என் மலர்tooltip icon

    தென்காசி

    • விழாவில் ஆண்களுக்கு வேட்டி, சட்டைகளும், பெண்களுக்கு சேலைகளையும் பேரூராட்சி தலைவர் லாவண்யா ராமேஸ்வரன் வழங்கினார்.
    • நிகழ்ச்சியில் பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனார் சிறப்புப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கரசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் மகாத்மா காந்திஜி சேவா சங்க அலுவலகத்தில் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கும், பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை நங்கநல்லூர் சித்தானந்தம், பத்மாவதி அம்மாள் குடும்பத்தின் சார்பாகவும், சுப்பிரமணியபுரம் இசக்கிசெல்வம் குடும்பத்தின் சார்பாகவும், புத்தாடைகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு பேரூராட்சி தலைவர் லாவண்யா ராமேஸ்வரன் தலைமை தாங்கி ஆண்களுக்கு வேட்டி, சட்டைகளும், பெண்களுக்கு சேலைகளும் வழங்கினார். சங்கத்தலைவர் தவமணி, பொருளாளர் தமிழரசன், பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனார் சிறப்புப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கரசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் பள்ளியின் ஆசிரியர்கள் சாந்தி, ஹெலன் இவாஞ்சலின், இயன்முறை மருத்துவர் புனிதா, மாணவ - மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கொரோனாவிற்கு முன்பு சில ஆண்டுகளாக வியாழக்கிழமை தோறும் நெல்லை- தாம்பரம் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வந்தது.
    • சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு எப்போது வரும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் தெற்கு ரெயில்வே சார்பில் நெல்லைக்கு சில சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டன.

    தென்காசி:

    வருகிற 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் அனைத்து தென்மாவட்ட ரெயில்களும் நிரம்பி வழிகிறது.

    தென்மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய விரைவு ரெயில்களான கன்னியாகுமரி, முத்துநகர், திருச்செந்தூர், அனந்தபுரி, நெல்லை, பொதிகை, சிலம்பு, கொல்லம் மெயில், பாண்டியன் உள்ளிட்ட அனைத்து விரைவு ரெயில்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்து ஒவ்வொரு ரெயிலிலும் காத்திருப்பு பட்டியல் எண்ணிக்கை 300-க்கும் மேல் உள்ளது.

    இந்நிலையில், சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு எப்போது வரும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் தெற்கு ரெயில்வே சார்பில் நெல்லைக்கு சில சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் தென்காசிக்கு ஒரு சிறப்பு ரெயில் கூட இயக்கப்படாதது பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-

    நெல்லையில் காலியாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நெல்லை - பிலாஸ்பூர் ரெயில் பெட்டிகளை கொண்டு கொரோனாவிற்கு முன்பு சில ஆண்டுகளாக வியாழக்கிழமை தோறும் நெல்லை- தாம்பரம் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வந்தது.

    தற்போது அதே காலிப்பெட்டிகளை கொண்டு தென்காசி வழியாக தீபாவளி சிறப்பு ரெயில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்த நிலையில் அந்த ரெயிலை நெல்லையில் இருந்து நேர்வழியில் தற்போது சிறப்பு ரெயிலாக இயக்குவது வருத்தமளிக்கிறது.

    சேரன்மகாதேவி, கல்லிடை, அம்பை, கடையம், பாவூர்சத்திரம் ரெயில் நிலையங்களின் நடைமேடைகளில் 17 பெட்டிகள் மட்டுமே நிறுத்த முடியும் என்பதால் 22 பெட்டிகள் கொண்ட பிலாஸ்பூர் ரெயில் பெட்டிகளை வைத்து தென்காசி வழியாக சிறப்பு ரெயில் இயக்க முடியவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    எனவே உடனடியாக இந்த 5 ரெயில் நிலையங்களில் நடைமேடைகளை நீட்டிப்பதோடு மட்டுமல்லாமல் தீபாவளி முடிந்து சென்னை செல்வதற்கு சிறப்பு ரெயில் இயக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும், மெயின் ரோடு மற்றும் நகரில் முக்கிய பகுதிகளில் உள்ள கடைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • பிளாஸ்டிக் இல்லாத தீபாவளி கொண்டாட்டம் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது, உறுதிமொழி மற்றும் கையெழுத்து முகாம் நடைபெற்றது.

