என் மலர்
சிவகங்கை
- சிவகங்கையில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடநதது.
- கூட்டுறவு சங்க தலைவர் சங்கர ராமநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இளைஞர்-இளம் பெண்கள் பாசறை, மகளிரணி நிர்வாகிகளுக்கு பூத் கமிட்டி அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர்-பி.ஆர்.செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பங்கேற்று ஆலோசனை வழங்கினார். புதிய உறுப்பினர் சேர்க்கையும் நடந்தது.
இதில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், நகர செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், செல்வமணி, சிவசிவஸ்ரீதர், பழனிச்சாமி, சிவாஜி, ஸ்டிபன்அருள்சாமி,மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் தமிழ்செல்வன், ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து, மாவட்ட மகளிரணி செயலாளர் ஜாக்குலின், கலைப்பிரிவு மாவட்ட செயலாளர் செந்தில்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங்கோவன், பாசறை மாவட்ட பொருளாளர் சரவணன், பாசறை மாவட்ட இணை செயலாளர்கள் சதீஸ், மோசஸ், தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர்கள் குழந்தை, கூட்டுறவு சங்க தலைவர் சங்கர ராமநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- திருத்தளிநாதர் கோவில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
- தென்மாபட்டு சோழிய வெள்ளாளர் உறவின் முறையினர் செய்திருந்தனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் உள்ள சிவகாமி உடனாய திருத்தளிநாதர் கோவிலில் வைகாசி பெருவிழா நடைபெற்று வருகிறது.
கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவில் நாள்தோறும் சுவாமி- அம்பாள் அன்னம், ரிஷபம், சிம்மம், குதிரை போன்ற பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி வெள்ளி கடகத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
5-ம் நாள் திருவிழாவில் திருத்தளிநாதர் சுவாமிக்கும், சிவகாமி சுந்தரி அம்பா ளுக்கும் திருமண உற்சவம் நடைபெற்றது. சுவாமி சார்பில் சிவாச்சாரியார்கள் அம்பாளுக்கு திருமா ங்கல்யம் அணிவித்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த பெண்கள் உள்பட திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து திருமணமான பெண்கள் புது தாலி மாற்றிக்கொண்டனர்.
இதில் குன்றக்குடி தம்பிரான் சுவாமிகள், தலைவர் நாகராஜன் பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட ஆயிரக் கணக்கான பெண்களுக்கு மாங்கல்ய கயிறு, மஞ்சள், குங்குமம், வளையல் முதலிய பொருட்கள் வழங்கப்பட்டது.
விழா விற்கான ஏற்பாடுகளை 5-ம் நாள் மண்டகப்படி திருப்பத்தூர் தம்பிபட்டி தென்மாபட்டு சோழிய வெள்ளாளர் உறவின் முறையினர் செய்திருந்தனர்.
- பயிற்சி சான்றிதழ்-பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
- பேராசிரியர் பாலசுப்பிர மணியன் நன்றி கூறினார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் காட்டாம்பூரில் உள்ள நேஷனல் அகாடமி சமுதாய கல்லூரியில் கேட்டரிங், சர்வே, நர்ஸிங், தையல், எலக்ட்ரானிக்ஸ் போன்ற பல்வேறு பாடப் பிரிவுகள் மத்தியரசின் தீனதயாள் உபத்தியாய கிராமின் கவுசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகிறது.
இக்கல்லூரியில் பயின்ற 30பேர் கொண்ட 9 திறன் பயிற்சி குழுக்களாக 270 பேருக்கு பயிற்சி சான்றி தழும், 10 பேருக்கு பணி நியமன உத்தரவும் வழங்கும் விழா நடைபெற்றது.
விழா விற்கு கல்லூரி தாளாளர் காசிநாதன் தலைமை வகித்தார். பால கிருஷ்ணன், சுரேஷ் பிரபாகர், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருச்சி தொழில் துறை கூடுதல் ஆணை யாளர் ஜெயபாலன் மாண வர்களுக்கு பயிற்சி சான்றி தழ் மற்றும் பணி நியமன ஆணைகளை வழங்கி மாணவர்கள் தொழில்துறை கல்விகளை முன்னெடுத்து அக்கறையுடன் படித்து வாழ்க்கையில் முன்னேற்றம் எனும் உயர்ந்த லட்சியத்தை அடைய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
முன்னதாக கல்லூரி முதல்வர் வெங்கடேசன் வரவேற்றார். முடிவில் பேராசிரியர் பாலசுப்பிர மணியன் நன்றி கூறினார்.
