என் மலர்
தஞ்சாவூர்
- மின் இணைப்பிற்காக கோயில் நிர்வாகம் தடையின்றி சான்றிதழ் வழங்க வேண்டும்.
- பந்தநல்லூரில் டிராக்டர் வாகனங்களை கொண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம்:
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் பந்தநல்லூரில் அனைத்து விவசாய அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு உழவர் பேரியக்கம் மாநிலதலைவர் ஆலயமணி தலைமை தாங்கினார்.
இந்த ஆர்பாட்டத்தில் நடுவர் மன்ற தீர்ப்பை மதிக்காமல் தமிழகத்திற்கு போதிய நீரை வழங்காத கர்நாடக அரசை கண்டித்தும், பந்தநல்லூர் பகுதிக்கு குறைந்த மின்னழுத்தம் வழங்குவதால் விவசாய மோட்டார் இயங்காமல் உள்ளதாகவும் உயர் மின்ன ழுத்த வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், கருகி வரும் நெற்பயிருக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை அரசு வழங்க வேண்டும் எனவும், கோயில் நிலங்களில் உள்ள வீடுகளுக்கும் விவசாய பம்பு செட்டுகளுக்கும் மின் இணைப்பிற்காக கோயில் நிர்வாகம் தடை இன்றி சான்றிதழ் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
விவசாயிகள் ஒன்றி ணைந்து பந்தநல்லூர் கடை வீதியில் 50-க்கும் மேற்ப்பட்ட டிராக்டர் வாகனங்களை கொண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் பொன். மனோகரன்,விவசாய சங்கம் நிர்வாகிகள் கலைமணி, கலியமூர்த்தி திருஞானம்பிள்ளை, கரும்பு விவசாயிகள் சங்கம் காசிநாதன் உள்பட திராளான பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- வளர்ச்சி திட்டப்பணிகள் ஆகியவை இணையதளம் மூலம் கண்காணிக்கப்பட்ட வருகின்றன
- இணையதள சேவை முடங்கி போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது
மெலட்டூர்:
தற்போது உள்ள நவீனகாலத்தில் எங்கும் இணையதள சேவை வசதி மிகவும் அத்தியாவசியமாக உள்ளது.
தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் வீட்டு வரி, குடிநீர் வரி, ஊராட்சி களில் செயல்படுத்தப்படும் அனைத்து சேவைகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் ஆகியவை இணையதளம் மூலம் கண்காணிக்கப்பட்ட வருகின்றன.
இதற்காக அனைத்து ஊராட்களுக்கும் இணைய தள சேவைக்காக அரசு மூலம் பல கோடி ரூபாய் செலவில் புதியதாக மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு ஊராட்சிக்கும் கேபிள்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
தற்போது காவளூர் பகுதியில் இணைய தள சேவைக்காக அமைக்கப்பட்ட கேபிள்கள் அறுந்து விழுந்து பல நாட்களாக தரையில் கிடக்கிறது.
இதனால் கிராம பஞ்சாயத்துகளில் இணை யதள சேவை முடங்கி போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது அரச உடனடியாக நடவடிக்கை எடுத்து அறுந்து கிடக்கும் கேபிள்களை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாபெரும் கையெழுத்து இயக்கம்.
- இன்று காலை சென்னையில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர்:
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. மருத்துவர் அணி, இளைஞரணி சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கத்தை இன்று சென்னையில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
அதன்படி தஞ்சையில் தி.மு.க. மருத்துவர் அணி, இளைஞரணி சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் மத்திய மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ, மாநகர செயலாளரும் மேயருமான சண்.ராமநாதன், மருத்துவர் அணி அமைப்பாளரும் துணை மேயருமான அஞ்சுகம் பூபதி, மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி, மாவட்ட பொருளாளர் அண்ணா, ஒன்றிய செயலாளர்கள் முரசொலி, செல்வகுமார், மாவட்ட துணை செயலாளர் கனகவள்ளி பாலாஜி, முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் து .செல்வம், முன்னாள் நகர்மன்ற தலைவர் இறைவன், கவுன்சிலர் மேத்தா மற்றும் பலர் கலந்து கொண்டு நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து போட்டனர். மேலும் பொதுமக்கள், இளைஞர்கள் கையெழுத்து போட்டனர்.