    சங்கரன்கோவில்:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சங்கரன்கோவில் நகராட்சி ஆணையாளர் சபாநாயகம், நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி வழிகாட்டுதலின்படி, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறிய கூடிய மக்காத தன்மை கொண்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் எனவும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத உள்ளூர் வெடி மருந்து தயாரிப்புகளை மட்டுமே பயன்படுத்துமாறும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    மேலும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்ள நேரங்களில் மட்டும் வெடி வெடிக்கும்படியும், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும், மெயின் ரோடு மற்றும் நகரில் முக்கிய பகுதிகளில் உள்ள பேக்கரி, பட்டாசு கடைகள், ஜவுளிக்கடைகள், இறைச்சி கடைகள் மற்றும் பல வணிக நிறுவனங்களுக்கு துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் மற்றும் பரப்புரையாளர்கள் மூலம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    புகையில்லாத மற்றும் பிளாஸ்டிக் இல்லாத தீபாவளி கொண்டாட்டம் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது சம்பந்தமாக உறுதிமொழி மற்றும் கையெழுத்து முகாமினை சுகாதார அலுவலர் பாலச்சந்தர் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மாரிச்சாமி, மாரிமுத்து ஆகியோர் ஏற்பாடு செய்து நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து அரசு அலுவலகங்கள், கோமதி அம்பாள் மெட்ரிக்பள்ளி, பஸ் நிலையம் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • துரைச்சாமியாபுரம் கிராம ஊராட்சியில் சிமெண்ட் ரோடு, வாருகால் ஆகிய திட்டப்பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.
    • யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    சிவகிரி:

    சிவகிரி அருகே துரைச்சாமியாபுரம் கிராம ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.39.99 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் ரோடு, வாருகால், ஊரணி புணரமைப்பு, மயானக்கூடம் ஆகிய திட்டப் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. யூனியன் சேர்மனும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வி ஏசுதாஸ், முனியராஜ், துரைச்சாமியாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் மல்லிகா, கிளை செயலாளர்கள் வேல்பாண்டியன், கண்ணன், உதவி பொறியாளர் மார்கோனி, அரசு ஒப்பந்ததாரர் கதிர், மல்லீஸ்வரன், உள்ளார் மணிகண்டன், விக்கி மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மாப்பிள்ளையூரணி பகுதியை சேர்ந்த சண்முகவேல் தனது காரில் கேரளாவில் உள்ள தனது உறவினரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஊர் திரும்பி வந்து கொண்டிருந்தார்.
    • அப்போது பாவூர்சத்திரம் கே.டி.சி. நகர் அருகே வந்து கொண்டிருந்தபோது சக்திவேலின் மோட்டார் சைக்கிள் மீது அதிவேகமாக மோதி தூக்கி வீசியது.

    தென்காசி:

    நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலையில் பாவூர்சத்திரம் அருகே கே.டி.சி. நகர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பெட்ரோல் பங்க் அருகே செட்டியூர் கிராமத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவரான சக்திவேல் என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் நிரப்புவதற்காக நண்பருடன் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அங்குள்ள சாலையில் திரும்பும்போது தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி பகுதியை சேர்ந்த சண்முகவேல் என்பவர் தனது காரில் கேரளாவில் உள்ள தனது உறவினரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஊர் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    அப்போது பாவூர்சத்திரம் கே.டி.சி. நகர் அருகே வந்து கொண்டிருந்தபோது சக்திவேலின் மோட்டார் சைக்கிள் மீது அதிவேகமாக மோதி தூக்கி வீசியது. இதில் சக்திவேல் கால் முறிந்து பலத்த காயத்துக்குள்ளானார். மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்த அவரது நண்பர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

    சக்திவேலை அங்கிருந்த நபர்கள் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய பதை பதைக்க வைக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மேற்கூரை இடிந்து விழுந்ததில் மாரியப்பன் காயமடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு சென்று மாரியப்பனை நேரில் பார்த்து ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் அருகே மேலக்கடையநல்லூா் கடகாலீஸ்வரா் கோவில் தெருவை சோ்ந்தவா் மாரியப்பன் (வயது42). கூலித் தொழிலாளி. கடந்த 5-ந்தேதி இரவு இவா் வீட்டினுள்ளும், குடும்பத்தினா் வெளிப்புறத் திண்ணையிலும் தூங்கினார்கள் . அப்போது இரவு பெய்த பலத்த மழையால், இவரது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மாரியப்பன் காயமடைந்தாா்.

    அவரை கடையநல்லூர் தீயணைப்பு-மீட்புப் பணிகள் துறை வீரா்கள் சென்று, இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட மாரியப்பனை மீட்டு கடையநல்லூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தற்போது மருத்துவமனையில் மாரியப்பன் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து கடையநல்லூர் எம்.எல்.ஏ. கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு சென்று மாரியப்பனை நேரில் பார்த்து ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார்.

