என் மலர்tooltip icon

    தஞ்சாவூர்

    • வழக்கு சம்பந்தமான 100-க்கும் மேற்பட்ட புகார்கள் விசாரணைக்காக நிலுவையில் இருந்தன.
    • இன்ஸ்பெக்டர்கள் ஷர்மிளா, பாலசந்திரன், மற்றும் போலீசார், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    கும்பகோணம்:

    திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள், சோழபுரம், பந்தநல்லூர், ஆகிய காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வழக்கு சம்பந்தமான 100-க்கும் மேற்பட்ட புகார்கள் விசாரணைக்காக நிலுவையில் இருந்தன.

    அவற்றை விசாரித்து உடனடி தீர்வு காண வேண்டும் என்ற நோக்கில்,போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் உத்தரவுபடி புகார்கள் மீதான சிறப்பு முகாம் திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக் தலைமையில் திருப்பனந்தாள் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

    இதில் இன்ஸ்பெக்டர்கள் ஷர்மிளா, பாலசந்திரன், மற்றும் போலீசார், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் குடும்ப பிரச்சினை, கொடுக்கல் வாங்கல் பிரச்சினை, வாய் தகராறு, காதல் பிரச்சினை, சொத்து பிரச்சினை, உள்ளிட்ட 100-க்கு மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. 30 மனுக்கள் மீது உடனே விசாரணை செய்து தீர்வு காணப்பட்டது.

    • நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் கைப்பந்து போட்டி நடைபெறுகிறது.
    • போட்டிகளில் 15 வயது முதல் 24 வயது வரையுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட விளையாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் கைப்பந்து போட்டி நடைபெறுகிறது.

    முதல் நாளில் ஆண்களு க்கான போட்டியும், 2-வது நாளில் பெண்களுக்கான போட்டியும் நடைபெறுகிறது.

    அதேப்போல் ஆண்களுக்கான கால்பந்து போட்டி 20-ந் தேதியும், பெண்களுக்கான கால்பந்து போட்டி 26-ந் தேதியும் நடக்கிறது. ஆண்களுக்கான கபடி போட்டி 26-ந்தேதியும், பெண்களுக்கான கபாடி போட்டி 27-ந் தேதியும் நடக்கிறது.

    போட்டிகள் காலை 8 மணி முதல் நடத்தப்பட உள்ளன. இந்த போட்டிகளில் 15 வயது முதல் 24 வயது வரையுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளலாம்.

    ஆண்கள், பெண்க ளுக்கான கபடி போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசாக ரூ.20 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.10 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும். கால்பந்து போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.20 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.

    கைப்பந்து போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.10 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.

    போட்டிகளில் கலந்து கொள்வதற்கு பிறப்பு சான்றிதழ், ஆதார் நகல் அவசியம் கொண்டு வர வேண்டும். இதில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டு பயனபெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மூத்த உறுப்பினர் கணேசன் மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார்.
    • ஒன்றிய குழு,கிளை பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கபிஸ்தலம்:

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பாபநாசம் ஒன்றிய 24- வது மாநாடு கபிஸ்தலம் அருகே உள்ள ஈச்சங்குடி கிராமத்தில் விவசாயிகள் சங்க பொறுப்பாளர் முருகேசன் தலைமையில்நடைபெற்றது. மூத்த உறுப்பினர் கணேசன் மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார்.

    ஒன்றிய குழு உறுப்பினர் புகழேந்தி வரவேற்பு ரையாற்றினார். மாநாட்டில் சங்க உறுப்பினர் கிருஷ்ணன், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சாமிநாதன் மறைவிற்கு இரங்கல் செலுத்தப்பட்டதுஒன்றியச் செயலாளர் கனகராஜ் வேலை அறிக்கை வாசித்தார். வடக்கு மாவட்ட செயலாளர் சாமு.தர்மராஜன் மாநாட்டை துவங்கிவைத்து உரையாற்றினார்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் மு.அ.பாரதி, ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர்

    ஆர்.தில்லைவனம், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.பரமசிவம், ஒன்றிய செயலாளர் பொன்.சேகர், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேந்திரன், ஈச்சங்குடி ஊராட்சி மன்ற தலைவர் பத்மாவதி, மாதர் சங்கம் சந்ரா, விதொச ஒன்றிய செயலாளர் இளங்கோவன், இளைஞர் பெருமன்றம் லட்சுமி நாராயணன்ஆகியோர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.