- ஆம்னி பஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லும் முடிவை கைவிட வேண்டும்.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
தஞ்சாவூர்:
தஞ்சையில் இன்று அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சை பணிமனை சி.ஐ.டியு தலைவர் செங்குட்டுவன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜெயபால் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் 60 ஆண்டு கால பாரம்பரியமிக்க அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ் நிலையத்தை, ஆம்னி பஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லும் முடிவை கைவிட வேண்டும் என்பதை வலியுறித்தி கோஷங்கள் எழுப்ப ப்பட்டன.
இதில் மாவட்ட துணை செயலாளர் அன்பு, ஆட்டோ மாநகர செயலாளர் ராஜா, தரைக்கடை சங்க தலைவர் மணிமாறன், சிஐடியு எஸ்டிஇசி. மாநில துணைதலைவர்வெ ங்கடேசன், ஏ.ஐ.டி.யு.சி போக்குவரத்து சம்மேளன துணைத் தலைவர் துரை.மதிவாணன், சி.ஐ.டி.யு கும்பகோணம் மண்டல பொருளாளர்ராமசாமி, உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பணிமனை துணைதலைவர் பரத்ராஜன் நன்றி கூறினார்.
- தற்போது அங்கிருந்து பல்வேறு ஊர்களுக்கு ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
- அனைத்து விதமான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் புதிதாக கட்டப்பட்ட ஆம்னி பஸ் நிலையம் நேற்று முன்தினம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. தற்போது அங்கிருந்து பல்வேறு ஊர்களுக்கு ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ஆம்னி பஸ் நிலையத்தில் செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து தஞ்சை மாவட்ட ஆம்னி பஸ் உரிமையாளர் சங்க தலைவர் புண்ணியமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் கூறும்போது :-
ஆம்னி பஸ் நிலையத்தில் அலுவலகம் அமைக்க வேண்டும். பஸ் நிலையத்தில் பயணிகள் அமர்வதற்கு போதிய இருக்கை வசதிகள் ஏற்படுத்த வேண்டும். கூடுதலாக மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும். அனைத்து விதமான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்றனர்.
- ஓவியம் வரைதல், வினாடி-வினா போட்டிகள் நடைபெற்றது.
- வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சையில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான பேச்சு, கட்டுரை, ஓவியம் வரைதல்,வினாடி-வினா போட்டிகள் நடை பெற்றது.
250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனா. இந்த போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தொடங்கிவைத்தார்.முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், தனியார் பள்ளி டி.இ.ஓ. அமலா தங்கதாய், கமலா சுப்பிரமணியம் முதல்வர்தெய்வபாலன், ஜேக்கப், வினோத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
- நேற்று காலை 2-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று, பூர்ணாஹூதி நடைபெற்றது.
- சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே திருக்காட்டுப் பள்ளியில் அன்னகாமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன. தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது.
முன்னதாக கடந்த 19-ந் தேதி காலை மகா கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், லட்சுமி ஹோமத்துடன் பூர்வாங்க பூஜைகள் தொடங்கின. பின்னர், காவிரி கரைக்கு தீர்த்தகுடம் எடுத்து வரும் நிகழ்வு நடந்தது.அதனைத் தொடர்ந்து, மாலையில் விக்னேஷ்வர பூஜைகள் நடைபெற்று கோவில் அருகில் அமைக்கப்பட்டுள்ள யாக குண்டத்தில் முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கி, பூர்ணாஹூதி நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, நேற்று காலை 2-ம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி விக்னேஷ்வர பூஜை, கோ பூஜைகள் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்று, மகா பூர்ணாஹூதி நடைபெற்று தீபாராதனை காண்பி க்கப்பட்டது. பின்னர், கடம் புறப்பாடு நடந்து, கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து, மூலவர் அன்னகாமாட்சி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின், பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.
இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
- சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக 3 பொது பெட்டிகளை இணைக்க வேண்டும்.
- மூத்த குடிமக்களுகக்கான ரெயில் கட்டண சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் வக்கீல் கோ.அன்பரசன் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்னவிற்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:-
தஞ்சையில் இருந்து சென்னைக்கு அதிகாலையில் புறப்படும் பல்லவன் எக்ஸ்பிரஸ் போல் பகல்நேர சேர்கார் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்றை புதிதாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தஞ்சாவூர்-அரியலூர், தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை, பட்டு க்கோட்டை-மன்னார்குடி, கும்பகோணம்-விருத்தா சலம் ரெயில் பாதை திட்டங்களுக்கு அதிகளவு பணம் ஒதுக்கி திட்டங்களை உடனடியாக தொடங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
பூதலூரில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.
