அரசு கல்லூரி ஊழியர் வீட்டில் 11 பவுன் நகை திருட்டு

வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசு கல்லூரி ஊழியர் வீட்டில் 11 பவுன் நகை திருட்டு
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை பழைய வீட்டு வசதி வாரியத்தை சேர்ந்த வர் குப்புசாமி மகன்ஆறு முகம் ( வயது 53).

இவர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி விடுதியில் வார்ட னாக பணிபுரிந்து வருகிறார்.

சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊரான ஒரத்தநாடு அருகே உள்ள தொண்ட ராம்பட்டுக்கு சென்றார்.

திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்ககதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சிஅடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 11 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், ரூ.5000 ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது .

இது குறித்து அவர் தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com