இல்லை எனவும் தற்போது ஏற்பட்ட மழை வரலாறு காணாத மழை என்று மக்களால் கூறப்படுகிறது.

    இவ்வாறான கனமழையின்போது சாக்கடை வடிகால் நீர் மழை நீரில் கலப்பதை தடுக்கும் வண்ணம் வடிகால் சுவர்களை உயர்த்தி அமைக்கப்பட வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    அதிகபட்சமாக தென்காசியில் 12.4 சென்டிமீட்டரும், ஆய்க்குடியில் 10 சென்டிமீட்டரும் மழை பெய்தது. செங்கோட்டையில் 26 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முழுவதும் விட்டு விட்டு கனமழை பெய்த வண்ணம் இருந்தது.

    அணைகளை பொறுத்தவரை கடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் என அனைத்து அணை பகுதிகளிலும் பலத்த மழை பெய்ததால், அவைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. கடனாவில் 21 மில்லிமீட்டர் மழை பெய்தது. தொடர்மழையால் கடனா அணை நீர்மட்டம் 2 அடியும், ராமநதி அணை நீர்மட்டம் 3 அடியும் உயர்ந்துள்ளது. கருப்பாநதி அணை நீர்மட்டம் 3 அடி உயர்ந்துள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 36 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. ஓட்டப்பிடாரம், சாத்தான்குளம், எட்டயபுரம், கீழ அரசடி, காடல்குடி ஆகிய இடங்களில் சாரல் மழை பெய்தது.

    • மெயின் அருவியில் ஆர்ச் வளைவை தாண்டியும், பழைய குற்றாலம் அருவியில் படிக்கட்டு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்து வழிந்து ஓடியது.
    • ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு காலையில் குறைந்ததால் சுற்றுலா பயணிகள் அங்கு குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று காலை முதல் மிதமான மழை பெய்தது.

    தொடர்ந்து இரவில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தென்காசியின் முக்கிய சாலைகள் எங்கும் தண்ணீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது. மழை நீருடன் சேர்ந்து சாக்கடை கழிவுகளும் சாலை எங்கும் சென்றது. மேலும் குற்றாலம் அருவிகளான மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட முக்கிய அருவிகளில் காட்டாற்று வெள்ளத்தின் காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிப்பதற்கு போலீசாரால் தடை விதிக்கப்பட்டிருந்தது. மெயின் அருவியில் ஆர்ச் வளைவை தாண்டியும், பழைய குற்றாலம் அருவியில் படிக்கட்டு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்து வழிந்து ஓடியது. இன்று காலை வரை மெயின் அருவி மற்றும் பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு நீடிப்பதால் அந்த 2 அருவிகளிலும் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு காலையில் குறைந்ததால் சுற்றுலா பயணிகள் அங்கு குளிக்க அனுமதிக்கப்பட்டனர். 

    • தாட்கோ வணிக வளாக கட்டிடத்தை இடிக்க வேண்டும் என சுரண்டை நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருந்தது.
    • சுரண்டை பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் கூட்டுறவு பண்டகசாலை பொருட்கள் பாதுகாப்பு குடோன் கட்டுவதற்கான இடத்தையும் ஆய்வு செய்தனர்.

    சுரண்டை:

    சுரண்டை நகராட்சிக் குட்பட்ட சங்கரன்கோவில் ரோட்டில் அமைந்துள்ள தாட்கோ வணிக வளாகம் கட்டி 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் பயன்பாடு இல்லாமல் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

    பொது மக்களுக்கு ஆபத்து ஏதும் ஏற்படும் முன் அந்த கட்டிடத்தை இடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

    இந்த நிலையில் தாட்கோ வணிக வளாக கட்டிடத்தை இடிக்க வேண்டும் என சுரண்டை நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருந்தது.

