என் மலர்
தென்காசி
- கூட்டத்தில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
- மாணவி சிவானி கிராமசபை கூட்டத்தின் செயலாளராக கலந்து கொண்டார்.
தென்காசி:
இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் பஞ்சாயத்து ராஜ் கிராம சபை விழிப்புணர்வு கூட்டம் பள்ளியின் வளாகத்தில் பாரம்பரிய முறையில் நடைபெற்றது. இதில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 8-ம் வகுப்பு மாணவன் தேவேஷ் விவசாயி போல பாரம்பரிய ஆடையினை அணிந்து வேளாண்மை தொழிலில் உள்ள பிரச்சினைகள், சுற்றுப் புறத்தினை தூய்மையாக வைத்திருக்கும் முறை குறித்து எடுத்துரைத்தான்.
6-ம் வகுப்பு மாணவி மிருதுளா ஜனனி கிராம பகுதியினை தூய்மையாகவும், பாதுகாப்பாகவும் வைப்பது பற்றி விளக்கி கூறினார். கிராம சபை கூட்டத்தின் தலைவராக மாணவி காளிபிரியா கலந்து கொண்டு வேளாண்மை தொழிலை திறம்பட செய்வதற்க்கான ஆலோசனைகளை வழங்கி, சுற்றுபுறத் தூய்மையின் முக்கியத்துவத்தினை எடுத்துரைத்தார். மாணவி சிவானி கிராமசபை கூட்டத்தின் செயலாளராக கலந்து கொண்டார். மேலும் சுற்று புறதூய்மையை பாதுகாக்கும் விதமாக மாணவ, மாணவிகள் குழுவாக இணைந்து பள்ளியின் வளாகத்தை தூய்மைபடுத்தினர்.
- விடுதியில் வழங்கப்படும் உணவுகள் தரமற்றதாக இருக்கிறது என மாணவர்கள் புகார் கூறி வந்தனர்.
- மாணவர்களின் போராட்டத்தால் கல்லூரி நிர்வாகிகள் தலைமறைவாகி விட்டனர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள புதூரில் கேரள மாநிலத்தை சேர்ந்த தம்பி என்பவர் நர்சிங், பாலிடெக்னிக் கல்லூரிகள் நடத்தி வருகிறார். இங்கு பயிலும் சுமார் 500 மாணவ-மாணவிகளில் 400-க்கும் மேற்பட்டோர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
இவர்களுக்கு ஆலங்குளம் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் வழங்கப்படும் உணவுகள் தரமற்றதாக இருக்கிறது. நர்சிங் கல்லூரிக்கும் அவர்கள் தங்கும் விடுதிக்கும் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவு உள்ளதால் செல்வதற்கு சிரமமாக இருப்பதாகவும் மாணவர்கள் புகார் கூறி வந்தனர்.
மேலும் பெண்கள் விடுதி காப்பாளர் இரவு நேரத்தில் பெண்களை போட்டோ எடுத்து ஆண் விடுதி காப்பாளருக்கு அனுப்புகின்றனர் என்றும் அவர்கள் புகார் கூறிவந்த நிலையில், நேற்று மாணவ, மாணவிகள் அவர்களுடைய பெற்றோருடன் இணைந்து ஆலங்குளத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மாணவர்களின் போராட்டத்தால் கல்லூரி நிர்வாகிகள் தலைமறைவாகி விட்டனர்.
தகவல் அறிந்த ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபால் பர்ணபாஸ் மற்றும் ஆலங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். இப்போராட்டத்தை தொடர்ந்து நர்சிங் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
- நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமின் 5 -வது நாளில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- பேரணியை வெங்காடம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி தொடங்கி வைத்தார்.
கடையம்:
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள மாதா பட்டணம் ச.ச.வி. மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமின் 5 -வது நாளில் பிளாஸ்டிக் ஒழிப்பு (நெகிழி) விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உதவி தலைமை ஆசிரியர் தங்கராஜன் வரவேற்று பேசினார். ஆசிரியை தமிழரசி தலைமை தாங்கினார். இளஞ் செஞ்சிலுவை சங்கம் மற்றும் ஆசிரியை ஜெயராணி, தேசிய பசுமைப்படை சாந்தி மோசஸ் சாரண சாரணியர் இயக்கம் மோசஸ் முன்னிலை வகித்தனர்.
