என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • சுதந்திர தினத்தையொட்டி சிறந்த சமூக சேவகர், தொண்டு நிறுவனங்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்.
    • மேற்கண்ட தகவலை சிவகங்கை கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதல்-அமைச்சரால் வருகிற 15.8.2023 நடைபெறும் சுதந்திர தின விழாவில் சிறந்த சமூக சேவகர் மற்றும் சிறந்த தொண்டு நிறுவனங்களுக்கு சுதந்திர தின விருது வழங்கப்பட உள்ளது. விருது பெறுவதற்கு தகுதியுடைய தமிழக அரசின் https://awards.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து விண்ணப்பங்களை (தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் தலா 2 நகல்கள் மற்றும் புகைப்படம்) சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சிவகங்கை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் 10.6.2023 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    இந்த விருதினை பெற தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்ப்பட்டவராகவும் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூகநலனைச் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சமூக சேவை நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். இத்தகைய தொண்டு நிறுவனங்கள் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களாக இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தகுதியுடைய மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • கலெக்டர் ஆஷா அஜீத் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாணையம் (ஜமாபந்தி) நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். மானாமதுரை வருவாய் கிராமங்களான அரசனேந்தல், கீழப்பசலை, கிளங்காட்டூர், அன்னவாசல், வேதியரேந்தல், தெற்கு சந்தனூர், கால்பிரவு, ராஜகம்பீரம், மானாமதுரை, அரிமண்டபம்,

    எம்.கரிசல்குளம், மிளகனூர், சின்னக்கண்ணனூர், தெ.புதுக்கோட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.

    பட்டா மாறுதல், வீட்டுமனை பட்டாக்கள், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், பிறப்பு-இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ், குடும்ப அட்டை, மாதாந்திர உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, விபத்து நிவாரண தொகை, நலிந்தோர் உதவித்தொகை, நிலம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை பெற்று, தகுதியுடைய மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து அதன் பயன்களை பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    சிவகங்கை வட்டத்தில் 30 மனுக்களும், திருப்பத்தூர் வட்டத்தில் 14 மனுக்களும், காளையார்கோவில் வட்டத்தில் 70 மனுக்களும், காரைக்குடி வட்டத்தில் 51 மனுக்களும், தேவகோட்டை வட்டத்தில் 28 மனுக்களும், திருப்புவனம் வட்டத்தில் 70 மனுக்களும், மானாமதுரை வட்டத்தில் 123 மனுக்களும், இளையான்குடி வட்டத்தில் 8 மனுக்களும், சிங்கம்புணரி வட்டத்தில் 135 மனுக்களும் என மொத்தம் 529 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது.

    மேற்கண்ட மனுக்களின் மீது அலுவலர்கள் சிறப்புக் கவனம் செலுத்தி, உரிய களஆய்வுகள் மேற்கொண்டு ஒருவாரகாலத்திற்குள் அனைத்து மனுதாரர்களின் மனுக்கள் மீது தீர்வு கண்டு நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் ஆஷா அஜீத் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா(சிவகங்கை), பால்துரை(தேவகோட்டை) மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • நாட்டார்மங்கலத்தில் வழிவிடு விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை நாட்டார்மங்கல கிராமத்தினர் செய்திருந்தனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நாட்டார் மங்கலத்தில் உள்ள வழிவிடும் விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடாகி கோபுரத்திற்கு எடுத்து செல்லப்பட்டு கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கூட்டுறவுத்துறைஅமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன், ஒன்றிய சேர்மன் சண்முக வடிவேல், ஊராட்சி மன்ற தலைவர் திலகவதி பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை நாட்டார்மங்கல கிராமத்தினர் செய்திருந்தனர்.

    • சிவகங்கை வாரச்சந்தையில் கெட்டுப்போன 200 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • கடை உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை பஸ் நிலையப் பகுதியில் தடை செய்யப் பட்ட பாலித்தீன் பை, கப்கள் பயன்படுத்துவ தாகவும் அதே போல் உணவ கங்களில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்வதாகவும், நகராட்சி மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.

