என் மலர்tooltip icon

    தஞ்சாவூர்

    • ஆண்கள் மற்றும் பெண்களுக்கான விளையாட்டு போட்டிகள் தொடங்கின .
    • ஆண்களுக்கான கபடி 26-ந் தேதியும், பெண்களுக்கான கபடி 27-ந் தேதியும் நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் இன்று 15 வயது முதல் 25 வயது வரையிலான மாணவ- மாணவிகள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கின .

    முதல் நாளான இன்று ஆண்களுக்கான கைப்பந்து , கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளை துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார் . இந்த நிகழ்ச்சியில் டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ, மேயர் சண் .ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி, மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி.

    உடற்கல்வி ஆய்வாளர் கற்பகம், தி.மு.க. பகுதி செயலாளர் சதாசிவம், வடக்கு ஒன்றிய செயலாளர் முரசொலி, விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ராணி கண்ணன், விளையாட்டு பயிற்சியாளர் பாபு மற்றும் ஆசிரிய , ஆசிரியைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து நாளை பெண்களுக்கான கையுந்து விளையாட்டு போட்டிகள், கால்பந்து போட்டிகள் 26-ந் தேதியும் நடைபெறும்.

    இதேபோல் ஆண்களுக்கான கபடி 26-ந் தேதியும், பெண்களுக்கான கபடி 27-ந் தேதியும் நடைபெற உள்ளது.

    இந்தப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு கையுந்து பந்து விளையாட்டு போட்டிகள் ( ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கு ) முதல் பரிசாக ரூ.15000, 2-ம் பரிசாக ரூ.10000, 3-ம் பரிசாக ரூ.5000 வழங்கப்படும்.

    கால்பந்து போட்டியில் (ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கு ) முதல் பரிசாக ரூ.25000, 2-ம் பரிசாக ரூ.20000, 3-ம் பரிசாக ரூ.10000 வழங்கப்படும். கபடி போட்டியில் (ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கு ) முதல் பரிசாக ரூ.20000, 2-ம் பரிசாக ரூ.10000, 3-ம் பரிசாக ரூ.5000 வழங்கப்படும்.

    • முதல் தளத்தில் 7 கடைகளும், 6 தங்கும் அறைகளும், கழிப்பறைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
    • இனிமேல் ஆம்னி பஸ்கள் இந்த நிலையத்திலிருந்து தான் இயக்கப்பட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை சாலையோரத்தில் ஆம்னி பஸ்கள் நிறுத்தப்பட்டு இயக்கப்படுவதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைத் தவிர்ப்பதற்காக புதிய பஸ் நிலையத்தின் பின்புறம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 10.41 கோடி மதிப்பில் ஆம்னி பஸ் நிலையம் கட்டப்பட்டது.

    சுமார் 5,400 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்நிலையத்தில் 25 பஸ்கள் நிறுத்துவதற்கு ஏற்ப நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    தரைதளத்தில் 9 கடைகள், ஆம்னி பேருந்துகளின் 18 அலுவலகங்கள், ஆண், பெண் கழிப்பறைகள், பொருள்கள் வைப்பறை ஆகியவை கட்டப்பட்டுள்ளன. முதல் தளத்தில் 7 கடைகளும், 6 தங்கும் அறைகளும், கழிப்பறைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    இந்த நிலையத்தைத் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஜூலை 27 ஆம் தேதி திறந்து வைத்தார். அதன் பின்னரும் பணிகள் நடைபெற்று வந்ததால், மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடுவதில் தாமதம் ஏற்பட்டது.

    இந்நிலையில், ஆம்னி பஸ் நிலையத்தை நேற்று மாலை பயன்பாட்டுக்கு மேயர் சண். ராமநாதன் கொண்டு வந்தார். இதையடுத்து அங்கிருந்து பஸ் போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.

    அப்போது மேயர் சண் ராமநாதன் கூறுகையில், இனிமேல் ஆம்னி பஸ்கள் இந்நிலையத்திலிருந்து தான் இயக்கப்பட வேண்டும். இதை மீறினால் போக்குவரத்து துறை, காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் மகேஸ்வரி, மாநகர் நல அலுவலர் சுபாஷ்காந்தி, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் சேகர் ,புண்ணியமூர்த்தி மற்றும் வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • தண்ணீர் பற்றாக்குறையால் குறுவை சாகுபடி செய்த மகசூல் பெருமளவு குறைந்தது.
    • ரூ.35-க்கு விற்கப்பட்ட அரிசி தற்போது ரூ.50-க்கு விற்பனையாகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்பட காவிரி டெல்டா மாவட்டங்கள் தமிழகத்தின் உணவு தேவை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது. இந்த ஆண்டு குறுவை பாசனத்திற்கு குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இருந்தாலும் கர்நாடக அரசு உரிய காவிரி நீரை தமிழகத்திற்கு வழங்காததால் இந்த ஆண்டு குறுவை விளைச்சல் கடுமையாக பாதிப்பட்டுள்ளது.