    அதைத்தொடர்ந்து சுரண்டைக்கு வந்த தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப் பாளர் ஜெயபாலன், தனுஷ் குமார் எம்.பி., ராஜா எம்.எல்.ஏ., சுரண்டை சேர்மன் வள்ளிமுருகன், நகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் (பொறுப்பு) ஆகியோர் தாட்கோ வணிக வளாக கட்டிடத்தின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்தனர்.

    தொடர்ந்து பங்களா சுரண்டை பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் கூட்டுறவு பண்டகசாலை பொருட்கள் பாதுகாப்பு குடோன் கட்டுவதற்கான இடத்தையும் ஆய்வு செய்தனர்.

    ஆய்வின் போது சுரண்டை நகராட்சி பொறி யாளர் முகைதீன், பணி மேற்பார்வையாளர் வினோத் கண்ணன், கவுன்சிலர் வேல்முத்து, மாவட்ட தி.மு.க. வர்த்தக அணி அமைப்பாளர் முத்துக்குமார், சுரண்டை நகர தி.மு.க. அவைத்தலைவர் சுப்பிரமணியன், கூட்டுறவு சங்க துணை தலைவர் கணேசன், சுரண்டை வார்டு செயலாளர் முத்துக்குமார், மாவட்ட பிரதிநிதி பொன் செல்வன், மாணவர் அணி ரமேஷ், சுந்தரபாண்டியபுரம் பேரூர் முன்னாள் செய லாளர் மாரியப்பன், டான் கணேசன், ராஜன் மற்றும் ஏராளமான தி.மு.க., காங்கி ரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • கீழப்பாவூர் பேரூராட்சியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் தீப்பொறி அப்பாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    ஆலங்குளம் தொகுதி கீழப்பாவூர் பேரூராட்சியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆய்வு கூட்டம் முன்னாள் எம்.பி.யும், அமைப்புச் செயலாளருமான அன்வர்ராஜா, தென்காசி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் செல்வமோகன் தாஸ்பாண்டியன் , முன்னாள் எம்.பி.யும், தென்காசி தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளருமான கே.ஆர்.பி.பிரபாகரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் சண்முகசுந்தரம், பேரூர் செயலாளர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தலைமை கழக பேச்சாளர் தீப்பொறி அப்பாதுரை, ஒன்றிய செயலாளர்கள் அமல்ராஜ்,இருளப்பன், காளிமுத்து, விவேகானந்தர், கவுன்சிலர் பவானி, மகளிர் அணி செயலாளர்கள் விஜய ராணி, இசக்கியம்மாள், பூத் பொறுப்பாளர்கள், வார்டு செயலாளர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

    • 36 கிராம சேனைத்தலைவர் பள்ளியில் வாக்காளர் சேர்க்கை மற்றும் நீக்குதல் முகாம் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியின் போது முன்னாள் அமைச்சரும், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினருமான தங்கவேலு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கரன்கோவிலில் 36 கிராம சேனைத்தலைவர் பள்ளியில் பூத் எண் 16-ல் வாக்காளர் சேர்க்கை மற்றும் நீக்குதல் முகாம் நடைபெற்றது. அதனை தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.

    அப்போது சங்கரன்கோவில் நகர பூத் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சரும், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினருமான தங்கவேலு, நகர செயலாளர் பிரகாஷ், நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், வார்டு செயலாளர் கோமதிநாயகம், பூத் பொறுப்பாளர்கள் சங்கரமகாலிங்கம், மாரியப்பன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • அகலப்பாதையாக மாற்றிய பிறகு அனைத்து ரெயில்களும் பழைய நிலைக்கு திரும்பும் என்று உறுதியளிக்கப்பட்டது.
    • நெல்லையில் இருந்து கொல்லத்திற்கு இயக்கப்பட்ட ரெயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

    தென்காசி:

    தமிழக பா.ஜனதாவின் மத்திய அரசு நலத்திட்ட பிரிவின் மாநில செயலா ளராக இருந்து வரும் எம்.சி. மருதுபாண்டியன் மதுரை கோட்டை ரெயில்வே மேலாளரை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    ரெயில்வேயில் தண்ட வாளங்களை அகலப்படுத்து வதற்கு முன் மீட்டர் கேஜ் பாதையில் ஓடிய பழைய பாரம்பரிய ரெயில்களை மீட்டெடுக்கும் வண்ணம் பல்வேறு புதிய வசதிகளுடன் ரெயில்களை இயக்க வேண்டும்.

