செங்கோட்டையில் வீட்டில் கஞ்சா பதுக்கிய 2 வாலிபர்கள் கைது

2 வாலிபர்கள் தங்களது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 2 வாலிபர்களையும் கைது செய்தனர்.
செங்கோட்டையில் வீட்டில் கஞ்சா பதுக்கிய 2 வாலிபர்கள் கைது
Published on

செங்கோட்டை:

செங்கோட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணா தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது வடக்கு கதிரவன் காலனி பகுதியில் 2 வாலிபர்கள் தங்களது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு போலீசார் சென்று விசாரித்தனர்.

அப்போது அந்த காலனியில் வசித்து வரும் அரவிந்த்(வயது 26), அருண்குமார்(20) ஆகியோர் வீடுகளில் சோதனை செய்தபோது கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 2 வாலிபர்களையும் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com