search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவில் பகுதியில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம்
    X

    சங்கரன்கோவில் பகுதியில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம்

    • பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும், மெயின் ரோடு மற்றும் நகரில் முக்கிய பகுதிகளில் உள்ள கடைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • பிளாஸ்டிக் இல்லாத தீபாவளி கொண்டாட்டம் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது, உறுதிமொழி மற்றும் கையெழுத்து முகாம் நடைபெற்றது.

    சங்கரன்கோவில்:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சங்கரன்கோவில் நகராட்சி ஆணையாளர் சபாநாயகம், நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி வழிகாட்டுதலின்படி, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறிய கூடிய மக்காத தன்மை கொண்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் எனவும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத உள்ளூர் வெடி மருந்து தயாரிப்புகளை மட்டுமே பயன்படுத்துமாறும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    மேலும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்ள நேரங்களில் மட்டும் வெடி வெடிக்கும்படியும், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும், மெயின் ரோடு மற்றும் நகரில் முக்கிய பகுதிகளில் உள்ள பேக்கரி, பட்டாசு கடைகள், ஜவுளிக்கடைகள், இறைச்சி கடைகள் மற்றும் பல வணிக நிறுவனங்களுக்கு துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் மற்றும் பரப்புரையாளர்கள் மூலம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    புகையில்லாத மற்றும் பிளாஸ்டிக் இல்லாத தீபாவளி கொண்டாட்டம் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது சம்பந்தமாக உறுதிமொழி மற்றும் கையெழுத்து முகாமினை சுகாதார அலுவலர் பாலச்சந்தர் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மாரிச்சாமி, மாரிமுத்து ஆகியோர் ஏற்பாடு செய்து நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து அரசு அலுவலகங்கள், கோமதி அம்பாள் மெட்ரிக்பள்ளி, பஸ் நிலையம் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    Next Story
    ×