    5 ஜோடி பகல் ரெயில் களும், 2 ஜோடி இரவு ரெயில்களும் மீட்டர் கேஜ் பாதையில் கடந்த 2001-ம் ஆண்டு செங்கோட்டை, தென்காசி வழியாக இயக்க ப்பட்டன. ரெயில்வேயில் அகலப்பாதையாக மாற்றிய பிறகு அனைத்து ரெயில்களும் பழைய நிலைக்கு திரும்பும் என்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால் கடந்த 2018-ல் அகலப்பாதை முடிந்த பிறகும் ஒரு பகல் ரெயில் மட்டுமே இயக்கப்படுகிறது. அதாவது மதுரை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் மட்டுமே இயக்கப்படுகிறது.

    செங்கோட்டை-கொ ல்லம் பகுதியின் வழக்க மான பயணிகளுக்கு வசதி யாக இப்போது முழு முன்பதிவு இல்லாத ரெயி ல்கள் இல்லை. நெல்லையில் இருந்து கொல்லத்திற்கு நேரடியாக இயக்கப்பட்ட ரெயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. குறிப்பிட்டுள்ள அனைத்து ரெயி ல்களையும் விரைவில் இயக்கு வதற்கான நடவடி க்கைகளை மேற்கொள்ள வேண்டும். செங்கோட்டை-கொல்லத்தின் பழமையான முதல் திருவாங்கூர் ரெயில் பாதை 1904-ல் திறக்கப்பட்ட பாரம்பரியத்தை பறைசாற்ற உதவும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    அப்போது பா.ஜனதா மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில செயலாளர் சதீஷ்ஆசாத் மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர் சோலை மணிகண்டன் ஆகியோர் உடன் இருந்தனர்.   

    • 8 கிலோமீட்டர் நடை பயணம் நடக்கும் திட்டத்தை மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
    • நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நடை பயிற்சியை மேற்கொண்டனர்.

    தென்காசி:

    தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் மேலகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட மின் நகர் பகுதியில் தொடங்கி காசிமேஜபுரம், இலஞ்சி குமாரசாமி கோவில் சுற்றுப்பாதை வழியாக 8 கிலோமீட்டர் நடை பயணம் நடக்கும் திட்டத்தை மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், தனுஷ்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் எஸ்.பழனி நாடார், ராஜா மற்றும் மருத்துவ துறையின் இணை இயக்குனர் முரளிசங்கர், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சுரண்டை ஜெயபாலன், தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், தென்காசி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர், அரசு வக்கீல் வேலுச்சாமி, தென்காசி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வல்லம் ஷேக் அப்துல்லா, மேலகரம் பேரூர் தி.மு.க. செயலாளர் சுடலை, பேரூராட்சி துணைத் தலைவர் ஜீவானந்தம், இலஞ்சி பேரூர் தி.மு.க. செயலாளர் முத்தையா, தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் ஜோதிடர் மாடசாமி, நகர பொருளாளர் ஈஸ்வரன், நகர துணைத் தலைவர்கள் சித்திக், தேவராஜன், நகர்மன்ற உறுப்பினர் சுப்பிரமணியன், தென்காசி ராமராஜ், கு.மூர்த்தி உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நடைபயிற்சியை மேற்கொண்டனர்.

    • நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் கடந்த 3-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • முகாமை பள்ளி நிர்வாகி அருள் அந்தோணி மிக்கேல் தொடங்கி வைத்தார்.