    மாநாட்டில் நிலுவையில் உள்ள பயிர் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட நெல், வாழை, கரும்பு போன்ற பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

    உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அறையபுரம் தட்டுமால் படுகை விவசாயிகளுக்கு உடனடியாக ரத்து வாரி பட்டா வழங்கிட வேண்டும்.விவசாயத்தை நாசப்படுத்தும் காட்டுப் பன்றிகளை உடனடியாக பிடித்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய குழு,கிளை பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • நடமாடும் காய்கனி விற்பனை வண்டி மற்றும் பழக்கன்றுகள் தொகுப்பு வழங்கப்பட்டது.
    • காய்கனி விற்பனை வண்டி ரூ.15000 மானியத்தில் இலவசமாக வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் வட்டாரத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் நடமாடும் காய்கனி விற்பனை வண்டி மற்றும் பழக்கன்றுகள் தொகுப்பு வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

    இந்த விழாவில் டி.கே.ஜி.நீலமேகம் எம்எல்.ஏ. தலைமை தாங்கி பயனாளிகளுக்கு நடமாடும் காய்கனி விற்பனை வண்டி, பழக்கன்றுகள் தொகுப்பு ஆகியவற்றை வழங்கினார்.

    தோட்டக்கலை துறையின் மூலம் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் காய்கனி விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு நடமாடும் காய்கனி விற்பனை வண்டி ரூ.15000 மானியத்தில் இலவசமாக 11 நபர்களுக்கு வழங்கப்பட்டது.

    மேலும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் வட்டாரத்தில் 12 கிராமங்கள் 2023-24 ஆம் ஆண்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    அவற்றில் ஒரு கிராமத்திற்கு தலா 300 வீதம், ஒரு தொகுப்பிற்கு ரூ. 150 மதிப்பில் 75 சதவீத மானியமாக பழக்கன்று தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. உழவர் சந்தையை சுற்றியுள்ள கிராமங்களில் காய்கறி சாகுபடி பரப்பினை அதிகரிக்க 75 சதவீதம் மானியத்தில் ரூ.10000 மதிப்பில் இடுப்பொருட்கள் வழங்கப்பட்டது.

    மேலும் மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மாடித்தோட்டம் அமைப்பதற்கு ரூ .900 மதிப்புள்ள 6 செடி வளர்க்கும் பைகள், 12 கிலோ தேங்காய் நார்கள், 6 காய்கறி விதைகள், அசோஸ்பைரில்லம், சூடோமோனாஸ் மற்றும் வேப்பெண்ணெய் ஆகியவை 50 சதவீதம் ரூ. 450 மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது என்று தோட்டக்கலைதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் தோட்டக்கலை உதவி இயக்கு நர்கள் முத்தமிழ்ச்செல்வி, கனிமொழி, உதவி தோட்டக்கலை அலுவலர்கள் வெங்கடாசலபதி, தர்மதுரை, ராஜ்குமார், கரிகாலன், பாக்கியராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • காரில் சிக்கி இருந்தவர்களை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
    • விபத்து குறித்து கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்தவர் நடராஜன்.

    இவர் தனது குடும்பத்தினர் 7 பேருடன் இன்று கோயம்புத்தூருக்கு காரில் புறப்பட்டார்.

    காரை டிரைவர் நடராஜன் என்பவர் ஒட்டினார்.

    கார் தஞ்சாவூர் அருகே உள்ள 8 கரம்பை புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது எதிரே லாரி வந்து கொண்டிருந்தது.

    இதனால் டிரைவர் காரை சாலையோரம் ஒதுக்கியுள்ளார்.

    ஆனால் கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கொட்டி வைத்திருந்த நெல் குவியல் மீது மோதி வயலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளனாது.

    இந்த விபத்தில் 3 பேர் காரை விட்டு வெளியே வந்தனர்.

