3 நிறுத்தங்களில் பயணிகள் நிழற்குடை

3 நிறுத்தங்களில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது.பயணிகள் நிழற்குடைகளை மானாமதுரை எம்.எல்.ஏ.தமிழரசி தொடங்கி வைத்தார்.
3 நிறுத்தங்களில் பயணிகள் நிழற்குடை
Published on

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் ராஜகம்பீரம் மற்றும் மதுரை-ராமேசுவரம் சாலையில் உள்ள பைபாஸ் ரோடு, மானாமதுரை பிருந்தாவனம்-பரமக்குடி ரோடு ஆகிய 3 இடங்களில் புதிதாக சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டிருந்தது. ராஜகம்பீரம் பகுதியில் மாற்றுதிறனாளிகள் மற்றும் முதியோர் பயன்படுத்தும் வகையில் சாய்வு தளத்துடன் அமைக்கப்பட்டிருந்தது. 3 இடங்களில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடைகளை மானாமதுரை எம்.எல்.ஏ.தமிழரசி தொடங்கி வைத்தார். பின்னர் பெண் முதியோர்களுக்கு சேலைகள் வழங்கினார்.

மதுரையில் இருந்து ராஜகம்பீரம் வழியாக மானாமதுரை வரை பஸ் விடவேண்டும். புதிதாகஅமைக்கப்பட்ட பைபாஸ் பஸ் நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நிற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தமிழரசி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர். விழாவில் மானாமதுரை நகராட்சிஆணையாளர் கண்ணன், ராஜகம்பீரம் ஊராட்சி மன்ற தலைவர் முஜிப்ரகுமான், நகராட்சி கவுன்சிலர் இந்துமதி திருமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com