இதில் தலைமை ஆசிரியர் அமிர்த சிபியா மற்றும் உதவி தலைமை ஆசிரியைகள் வெங்கடலட்சுமி, ரெஜினா தெரசாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பேரணியை வெங்காடம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி தொடங்கி வைத்தார். பேரணி கோவிலூற்று, மாதாபட்டணம் பகுதியில் நடைபெற்றது. துணிப்பையை பாளை மறைமாவட்ட பொருளாளர் அந்தோணி சாமி வழங்க வார்டு உறுப்பினர் குருசாமி பெற்றுகொண்டார். உதவி திட்ட அலுவலர் அருள் பீட்டர் ராஜ் நன்றி கூறினார் . நிகழ்ச்சியை திட்ட அலுவலர் அந்தோணி துரைராஜ் , நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் செய்திருந்தனர்.
- பல்வேறு புலனாய்வு போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- முழுமையான ஆய்வுக்கு பின்னரே முழுவிபரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட சத்திரப்பட்டி பகுதியில் நூதன முறையில் தொலைதொடர்பு சாதனம் மூலம் மோசடியில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் போலீசார் சத்திரப்பட்டியில் உள்ள மரக்கடை ஒன்றில் சோதனை செய்தபோது நூதன முறையில் மோசடி சம்பவம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது சினிமா படத்தை மிஞ்சும் அளவிற்கு வெளிநாட்டு போன் கால்களை செலவு இல்லாமல் உள்நாட்டு போன் கால்களாக பேசுவதற்கு 600-க்கும் மேற்பட்ட சிம்கார்டுகளை முறைகேடாக பயன்படுத்தியது தெரியவந்தது.
இதுதொடர்பாக மோசடியில் ஈடுபட்ட யோசுவா (வயது 30), முனீஸ்வரன் (28) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு உள்ள குற்ற பின்னணிகள் குறித்து சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுதிர் தலைமையிலான தனிப்படை மற்றும் பல்வேறு புலனாய்வு போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2 நாட்களுக்கு மேல் இவர்களிடம் நடத்திய விசாரணையில் எந்த விதமான பிடியும் சிக்காததால் காவல் துறையினர் அவர்களை சட்ட விரோதமாக இணைப்பகம் நடத்திய வழக்கில் கைது செய்ததாக கூறப்படுகிறது.
தற்பொழுது நவீன முறையில் அனைவரும் வீடியோ கால் பயன்படுத்துவதால் இவர்கள் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் நடத்தி இருக்க வாய்ப்பில்லை எனவும், வேறு ஏதாவது நவீன மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அந்த பகுதியில் 600-க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் மற்றும் தொலைத்தொடர்பு சாதன கருவிகள் லேப்டாப் மற்றும் 30-க்கும் மேற்பட்ட செல்போன்கள் வை-பை மோடம் உள்ளிட்ட கருவிகளை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். முழுமையான ஆய்வுக்கு பின்னரே முழுவிபரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
- கலெக்டர் ரவிச்சந்திரன் கால்நடை நல அட்டைகளை கால்நடை வளர்ப்போருக்கு வழங்கினார்.
- முகாமில் தென்காசி கோட்ட உதவி இயக்குநர் மகேஷ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் இலஞ்சி பேரூராட்சிக்குட்பட்ட முதலாளி குடியிருப்பில் தொடங்கி வைத்து கோமாரி பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரதிகளை வெளியிட்டு வழங்கினார்.
கால்நடை நல அட்டைகளை கால்நடை வளர்ப்போருக்கு வழங்கினார். மேலும் தென்காசி மாவட்டம் முழுவதும் சுமார் 135 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய்த்தடுப்பூசி போடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு 46 குழுக்கள் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் ஏற்படுத்தப்பட்டு உள்ளாட்சித்துறை, பால்வளம் மற்றும் ஆவின் உடன் இணைந்து செயலாற்ற உள்ளது.