    நடராஜன், டிரைவர் நடராஜன், ஜெயலட்சுமி, சுலோட்சனா ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    அப்போது அவ்வழியே சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விபத்தை பார்த்துவிட்டு காரில் சிக்கிக் கொண்டவர்களை பொதுமக்கள் உதவியுடன் மீட்டனர்.

    இதனையடுத்து காயம் அடைந்தவர்களை தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்த விபத்து குறித்து கள்ளப்பெரும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் விபத்தை கண்டு உடனடியாக ஆம்புலன்ஸை நிறுத்தி மீட்ட ஊழியர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

    • பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குளத்தை தூர்வாரி மதில் சுவர் கட்ட வேண்டும்.
    • மாத்தூர் ஆதிதிராவிடர் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் மாத்தூர் கிழக்கில் உள்ள ஆதிதிராவிடர் நலத் தொடக்கப்பள்ளி கட்டிடம் பழுதாகியதால் இடிக்கப்பட்டு ஓராண்டாகியும் கட்டுமான பணி தொடங்கப்படாமல் உள்ளது.

    எனவே போர்க்கால அடிப்படையில் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.

    பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குளத்தை தூர்வாரி மதில் சுவர் கட்ட வேண்டும்.

    இடுகாடு, சாலை, எரியூட்டும் மேடை, மதில் சுவர், அடிபம்பு அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று தஞ்சை தாலுகா அலுவலகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

    இதற்கு ஒன்றிய செயலாளர் அபிமன்னன் தலைமை தாங்கினார்.

    ஒன்றிய குழு உறுப்பினர் அமுல்ராஜ், கிளை செயலாளர்கள் சரிதா, மலர்விழி, ராஜ்மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    போராட்டத்தை மாவட்ட செயலாளர் சின்னை. பாண்டியன் தொடக்கி வைத்தார் .

    மாநகர செயலாளர் வடிவேலன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், சங்கிலி முத்து, வன ரோஜா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • பணியிட மாறுதல்கள், பதவி உயர்வு மாறுதல்களை கலந்தாய்வு மூலம் மேற்கொள்ள வேண்டும்.
    • நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைப்பு குழு தஞ்சாவூர் மண்டலம் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    இதற்கு மாநிலத் துணைத் தலைவர் மதிவாணன் தலைமை தாங்கினார்.

    மாநில பொருளாளர் சுவாமிநாதன் கோரிக்கை விளக்க உரையாற்றினார்.

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாநில செயலாளர் கோதண்டபாணி தொடக்க உரை ஆற்றினார்.

    இந்த உண்ணாவிரத போராட்டத்தில், நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களை அரசு ஊழியர்கள் என அறிவித்து கருவூலம் மூலம் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    பணியிட மாறுதல்கள் , பதவி உயர்வு மாறுதல்களை கலந்தாய்வு மூலம் மேற்கொள்ள வேண்டும்.

    அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பலர் பேசினர்.

    முடிவில் டி.என்.ஜி.இ.ஏ. மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் சோமசுந்தரம் நிறைவுறையும், ஜெயங்கொண்டம் நகராட்சி மாநில செயலாளர் எஸ்தர் ஷோபா நன்றி உரையும் கூறினர்.

    • இடப்பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது.
    • ஒரத்தநாடு சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வழக்குபதிவு செய்து குருராஜை கைது செய்தார்.

    திருவோணம்:

    ஒரத்தநாடு அருகே உள்ள பருத்தியப்பர் கோவில் கிராமத்தில் வசித்து வருபவர் குமார்.

    இவரது மனைவி கல்பனா (வயது 40).

    இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த குருராஜ் என்பவருக்கும் இடப்பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது.

    இதில் குருராஜ், உருட்டு கட்டையால் கல்பனாவை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் பலத்த காயம் அடைந்த கல்பனா ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு ஒரத்தநாடு சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வழக்கு பதிவு செய்து, குருராஜை கைது செய்தனர்.

    • திருலோகி நெடுந்திடலில் 2 வகுப்பறை கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டது.
    • ரூ.1 கோடியே 89 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்கள் கட்டி திறக்கப்பட்டது.

