என் மலர்
உள்ளூர் செய்திகள்

வழிவிடு விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
- நாட்டார்மங்கலத்தில் வழிவிடு விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
- விழாவிற்கான ஏற்பாடுகளை நாட்டார்மங்கல கிராமத்தினர் செய்திருந்தனர்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நாட்டார் மங்கலத்தில் உள்ள வழிவிடும் விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடாகி கோபுரத்திற்கு எடுத்து செல்லப்பட்டு கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கூட்டுறவுத்துறைஅமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன், ஒன்றிய சேர்மன் சண்முக வடிவேல், ஊராட்சி மன்ற தலைவர் திலகவதி பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை நாட்டார்மங்கல கிராமத்தினர் செய்திருந்தனர்.
Next Story