எனவே பொதுமக்கள் தங்கள் ஊரில் தடுப்பூசி போட குழுவினர் வரும்போது அனைத்து மாடுகளுக்கும் தடுப்பூசி போட்டு பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் கேட்டுக் கொண்டார்.
முகாமில் தென்காசி கோட்ட உதவி இயக்குநர் மகேஷ்வரி, கால்நடை உதவி மருத்துவர்கள், வெள்ளைப்பாண்டி,செல்வகுத்தாலிங்கம், சிவகுமார், புனிதா, அருண்பாண்டியன், கால்நடை ஆய்வாளர்கள் அருண்குமார், பூமாரிசெல்வம், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள், மாடசாமி, அந்தோணியம்மாள், இலஞ்சி பேரூராட்சித் தலைவர் சின்னத்தாய், துணை ஊராட்சி மன்றத்தலைவர் முத்தையா, வார்டு உறுப்பினர் ராஜேஸ்வரி, வல்லம் ஊராட்சிமன்றத்தலைவர் ஜமீன் பாத்திமா, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- கனரக லாரியை அதன் டிரைவர் ஜெயக்குமார் “ஒர்க் ஷாப்பிற்கு” கொண்டு சென்றார்.
- லாரி டிரைலர் அங்கிருந்த மின் கம்பிகள் மீது மோதியதில் அவை அறுந்து விழுந்தன.
தென்காசி:
பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கேரளாவில் இருந்து கனிமவளம் ஏற்ற ஆலங்குளம் வந்த கனரக லாரி ஒன்றை பழுது நீக்குவதற்காக பாவூர்சத்திரத்தில் நெல்லை- தென்காசி நான்கு வழிச்சாலை அருகே உள்ள "ஒர்க் ஷாப்பிற்கு" அதன் டிரைவர் கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த ஜெயக்குமார் (வயது 55) கொண்டு சென்றார். வேலை முடிந்து பிரதான சாலைக்கு லாரியை கொண்டு வரும்போது அதன் டிரைலர் மேல் தூக்கியவாறு இருந்ததை கவனிக்காமல் அந்த டிரைவர் வந்துள்ளார்.
அப்போது அங்கிருந்த மின் கம்பிகள் மீது மோதியதில் அவை அறுந்து விழுந்தன. அதன் காரணமாக அங்கிருந்த 4 மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்து சேதமடைந்தது. இதனால் அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டது. அதிஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார். இரவு நேரத்தில் கொட்டும் மழையிலும் மின் கம்பங்களை வெகு நேரம் போராடி சீரமைத்த மின்வாரிய ஊழியர்களை பொதுமக்கள் பாராட்டினர்.
- குண்டாறு அணை மூலமாக சுமார் 1,200 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
- ஷட்டரில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
செங்கோட்டை:
செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய பணிகளுக்கு முக்கிய நீராதாரமாக மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள 36 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணை விளங்கி வருகிறது.
மாவட்டத்தில் முதலில் நிரம்பும் மிகச்சிறிய அணையான குண்டாறு அணை மூலமாக சுமார் 1,200 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியதும் அணை நிரம்பிவிட்ட நிலையில் தற்போது பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காட்டாற்று வெள்ளத்தால் அணையின் பிரதான மதகு பகுதியில் ஷட்டரில் மோதிய மரத்தடியால் ஷட்டர் சேதம் அடைந்தது. இதனால் அணையில் இருந்து 6 அடி அளவுக்கு தண்ணீர் வீணாக வெளியேறி தற்போது 30 அடியில் நீடிக்கிறது. அதற்குமேல் அணையில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை இருந்து வருவதாக விவசாயிகள் புகார் கூறினர்.
எனவே உடனடியாக அணை ஷட்டரில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். தற்போது ஷட்டரில் அடைபட்ட மரத்தடியை தீவிர முயற்சிக்கு பின்னர் அதிகாரிகள் அகற்றினர். பின்னர் பழுதையும் சரி செய்தனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- பூத்கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் ஆலங்குளத்தில் அனைத்து வார்டுகளிலும் நடைபெற்றது.