தஞ்சையில் இருந்து திருப்பதிக்கும்,தூத்துக்குடிக்கும், திருவனந்தபுரத்திற்கும் புதிதாக எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
தஞ்சையில் இருந்து திருச்சிக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 5 ரெயில் பெட்டிகள் உள்ள கோச் ஒன்றை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக 3 பொது பெட்டிகளை இணைக்க வேண்டும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு மீண்டும் மாரியம்மன் கோவில் ரெயில் நிலையத்தில் ரெயில்களை நிறுத்துவதற்கு மத்திய அரசு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்.
காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை வழியாக சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்களுகக்கான ரெயில் கட்டண சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
- காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
- ஆன்மா சாந்தியடைய மெழுகுவர்த்தி ஏந்தி ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
தஞ்சாவூர்:
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.
இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களால் காஸா நகரம் உருக்குலைந்துள்ளது
இந்த தாக்குதல்களால் இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களும் , குழந்தைகளும் உயிரிழந்து வருகின்றனர்.
சமீபத்தில் காஸாவில் உள்ள மருத்துவம னையின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 500க்கும் மேற்பட்டவர்கள் பலியானது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
இதனைத் தொடர்ந்து உலகெங்கிலும் போருக்கு எதிரான குரல்கள் ஒலித்து வருகின்றன.
பிரதமர் மோடி , தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோரும் இந்த தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே அமைதி திரும்பவும் போரில் உயிர்நீத்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும் காயம டைந்தவர்கள் விரைவில் நலம் பெறவும் உலகெங்கும் மனிதம் தழைக்கவும் தஞ்சை நகர பொதுமக்கள் அமைதி கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர் .
தஞ்சை ரெயிலடி பகுதியில் ஜோதி அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் தஞ்சாவூர் நகர பொதுமக்கள் சார்பில் 50 பெண்கள் இந்த கூட்டு பிரார்த்தனை நிகழ்வில் ஈடுபட்டனர்.
போரில் இறந்தவர்களின் புகைப்படத்துக்கு மலர் தூவி அவர்களின் ஆன்மா சாந்தியடைய மெழுகுவர்த்தி ஏந்தி ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
மேலும் இந்த போரினால் காயமடைந்தவர்கள், உடமைகளை இழந்தவர்கள் விரைவில் மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பவும் போர் நிறுத்தம் ஏற்பட்டு அமைதி திரும்பவும் கூட்டு அமைதி பிரார்த்தனை செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார் தலைமையில் மேலாளர் ஞானசுந்தரி, மேற்பார்வையாளர் கல்யா ணசுந்தரம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
- பேச்சுப்போட்டி, இசைக்கருவி வாசித்தல் என பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளது.
- முடிவில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் தங்கம் நன்றி கூறினார்.
மதுக்கூர்:
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மதுக்கூர் வட்டார அளவிலான கலை திருவிழா நடைபெற்றது.
மாவட்ட கல்வி அலுவலர் திராவிடசெல்வம் தலைமை தாங்கி கலைத் திருவிழாவை தொடங்கி வைத்தார்.
வட்டார கல்வி அலுவலர் மனோகரன் வரவேற்றார்.
இதில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரகாஷ், அரசு பெண்கள் மேல்நிலைப்ப ள்ளி தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலையில் மதுக்கூர் வட்டார அளவிலான மாணவிகளின் கலைநிகழ்ச்சிி நடைபெற்றது.
இதில் நடனம், நாடகம், பேச்சுப்போட்டி இசைக்கருவி வாசித்தல் என பல்வேறு போட்டிகள் மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.
இதில் பேசிய மாவட்ட கல்வி அலுவலர் திராவிட செல்வன்,கல்வியில் கலை நிகழ்ச்சிகள் என்பது மாணவர்களின் தனித் திறமையை வெளிக் கொண்டு வருவது எனவும் உலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டும், மேலும் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் இந்த பள்ளி சிறந்த பள்ளியாக விளங்குகிறது என்றும் பள்ளியின் பற்றி எடுத்து கூறினார்.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மணிகண்டன், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் ரங்கராஜன், மாவட்ட திட்ட கூறு ஒருங்கிணைப்பாளர் ஷீலா,பள்ளி மேலாண்மை குழு தலைவர் புனிதா, பெண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் மாணிக்கம், உதவி தலைமை ஆசிரியை சுமதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முடிவில் வட்டார வளமைய மேற்பார்வை யாளர் தங்கம் நன்றி கூறினார்.