    இதையடுத்து அதிகாரி கள் மேற்கண்ட பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பல்வேறு உணவகங்களில் ரசாயன பொடிகளை பயன் படுத்தி தயாரிக்கப்பட்ட உணவுகள் விற்பனை செய்யப்பட்டது கண்டறியப் பட்டது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

    அரண்மனை வாசல் பகுதியில் மளிகை குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 டன் பாலித்தீன் பைகள், டீ கப்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல் வாரச்சந்தை யில் ஒரு இறைச்சி கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 200 கிலோ கெட்டுப்போன மீன்கள், 50 கிலோ தரமற்ற இறைச்சி பறிமுதல் செய்து கடை உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    • நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெறாவிட்டால் போராட்டம் நடத்தப்படும்.
    • தமிழக அரசு இச்சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று விவசாயிகள் அறிவித்தனர்.

    சிவகங்கை

    தமிழக அரசால் கடந்த பட்ஜெட் கூட்ட தொடரில் தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தினை திரும்ப பெறக் கோரி சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கி ணைப்புக்குழு சார்பில் மாவட்ட கவுரவத்தலைவர் ஆதிமூலம் தலைமையில், விவசாயிகள் மனு அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    நில ஒருங்கிணைப்பு சட்டத்தின் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்க ளுக்கு 100 ஏக்கர் தொடர்ச்சி யாக பெற வழிவகை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் பொது பயன் பாட்டில் உள்ள நிலங்கள், குளம், கண்மாய், நீர்வழிப் பாதைகள், வழிபாடு தலங்கள் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படுவதுடன், விவசாயமும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு இச்சட்டத்தை வாபஸ் பெற வேண்டும், இல்லை என்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்தவுள்ளதாகவும், மேலும் தமிழக ஆளுநரை சந்தித்து முறையிட உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    • பள்ளி வாகனங்களை கவனத்தோடு இயக்க வேண்டும் என டிரைவர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
    • மேலும் ஓட்டுநர்கள் தீயணைப்பது குறித்த பயிற்சியும், முதலுதவி குறித்த பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும் என்றார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நிறுத்தப்பட்டிருந்த பள்ளி வாகனங்களை கலெக்டர் ஆஷா அஜித் ஆய்வு செய்தார். பின்னர் பள்ளிக்கல்வித்துறை, போக்குவரத்துத்துறை அலுவலர்களின் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்று கலெக்டர் பேசியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் 388 பள்ளி வாகனங்கள் உள்ளன. அதில் இன்றைய தினம் 298 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள வாகனங்கள் விரைவில் ஆய்வு செய்யப்பட்டு சான்று வழங்கப்படும். பள்ளி குழந்தைகள் செல்லும் வாகனத்தின் டிரைவர்கள் அதனை இயக்குவதற்கு முன்பு உரிய பரிசோதனை செய்ய வேண்டும்.

    ஓட்டுனர்கள் வாகனத்தை கவனத்துடனும், அனுமதிக் கப்பட்ட வேகத்துடன் மட்டுமே இயக்க வேண்டும். வாகனம் இயக்கும் போது மது அருந்துதல், கைப்பேசி பயன்படுத்துதல் போன்ற செயல்முறைகள் இருக்கக்கூடாது. குறிப்பிட்ட அளவு குழந்தைகளை மட்டுமே வாகனங்களில் ஏற்ற வேண்டும். மேலும் ஓட்டுநர்கள் தீயணைப்பது குறித்த பயிற்சியும், முதலுதவி குறித்த பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வுக்கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமி நாதன், போக்குவரத்து ஆய்வாளர் மாணிக்கம் மற்றும் பள்ளி வாகன ஓட்டுநகர் கலந்து கொண்டனர்.

    • சென்டர் மீடியனில் வேன் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.
    • விபத்துக்களை தடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

    தேவகோட்டை

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருந்து ராமேசுவரத்திற்கு 13 பேர்களுடன் டூரிஸ்ட் வேன் சென்றது. இதை வந்தவாசியை சேர்ந்த டிரைவர் இளங்கோவன் (வயது30) ஓட்டினார்.