    மேலும் தண்ணீர் பற்றாக்குறையால் குறுவை சாகுபடி செய்த மகசூல் பெருமளவு குறைந்தது. மேலும் அடுத்த ஆண்டு முதல் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் என்ற அபாய நிலை ஏற்பட்டு விடுமோ என விவசாயிகள் அஞ்சுகின்றனர்.

    இது தவிர கர்நாடகாவில் இருந்து டெல்டா மாவட்டங்களுக்கு வரக்கூடிய அரிசி லோடுகள் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து வருகிறது.இதனால் மைசூர் பொன்னி ,கர்நாடக பொன்னி போன்ற அரிசிகளின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.4 வீதம் மூட்டை ஒன்றுக்கு ரூ.100 வரை விலை அதிகரித்துள்ளது. இந்த விலையேற்றம் மேலும் அதிகரிக்கும் என அரிசி வணிகர்கள் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து அரிசி வியாபாரிகள் கூறும்போது:-

    கடந்த ஆறு மாதங்களில் ரூ.35-க்கு விற்கப்பட்ட அரிசி தற்போது ரூ.50-க்கு விற்பனையாகிறது . கர்நாடகா, தமிழகத்திலும் அரிசி உற்பத்தி இந்த ஆண்டு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் இன்னும் விலை ஏற வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே உள்ள நெல்களை அரவை செய்து தற்போது குறைந்து விலைக்கு வழங்கி வந்தாலும் இனி வரக்கூடிய காலங்களில் மேலும் உயர வாய்ப்புள்ளது என்றனர். அரிசி விலை உயர்வால் சாமானிய மக்கள் கடுமையாக பாதிப்பட்டு உள்ளனர்.

    • வரி செலுத்துவதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
    • விழா ஏற்பாடுகளை கல்லூரி மேலாளர் கண்ணன் செய்திருந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மருது பாண்டியர் கல்லூரியில் வருமானவரி துறை சார்பில் வருமான வரி செலுத்துதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மருது பாண்டியர் கல்வி நிறுவனங் களின் தலைவர் மருதுபாண் டியன் தலைமை தாங்கினார். மருதுபாண்டியர் கல்லூரி முதல்வர் விஜயா முன்னிலை வகித்தார். மருதுபாண்டியர் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுப்பிரமணியன், துணை முதல்வர் தங்கராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    சிறப்பு விருந்தினராக வருமான வரித்துறை உதவி ஆணையர் சீனிவாசன் கலந்து கொண்டு வருமான வரியின் முக்கியத்து வத்தையும், வரி செலுத்துவதன் அவசியத்தையும் மாண வர்களுக்கு எடுத்துரைத்தார். இதில் வருமான வரித்துறை அலுவலர் வில்விஜயன் மற்றும் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் 350-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயன டைந்தனர். முன்னதாக மருது பாண்டியர் கல்லூரி யின் வணிக மேலாண்மை துறைத்தலைவர் வித்யா அனைவரையும் வரவேற் றார். முடிவில் வணிகவியல் துறை தலைவர் செந்தில் குமார் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை கல்லூரி மேலாளர் கண்ணன் செய்திருந்தார்.

    • இந்த சாலை அடிக்கடி போக்குவரத்து நெருக்கடியாகவே காணப்படும்.
    • போலீசார் சாலையை சீர்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பட்டுக்கோ ட்டை சாலையில் அரசு மருத்துவமனை எதிரில் ஒரு அரசு வங்கி மற்றும் தனியார் வங்கி மேலும் தனியாருக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட் மற்றும் பல வகையான கடைகள் இயங்கி வருகிறது. இதனால் இங்கு வரும் வாடிக்கையாளர்கள் அரசு மருத்துவமனை சாலையிலே வாகனங்கள் நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர். இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி யாகவே இருந்து வருகிறது.