- புதிய பஸ் சேவையை மாங்குடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
- கிராம மக்கள் கும்பம் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
தேவகோட்டை
தேவகோட்டை ஒன்றியம் பெரியகாரை ஊராட்சியில் கள்ளிக்குடி கிராமம் உள்ளது. மருத்துவர்கள், பேராசிரியர்கள், அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிவோர் முக்கிய அரசியல் பிரமு கர்கள் என பல்வேறு தரப்பினரை உருவாக்கிய இந்த கிராமத்தில் போக்குவரத்து வசதி இல்லாமல் இருந்தது.
இதனால் அந்த கிராம மக்கள் தங்களின் கிரா மத்துக்கு பஸ் வசதி செய்து தரவேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி அங்கிந்து தேவகோட்டை நகருக்கு புதிய பேருந்து சேவையை ஒன்றிய தலைவர் பிர்லா கணேசன் முன்னி லையில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த பேருந்தானது தேவகோட்டையில் இருந்து புலியடிதம்மம் செல்லும் போது எழுவன்கோட்டை, ஈகரை வழியாக கள்ளிக்குடி கிராமத்திற்கு வந்து புதுக்கோட்டை பெரிய காரை மற்றும் வேலாயுத பட்டினம் வழியாக புலியடி தம்மம் செல்கிறது.
மேலும் இதே மார்க்கமாக தேவகோட்டைக்கு காலை மாலை ஆகிய இரு வேளைகளில் செல்கிறது. இந்நிகழ்ச்சியில் மருத்துவர் பூமிநாதன், போக்குவரத்து கழக காரைக்குடி மண்டல மேலாளர் சிங்காரவேல், வர்த்தக பிரிவு மேலாளர் நாகராஜன் கிளை மேலாளர் சொக்கலிங்கம், பொறி யாளர் பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கு வந்த அரசு அலுவலர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரை கிராம மக்கள் கும்பம் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
- நகராட்சித்துறை சார்பில் நிறைவடைந்த பாதாள சாக்கடை திட்டப்பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
- திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நிறைவடைந்த பாதாள சாக்கடை திட்டப்பணிகளின் தொடக்க விழா நடந்தது.
கலெக்டர் ஆஷாஅஜீத் தலைமை தாங்கினார். காரைக்குடி நகரசபை தலைவர் முத்து துரை முன்னிலை வகித்தார். மாங்குடி எம்.எல்.ஏ. வரவேற்றார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவ தாஸ்மீனா, குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா ஆகியோர் திட்ட விளக்கவுரை யாற்றினர்.
புதிய பாதாள சாக்கடை திட்டப்பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, ெபரியகருப்பன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பின்னர் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், காரைக்குடி நகராட்சிப் பகுதிக்கென நகராட்சி நிர்வாகத்துறையின் மூலம் தற்போது ரூ.140.13 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களிடம் இருந்து சேகரிக்கப்படும் வீட்டு கழிவுநீர் நாளொன்றுக்கு நபர் ஒன்றுக்கு 110 லிட்டர் என்ற அளவில் கணக்கிடப்பட்டு, அதனடிப்படையில் கழிவுநீர் சேகரிப்பு குழாய்கள் வலை அமைப்பு வடிவ மைக்கப்பட்டு திட்ட செயலாக்கம் மற்றும் பராமரிப்புக்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப் பட்டு பணிகள் நிறைவு பெற்றுள்ளது என்றார்.
அமைச்சர் பெரியகருப்பன் பேசுகையில், காரைக்குடி நகராட்சி பகுதியில் உள்ள ஒவ்வொரு வார்டுகளிலும் பொதுமக்களுக்கு தேவையான சாலை வசதி, குடிநீர் வசதி, மின் வசதி, சுகாதார வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கைகளின் அடிப்படையில் கூடுதலாகவும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் கோரிக்கைகள் தொடர்பாக, கலெக்டர் அலுவலகத்திலோ அல்லது தங்களது பகுதி களுக்குட்பட்ட மக்கள் பிரதிநிதிகள் வாயிலாகவோ அல்லது முதல்வரின் முகவரி என்ற இணையதளத்தின் வாயிலாகவோ, இ.சேவை மையம் மூலமாகவோ மனுக்கள் அளித்து, அதன்மூலம் தீர்வு பெற்று, பயன்பெறலாம் என்றார்.