- சம்பா சாகுபடியில் அதிக விளைச்சல் பெற முடியுமா என விவசாயிகள் மத்தியில் சந்தேகம் உள்ளது.
- கூட்டுறவு நிறுவனங்களில் விவசாயிகள் பயிர்க்கடன் பெறுவதில் சிரமம் உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 5.10 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு இருந்தது.
இலக்கை தாண்டி சாகுபடி செய்யப்பட்டாலும் கர்நாடகா அரசு உரிய காவிரி நீரை வழங்காதது, எதிர்பார்த்த அளவிற்கு பருவமழை பெய்யாதது உள்ளிட்ட காரணங்களால் போதிய தண்ணீரின்றி குறுவை பயிர்கள் கருகின. டெல்டாவில் 2 லட்சம் ஏக்கருக்கும் மேல் குறுவை பயிர்கள் தண்ணீரின்றி வாடி சேதம் அடைந்து விட்டது.
இதனால் அடுத்து சம்பா, தாளடி சாகுபடிக்கும் தண்ணீர் இல்லாமல் போய் விடுமோ என விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். கர்நாடகாவை நம்பி பயன் இல்லாத சூழல் நிலவுவதால் தற்போது தொடங்க உள்ள பருவமழையை தான் விவசாயிகள் பெரிதும் நம்பி உள்ளனர்.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கி விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்டா மாவட்டங்களில் நடப்பு பருவத்தில் 15 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா, தாளடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. நடப்பு பருவத்தில் இதுவரை 4.19 லட்சம் ஏக்கர் நிலங்கள் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளன. மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் நீர் திறப்பு நிச்சயமற்ற நிலை இருப்பதால், டெல்டா மாவட்ட விவசாயிகள் இயற்கையின் கருணையை மட்டுமே நம்பியுள்ளனர். பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படாத நிலையில், அணையின் நீர்த்தேக்கம் இன்று காலை 93.47 டிஎம்சி கொள்ளளவாக உள்ளது. அதாவது 46 அடிக்கு தண்ணீர் உள்ளது.
இதனால் சம்பா சாகுபடியில் அதிக விளைச்சல் பெற முடியுமா என விவசாயிகள் மத்தியில் சந்தேகம் உள்ளது.
இது குறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி கூறும்போது,
"வரும் வாரங்களில் போதிய மழை பெய்யுமா, இல்லையா என்பது குறித்து விவசாயிகளுக்கே உறுதியாகத் தெரியாத நிலை உள்ளது. இதனால் சாகுபடி பரப்பளவை அதிகரிப்பதில் என்ன பயன்?.
அறுவடை வரை பயிர்களை தக்கவைக்க, போதுமான தண்ணீர் இருக்க வேண்டும். "மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாதபோது, கணிக்க முடியாத வடகிழக்கு பருவமழையை மட்டுமே நம்பியிருக்க வேண்டும். பயிர்களைப் பாதுகாப்பது கூட கடினமாக இருக்குமோ என்ற நிலை தான் உள்ளது.
நிலத்தடி நீர் வசதி உள்ளவர்கள் மட்டுமே தாமதமான சம்பா குறுகிய கால பயிருக்கு செல்லலாம். ஆனால் அவர்களின் பங்கு ஓரளவு மட்டுமே இருக்கும். ஒட்டுமொத்தத்தில் வடகிழக்கு பருவமழை கை கொடுத்தால் சம்பா, தாளடியில் அதிக மகசூல் பெறலாம் என்றார்.
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு பி.ஆர்.பாண்டியன் கூறும்போது,
கூட்டுறவு நிறுவனங்களில் விவசாயிகள் பயிர்க்கடன் பெறுவதில் சிரமம் உள்ளது. எனவே, உற்பத்தி ஊக்கத்தொகை அடங்கிய நிதித் தொகுப்பை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். இந்த ஆண்டு குறுவையைப் பொறுத்தவரை, அக்டோபர் 17 ஆம் தேதி நிலவரப்படி 3.87 லட்சம் ஏக்கர் பரப்பளவில் அறுவடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் கருகிய குறுவை பயிர்களுக்கு அரசு அறிவித்த இழப்பீடு தொகை போதவில்லை. எனவே ஏக்கருக்கு ரூ.35 ஆயிரமாக இழப்பீடு தொகை அறிவித்து வழங்க வேண்டும் என்றார்.