    கடையம்:

    கடையம் அருகே உள்ள மாதாபட்டணம் ச.ச.வி. மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் வெங்காடம்பட்டி ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட இடங்களில் கடந்த 3-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடக்க விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி தலைமை தாங்கினார். பள்ளி உதவி தலைமை தங்கராஜன் வரவேற்று பேசினார். பள்ளி தலைமை ஆசிரியை அமிர்த சிபியா, கடையம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பால சுப்பிரமணியன், ஊராட்சி மன்ற துணை தலைவர் சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை பள்ளி நிர்வாகி அருள் அந்தோணி மிக்கேல் தொடங்கி வைத்தார். ஒன்றிய கவுன்சிலர் சங்கர் மற்றும் ஊராட்சி செயலர் பாரத், லட்சுமியூர் ரவி, வார்டு உறுப்பினர் தமிழ்செல்வி ஆகியோர் வாழ்த்தி பேசினர். உதவி திட்ட அலுவலர் அருள் பீட்டர் ராஜ் நன்றி கூறினார். விழாவினை திட்ட அலுவலர் அந்தோணி துரைராஜ், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் இணைந்து நடத்தினர்.

    • டி.எஸ்.பி. பால்சுதர் தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் வருவாய் ஆய்வாளர்கள், வி.ஏ.ஓ.க்கள், தலையாரிகள் கலந்து கொண்டனர்.

    சங்கரன்கோவில்:

    தமிழகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சார்பில் விழிப்புணர்வு வார விழா நடைபெற்று வருகிறது.

    இதையொட்டி தென்காசி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை டி.எஸ்.பி. பால்சுதர் தலைமையில் சங்கரன் கோவில் தாசில்தார் அலுவலகத்தில் விழிப்புணர்வு கூட்டம் கடந்த 2-ந்தேதி நடைபெற்றது.

    இதில் சங்கரன்கோவில், சிவகிரி, திருவேங்கடம் ஆகிய வட்டங்களில் பணி புரியும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், தலையாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் டி.எஸ்.பி. பால்சுதர் பேசியதாவது:-

    தென்காசி மாவட்டத்தில் குறிப்பாக சங்கரன்கோவில் பகுதியில் இருந்து வருவாய்த் துறை, நில அளவை துறை, மின்வாரியத்துறை ஆகிய துறைகளின் மீது லஞ்ச புகார் தெரிவித்து அதிகமான போன் கால்கள் வந்த வண்ணம் உள்ளது.

    என்னுடைய தனிப்பட்ட என்னை கண்டுபிடித்து புகார் கூறுகின்றனர்.அதனால் தான் சங்கரன் கோவிலில் விழிப்புணர்வு கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்தோம். இதன் மூலம் 100 பேரில் 5 பேராவது மாறுவார்கள் என்கிற நோக்கம் மட்டும்தான் காரணம்.

    நீங்கள் பார்க்கிற துறையில் பல பிரச்சினைகள் உள்ளது. சட்டத்திற்கு உட்பட்டு நாம் சரியாக இருந்தால் போதும். முடியாது என்று சொன்னால் இடமாற்றம் செய்வார்கள். வேறு இடத்தில் போய் பணி செய்யுங்கள் அவ்வளவு தான்.

    அதற்காக வாழ்நாள் முழுவதும் நீதிமன்றத்தில் ஏறி அலைய வேண்டுமா? உங்கள் குடும்பத்தை எண்ணி பாருங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. பால் சுதர், இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ, சப்-இன்ஸ் பெக்டர் ரவி, தலைமை காவலர்கள் வேணுகோபால், கணேசன் ஆகியோர் சங்கரன்கோவில் பஸ் நிலையத்திற்கு சென்றனர். அங்கு பொதுமக்கள் மற்றும் டிரை வர்களிடம் 'லஞ்சம் கொடுப் பதும் குற்றம் லஞ்சம் வாங்குவதும் குற்றம்' என்ற துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    ×