    கும்பகோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் அடுத்த வீராக்கன் ஊராட்சி, திருவாய்பாடியில் வானவில் பாலின வள மையம் மற்றும் மற்றும் திருலோகி நெடுந்திடலில் 2 வகுப்பறை கட்டிடங்கள், கூத்தனூர் ஊராட்சியில் அங்கன்வாடி கட்டிடம், இருமூளை ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் உள்பட 9 இடங்களில் ரூ.1 கோடியே 89 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடங்கள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

    விழாவில் மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப், எம்.பி.க்கள் ராமலிங்கம், கல்யாணசுந்தரம், சண்முகம், அரசின் தலைமை கொறடா கோவி. செழியன், ஒன்றியக்குழு தலைவர் தேவி ரவிசந்திரன், துணை தலைவர் அண்ணாதுரை, ஒன்றிய செயலாளர்கள் மிசா மனோகரன், ரவி. உதயசந்திரன், பேரூராட்சி தலைவர் வனிதா ஸ்டாலின், துணை தலைவர் கலைவாணி சப்பாணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜன், நந்தினி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் இளவரசி, ஊராட்சி தலைவர் பிரதாப் சிங் மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராம முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரேஷன் கடையில் பொருட்களின் இருப்பு விவரம் சரியாக உள்ளதா? என ஆய்வு செய்தார்.
    • அரிசி, பருப்பு மற்றும் இதர பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.

    பாபநாசம்:

    பாபநாசம் வடக்கு வீதியில் உள்ள வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்துக்கு உட்பட்ட ரேஷன் கடை உள்ளது.

    இந்த கடையில் இருந்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு மற்றும் இதர பொருட்களின் தரம் குறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் வாசுதேவன் திடீரென பார்வயைிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும், பொருட்களின் இருப்பு விவரம் சரியாக உள்ளதா? என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    ஆய்வின்போது வருவாய் ஆய்வாளர் அஜித்குமார், சங்க செயலாளர் சரவணன், விற்பனையாளர் சிவகாம சுந்தரி மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

    • மதுக்கூர் பகுதியில் சில கனரக வாகனங்கள் எவ்வித உரிமமும் இன்றி இயங்கி வருகிறது.
    • சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு ஆலோசனைகள் வழங்க வேண்டும்.

    மதுக்கூர்:

    காவி புலிப்படை நிறுவன தலைவர் புலவஞ்சி சி.பி.போஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிரு ப்பதாவது:-

    மதுக்கூர் பகுதியில் சில கனரக வாகனங்கள் எவ்வித உரிமமும் இன்றி இயங்கி வருகிறது.

    இதனால் அவ்வப்போது விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    எனவே, போக்குவரத்து காவல்துறை சார்பில் அனைத்து வாகன உரிமையாளர்களையும் அழைத்து சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு ஆலோ சனைகள் வழங்க வேண்டும்.

    மேலும், எவ்வித உரிமம் மற்றும் விதிமுறைகளை பின்பற்றாத கனரக வாகனங்களை பறிமுதல் செய்து மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விழா கடந்த 15-ந்தேதி தொடங்கி வருகிற 24-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
    • 24-ந் தேதி சந்திரசேகரர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, திருக்கருகாவூரில் அமைந்து ள்ள புகழ்பெற்ற அம்பாள் திருத்தலமாக விளங்கி வரும் கர்ப்பரட்சா ம்பிகை அம்பாள் உடனுறை முல்லை வனநாதர் திருக்கோயிலில் நவராத்திரி விழா நேற்று முன்தினம் 15-ந்தேதி தொடங்கி வரும் 24ந்தேதி வரை நடைபெறவுள்ளது.

    இதில் 20ந்தேதி ஏகதின இலட்சார்ச்ச னையும், 23ந்தேதி சரஸ்வதி பூஜை தினத்தன்று காலை கர்ப்ப ரட்சாம்பிகை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராத னையும், 24ந்தேதி விஜயதசமி அன்று மாலை சுவாமி சந்திர சேகர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு போடும் நிகழ்ச்சிச்சியும். இரவு ஷீரகுண்டம் எனும் திருக்குளத்தில் தெப்ப திருவிழாவும் நடைபெற உள்ளது.

    விழா ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் மற்றும் உதவி ஆணையர் ப. ராணி மேற்பா ர்வையில் கோயில் செயல் அலுவலர் சு. அசோக்குமார் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    ×