    அதனைத்தொடர்ந்து மழைக்காலம் என்பதால் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அதிக அளவு அனுமதிக்கப்பட்டி ருந்த குழந்தைகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

    அதனைத்தொடர்ந்து அரசு மருத்துவமனை மருத்துவர் பிஸ்மி நிசாவிடம் அதிக அளவு குழந்தைகளை தாக்கும் வைரஸ் காய்ச்சல் மற்றும் குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகளை குறித்து கேட்டறிந்து குழந்தைகளுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க வேண்டு என கேட்டுக் கொண்டார். அப்போது மாவட்ட துணை செயலாளர் பொய்கை மாரியப்பன், கடையநல்லூர் நகர செயலாளர் எம்.கே. முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • புதிய சாலை அமைக்கும் பணி முடிவுற்ற நிலையில் புதிய சாலையை திறக்கும் நிகழ்வு நடைபெற்றது.
    • தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் வன்னிக்கோேனந்தல் தம்பிராட்டி அம்மன் கோவில் தெருவில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சம் செலவில் புதிய சாலை அமைக்கும் பணி முடிவுற்ற நிலையில் புதிய சாலையை திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. மானூர் ஒன்றிய தலைவர் ஸ்ரீலேகா செல்வி அன்பழகன், ஒன்றிய ஆணையாளர் மணி ஆகியோர் தலைமை தாங்கினர். மேலநீலித நல்லூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் வெற்றி விஜயன், மானூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். ஒன்றிய துணைத் தலைவர் கலைச்செல்வி, வன்னிக்கோேனந்தல் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணன், பஞ்சாயத்து துணைத் தலைவர் வள்ளிநாயகம், ஒன்றிய கவுன்சிலர் மல்லிகா முருகன், தகவல் தொழில் நுட்ப அணி தொகுதி பொறுப்பாளர் வீமராஜ், ஒன்றிய அவைத் தலைவர் நடராஜன், கூவாச்சிபட்டி செல்வம், காங்கிரஸ் கணேசன், முகமது அலி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • முகாமின் போது மாணவர்கள் ரத்ததான விழிப்புணர்வு முகாம், மரம் நடுதல் ஆகிய பணிகளில் மாணவர்கள் ஈடுபட்டு வந்தனர்.
    • நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நேற்றுடன் நிறைவு பெற்றது.

    சிவகிரி:

    சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் தொடக்க விழா கடந்த 1-ந்தேதி நடைபெற்றது. தொடர்ந்து சிவகிரி மலைக்கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் உழவாரப்பணி, விஸ்வநாதபேரி பகுதிகளில் ரத்ததான விழிப்புணர்வு முகாம், உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு முகாம், தகவல் தொழில்நுட்ப விழிப்புணர்வு முகாம், வழிகாட்டுதல் பற்றிய விழிப்புணர்வு முகாம், சட்டம் ஒழுங்கு விழிப்புணர்வு முகாம், மரம் நடுதல், கோம்பை ஆறு படுகையில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் கேன்களை அப்புறப்படுத்துவது ஆகிய பணிகளில் மாணவர்கள் ஈடுபட்டு வந்தனர். நேற்றுடன் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நிறைவு பெற்றது. இதனைத் தொடர்ந்து பள்ளியின் வளாகத்தில் நிறைவு விழா நேற்று நடைபெற்றது.

    சேனைத்தலைவர் மகாஜன சங்கத்தின் தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் தங்கேஸ்வரன், துணைத்தலைவர் மூக்கையா என்ற கலைஞர், பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் சக்திவேலு வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவரையும் தலைவர், துணைத்தலைவர், செயலாளர், பொருளாளர், கல்விக்குழு மற்றும் அறப்பணிக்குழு உறுப்பினர்கள், உதவி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், காசிராஜன், வீரகுமார், மோகன், அருணாசலம், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டி இதுபோன்று தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்து எதிர்காலத்தில் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என வாழ்த்து தெரிவித்தனர். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சுபஜோதி நன்றி கூறினார்.

    இதில் நாட்டு நலப்பணித் திட்ட உதவி அலுவலர் பாண்டி, கல்வி பணிக்குழு மற்றும் அறப்பணிக்குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அதிர்ஷ்டவசமாக வீட்டில் உள்ளவர்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை.
    • சிவகிரி தாசில்தார் ஆனந்த், வருவாய் ஆய்வாளர் சுந்தரி, கிராம நிர்வாக அலுவலர் வீரசேகரன், தலையாரி அழகராஜா ஆகியோர் பார்வையிட்டனர்.

    சிவகிரி:

    சிவகிரி மற்றும் வாசுதேவநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 4 மணி அளவில் இருந்து தொடர்ந்து இடி, மின்னலுடன் கனமழை பெய்து வந்தது.