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்தபோது புளியால் விலக்கு சென்டர் மீடியனில் மோதியது. இதில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

    சத்தம் ேகட்டு அருகில் உள்ளவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கெகாடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வேன் விபத்தில் காய மடைந்தவர்களை தேவ கோட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அனைவரும் சிறு காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தேவகோட்டை ரஸ்தா வில் இருந்து தற்போது புதிதாக போடப்பட்ட திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையின் பிரிவு சாலையில் சென்டர் மீடியனில் போதிய எச்சரிக்கை விளக்குகள் இல்லாததால் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருகிறது.

    இரவு நேரங்களில் அதிக அளவில் விபத்துக்கள் நடக்கின்றன. உடனடியாக இந்த பிரிவு சாலையில் உள்ள சென்டர் மீடியன் பகுதியில் எச்சரிக்கை விளக்குகள் அமைத்து விபத்துக்களை தடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

    • கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது.
    • திருவிழாக்களில் வைகாசி விசாகத் திருவிழா முக்கியமானதாகும்.

    காளையார்கோவில்

    சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையில் கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் உள்ளது. தென்மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற கோவில்களில் இது முக்கியமான கோவிலாகும். இந்தக் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் வைகாசி விசாகத் திருவிழா முக்கியமான தாகும். இந்த ஆண்டு வைகாசி விசாகத் திருவிழா நாளை (25-ந் தேதி) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மாலையில் காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 11 நாட்கள் நடைபெறும் விழாவில் முக்கிய நிகழ்வாக வருகிற 1-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 6 மணி அளவில் வெள்ளி ரதமும், 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலையில் தேரோட்டமும் நடைபெறுகிறது.

    தினமும் மாலையில் ஆன்மீக இலக்கிய நிகழ்ச்சிகள், சிறப்புநாதசுவர கச்சேரிகள், பட்டிமன்றம் நடைபெறும்.வைகாசி விசாக விழா ஏற்பாடுகளை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் உத்தரவின்பேரில் மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் கணேசன் மற்றும் விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.

    • பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.
    • பள்ளியின் தலைவர் வெள்ளையன் செட்டியார் தலைமை தாங்கினார்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கீழச்சிவல்ப்பட்டியில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. பள்ளியின் தலைவர் வெள்ளையன் செட்டியார் தலைமை தாங்கினார். செயலர் வெங்கடாசலம் செட்டியார், பொருளாளர் அம்மையப்பன் செட்டியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை வள்ளியம்மை வரவேற்றார்.

    பிளஸ்-2 தேர்வில் 573 மதிப்பெண் பெற்ற துர்காதேவி, 10-ம் வகுப்பு தேர்வில் 485 மதிப்பெண் பெற்ற மீனாட்சி உள்ளிட்ட 7 மாணவ-மாணவிகளுக்கு முன்னாள் மாணவர் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முன்னாள் பொது மேலாளர் திருஞானசம்பந்தம் பரிசு வழங்கி பாராட்டினார். மேலும் மேற்படிப்பிற்கான வழிகாட்டுதல்களையும் கூறினார். ஆசிரியர் லியோ நன்றி கூறினார்.

    • காரைக்குடி அருகே சிறுவர் கால்பந்து போட்டியை ப.சிதம்பரம் தொடங்கி வைத்தார் .
    • பரிசளிப்பு விழாவில் கோட்டையூர் பேரூராட்சி தலைவர் கே.எஸ்.கார்த்திக் சோலை கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் வேலங்குடி புளூஸ் கால்பந்து கழகம் சார்பில் 13 மற்றும் 15 வயதுக்குட்பட்டோருக்கான மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நடந்தது. இதில் தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, சென்னை உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து அணிகள் கலந்து கொண்டன. 13 வயதுக்குட்பட்டோர் பிரிவில் காரைக்குடி ஆரோகிக் அகாடமி முதலிடத்தையும், ஒரத்தநாடு ஒய்.பி.ஆர். அகாடமி 2-ம் இடத்தையும், கோட்டையூர் முத்தையா அழகப்பா பள்ளி3-ம் இடத்தையும் வென்றன. 15 வயதுக்குட்பட்டோர் பிரிவில் காரைக்குடி காட்டுத்தலைவாசல் அப்பாஸ் மெமோரியல் அணி முதலிடத்தையும், சென்னை அணி 2-ம் இடத்தையும், ஒய்.பி.ஆர். அணி 3-ம் இடத்தையும் வென்றன.

