search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையநல்லூரில்  12 இடங்களில் புதிய கண்காணிப்பு காமிராக்கள்
    X

    கடையநல்லூரில் 12 இடங்களில் புதிய கண்காணிப்பு காமிராக்கள்

    • ரஹ்மானியாபுரம் மேற்கு பகுதி தெருக்களில் கண்காணிப்பு காமிராக்களைப் பொருத்தினர்.
    • புளியங்குடி டி.எஸ்.பி. வெங்கடேசன் ரிப்பன் வெட்டி கண்காணிப்பு கேமராக்களை திறந்து வைத்தார்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் ரஹ்மானியபுரம் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக இரவு நேரத்தில் பூட்டிக் கிடக்கும் வீடுகளை குறிவைத்து முகமூடிக் கொள்ளையர்களால் தொடர் திருட்டு நடைபெற்றது. இந்த குற்றசம்பங்களை கட்டுப்படுத்தவும், நகரின் முக்கிய பகுதிகளில் காமிராக்களை பொருத்தவும், கடையநல்லூர் காவல்துறை தீவிர முயற்சி மேற்கொண்டது.

    இந்நிலையில் ரஹ்மானியாபுரம் மேற்குப் பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் ஒன்றிணைந்து தக்வா ஐக்கிய கூட்டமைப்பு என்ற அமைப்பை ஏற்படுத்தி அந்த அமைப்பின் சார்பில் பொதுமக்களின் உதவியுடன் ரஹ்மானியாபுரம் மேற்கு பகுதியில் பல்வேறு தெருக்களில் 12 இடங்களில் கண்காணிப்பு காமிராக்களைப் பொருத்தினர்.

    கண்காணிப்பு காமிராக்கள் பயன்பாட்டிற்கான திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கூட்டமைப்பின் தலைவர் முகமது அலி தலைமை தாங்கினார், துணைத் தலைவர் யூசுப், செயலாளர் சதக்கத்துல்லா, துணைச் செயலாளர் செய்யது அலி, பொருளாளளர் செய்யது முஹம்மது, ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு விருந்தினராக புளியங்குடி டி.எஸ்.பி. வெங்கடேசன் ரிப்பன் வெட்டி கண்காணிப்பு கேமராக்களை திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்- இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன், நகர மன்ற உறுப்பினர்கள் முகைதீன் கனி, ஹைதர் அலி, யாஸர் கான் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் அப்துல் மஜீத், மைதீன்அப்துல் மஜீத், திவான் மைதீன், நத்தகர் பாதுஷா மற்றும் போலீசார், பொதுமக்கள் ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×