திருவாரூரை சேர்ந்த முன்னோடி விவசாயி சத்தியநாராயணன் கூறுகையில்,
இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் போதிய காவிரி நீரின்றி குறுவை பயிர்கள் வாடி விட்டன. சம்பாவுக்கு இதே நிலை நீடித்து விடுமோ என விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். காவிரியில் உரிய நீரை பெற்று கொடுத்தால் மட்டுமே சம்பா, தாளடியில் விளைச்சல் எதிர்பார்த்த அளவிற்கு பெறலாம். மேலும் வடகிழக்கு பருவமழையும் கை கொடுக்க வேண்டும்.
இம்முறை அரசு அறிவித்த இழப்பீடு போதவில்லை. குறுவை சாகுபடி பருவத்தில் பயிர் இழப்புகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான விதிமுறைகளை தளர்த்த வேண்டும். குறுவை பருவத்தில் கூட, பல விவசாயிகள் நீண்ட கால பயிரை (150-160 நாட்கள்) பயிரிட்டிருந்தனர். தண்ணீரின்றி பாதிக்கப்பட்ட பயிர்கள் வயல்களில் களைகளை அகற்ற அதிக செலவாகும். எனவே இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றார்.
ஒட்டுமொத்தத்தில் காவிரியிலும் உரிய நீர் கிடைக்க வேண்டும். வடகிழக்கு பருவமழையும் கை கொடுக்க வேண்டும். இவை இரண்டும் நடந்தால் இம்முறை சம்பா, தாளடியில் அதிக விளைச்சல் பெறலாம். மாறாக காவிரியில் உரிய நீர் கிடைக்காவிட்டால் குறுவையை போல் சம்பாவும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே கர்நாடகாவிடம் இருந்து உரிய காவிரி நீரை பெற்று கொடுக்க வேண்டும் என்பதே டெல்டா விவசாயிகளின் பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது.
- ரூ.6.04 கோடியில் உயா்மட்ட பாலம் கட்டும் பணி தொடங்கியது.
- 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த மாதம் 15-ந் தேதி முடிக்கப்படும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூா் அருகே வல்லம் - கள்ளப்பெரம்பூா் சாலையில் முதலைமு த்துவாரி கால்வாய் குறுக்கே நடைபெறும் பால கட்டுமானப் பணிகளை கலெக்டர் தீபக்ஜேக்கப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது :-
முதலைமுத்துவாரி கால்வாய் குறுக்கே 43.6 மீட்டா் நீளத்திலும், 10.5 மீட்டா் அகலத்திலும் ரூ. 6.04 கோடியில் உயா்மட்ட பாலம் கட்டும் பணி 2020, நவம்பா் 9 ஆம் தேதி தொடங்கியது.
அடித்தளப் பணிகள், மேல்தளங்கள், தாங்கு சுவா் அமைக்கும் பணிகள் முடிவுற்று, தற்போது பாலத்தின் தளம், அணுகுசாலைப் பணிகள் நடைபெறுகின்றன. கிட்டத்தட்ட 80 சதவீத பணிகள் நிறைவடை ந்துள்ளன. இக்கட்டுமான பணி நவம்பா் 15 ஆம் தேதி முழுமையாக முடிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். பின்னா், அவர் திருமலை சமுத்திரம் ஊராட்சியில் மகளிா் சுயஉதவிக் குழுவினா் ரெக்சின் பைகள் தயா ரிப்பதைப் பாா்வையிட்டு, அவா்களிடம் விவரங்களைக் கேட்டறிந்தாா். இதையடுத்து, ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் செயல்படுகிற நூலகத்தை பாா்வையிட்டு, வருகைப் பதிவேடு, புத்தகங்களின் இருப்பு விவரத்தையும் ஆய்வு செய்தாா்.
அப்போது நெடுஞ்சா லைத் துறைக் கோட்டப் பொறியாளா் செந்தில்கு மாா், உதவி கோட்டப் பொறியாளா்கள் செந்தி ல்குமாா், கீதா, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் உமாமகேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொற்கொடி , ராஜா, பெர்சியா ஆகியோர் உடன் இருந்தனர்.