இந்த நிகழ்ச்சியில், காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துத்துரை, துணைத்தலைவர் குணசேகரன், திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து திருச்சிக்குசி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் நடைபயணம் நடத்தினர்.
- 7 குழுவினர் 2700 கி.மீ. தூரம் நடைபயணம் செய்கிறார்கள்.
மானாமதுரை
உழைக்கும் மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து திருச்சிக்கு சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தை சேர்ந்த 7 குழுவினர் 2700 கி.மீ. தூரம் நடைபயணம் செய்கிறார்கள். இதன் ஒரு குழுவிற்கு சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பழைய பஸ் நிலையத்தில் மாவட்டத் தலைவர் வீரையா தலைமையில், செயலாளர் சேதுராமன், பொருளாளர் தட்சிணாமூர்த்தி முன்னிலையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.
மாநில துணைப் பொதுச் செயலாளர் குமார், மாநில செயலாளர்கள் தங்கமோகன், சிவாஜி, மாநிலக்குழு உறுப்பினர் சிங்காரம் ஆகியோர் தலைமையில் வந்த நடைபயணக்குழுவிற்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.
இதில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் சாந்தி, துணைத் தலைவர் லட்சுமி, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் முத்துராமலிங்க பூபதி, ஆட்டோ தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் விஜயகுமார், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் வீரபாண்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நடைபயண நோக்கங்களை விளக்கி மாநில துணைப் பொதுச் செயலாளர் குமார் பேசினார்.
- வருகிற 29-ந் தேதி தேவகோட்டையில் மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம் கொடுக்கப்பட்டுள்ளன.
- மேற்கண்ட தகவலை தேவகோட்டை உட்கோட்ட மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்தார்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை உட்கோட்டத்திற்குட்பட்ட பூசலாக்குடி மின் நிலையத்தில் வருகிற 29-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
இதன் காரணமாக கண்ணங்குடி, கப்பலுார், அனுமந்தகுடி, கண்டியூர், நாரணமங்களம், கே.சிறுவனூர், சாத்தனக்கோட்டை, தேரளப்பூர், சிறுவாச்சி, தேர்போகி, குடிக்காடு, கொடூர், வெங்களுர், மன்னன்வயல், தாழையூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும். மேற்கண்ட தகவலை தேவகோட்டை உட்கோட்ட மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்தார்.
- மானாமதுரை அருகே நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் சீறிப்பாய்ந்ததில் 20 வீரர்கள் காயமடைந்தனர்.
- ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரைஅருகே உள்ள பெரும்பச்சேரி சமய கருப்பணசுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு மேட்டுமடை, பெரும்பச்சேரி கிராம மக்கள் சார்பில் ஜல்லிக்கட்டு நடந்தது.
சமய கருப்பணசுவாமி கோவிலில் பூஜைகள் நடத்தி ஜல்லிக்கட்டு தொடங்கி வைக்கப்பட்டது. சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, விருதுநகர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட
400-க்கும் மேற்பட்ட காளைகள் ஜல்லிக்கட்டில் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன.
பல பகுதிகளில் இருந்தும் வந்திருந்த மாடுபிடி வீரர்கள் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கினர். காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், சேர், சில்வர் அண்டா, சைக்கிள், வெள்ளிக்காசு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது.
ஜல்லிக்கட்டில் களத்தில் நின்று சிறப்பாக களமாடிய சிறந்த காளைகளுக்கும், அதிக காளைகளை பிடித்த வீரர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.இதில் காளைகளை அடக்க முயன்ற 20 வீரர்கள் காயமடைந்தனர்.
மானாமதுரை வட்டாட்சியர் ராஜா மேற்பார்வையில் நடந்த இந்த ஜல்லிக்கட்டில் காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- சிவகங்கை மாவட்டத்தில் நீர்நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.
- சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜீத் அறிவுறுத்தியுள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார்.
வறட்சி நிவாரணம், நுண்ணீர் பாசன குழாய் மாற்றம், ஆழ்குழாய் கிணறு, வரத்துக்கால் மற்றும் வரத்துக்கண்மாய் தூர்வாரக் கோருதல், மிளகாயை பாதுகாக்க குளிர்பதன கிடங்கு அமைக்கக் கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக கலெக்டரிடம் விவசாயிகள் மனு விடுத்தனர்.
