என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிவகிரி பகுதியில் தொடர் மழையால் வீட்டு சுவர் இடிந்தது
- அதிர்ஷ்டவசமாக வீட்டில் உள்ளவர்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை.
- சிவகிரி தாசில்தார் ஆனந்த், வருவாய் ஆய்வாளர் சுந்தரி, கிராம நிர்வாக அலுவலர் வீரசேகரன், தலையாரி அழகராஜா ஆகியோர் பார்வையிட்டனர்.
சிவகிரி:
சிவகிரி மற்றும் வாசுதேவநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 4 மணி அளவில் இருந்து தொடர்ந்து இடி, மின்னலுடன் கனமழை பெய்து வந்தது.
இன்று காலை 8 மணி வரை தொடர்ந்து மழை பெய்தது. இந்நிலையில் சிவகிரி பாலகணேசன் தெருவை சேர்ந்த ஆறுமுகத் தாய் என்பவரின் வீட்டு சுவர் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் உள்ளவர்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை.
இதுகுறித்து சிவகிரி தாசில்தார் ஆனந்த், வருவாய் ஆய்வாளர் சுந்தரி, கிராம நிர்வாக அலுவலர் வீரசேகரன், தலையாரி அழகராஜா ஆகியோர் பார்வையிட்டனர்.
இடிந்து விழும் சூழலில் வீடு உள்ளதால் மாற்று இடத்தில் தங்க அறிவுறுத்தினர்.
Next Story






