சிவகிரி அருகே திட்டப்பணிக்கான பூமி பூஜை

துரைச்சாமியாபுரம் கிராம ஊராட்சியில் சிமெண்ட் ரோடு, வாருகால் ஆகிய திட்டப்பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
சிவகிரி அருகே  திட்டப்பணிக்கான பூமி பூஜை
Published on

சிவகிரி:

சிவகிரி அருகே துரைச்சாமியாபுரம் கிராம ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.39.99 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் ரோடு, வாருகால், ஊரணி புணரமைப்பு, மயானக்கூடம் ஆகிய திட்டப் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. யூனியன் சேர்மனும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வி ஏசுதாஸ், முனியராஜ், துரைச்சாமியாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் மல்லிகா, கிளை செயலாளர்கள் வேல்பாண்டியன், கண்ணன், உதவி பொறியாளர் மார்கோனி, அரசு ஒப்பந்ததாரர் கதிர், மல்லீஸ்வரன், உள்ளார் மணிகண்டன், விக்கி மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com