என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தை இல்லாத விரக்தியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
    X

    குழந்தை இல்லாத விரக்தியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

    • குழந்தை இல்லாத விரக்தியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • மதகுபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கை

    சிவகங்கை அருகே உள்ள கருப்பாவூர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மகன் அன்பு. இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் குழந்தை இல்லை. இதனால் விரக்தியில் இருந்த அன்பு சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொ லை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சிவகங்கை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கை அருகேயுள்ள திருமன்பட்டியை சேர்ந்தவர் அழகர், தொழிலாளி. இவரது மனைவி மீனாள். சம்பவத்தன்று வீட்டுக்கு வந்த அழகர் சமைக்க தெரியவில்லை என மனைவியை திட்டினார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

    இதில் விரக்தியடைந்த மீனாள் அரளி விதையை சாப்பிட்டு மயங்கினார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட மீனாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மதகுபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×