    இன்று காலை 8 மணி வரை தொடர்ந்து மழை பெய்தது. இந்நிலையில் சிவகிரி பாலகணேசன் தெருவை சேர்ந்த ஆறுமுகத் தாய் என்பவரின் வீட்டு சுவர் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் உள்ளவர்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை.

    இதுகுறித்து சிவகிரி தாசில்தார் ஆனந்த், வருவாய் ஆய்வாளர் சுந்தரி, கிராம நிர்வாக அலுவலர் வீரசேகரன், தலையாரி அழகராஜா ஆகியோர் பார்வையிட்டனர்.

    இடிந்து விழும் சூழலில் வீடு உள்ளதால் மாற்று இடத்தில் தங்க அறிவுறுத்தினர்.

    • புதிய கட்டிடத்திற்கு தேவைப்படும் மின்சாரத்திற்கான மின்மாற்றி உடனடியாக அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மின் மாற்றியை கல்லூரி பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலில் அரசு கலை மற்றும் அறிவி யல் கல்லூரி புதிய கட்டிட பணிகள் முடிவுற்று தற்போது திறக்கப்படும் சூழ்நிலையில் உள்ளது.

    மின்மாற்றி

    இந்நிலையில் புதிய கட்டிடத்திற்கு தேவைப்படும் மின்சாரத்திற்கான மின்மாற்றி உடனடியாக அமைக்க வேண்டும் என கல்லூரி நிர்வாகம் சார்பில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்த ராஜா எம்.எல்.ஏ. புதிய மின்மாற்றி அமைக்க ஏற்பாடு செய்தார். இந்நிலையில் இந்த மின் மாற்றி கல்லூரியின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    சங்கரன்கோவில் மின்சார வாரிய செயற் பொறியாளர் பாலசுப்பிர மணியன் தலைமை தாங்கினார்.. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் விக்டோரியா தங்கம், சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் வடக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு இந்த மின் மாற்றியை கல்லூரி பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

    இதில் மின்வாரிய இளநிலை செயற்பொறி யாளர் கணேஷ் ராம கிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர்கள் ரவி ராமதாஸ், முஜ்பின் ரகுமான், கல்லூரி பேராசிரியர்கள் வேணு கோபால், பாலமுருகன், தி.மு.க. மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் உதய குமார், மின்வாரிய தொ.மு.ச. திட்டச் செய லாளர் மகாராஜன், அரசு ஒப்பந்ததாரர் ஜலால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • இந்தோ-நேபாள சர்வதேச யோகா சாம்பியன்ஷிப் போட்டி பொக்ராவில் நடைபெற்றது.
    • போட்டியில் கலந்து கொண்ட பாலந்த ரத்திஷ் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

    தென்காசி:

    நேபாள நாட்டில் உள்ள பொக்ராவில் இந்தோ-நேபாள சர்வதேச யோகா சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட தபிசா மற்றும் ஐ.சி.எஸ்.எஸ்.பி.இ.- மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி மாணவர் பாலந்த ரத்திஷ் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

    இம்மாணவர் சிங்கப்பூரில் நடைபெற இருக்கும் தெற்காசிய யோகா சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

    வெள்ளிப் பதக்கம் பெற்ற மாணவரை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும், உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கே.திருமலை, பள்ளி தாளாளர் அன்பரசி திருமலை, பள்ளி சட்ட ஆலோசகரும், உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான தி.மிராக்ளின் பால் சுசி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.

    • ஆலங்குளத்தில் பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் எப்போதும் அதிகரித்து காணப்படும்.
    • போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் பேரிகார்டுகள் உடனடியாக வைக்கப்பட்டன.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் எப்போதும் அதிகரித்து காணப்படும். இதன்காரணமாக அங்கு ஏற்படும் விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் ஆங்காங்கே பேரிகார்டுகள் வைக்க போலீசார் முடிவு செய்தனர்.

    இதையடுத்து போலீசாரின் முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் ஆலங்குளத்தில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனம் சார்பில் பேரிகார்டுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கார்த்திகா ஸ்டோர்ஸ் உரிமையாளர் எஸ்.எம்.டி. ரத்தினசாமி தலைமை தாங்கினார்.

    வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தென்காசி மாவட்டத் தலைவர் டி.பி.வி. வைகுண்டராஜா, செயலாளர் வி.கணேசன், பொருளாளர் ஐ.வி.என்.கலைவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆலங் குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபால் பர்ணபாஸ், இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது ஆகியோரிடம் 8 பேரிகார்டுகள் ஒப்படைக்கப்பட்டன.

    இதைத் தொடர்ந்து, ஆலங்குளம் பிரதான சாலை மற்றும் அம்பாசமுத்திரம் சாலை ஆகியவற்றில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் பேரிகார்டுகள் உடனடியாக வைக்கப்பட்டன.

    ×