- கூட்டத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் பேரூராட்சி யில் 15 வார்டுகள் உள்ளது.
பாராளுமன்ற தேர்தல்
வருகிற பாராளுமன்ற தேர்தலையொட்டி பேரூர் அ.தி.மு.க. சார்பில் இளைஞர்கள் இளம்பெண்கள், மகளிர் பாசறை, அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பம் மற்றும் கட்சி நிர்வாகிகளை கொண்டு வார்டுகளில் பூத்கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பொறுப்பாளர்களும் நியமிக்கப் பட்டுள்ளனர்.
இந்த பூத்கமிட்டி உறுப்பி னர்கள் மற்றும் நிர்வாகி களுக்கான ஆலோசனை கூட்டம் ஆலங்குளத்தில் அனைத்து வார்டுகளிலும் நடைபெற்றது. பூத்கமிட்டி ஆலோசனை கூட்டத்திற்கு ஆலங்குளம் பேரூர் அ.தி.மு.க. செயலாளர் கே.பி. சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் எஸ்.கே. சண்முக சுந்தரம், தென்காசி தெற்கு மாவட்ட துணை செயலாளர் பசுவதி, கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் இருளப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பூத் கமிட்டி பணிகள்
தென்காசி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் சிறப்புரை ஆற்றினார். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற செய்ய வேண்டிய பணிகள், தேர்தல் களப்பணிகள், வாக்காளர்களை சந்தித்தல் உள்ளிட்ட பூத்கமிட்டியின் பணிகள் குறித்து விளக்கி பேசினார்.
ஆலங்குளம் பேரூராட்சி 13- வது வார்டு, 14-வது வார்டு, 15-வது வார்டு மற்றும் சந்தனமாரியம்மன் கோவில் திடல், நத்தம் மாரியம்மன் கோவில் திடல், நாடார் திருமண மண்டபம், அண்ணாநகர், பரும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் நடைபெற்ற பூத்கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலங்குளம் நகர துணைசெயலாளர் சால மோன்ராஜா, பேரூராட்சி துணை தலைவர் ஜான்ரவி, கவுன்சிலர் அன்னத்தாய் சொரிமுத்து, தகவல் தொழில்நுட்பம் நிக்சன் சத்தியராஜ், சிறுபான்மை பிரிவு ஐசக்சேகர், முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர் தமிழரசன், ஜெயலலிதா பேரவை தனபால், விவசாய அணி தங்கசாமி மாரியப்பன், நகர இணை செயலாளர் நடராஜன், சுமோ சூரியன், இளைஞரணி கேபி குமரன் தேவதாஸ் சுரேந்திரன். சொரிமுத்து சொக்கலிங்கம்.செந்தில் தீப்பொறி பெரிய பாண்டியன், 11-வது வார்டு தங்கராஜ் தேவதாஸ், நகர மகளிர் அணி முத்து லெட்சுமி, விஜி வனிதா வசந்தி உள்பட அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- அங்கன்வாடி மையத்தில் சுமார் 20 குழந்தைகள் ஆரம்ப கல்வி பயின்று வருகின்றனர்.
- கழிவுநீர் அனைத்தும் அங்கன்வாடி அருகே தேக்கும் வகையில் கட்டமைப்பு பணி நடைபெறுகிறது.