இந்த கோரிக்கைகள் தொடர்பாக துறை அலுவலர்கள் களஆய்வுகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் அறிவுறுத்தினார்.
பின்னர் கலெக்டர் ஆஷா அஜீத் பேசியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நீர் நிலையில் உள்ள ஆக்கிரமிப்புக்களை உடனடியாக அகற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். விவசாய நிலங்களை விலங்குகள் சேதப்படுத்தாமல் பாதுகாக்கவும், தேவையான நிலங்களில் தடுப்பணைகள் ஏற்படுத்தி நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்கவும், குறிப்பாக நீர்நிலைகளில் கருவேல மரங்கள் அகற்றுதல் போன்ற விவசா யிகளின் கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
நில அளவைத்துறையினர் விவசாயிகள் கோரும் அளவீட்டுப்பணியினை விரைந்து மேற்கொள்ளவும், விவசாயிகளுக்கான மின் விநியோகங்களை சீரான முறையில் வழங்கிடவும், தேவையான உரங்களை இருப்பு வைக்கவும், வங்கிகளின் மூலம் கடனுதவிகள் வழங்கி வேளாண் சார்ந்த புதிய தொழில் தொடங்கிட உறுதுணையாக இருக்கவும், கடனுக்குரிய மானியத்தொகையை தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கைகளை துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் தனபாலன், கால்நடைப் பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் நாகநாதன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- குழந்தை இல்லாத விரக்தியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- மதகுபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை
சிவகங்கை அருகே உள்ள கருப்பாவூர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மகன் அன்பு. இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் குழந்தை இல்லை. இதனால் விரக்தியில் இருந்த அன்பு சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொ லை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சிவகங்கை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை அருகேயுள்ள திருமன்பட்டியை சேர்ந்தவர் அழகர், தொழிலாளி. இவரது மனைவி மீனாள். சம்பவத்தன்று வீட்டுக்கு வந்த அழகர் சமைக்க தெரியவில்லை என மனைவியை திட்டினார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
இதில் விரக்தியடைந்த மீனாள் அரளி விதையை சாப்பிட்டு மயங்கினார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட மீனாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மதகுபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இரட்டிப்பு மோசடி வழக்கில் பணத்தை மீட்டு உரியவரிடம் போலீசார் ஒப்படைத்தார்.
- ராமமூர்த்தி அந்த லிங்கில் தனது விவரங்களை பதிவேற்றம் செய்தார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது செல்போனில் வாட்ஸ்-அப் மூலம் பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பாக கிடைக்கும் என்று குறுஞ்செய்தி அனுப்பப்பட்டிருந்தது. இதனை நம்பிய ராமமூர்த்தி அந்த லிங்கில் தனது விவரங்களை பதிவேற்றம் செய்தார். அதில் உள்ள பொருட்களை விற்றுக் கொடுத்தால் லாபம் கிடைக்கும் என்றிருந்ததை நம்பிய அவர் 16 தவணைகளாக ரூ.82 ஆயிரத்து 400-ஐ அனுப்பினார். இந்த பணத்தை பெற்றுக்கொண்டவர் ஏமாற்றியது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் சிவகங்கை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து இழந்த தொகை ரூ.82 ஆயிரத்து 400-ஐ போலீசார் மீட்டனர். பின்னர் அந்த தொகை இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், ராமமூர்த்தியிடம் ஒப்படைத்தார்.
- வேன்-மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பரிதாப இறந்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் கடம்பக்குளம் பகுதியை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மகன் தமிழ். இவர் சம்பவத்தன்று உறவினர் கண்ணன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார். வலையம்பட்டி மெயின்ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த தமிழ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காயமடைந்த கண்ணன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிசிக்சை பெற்று வருகிறார்.
விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
2 பெண்கள் காயம்
சிவகங்கை அருகேயுள்ள தம்பிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் உஷாதேவி. திருப்பத்தூரை சேர்ந்தவர் மகேஷ்வரி. இவர்கள் இருவரும் ஆட்டோவில் பயணம் செய்தனர். கண்டராமாணிக்கம் விலக்கு பகுதியில் ஆட்டோ வந்தபோது பின்னால் வந்த கார் மோதியது. இதில் ஆட்டோவில் இருந்த உஷாதேவி, மகேஸ்வரி காயமடைந்து சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






