search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Courtalam tourists"

    • வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியதால் சுற்றுலா பயணிகள் குளிக்க பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்பட்டிருந்தது.
    • வெள்ள பெருக்கு குறைந்ததால் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அங்கும் அனுமதிக்கப்பட்டனர்.

    தென்காசி:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    தென்காசி மாவட்டத்திலும் கடந்த 4 நாட்களாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக பழைய குற்றாலம், ஐந்தருவி, மெயின் அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியதால் சுற்றுலா பயணிகள் குளிக்க பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் நேற்று காலையில் ஐந்தருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் மெயின் அருவிலும் வெள்ள பெருக்கு குறைந்ததால் நேற்று மாலை முதல் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அங்கும் அனுமதிக்கப்பட்டனர்.

    தென்காசி மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததையடுத்து தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிப்பதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் அருவிகளில் குளிப்பதற்கு மிகவும் குறைந்த அளவு சுற்றுலா பயணிகளே ஆர்வம் காட்டினர்.

    ×