    பேராவூரணி அருகே உள்ள முடச்சிக்காடு கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகள் ஸ்ரீமுகி (வயது 30). இவர் பேராவூரணி அண்ணா சிலை அருகில் உள்ள மருந்துக் கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் கடையின் வேலையாக வங்கிக்கு சென்று வேலை யை முடித்துவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் கடைக்கு புறப்படும் போது அரசு பேருந்து ஒன்று பட்டுக்கோ ட்டையிலிருந்து அந்த மருத்துவமனை சாலையில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது வங்கி மற்றும் தனியார் கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை சாலையில் நிறுத்தியிரு ந்ததால் ஸ்ரீ முகி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சென்டர் மீடியனுக்கும் பேருந்துக்கும் இடையில் சிக்கிக் கொண்டது. இந்த விபத்தில் ஸ்ரீமுகி படுகாயம் அடைந்தார்.

    இதைத் தொடர்ந்து பேருந்தை டிரைவர் உடனே நிறுத்தியுள்ளார். அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அந்தப் பெண்ணை மீட்டு தனியார் எலும்பு முறிவு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சாலையை ஆக்கிரமித்து வைத்திருந்த வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவ ரத்தை சரி செய்தனர்.

    பேராவூரணி நகர் பகுதியில் சாலை ஆக்கிரமிப்பு மற்றும் நடை பாதை ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த அதிகாரிகள் உடனடியாக அப்புறப்படுத்தி மேலும் விபத்துகள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இ.டெண்டர் முறையை ரத்து செய்து ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
    • காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு இன்று தமிழ்நாடு மின் வாரிய ஊழியர் மத்திய அமைப்பு ( சி.ஐ.டி.யூ) சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதற்கு வட்டத் தலைவர் அதிதூத மைக்கேல்ராஜ் தலைமை தாங்கினார். கௌரவ தலைவர் கோவிந்தராஜு, மண்டல செயலாளர் ராஜாராமன், வட்ட செயலாளர் காணிக்கராஜ், பொருளாளர் சங்கர், துணைத் தலைவர் ஆரோக்கிய சாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    சி.ஐ.டி.யூ மாநில செயலாளர் ஜெயபால் வாழ்த்துரை வழங்கினார்.இந்தப் போராட்டத்தில் இ.டெண்டர் முறையை ரத்து செய்து ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

    தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்ப ட்டன. இதில் கோட்டத் தலைவர்கள் ஆறுமுகம் , கலைச்செல்வன், கோட்ட செயலாளர்கள் சேக் அகமது உஸ்மான் உசேன், முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கோட்ட செயலாளர்கள் அறிவழகன் நன்றி கூறினார்.

    • லாரியின் ஒரு பக்க முன்புறம் சேதமடைகிறது.
    • அக்கம் பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் இருந்து காரைக்காலுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு புதுச்சேரி போக்குவரத்து கழக பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ் திருநாகேஸ்வரம் தாண்டி சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிரே காரைக்காலில் இருந்து கும்பகோணம் நோக்கி சுமை ஏற்றிக்கொண்டு வந்த லாரியும், பஸ்சும் திடீரென நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் பஸ்சின் முன் பக்கம் நசுங்கியது.

    லாரியின் ஒரு பக்க முன்புறம் சேதமடைகிறது.

    இந்த விபத்தில் பஸ் டிரைவர் காரைக்கால் சேத்தூர் பகுதியை சேர்ந்த சரவணன் (வயது 38). கண்டக்டர் புதுச்சேரி திருப்புவனம் பாளையம் பகுதியை சேர்ந்த சங்கர் (47), கூத்தகுடியை சேர்ந்த சிவசக்தி (17), காரைக்கால் கணபதி நகரை சேர்ந்த சிராஜ் நிஷா (58), விருதுநகர் சொக்கநாதபுத்தூர் பகுதியை சேர்ந்த சித்ரா (30), குடவாசலை சேர்ந்த ரவி (57) ஆகிய 6 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து திருநீலக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • உயர் அழுத்த மின்பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் இளஞ்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சை அருகே உள்ள திருமலைசமுத்திரம் துணை மின் நிலையத்தில் இருந்து வரும் உயர் அழுத்த மின்பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெ றுகிறது.