தென்காசி:
ஆலங்குளம் அருகே உள்ள குத்தப்பாஞ்சான் ஊராட்சி பரும்பு நகர் பகுதியை சேர்ந்த கார்த்தி கேயன் என்பவரது மகன் திருமாறன். (வயது3). தனது தாயுடன் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த திருமாறன் கலெக்டரை சந்தித்து மனு ஒன்றை வழங்கி னான். அதில் கூறியிருப்பதாவது:-
குத்தப்பாஞ்சான் ஊராட்சி, பரும்புநகர் பகுதியில் உள்ள அங்கன்வாடியில் ஆரம்ப கல்வி பயின்று வருகிறேன். இந்த அங்கன்வாடி மையத்தில் சுமார் 20 குழந்தைகள் ஆரம்ப கல்வி பயின்று வருகின்றனர். எங்கள் பரும்பு நகர் பகுதியில் பரும்புநகர் மெயின் ரோடு வாறுகால் அமைக்கும் பணி நடைபெறு கிறது. இந்த வாறுகால் வழியாக கிராமத்தில் உள்ள கழிவுநீர் அனைத்தும் அங்கன்வாடி அருகே தேக்கும் வகையில் கட்டமைப்பு பணி நடைபெறுகிறது. கழிவுநீர் தேக்குவதால் அங்கு துர்நாற்றம் வீச கூடும். கொசுக்கள் உற்பத்தியாகும் நிலை உருவாகும் இதனால் அங்கன்வாடியில் பயிலும் இளம் குழந்தைகளுக்கு தொற்று நோய் மற்றும் உயிர்கொல்லி நோய் வர அதிகமான வாய்ப்புகள் உள்ளன. எனவே குழந்தை களின் நலனை கருத்தில் கொண்டு இப்பகுதியில் அமைக்கும் வறுகால் பணியினை தடைசெய்து மாற்றுமுறையில் வேறு இடத்தில் கழிவு நீர் செல்லும் வகையில் பணியினை மேற்கொள்ள நடவடிக்கை வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
- பனை விதைகள் விதைப்பு பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா தலைமை தாங்கி தொடக்கி வைத்தார்.
- நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகைராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கடையம்:
தென்காசி மாவட்டம் வெங்கடாம்பட்டி ஊராட்சியில் அனந்தபத்மநாயக்கன் குளக்கரையில், தளிர் திப்பணம்பட்டி கிராமம் அமைப்பு சார்பில் 1,500 பனை விதைகள் விதைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வெங்காடம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா தலைமை தாங்கி தொடக்கி வைத்தார். ஊராட்சி வார்டு உறுப்பினர் தமிழ்ச் செல்வி, ஊராட்சி செயலர் பாரத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் நிலக்கிழார் ரவிசுப்பிரமணியன், முத்துராமன், வெங்கடாம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகைராஜன் உள்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடு களை தளிர் அமைப்பின் ஒருங்கிணைப் பாளர்கள் சதீஷ்குமார், அனீத் ஆகியோர் செய்திருந்தனர்.
- 9-ம் நாளான இன்று முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது.
- தேரோட்டத்தில் பங்கு பெற்று தேரினை வடம் பிடித்து இழுத்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தென்காசி:
பிரசித்தி பெற்ற மற்றும் பழமையான கோவிலான தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
இவ்வாண்டுக்கான திருவிழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நடைபெற்ற சிறப்பு பூஜைகளிலும், கொடியேற்றத்திலும் திரளான பக்தர்கள் பங்கேற்றிருந்தனர்.
தொடர்ந்து விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்புப் பூஜைகள் அதனைத் தொடர்ந்து மண்டகப்படி பூஜைகள் நடைபெற்றன.
விழாவின் 9-ம் நாளான இன்று முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு புறப்பட்ட உலகம்மன் தேர் 4 ரத வீதிகள் வழியாக வலம் வந்து 10.15 மணிக்கு நிலையம் வந்தடைந்தது.
தேரினை ஏராளமான பக்தர்கள் திருவாசகம் பாடி, கோஷங்கள் எழுப்பி, பாடல்கள் பாடி, மேளதாளங்கள் முழங்க உற்சாகமாக வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தில் பங்கு பெற்று தேரினை வடம் பிடித்து இழுத்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- சிவகிரியில் 24 வாக்குச் சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் முகாம் நடைபெற்றது.
- ராஜா எம்.எல்.ஏ., சீனிவாசன், டாக்டர் செண்பகவிநாயகம் ஆகியோர் முகாமினை பார்வையிட்டனர்.
சிவகிரி:
சிவகிரியில் 24 வாக்குச் சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், இரட்டை பதிவுகள் நீக்குதல், பெயர் திருத்தம் முகாம் நடைபெற்றது. தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் டாக்டர் செண்பகவிநாயகம் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது முனியாண்டி, கார்த்திக், நல்லசிவம், 24 பூத் முகவர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.