    போட்டிகளை முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், மாங்குடி எம்.எல்.ஏ., சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளரும், சிவகங்கை மாவட்ட கால்பந்து கழக தலைவருமான கே.ஆர்.ஆனந்த் மற்றும் பலர் தொடங்கி வைத்தனர். பரிசளிப்பு விழாவில் கோட்டையூர் பேரூராட்சி தலைவர் கே.எஸ்.கார்த்திக் சோலை கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

    • பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 331 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • 56 பயனாளிகளுக்கு கலெக்டர் பட்டாக் களுக்கான ஆணைகளை வழங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாசில்தார் அலுவலகத்தில் வருவாய் தீர்வாணையம் (ஜமாபந்தி) நிகழ்ச்சி கலெக்டர் ஆஷா அஜீத் தலைமையில் நடைபெற்றது.

    இந்த ஜமாபந்தியில் மானாமதுரை வருவாய் கிராமங்களான செய்களத்தூர், காட்டூரணி, மானம்பாக்கி, மாங்குளம், கே.கே.பள்ளம், மேலப்பிடாவூர், வடக்கு சந்தனூர், எஸ்.காரைக்குடி, சூரக்குளம், எழுநூற்றி மங்கலம், மேலநெட்டூர், ஆலங்குளம் ஆகிய பகுதி களிலுள்ள பொதுமக்களிடம் இருந்து பட்டா மாறுதல், வீட்டுமனை பட்டா, இலவச வீட்டுமனை பட்டா, பிறப்பு- இறப்பு சான்றி தழ்கள், சாதி சான்றிதழ்கள், இருப்பிட சான்றிதழ்கள் உள்ளிட்ட கோரிக்கை தொடர்பாக பொதுமக்கள் மனுக்களை வழங்கினர்.

    பின்னர் செய்களத்தூர் சமத்துவபுரத்தில் உள்ள குடியிருப்புகளில் வசித்து வரும் 56 பயனாளிகளுக்கு கலெக்டர் பட்டாக் களுக்கான ஆணைகளை வழங்கினார்.

    சிவகங்கை வட்டத்தில் 41 மனுக்களும், திருப்பத்தூர் வட்டத்தில் 22 மனுக்களும், காளையார்கோவில் வட்டத்தில் 21 மனுக்களும், காரைக்குடி வட்டத்தில் 18 மனுக்களும், தேவகோட்டை வட்டத்தில் 32 மனுக்களும், திருப்புவனம் வட்டத்தில் 102 மனுக்களும், மானா மதுரை வட்டத்தில் 22 மனுக்களும், இளையான்குடி வட்டத்தில் 24 மனுக்களும், சிங்கம்புணரி வட்டத்தில் 49 கள ஆய்வுகள் மேற்கொண்டு ஒரு வாரகாலத்திற்குள் அனைத்து மனுதாரர்களின் மனுக்கள் மீது தீர்வு காண்ப தற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள கலெக்டர் ஆஷா அஜீத் அலுவ லர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை, பால்துரை (தேவகோட்டை) மற்றும் அனைத்து வட்டங்களிலும், சம்பந்தப்பட்ட தாசில் தார்கள், துறை சார்ந்த அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வாலிபர், முதியவர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • சாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அருண் பாண்டியன்(23). இவரை 4 நாட்களுக்கு முன்பு பாம்பு கடித்தது. சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவருக்கு மீண்டும் காலில் வலி ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த அருண்பாண்டியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாய் கொடுத்த புகாரின் பேரில் பள்ளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    சிவகங்கை மாவட்டம் மித்ராவயல் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன்(60).இவர் பாப்பாக்குடி கிராமத்தில் உள்ள கண்மாயில் ஏலம் எடுத்து மீன் குஞ்சுகளை வளர்த்து வந்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் மனவேதனை அடைந்த நாகராஜன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்த புகாரின்பேரில் சாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    ×