    எனவே வல்லம், வல்லம்புதூர், மொன்னையம்பட்டி, குருவாடிப்பட்டி, நாட்டா ணி, திரும லைசமுத்திரம், ஆலக்குடி, கல்விரா யன்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    இதேபோல் செங்கிப்ப ட்டி, வெண்டை யம்பட்டி, வளம்பக்குடி, ராயமு ண்டான்பட்டி, ராயரா ம்பட்டி, சானூ ரப்பட்டி, ஆச்சாம்பட்டி, பாளைய ப்பட்டி சுற்றுவ ட்டார பகுதிகளிலும், அள்ளூர், அளிச்சகுடி, அம்மையகரம், தென்னக்குடி, பிள்ளை யார்நத்தம், சக்கரநத்தம், களிமேடு, பனவெளி, கரம்பை, கள்ளப்பெரம்பூர் மற்றும் சுற்றுவட்டார இடங்களிலும் மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரூ.30 லட்சம் மதிப்பிலான 1,664 சதுர அடி நிலத்தை மீட்டனர்.
    • அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் பந்தநல்லூர் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அடுத்த பந்தநல்லூரில் பசுபதீஸ்வ ரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான நிலம் பந்தநல்லூர் பிரதான சாலையில் உள்ளது. இந்த நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி இருந்தார்.

    மேலும். இந்த கட்டிடத்திற்கு கடந்த 2020-ம் ஆண்டு முதல் வாடகை செலுத்தவில்லை என பசுபதீஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர், மயிலாடு துறை அறநிலையத் துறை இணை ஆணையர் ஆகியோர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கு விசாரணை க்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கோவில் நிலத்தை மீட்க வேண்டும் என உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து இந்து சமபய அறநிலையத்துறை உதவி ஆணையர் உமாதேவி தலைமையில், துணை ஆணையர் சாந்தா, கோவில் செயல் அலுவலர் சுந்தர்ராஜ், அறநிலையதுறை ஆய்வாளர் கோகிலா தேவி மற்றும் அலுவலர்கள் ஆக்கிரமிப்பில் இருந்த பசுபதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக ரூ.30 லட்சம் மதிப்பிலான 1,664 சதுர அடி நிலத்தை மீட்டனர்.

    மேலும், அந்த இடத்தில் விளம்பர பதாகைகளையும் அமைத்தனர். இதைத் தொடர்ந்து, எந்தவொரு அசம்பாவிதங்களும் ஏற்படாத வகையில் அங்கு பந்தநல்லூர் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

    • சில நாட்களில் அறுவடை செய்ய வேண்டிய பருவத்தில் நெற்பயிர்கள் இருந்தது.
    • நெற்கதிர்களை எந்திரங்கள் மூலம் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகா, சாலியமங்கலம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குறுவை பருவத்தில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் பல இடங்களில் சில நாட்களில் அறுவடை செய்ய வேண்டிய பருவத்தில் நெற்பயிர்கள் இருந்தது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் நெற்பயிர்கள் வயலிலேயே சாய்ந்து மழைநீரில் மூழ்கும் அபாய நிலை உள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்படும் என விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கி ன்றனர். வயலில் உள்ள நெற்கதிர்கள் சாய்ந்த நிலையில் உள்ளது.

    மேலும் வயலில் தொடர்ச்சியாக மழை பெய்யும் சூழ்நிலை உள்ளதால் சாய்ந்த நெற்பயிர்களை காப்பாற்ற மழைநீரை வடிய வைத்து நெற்கதிர்களை எந்திரங்கள் மூலம் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • கடுவெளி கிராமத்தில் 500 குடும்ப அட்டைகள் உள்ள நிலையில் 300 மகளிருக்கு விண்ணப்பித்தும் உரிமை தொகை கிடைக்கவில்லை.
    • கடுவெளியில் திருவையாறு -திருக்காட்டுப்பள்ளி சாலையில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் தகுதி வாய்ந்த பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் உரிமை தொகை கிடைக்காதவர்கள் மேல் முறையீடு செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள கடுவெளி கிராமத்தில் 500 குடும்ப அட்டைகள் உள்ள நிலையில் 300 மகளிருக்கு விண்ணப்பித்தும் உரிமை தொகை கிடைக்கவில்லை என்றும், இதற்காக தாலுகா, கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று மேல்முறையீடு செய்தும் பலனில்லை என்றும், அலைகழிப்பதாக பெண்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

    இந்த நிலையில் உரிமைத்தொகை குறித்து அதிகாரிகளிடம் இருந்து நடந்து எந்த முறையான பதிலும் வராததாலும், உரிமைத்தொகை உடனே கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று கடுவெளியில் திருவையாறு -திருக்காட்டுப்பள்ளி சாலையில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த வாகனங்களை வழி மறுத்து நிறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    இது பற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் சுமார் 1 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வலையப்பேட்டை வழியாக செல்லும் குடிநீர் பிரதான குழாயில் நீர்கசிவு ஏற்பட்டுள்ளது.
    • தேவையான குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
    ×