search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirukalyana Festival"

    • 9-ம் நாளான இன்று முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது.
    • தேரோட்டத்தில் பங்கு பெற்று தேரினை வடம் பிடித்து இழுத்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    பிரசித்தி பெற்ற மற்றும் பழமையான கோவிலான தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

    இவ்வாண்டுக்கான திருவிழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நடைபெற்ற சிறப்பு பூஜைகளிலும், கொடியேற்றத்திலும் திரளான பக்தர்கள் பங்கேற்றிருந்தனர்.

    தொடர்ந்து விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்புப் பூஜைகள் அதனைத் தொடர்ந்து மண்டகப்படி பூஜைகள் நடைபெற்றன.

    விழாவின் 9-ம் நாளான இன்று முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு புறப்பட்ட உலகம்மன் தேர் 4 ரத வீதிகள் வழியாக வலம் வந்து 10.15 மணிக்கு நிலையம் வந்தடைந்தது.

    தேரினை ஏராளமான பக்தர்கள் திருவாசகம் பாடி, கோஷங்கள் எழுப்பி, பாடல்கள் பாடி, மேளதாளங்கள் முழங்க உற்சாகமாக வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தில் பங்கு பெற்று தேரினை வடம் பிடித்து இழுத்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

    • ஆஞ்சநேயர் வேடம் அணிந்து பக்தர்கள் பஜனை பாடி வந்தனர்
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே உள்ள வட தண்டலம் கிராமத்தில் அமைந்துள்ள ருக்குமணி சத்திய பாமா சமேத வேணுகோபால் சுவாமி கோவிலில் கடந்த 23-ந் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து நேற்று மண்டல அபிஷேகம் விழா காலை 9மணிக்கு நடைபெற்றது.

    மாலை 7 மணி அளவில் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருக்கல்யாண கோலத்துடன் சுவாமி வீதி உலா வந்துபக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    ஊர்வலத்தில் கிருஷ்ணர், ஆஞ்சநேயர் வேடம் அணிந்து பக்தர்கள்பஜனை பாடி வந்தனர்.

    இரவு சுபத்திரை திருமணம் நாடகமும் நடைபெற்றது.

    விழாவில் வடதண்டலம் சுற்றியுள்ள கிராம மக்கள் பலரும் விழாவில் கலந்துகொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

    • குடிசை கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமையானது
    • பொது மக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள குடிசை கிராமத்தில் அமைந்திருக்கும் 100 வருடங்கள் வரலாற்று சிறப்பு மிக்க பழமை வாய்ந்த ஸ்ரீபட்டாபி ராமசாமி பெருமாள் கோவிலில் ஸ்ரீராம பெருமானின் 48வது மண்டல பூஜை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

    ஸ்ரீராமர் சீதைக்கு மாலை மாற்றுதல் வைபவம் நடைபெற்றது. இதில் சீதை நடனம் ஆடிய நிலையில் ஸ்ரீ ராம பெருமாள் அருகில் கொண்டுவரப்பட்டது.

    இந்த திருக்கல்யாண நிகழ்வை ஏற்ப்பாடு செய்த ராஜ்குமார் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்
    • நெல்வாய் ஸ்ரீபட்டாபிராமசாமி கோவிலில் நடந்தது

    அணைக்கட்டு:

    ராம நவனியை முன்னிட்டு ஸ்ரீ ராம பெருமாள், சீதைக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.

    வேலூர் மாவட்டம் நெல்வாய் கிராமத்தில் அமைந்திருக்கும் 750 வருடங்கள் வரலாற்று சிறப்பு மிக்க பழமை வாய்ந்த ஸ்ரீபட்டாபிராமசாமி பெருமாள் கோவிலில் ஸ்ரீராமநவமியை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது.

    புனர்பூசம் நட்சத்திரத்தில், ஸ்ரீ பட்டா பிராமசாமி பெருமாளுக்கு அதிகாலையில் பால், பழம், தேன் கொண்டு அபிஷேக ஆராதனைகள் செய்து சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டது.

    அதை தொடர்ந்து மாலை ஸ்ரீராமருக்கு காப்புக்கட்டுதல் வைபோவம் நடைபெற்றது. அதன்பின் ஸ்ரீராமபெருமாளுக்கும் அன்னை சீதைக்கும் ராஜ அலங்காரத்துடன் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

    அதற்கு முன்னதாக பட்டாட்சியர்களால் நடனமாடி ஸ்ரீராமபெருமாளுக்கும் சீதைக்கும் மாலை மாற்றுதல் வைபவம் நடைபெற்றது. இதில் சீதை நடனம் ஆடிய நிலையில் கொண்டுவரப்பட்டார்.

    இந்த திருக்கல்யாண நிகழ்வில் நெல்வாய் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிளில் இருந்து வந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீராமர் சீதை திருக்கல்யாண வைபவத்தில் கலந்துகொண்டு கல்யாணத்தை கண்டுகளித்து தரிசனம் செய்து சென்றனர்.

    பின்னர் திருக்கல்யாணம் கான வந்த அனைத்து பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது.

    • ஆண்டாள்-ரங்கமன்னார் திருக்கல்யாண திருவிழா தொடங்குகிறது.
    • தக்கார் ரவிச்சந்திரன், அறங்காவலர் முத்துராஜா ஆகியோர் செய்து வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    108 வைணவ கோவில்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூரனது ஆண்டாள், பெரியாழ்வார் என இரு ஆழ்வார்கள் அவதரித்த சிறப்புக்குரிய தலமாகும். இங்கு பெரியாழ்வாரின் மகளாக வளர்ந்த ஆண்டாள் மார்கழி மாதத்தில் பாவை நோன்பிருந்து பங்குனி உத்திர நாளில் ரங்க மன்னாரை மணம் புரிந்தார் என்பது வரலாறு ஆகும்.

    ஆண்டுதோறும் பங்குனி உத்திர நாளில் ஸ்ரீவில்லி புத்தூரில் ஆண்டாள்- ரங்க மன்னார் திருக்கல்யாண திருவிழா கோலகலமாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா வருகிற 28-ந் தேதி

    (செவ்வாயக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    13 நாட்கள் விமரிசையாக நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் இரவு பல்வேறு வாகனங்களில் ஆண்டாள்-ரங்கமன்னார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். ஏப்ரல் 1-ந் தேதி 5-ம் நாள் விழாவில் கருட சேவை நடைபெறுகிறது.

    விழாவின் உச்ச நிகழ்வான திருக்கல்யாணம் ஏப்ரல் 5-ந் தேதி நடைபெறுகிறது. அன்று காலை செப்புத்தேரில் ஆண்டாள்-ரங்கமன்னார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். அதன்பின் பெரியாழ்வார் ஆண்டாளை கன்னிகா தானம் வழங்கும் வைபவம் நடைபெறுகிறது.

    பின்னர் ஆடிப்பூர கொட்டகையில் எழுந்தருளும் ஆண்டாள்- ரங்கமன்னாருக்கு இரவு 7 முதல் 8 மணிக்குள் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெறும். 9-ந் தேதி (வெள்ளிக்கிழமை) குறடு மண்டபத்தில் புஷ்பயாகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

    திருக்கல்யாண திருவிழாவிற்காக கோவிலில் உள்ள ஆடிப்பூர கொட்டகையில் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விழா ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், அறங்காவலர் முத்துராஜா ஆகியோர் செய்து வருகின்றனர்.

    ×