search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரி தாலுகாவில் மழையால் இடிந்து விழுந்த வீடுகளுக்கு நிவாரண உதவி தொகை
    X

    சிவகிரி தாலுகாவில் மழையால் இடிந்து விழுந்த வீடுகளுக்கு நிவாரண உதவி தொகை

    • கனமழையால் சிவகிரி தாலுகா பகுதியில் 6 வீடுகள் இடிந்து விழுந்தது.
    • இடிந்து விழுந்த வீடுகளில் உரிமையாளர்களுக்கு தலைமையிடத்து துணை தாசில்தார் சரவணன் காசோலைகளை வழங்கினார்.

    சிவகிரி:

    சிவகிரி தாலுகா பகுதிகளிலும், சிவகிரிக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியிலும் கடந்த 10 நாட்களாக பெய்த கனமழையால் சிவகிரி தாலுகா பகுதியில் 6 வீடுகள் இடிந்து விழுந்தது.

    சிவகிரி அண்ணா தெற்கு தெருவை சேர்ந்த சேர்வாரன் மகன் மாரியப்பன், சிவகிரி அருகே தாருகாபுரம் மடத்து தெருவை சேர்ந்த கோபி மகன் குருசாமி, தேசியம்பட்டி என்ற நாரணாபுரம் கலைஞர் புது காலனி தெருவை சேர்ந்த பிள்ளையார் மகன் கருப்பசாமி, தென்மலை பஞ்சாயத்து ஏ.சுப்பிரமணியாபுரம் தெற்கு தெருவை சேர்ந்த செல்லையா மகன் சாலமன், ராமநாதபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அம்மையப்பன் மனைவி ராமலட்சுமி, சிவகிரி பாலகணேசன் தெருவை சேர்ந்த இசக்கி ராஜ் மனைவி ஆறுமுகத்தாள் ஆகிய 6 வீடுகள் கனமழையால் இடிந்து விழுந்து சேதமாயின.

    இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் சிவகிரி தாசில்தார் ஆனந்த், மண்டல துணைத் தாசில்தார் வெங்கடசேகர், தலை மையிடத்து துணை தாசில்தார் சரவணன், வருவாய் ஆய்வாளர்கள் சிவகிரி சுந்தரி, வாசுதேவநல்லூர் ராசாத்தி, கூடலூர் கோபால கிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் வீரசேகரன் மற்றும் உதவியாளர் அழகராஜா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கனமழையால் இடிந்து விழுந்து சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.

    மழையால் இடிந்து விழுந்து சேதம் ஏற்பட்ட வீடுகளுக்கு முழு நிவாரண உதவி தொகையாக ரூ.5 ஆயிரம், பகுதி நிவாரணத் தொகையாக ரூ.4ஆயிரம், இதற்கான தொகைக்கு காசோலையாக சம்பந்தப்பட்டவர்களிடம் தாலுகா அலுவலகத்தில் தலைமையிடத்து துணை தாசில்தார் சரவணன் காசோலைகளை வழங்கினார். அப்போது சிவகிரி வருவாய் ஆய்வாளர் சுந்தரி கிராம நிர்வாக அலுவலர் வீரசேகரன் ஆகியோர் உடன இருந்தனர்.

    Next Story
    ×